Showing posts with label மரபுக்கவிதை. Show all posts
Showing posts with label மரபுக்கவிதை. Show all posts

Wednesday, September 30, 2015

வேண்டும்

வேண்டும்.. எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 5 


அஞ்சாத வாழ்க்கையை
  அவனியிலே ஏற்றுமே
    அன்பையே கோர்க்க வேண்டும்

விஞ்சிடும் புகழதும்
  விண்ணிலே ஏறிட
    வீண்ர்கள் மடிய வேண்டும்

மஞ்சமே கொண்டுமே
  மகிழ்வுகள் ஏற்கவே
    மாண்புகள் வாழ வேண்டும்

பஞ்சமே இல்லாத
  பாதையில் வாழவே
    பைந்தமிழ் வாழ்த்த வேண்டும்

நிதியார்ந்த உலகிலே
   நெஞ்சத்தில் சத்தியம்
     நினைவிலே கொள்கை வேண்டும்

கதியற்று நின்றவர்
   கவலையைத் தீர்க்கவே
    கட்டளை ஒன்று வேண்டும்

மதியார்ந்து வாழ்பவர்
   மண்டலம் போற்றவே
     மண்ணிலே உயர்வு வேண்டும்

சதியினை முறித்துமே
   சாதனை செய்திட
     சகலமும் முயல வேண்டும்

***************************************************************





புவியைக் காப்போம்


புவியைக் காப்போம்.. எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 5 

ஆசிரியப்பா

புவியைக் காப்போம
*********************

மதத்தில் மாய்ந்த மானிட தீபம்
விதத்தில் எத்தனை பாரீர்!பாரீர்!

அன்பில் வாழும் தேசம் எல்லாம்
என்பில் லாமல் போயிட லாமோ?

மண்ணில் தோன்றும் மக்கள் கூட்டம்
மதத்தில் இன்று அழிந்திட லாமோ?

வாழ்வின் சுடர்கள் வாடிப் போக
தாழ்வின் சுரங்கள் தொடர்ந்தி டலாமோ?

அழுக்கு சிந்தனை அழிந்து போனால்
பழுதும் தொலைந்து பாரதம் வாழும்

நினைவில் கொஞ்சம் நிம்மதி பூக்க
மனையில் மனதில் மாண்பைச் சேர்ப்போம்

பூக்கும் கவிகள் புவியை ஆள
ஆக்கம் நிறைத்து அவனியைக் காக்க

மனிதம் என்பதை மனதுள் வைப்போம்
புனிதம் ஏந்திப் புவியைக் காப்போம்
********************************************

எங்கள் ஊர்

எங்கள் ஊர் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை..(மரபு)(காவடி சிந்து)எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 5 மரபுக்கவிதை


வயல் களிலோ ஏர்பூட்டி
   வார்ப்புடனே வளம்கொழிக்க
கயங்களிலோ தமிழென்றே
   குவளை மலிந் தாடிடுமே


வாழையுந்தான் விளையுதங்கே
   வசந்தத்தைப் புதுப்பித்து
தாழையுந்தான் தளிர்க்கிறது
   திசைமணக்கச் செய்கிறது

குளமும் நிறைந்திருக்கும்
   குணமும் நிறைந்திருக்கும்
வளமும் நிறைந்ஹிருக்கும்
   வாய்க்காலும் நிறைந்திருக்கும்

நித்தம் நெல்விளையும்
   நெத்திலி மீன் விளையும்
சித்தம் ஓர் கணக்காய்
   செவ்வாழ தான் மிதக்கும்

தேனும் கிடைக்குதம்மா
   தெள்ளுதமிழ்ப் பாட்டாக
வானும் சிலிர்க்குதம்மா
   வசந்தத்தின் தோப்பாக

வயலின் வரப்பெல்லாம்
   வண்ணமுடன் சிரிக்கிறதே
கயலும் வந்தாங்கே
   கண்மூடி விழிக்கிறதே

எங்கும் சோலையம்மா
   எதுவ்ய்ம் இனிக்குதம்மா
தங்கும் மனங்களிலே
   திருவே நிறையுதம்மா

மைனாவும் மயிலனமும்
   காக்கையுடன் விளையாடும்
தேனாளும் மலர்மடியில்
   துறுவண்டு இசைபயிலும்

காவியமும் சிறந்திருக்கும்
   கட்டுரையும் விரிந்திருக்கும்
ஓவியமும் உயிர்த்தது போல்
   ஒய்யார வயல்வெளிகள்

ஆகா வந்திடுக.
   ஆசையுடன் அழைக்கின்றோம்
அத்தனையும் உமக்கேதான்
   அன்பாலே வரவேற்றோம்

திரும்பும் திசையெல்லாம்
   திங்கள் போல் முகம்காண்பீர்
திக்கட்டும் புகழ்பரப்பும்
   பதிவர்விழா வரவேற்கும்

எழுத்துக் கொண்டாடிகள்
ஏற்றமுடன் நிறைந்திருக்க
நடிப்புக் கொண்டாடிகளை
நா ட்டை விட்டுத் துரத்திடுவோம்

வாருங்கய்யா வாருங்க
   வண்ணத் தமிழ் பருக வாருங்க
சேருங்கம்மா சேருங்க
   செந்தமிழ் கூட்டமிதுசீக்கிரமே சேருங்க

****************************************


பின் குறிப்பு: இவ்ளோ அழகா புதுக்கோட்டை என்று வியந்து அதைக் பார்க்க வாவது வர வேண்டும் நினைத்து வந்து விட்டு இதில் பாதியைக் காணும் என்று சண்டைக்கு வராதீர்கள்..( கிணற்றைக் காணோம் )

Tuesday, September 29, 2015

வேரென நின்றிடுவாய்


வேரென நின்றிடுவாய் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை..(மரபு)(காவடி சிந்து)எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 5 மரபுக்கவிதை



கால முருக்கலில் தோன்றிக் கருத்தெழில்

     கற்றுக் கொடுத்தவளே-அருங்
      கன்னித் த்மிழ்க் கொடியே-அடர்

ஞாலம் தனில் பெரும் ஞானம் உரைத்திடுக்

     நாதம் இசைப்பவளே-பசும்
     நாற்று வளர்ப்பவளே-வரும்

காலக் கதிரதில் ஊனில் உயிரினில்

    காட்சி தருபவளே-மூச்சுக்
     காற்றில் சிரிப்பவளே-வெற்றிச்

சீலமனைத்திலும் செம்மை விளங்கிட

     சிந்தனை தந்தவளே-என்னுள்
     சீறிப்பிறப்பவளே-என்

மோகக் கருவிழி முங்கி எழுந்திட

     முத்தும் அளித்தவளே-அதை
     முன்னமாய்த் தந்தவளே-பெரும்

தாகமெடுத்துனை தேடிய டைந்திட

    தத்தும் நறும்புனலே-நலம்
    தங்கும் அருட்கடலே-வானின்

மேகக் குடமதன் மேனமை அலர்ந்திட

     மாரியும் ஆனவளே-சுடர்
    மங்கலப் பெண்மயிலே-உன்றன்

போக மேவாழ்வெனக் கூடும் புரட்சியின்

     பாவலர் கைப்பொருளே-என்னுள்
     பூக்கும் சுகநிலையே-வளர்

நேசமுடன் உனை நெஞ்சில் துதித்திட

     நன்னிலை தந்தவளே-எந்த
     நாட்டையும் வென்றவளே-திரு

வாச கமாய்தினம் தோன்றி மலர்ந்துமே

     வாகையைக் கொண்டவளே-அதில்
      வன்மையும் தந்தவளே-மிகு

பாச முடன்உனைத் தாங்கியே நின்றிட

     பாதையைத் தந்திடுவாய்-என்றன்
     பண்பையும் கூட்டிடுவாய்- இந்த

தேச மனைத்திலும் வெற்றி ஒளிர்ந்திட

     வேகமாய் வந்திடுவாய்-நின்றன்
     வேரென நின்றிடுவாய்
**********************************************************************************

Monday, September 28, 2015

தேசம் காப்போம்


தேசம் காப்போம் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 5 மரபுக்கவிதை


மின்னுகின்ற ஆற்றலினைப் பிடித்து வந்து
     மேதினிலே நாம் வாழ வகையும் செய்வோம்
நன்னுகின்ற மக்களையும் பக்கம் வைத்து
     நானிலத்தில் நற்றமிழை உலவவைப்போம்
பொன்மகுடம் பொதுவுடமை ஏற்றி வைத்து
     புதுமையினைப் புரட்சியினை நாட்டி வைப்போம்
என் உடமை எனது பொருள் என்று நாமும்
    இருப்பதுவோ? பொறுப்பதுவோ? தீமை நீக்கு


அறம்செய்து அன்பு பொங்க நாட்டைக்காக்க
     அகிலமெலாம் நம்நாட்டைப்போற்றிப்பாட
திறம் ஏந்தி தீமையெலாம் ஒழித்து இன்றே
    திங்களதை ஒளிரவைத்து நலமும் செய்வோம்
மறம்கொண்டு மாக்களையும் அழித்தும் இன்றே
   மாத்தமிழை மலரவைத்து வெற்றி கொள்வோம்
முறம்கொண்டு அடித்தாலாம் புலியைப் பெண்ணும்
    மூத்தவீரம் காத்திடுவோம் இன்றும் என்றும்

அண்டை நாடு அயர்ந்திடவே மேன்மைசெய்வோம்
    ஆளுமையில் புதுமையினை புகுத்தி வைப்போம்
பண்டையநல் பழமையினை மதித்துக் காப்போம்
     பரவிவரும் மதவெறியை ஒழித்து நிற்போம்
மண்ணகத்தில் நம்நாடு உயர்வைப் பெற்று
     மாப்புகழில் உயர்ந்துவிட உழைப்போம் என்றும்
விண்ணகத்தில் முழுமையுமாய் பெருமை செய்து
    வீணரையும் ஒழித்திடலாம் தமிழின் பண்பால்

ஆக்கங்கள் பலசெய்து அறிவு செய்து
     அறிவினையும் தெளியவைத்து மடமை கொன்று
தாக்குதல்கள் இல்லாமல் தரணி போற்ற
    தண்டமிழாய் பனிந்துநாமும் வீரம் காப்போம்
போக்கிடுவோம் பழமையினை; புதுமைசெய்வோம்
    புத்துணர்வில் நாடுவாழும் பொலிவு பெற்று
 தீக்கிரையாய்ச் செய்திருவோம் தீமை எல்லாம்
     தேசத்தின் நலனுக்காய் உயிரும் ஈவோம்
***************************************************

விளைநிலம் காப்போம்

விளைநிலம். காப்போம் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 5 மரபுக்கவிதை


வேதியல் உரத்தை விளைநிலம் கொட்டி
விதைகள் முளைக்கச் செயலாமோ?
நீதியி  ல்லாமல் நெறிமுறை தவறி
நிம்மதி கெடவே விடலாமோ?

பூமியின் அடுக்கு புண்ணாய்க் கிடக்கு
புரிதலைக் கொண்டு வருவோமா?
நாமிதை இன்றே தொடங்கலை என்றால்
நலம்கெடும்; பூமியும்; விடலாமோ?

இயற்கை வளத்தை பெருக்க நாமும்
இன்றே விரைவோம்; வாருங்கள்;
செயற்கை ஒழித்தே செயலது தொடங்க
சிந்தனை செய்வோம் கூடுங்கள்

களர் என நிலத்தை கருத்தினில் மறைத்தோம்
காங்கிரீட் ஆகி வதைத்திடுதே
உளமுள யாரும் உருகவே வருக
ஊற்றாய் பெருக விதைத்திடுவோம்

மரமதை வெட்டி வீடுகள் கட்டி
மண்வதை செய்தோம்; கொய்தோமே
தரமதை இழந்தோம்;தாழ்மையும் பெற்றோம்;
தலையதும் நிமிர உய்வோமே

இனியெனும் நிலத்தை இயற்கை வளத்தை
இனிதாய் காக்க வாருங்கள்
கனியெனும் வாழ்வும் கரமதைநீட்ட
கவினாய் ஒன்று கூடுங்கள்
***********************************************
Image result for விளைநிலம்

தப்பட்டை முழங்கட்டும்

தப்பட்டை முழங்கட்டும் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை..(மரபு)(எண்சீர் விருத்தம்)எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 5 மரபுக்கவிதை



தப்பட்டை முழங்கட்டும்
******************************

பொலிவுற்ற மரபுதனில் திகழ்ந்த நாடு
  பொதுவுடமை கொள்கையாலும் நிறைந்த நாடு
வலியுற்று போவதற்கோ சொல்க தோழா
  வலிமைபெற்று வாழ்வதற்கே மாற்று நீயே
மலிவுற்று போனது தான் ஊழல் எங்கும்
  மறமையெல்லாம் சேர்த்து வைத்து வெல்க இன்றே
கலியென்று சொல்வோர்கள் சோர்ந்து போக
  கலசமென உயர்த்தயென வருக நன்றாய்


இனிக்கட்டும் செழிக்கட்டும் நமது நாடு
  இதழ்முட்ட புகழட்டும் நமது மேன்மை
கனியட்டும் கதைக்கட்டும் புதிய பாதை
  காவென்றே விரியட்டும் எட்டுதிக்கும்
குனியட்டும் குறுகட்டும் ஊழல் மாந்தர்
  குறைத்திடுவோம் விரட்டிடுவோம் நாடுவிட்டே
பனியெல்லாம் அகலட்டும் பகலவன் உதிக்க
  பாதைதன்னை சமைத்திடுவோம் வருக தோழா


சிமிழுக்குள் அடங்கிடுமா தமிழும் தானும்
  சிகரத்தை எட்டவைப்போம் பாடுபட்டு
உமிழ்ந்திடுவோம் உழைப்பற்றோர் ஒதுங்கத்தானும்
  உரைத்திடுவோம் உழைத்திடுவோம் நாடுமுட்ட
குமிழென்றே சொன்னோர்தான் குன்றிடவே
  குவலயத்தை தொட்டுவிட்டு ஏடுகட்டி
தமிழ் என்றும் உயர்ந்ததுதான் பாரே சொல்ல
  தப்பட்டை அடித்திங்கே கும்மிசெய்வோம்
*************************************************


பின்குறிப்பு... இந்த இந்தியநாடு பல பொழிவுகளைப் பெற்றது. அது வலிமை பெற்று வாழ வேண்டும். ஆனால் வலிகள் மிகுந்து காணப்படுகிறது..நம்மால் என்ன செயலும் என்று இல்லாமல் நம்மால் முடியும் என்று சொல்லி செயல்பட்டால் முடியும். தமிழ் மொழியை பலர் சாதாரண குமிழ் என்று சொன்னார்கள். அவர்கள் தலை குனியுமாறு நம் உழைப்பு இருக்க வேண்டும். இதழ் முட்ட..அனைத்து வாய்களும் ஓயாமல் புகழ வேண்டும்..கா...காடு போன்று விரியவேண்டும் நமது பாதைகள்...கட்டற்று...தப்பட்டை அடித்து அதை முழங்க வேண்டும் என்று சொன்னது..தப்பட்டை என்பது அடித்தட்டு மக்களின் எளிய கருவி ,,மாற்றம் அங்கிருந்து உருவானால் தான் அது வெற்றி பெரும் அதோடு கும்மி அடிப்பது பெண்களின் மரபு எனவே அவர்கள் கும்மி அடிக்க ஆண்கள் தப்பட்டை அடிக்க இருவரும் சேர்ந்து உழைத்தால் நாடு முன்னேறும் என்று சொல்லப்பட்டுள்ளது..அதனால் தான் தலைப்பும் முழங்கட்டும் என்றே கொடுத்துள்ளேன்...முழங்குதல் என்னும் சொல் வெற்றியின் நிமித்தம் சொல்வது நமது மரபு``````நன்றி


  



Monday, July 7, 2014

நஞ்சென்ன........

நஞ்சென்ன வாழ்க்கையிலே நாதா நாதா!
   நடுநடுங்கி ஏங்குவதோ சொல்கநீயும்!
நெஞ்சமெலாம் அன்பென்னும் தீபம் ஏந்தி
   நித்தம் நித்தம் போற்றுகிறேன் எந்தன் இறைவா
பஞ்சமெலாம் போகத்தான் பாட்டு வைத்தேன்
   பாதையையும் காட்டிடுவாய் செந்தில் முருகா!
வஞ்சனைகள் செய்தோரே வாழ்ந்தார் என்றால்
   வரம் எதற்கு? தவம் எதற்கு? திருப்பதிவாசா!


பொங்குமன ஆசையினை அடக்கி முடக்கி
   பொறுமையுடன் ஏற்கின்றேன் போதும் போதும்
எங்குமுள லஞ்சங்கள் அழிப்பாய்! ஒழிப்பாய்!
   ஏழைகளின் வேண்டுதலைக் கேட்பாய்! வருவாய்!
வங்கமென ஆர்ப்பரிக்கும் எமது உள்ளம்
   வாழும் வகை தெரியலையே என்ன செய்ய?
தெங்கிளநீர் கேட்கவில்லை திருப்பதிவாசா
   தேனமுதம் கேட்கவில்லை வெங்கிடநாதா

மந்தையென வாழுகிறோம் என்ன மாற்றம்?
   மகிமைகள் புரியாயோ எங்கள் நாதா
சிந்தையிலே உன்னையுமே நானு(ளு)ம் நிறுத்த
   சிறப்புகள் தருவாயோ எங்கள் நேசா
தந்தையென உன்னிடமே சரண் புகுந்தோம்
   தரித்திரத்தை ஒழித்திடவே வாராய் இங்கே
பந்தமென பணத்தை மட்டும் நினைக்கும் எண்ணம்
   படக்கெனவே மாறிடவே அருள்புரிவாய்

பணமென்னும் தாள்கள்தான் குறியென்றே
   பறக்கின்றார் துறக்கின்றார் சொந்தம் தன்னை
பிணம் கூட வாய்பிளக்கும் என்ற மொழியும்
   பின்னாலே தெரிந்ததய்யா உண்மை என்று
மணம் கொண்ட மனமெல்லாம் தூக்கியெறிந்து
   மரித்துவிட்டார் உயிருடனே பணத்தை எண்ணி
குணமென்னும் கோயிலைத்தான் மறந்தார் அய்யா
   குன்றேறி உன்னையுமா தேடப்போறார்?

நொந்த மனம் வெந்து வெந்து பாடுகின்றேன்
   நொந்தமனம் மாற்ற நீயும் வாராய் இந்ங்கே
வெந்தமனம் நொந்துபோக தாமதம் ஏனோ?
   வேடிக்கை விளையாட்டோ இந்தக்கண்ணீர்?
முத்துத்தமிழ் துணைகொண்டு வணங்குகின்றேன்
   முனைப்புடனே வந்திடுவாய் திருப்பதி மலையா
வந்தாங்கே தொழுதிடவே மகிழ்வு பூக்க
   வரமதையே தந்திடுவாய் திருப்பதி வாசா

முற்றுமுனை நம்பிவிட்டேன் திருப்பதிவாசா
   முதற்செயலாய் வந்திடுவாய் குறைகள் தீர்க்க
கற்றதெலாம் காசாக்க எண்ணம் இல்லை
   காசில்லா வாழ்க்கையிலோ மதிப்பே இல்லை
பற்றெனவே உனைப்பற்றிப் பாடுகின்றேன்
   பற்றாத உனைப்பற்றிப் பாடுகின்றேன்
முற்றுமாக மாறட்டும் எமது ஏழ்மை
   முத்தமிழும் முக்கடவுள் துணையில் என்றும்

***********************************************




Thursday, June 19, 2014

தமிழ் படித்தேன்...தளர்வழித்தேன்....

உள்ளமதும் எப்போதும் உவகைகொள்ள
   உலகினிலே என்ன உண்டு தமிழைப்போல
கள்ளமெலாம் மெதுவாக மறைந்து போகும்
   கருத்தாக தமிழை நாம் கற்றிட்டாலே!
தெள்ளியதோர் நீரோடை போலே இங்கு
  தெங்கிளநீர் பருகிடவே தருமே தமிழும்
முள்ளும்தான் தமிழினையே தானும் கேட்க
   முனைமுறிந்து சீராகும் அன்பு பூக்க!


தென்றலதும் வேண்டுவோர் தமிழைப்படிக்க
   தேனள்ளி குடித்ததுபோல் சுவையைப்பருக
மன்றதனில் தமிழ்தன்னை ஒருவர் பேச
   மகுடம்சேர் மாண்புகிட்டும் விருதுசூழ!
குன்றிலிட்ட விளக்கெல்லாம் முவலயம் போற்ற
   கூற்றத்தை எதிர்கொள்வர் தமிழைக் கேட்டு
கன்றெல்லாம் பசிமறக்கும் எமது மொழியில்
   காடுகளும் கவினாகும் அழகு தமிழில்!

செந்தமிழை நானும் தான் படித்துப் பார்த்தேன்
   சிந்தையெல்லாம் நறுமணமே அறிவுபூக்க
தந்தம்போல் தரமுயர்ந்த அழகே தமிழ்
   தமிழ்படித்தேன் தளர்வழித்தேன் நன்று சொல்வேன்
முந்துதமிழ் விநாயகனும் தமிழ்படித்தே
   முதற்கடவுள் ஆனானே தமிழர்தமக்கு
சிந்துதமிழ் படியுங்கள்! வாகைகிட்டும்
   வரலாறு ஏந்திடுமே வளமை நிறைக்க


முத்தெனவே சிறந்திருக்கும் தமிழின்பாட்டு
   மூள்பகையை போக்கிடுமே தமிழின் போக்கு
தித்திக்கும் திங்களென நமது வாழ்வு
   தீந்தமிழின் தரமான பாடல் கேட்டால்
சித்தமெலாம் தமிழைத்தான் நாமும் நிறைப்போம்
   சிகரத்தின் உயர்வினையே எட்டி நிற்போம்
பத்தரையின் மாற்றேபோல் தமிழே எங்கும்
   பாதையெங்கும் வழிகாட்டும் அறிந்து கொள்வோம்
********************************************************

Friday, June 13, 2014

நானும் தமிழும் (பாகம் 3)

வென்றிடும் முற்றிடும் என் கவிகள் அவை
   வெற்றியின் ரகசிய முத்திரைகள்
மன்றிடும் சுவைதான் என்றென்றும் - அட
   மகத்தான விடியலின் சித்திரங்கள்


சித்தம் தெளிந்திடும் என்பாட்டு அவை
   சிந்திக்க வைக்கும் தமிழ்பாட்டு
முத்தமிழ் வித்தகம் என்பாட்டின் அவை’
   மோகத்தைத் தந்திடும் தாலாட்டு


பாரெங்கும் வீசட்டும் தமிழ்பாட்டு - அவை
   பாசம் விதைத்திடும் எனைக்கேட்டு
ஊரங்கும் பேசட்டும் அதைக் கேட்டு - அய்யோ
   உள்ளதைச் சொல்கிறேன் (நீ) பாராட்டு


நண்பனாய் வாய்த்திடும் என்பாட்டு - அவை
   நறுந்தமிழ் தேனாம் நீ கேளேன்
பண்புகள் சொல்லும் பாரதத்தின் - துளிர்
   பாதைகள் காட்டும் இனி வாளேன்? ( வாள் எதற்கு?)


ஏழையின் கண்களைத் துடைத்துவிடும் - ஆமது
   ஏற்றத்தை அவர்க்கே தந்துஎழும்
பேழியில் அடங்கிடும் நகைகளுமாய் - அவர்
   பேதைமை விரட்டிடும் நம்புஎனை


கோள்களும் எனக்கே வாழ்த்துச் சொல்லும் - அந்த
   கோபுரம் தானும் வண்ங்கிச் செல்லும்
வாள்களும் வாலைச் சுருட்டிக்கொண்டே
   வாயே திறவாமல் மூடிக்கொள்ளும்


மனதின் திட்பம் மிகக்கொண்டே - நான்
   மாண்புகள் பெற்றேன் அறிவீரே
வனமாய் என்னுள் புதைந்துள்ள - அந்த
   வண்டமிழ் தானும் காரணமாம்


நிறைவாய் ஒன்றைச் சொல்கின்றேன் - அந்த
   நிலத்தின் வாழ்த்தும் எனக்கேதான்
குறைவாய் என்னை மதிப்பிட்டோர் - நீர்
   குறைவாய் போனது அறிவீரோ


வாழ்த்தின் சுடரில் வாழ்கின்றேன் - அந்த
   வான்புகழ் என்னை எட்டுமன்றோ
 தாழ்த்தின மாக்கள் பாருங்கள் - வந்து
   தங்ககிரீடம் (எனக்கே) சூடுங்கள்
*********************************************************************************

நானும் தமிழும் ( பாகம்2)

இத்தரை மீது வாழ்வ ரெலாம் - என்
   இனி(ப்பு) தமிழ் கொண்ட மாந்தராவார்
பத்தரை மாற்றுத் தங்கம்போல் - அது
   பளபளவென்றே பாதை செயும்


கைகளில் விரைந்திடும் என்கவிகள் - அவை
   கனிவின் சிகரம் அறிந்திடுங்கள்
பைகளில் கனமில்லா மாந்தர்காள் கொஞ்சம்
   பைந்தமிழ் படித்தே  வென்றிடுங்கள்


கள்ளினுள் இருக்கும் போதையெல்லாம் - என்
   கவிகள் தந்தே அதை ஊட்டும்
முள்ளாய்க் குத்தும் கயமைகளை - அது
   முனைந்து எரித்துப் போட்டுவிடும்


கண்ணிமை போலக் காத்திடத்தான் - அந்த
   கடவுள் படைத்தான் எனையிங்கு
பெண்ணிவள் என்றே இளப்பம் செய்தால் - அந்த
   பேதையை மிதித்தே அழித்திடுவேன்,


சொல்லிடும் கவியெலாம் என்நாட்டின் - நற்
   சுகத்தை முற்றாய்க் கூறிடுவேன்
வல்லின தோழர்கள் துணைகொண்டே தமிழ்
   வாகை நானே சூடிடுவேன்


புல்லின மனதிடும் மாந்தர்காள் - உம்மை
   புதைத்திட நானும் வருகின்றேன்
மெல்லிடைப் பெண்ணாள் இவளென்றே - நீவிர்
   மெத்தனம் கொண்டே இருக்காதீர்


நெருப்பின் விருட்சம் நான் அன்றோ - அந்த
   நேசத்தின் சுடரும் நான்தானே
மறுத்திட யாரும் முடியுமோடா - அடேய்
   மாடப் பேய்களே கூறுங்கள்


வெந்திடும் மனதின் சுடர் கொண்டு - நான்
   வெல்வேன் வெல்வேன் தமிழ்க்கன்று
சந்தினில் பொய்மைகள் புகுத்திடுவோர் - உமை
   சாக்கடைக்குள் நான் திணித்திடுவேன்..................தொடரும்.................



நானும் தமிழும் (பாகம்1)


பாக்கள் நிறைய உருவெடுத்து - என்
   பாதையில் நிறையக் காணுங்கள்
பூக்கள் வகுத்தே நிற்பது போல் - அது
   பூமியில் சிரிப்பதைப் பாருங்கள்.


காற்றின் நிறத்தையும் சொல்லிவிடும் - என்
   காதில் காதலைத் தந்து விடும்
சாற்றினை எடுத்தே தருகின்றேன் - அது
 சரித்திரம் நிறைக்கும் முந்திவிடும்


சருகுகள் பலரைச் சாய்த்துவிடும் - அது
    சாந்தம் செய்து வென்றுவிடும்
மெருகுகள் ஏதும் தேவையில்லை - அது
   மென்மை அடைந்தே ஓங்கி வரும்

சூரியன் கூட ஓடிவரும்-என்
   சுந்தர கவியினை தேடிவரும்
வீரியம் மிகுந்த தமிழ்கவியாம்- எனை
   விண்ணில் ஏற்றி ஒளிபரப்பும்


வாடைகாற்றும் மெல்லவந்து - அதன்
   வகையின் தன்மை கேட்டுக்கொள்ளும்
தாடைநரம்புகள் வெடிக்கவென்றே - என்
   தமிழின் சந்தம் பாட்டு வெல்லும்


திசையின் அசைவுகள் ஒவ்வொன்றும் - என்
   தீந்தமிழ் கேட்டு குனிந்து விடும்
விசைகள் அதுவும் பலகொண்டு - என்
    வீரக்கவிதைகள் முனைந்து வரும்


வெற்றியின் பதக்கம் முழக்கமிடும் - அது
   வேதனை பலவும் அழிக்கவரும்
முற்றுமாய் அன்பை சுமந்து வரும் - அட
   முத்தமிழ் போல் தான் செழிக்கத்தரும்.


சிந்திய முத்துக்கள் அனைத்துமே - என்
   சிந்தனை நிரம்பியே செம்மைகொளும்
விந்திய மலையின் புகழிதனை - அது
வேண்டிய மட்டும் வாங்கிக்கொள்ளும்    ................(.தொடரும்)



Thursday, June 5, 2014

தமிழ் வணக்கம்

காப்பாய் காப்பாய் என்தேவி
   கவிதைத் தேரில் வலம் வரவே
பூப்பாய் பூப்பாய் என்தேவி
   புன்னகை விரித்தே என் நாவில்!


அறிவின் சுடர்கள் ஆளட்டும்
   அண்டம் எல்லாம் திரும்பட்டும்
தெறிவின் விளிம்பில் வள்ம்சேர்த்து
   தேவை நிறைப்போம் என் தேவி

பூக்கும் பூக்கள் பூக்கட்டும்
   புண்மை அழித்து மகிழட்டும்
போக்கும் துயரை உன் வரவும்
   பொறுமை சேர்க்கும் நல்தேவி

வெற்றி!வெற்றி! இனி வெற்றி!
   வேழம் போற்றும் நல்வெற்றி
முற்றிய நற் சொல் தருவாயே
   முழுமை பெறவே வழி தருவாய்

பாரதி படைத்தான் ஒரு மரபு
   தாசன் படைத்தான் பலகவிதை
சாரதி என் எனை ஆக்கிவிடு
   சாதனை படைக்க ஆணையிடு

பாரதம் முழுக்க பரப்பிவிடு
   பாரினில் சிறக்க ஆசிகொடு
‘பா’பல எழுத கோலும் கொடு
   மரணம் இல்லா வாழ்வு கொடு
************************************


Sunday, March 30, 2014

தமிழ்வழிக் கல்வி...(மரபுக்கவிதை)

நற்றமிழில் நாமெல்லாம்
     பேசி வந்தால்
நயக்கு மாம் நம்தமிழும்
       என்றும் தான்
புற்றீசல் போலிங்கு
    தொடங்கி விடும்
புண்மைக்கு பிறகல்வி
     தொலைந்து போகும்


எக்காலமும் மனதிற்குள்
    பயந்து கொண்டு
அங்குதானே அனுப்புகிறோம்
    நாமெல்லாம்
எக்காலம் நாமுந்தான்
    திருந்தி இங்கே
இப்பள்ளி சேர்ப்போமோ
    கேள்விக் குறி


அரசுக்குத் தெரிந்துமேதான்
    நடக்கிறது
ஆட்சியாளர் பயப்படுவார்
   வாக்காளனன்றோ
அரசன் போல் வாழவேண்டி
    இருந்தோரை
அரக்கன் எரித்ததுவோ
    (கும்ப)கோணத்தீ


இருந்தும் ஏன் மவுனமோ
    தெரியலையே
இவரெல்லாம் எப்போதான்
   திருந்திடு வார்
மருந்துக்க்கும் அவராலே
   மகிழ்வு இலை
மயக்கம்ஏன் தயக்கம் ஏன்
   மறுப்பதேன்?

கல்விக்கண் தந்திட்டார்
    காமராஜர்
கயமைக்கண் ஆனதையா
   என்ன சொல்ல
புல்விக்கும் புதல்வர்கள்
    ஆனார் அம்மா
புதல்வர்கள் பாரதத்தில்
   ஐய்யோ ஏனோ


வணிகமது ஆயிற்றே
   கல்வி யன்றோ
வன்முறைகள் தொடந்ததுவும்
   அதனால் தானோ
துணிகரமாய் நடக்குதய்யா
      விற்பனைக்கூடம்
தேய்ந்துவிட்டார் நாட்டுமக்கள்
   துயரத்தாலே

வரமென்று தந்திருவீர்
   கடவுள் காள்
வாழ்ந்திருவோம் வணங்கிடுவோம்
  என்றுமே தான்
தரமென்று இல்லாத
  பள்ளியெலாம்
தரைமட்டம் ஆகட்டும்
   தவிக்கட்டும்


திக்கெட்டும் பரவட்டும்
  நம்கல்வி
திகட்டாமல் படிக்கடும்
   தமிழிலேயே
சிக்கட்டும் அவர்மானம்
     சிதையட்டும்
சீழ்பிடித்துப் போகட்டும்
     அவர்கல்வி


வெல்லட்டும் தமிழிங்கு
   விண்முட்டும்
வினயல்லாம் தீரட்டும்
   விரைவாக
நல்லெண்ணம் படைத்திட்ட
   நல்லவரே
நம்தமிழில் கற்றிடுவோம்
   நலமுண்டாக...


விடியட்டும் விடியட்டும்
     விடியலாக
வீதியெல்லாம் தமிழென்றே
      பரவலாக
முடியட்டும் முடியட்டும்
     ஆங்கிலமோகம்
முழங்கட்டும் முழங்கட்டும்
      தமிழும் மேவ
**************************************************


Friday, January 10, 2014

பெண்கள் நிலை (பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

கருணைவிழி கவிதைமுகம் தெளிவான புதுவடிவம்
                  கவினாகத் தெரிகின்றது
   கலைகின்ற போதினிலும் அழுகின்ற போதினிலும்
                   அன்புமுகம் மலர்கின்றது


பொறுமையென எனது மனம்பொழுதுபட நினைவுகளில்
                 பொதுவாக நிறைகின்றது
   பழிகேட்டுப் புண்ணாக பண்ணதுவும் எழுத்தாக
                   மனம் தானெ கரைகின்றது

அருளதுவும் அகமதினில் பரவிவர தொழுதுவரும்
                 எனையேற்றுக்கொள்வாயம்மா
    அன்பதினில்பூத்தமுகம்அன்னையென தோன்றிவிட
               அணைத்தேற்றுக் காப்பாயம்மா

பொருளதுவும் இல்லாமல் எந்து மனம் தினந்தினமும்
                   பொழுதுக்கும் அழுகின்றது
      புன்னகையின் முகமலர பொன்னாக நீயுலவ
                    இன்பந்தான் எழுகின்றது



பெண்ணாகப் பிறந்துவிட பெருந்தவமே செயனுமென
                   கவிமணியும் புனைகின்றாரே
      பெண்ணாகப்பிறந்துவிடின் புண்ணாகும் வாழ்வதுமே
                      எவர்வந்து சரியாகுமோ?

மண்ணாகிப் போகுமடப் பழக்கங்கள் நம்மிடையே
              மலையாக அலைகின்றது
    மண்ணாகும் வாழ்வதியும் மனதாலே எந்திடவே
             மனமதுவும் உலைகின்றது

தண்ணாகிப் போகிவிட நினைகையிலே என்மனமும்
             தணலாகி எரிகின்றது
தண்ணாக்கி தாயாக்கி தாயென்ற சொல்லாக்கி
              வாழ்ந்தநிலை புரிகின்றது

புண்ணாகப் போனமனம் பொன்னேயுன் திருவடியில்
                    பதிவாக நினைக்கின்றது
        பொய்யாக வாழுமிவர் புழுவாகத் துடிக்கவிட
                      பொதியாகச் சுமக்கின்றதே!

தெருவோரம் நான்செல்ல எதிராக வந்தவரும்
                 எனைநாடிப் பேசுகின்றார்
           தேனாகப் பேசிவிட்டு திகட்டாத வாழ்த்தளித்துப்
                              பின்னாலே ஏசுகின்றார்
ஒருவோரம் சென்றாலும் மறுவோரம் வந்தங்கு
                 மனதாரப் பேசுகின்றார்
          கேளாமல் நான்மட்டும் போனாலே பின்னர்தான்
                     பொல்லாத கர்வி என்றார்


மருவாக என்மீதே மனதார வீணபழிகள்
             மக்களே பூசுகின்றார்
        மங்கைநான் மன்றாட மலரென்றும் பாராமல்
                      மனதயும் தூற்றுகின்றார்
திருவான தேவியே தெவிட்டாத நாயகி
                   தென்றலை வீசுதேவி
       திசையெல்லாம் பாடியே உன்னையும் நாடியே
                    குறைகளையே போக்கிடுவேன்


(தொடரும்.......) பாகம் 1

Monday, January 6, 2014

தமிழ் வாழ்த்து (எண்சீர் விருத்தம்) மரபுக் கவிதை

கன்னலிடை சாறெடுத்து குவித்து வைத்து
  கருத்தெல்லாம் கொண்டாங்கே வந்த பூவே
அன்னமென மென்மையென என்னில் பூக்க
 அருந்தமிழாய் வந்தவளே இனிய ராகம்
தென்றெலெனப் பேரெடுத்து வந்த கோதை
  தெள்ளமுதாம் தீந்தமிழே இனிக்கும் தேனே
உன்னையுமே உள்மனமும் விரும்பி ஏற்க
  ஊற்றாக பிறந்து வரும் கவிதை தானும்


உவகையிலே செல்லுகின்ற மனமும் கூட
  உன்வரவை நினைத்துநிதம் மகிழ்வு பூக்க
நவமணிகள்போல நிதம் மிளிரும் பெண்ணே
  நலமுறுவேன் உன்னாலே ஏற்றுக்கொள்வாய்
தவமதுவும் செய்தே நான் வேண்டி நின்றேன்
  தமிழமுதே தவறாமல் வருவாய் அம்மா
குவலயமே மகிழ்வடையக் கவிதை செய்வேன்
  குற்றமிலாக் குளிர்தென்றல் நீயிருந்தால்

வெற்றியதன் மகுடத்தை எனக்கு ஈந்து
  வினையெல்லாம் தீர்த்து வைப்பாய் தமிழே! தாயே!
பற்றிவிட்டேன் உன்னையுமே! பாதம் தொட்ட
  பாவையெனை நீபார்க்கப் பொலியுன் வெற்றி
கற்றவர்முன் களங்கமிலாக் கவிதை செய்து
  கருத்தினிலே பேச்சினிலே இனிமை பெய்து
முற்றில்லா மேன்மையோடு வாழ்வும் கண்டு
  மோகனமாய் மலர்ந்திடநீ பார்கண் கொண்டு

பண்ணெடுத்துப் பாட்டாகப் பாடி வைத்தேன்
  பைந்தமிழே உன்னைநான் போற்றி வைத்தேன்
தண்ணெனவே வந்தவளே! என்னை ஏற்று
  தரணிக்குக் காட்டிவிடு கவிஞர் என்று
விண்ணெட்டும் எட்டட்டும் எனது பாக்கள்
  வீடெல்லாம் மலரட்டும் எனது பூக்கள்
மண்டலமே எழுந்து வந்து நடனம் ஆட
  மாத்தமிழே மனதில்நீ ஆணை செய்க!
*****************************************


Thursday, October 31, 2013

ஒளி காட்டும் வழி

சிந்திக்கும் நிலையினை சிந்தையில் கொள்ளவே
      சிறப்பதை அள்ள வேண்டும்
சந்திக்கும் நபரெலாம் சாதனை செய்வரோ
     சரித்திரம் மாண்பு பேசும்
எண்ணத்தில் ஏற்றமும் எழிலினில் மாற்றமும்’
    ஏந்தியோர் என்றும் வெல்வர்
திண்ணைமாய் வாழவே திகழட்டும் தமிழ்குணம் 
     தீரமாய் வழியும் செய்வோம்


உயர்ந்தொரு இலட்சியம் உளத்திலே கொண்டிட
    உள்ளத்தில் அதனை ஏற்று
அயர்ந்துமே போகாத அறிவினைப் பெற்றிட
    அவலமே போக்க வேண்டும்
தயக்கமே இன்றியே தண்டமிழ் துணையினில்
     தலைமையே ஏற்க வேண்டும்
பயனுள்ள பாதையில் பண்உறு நிலையினில்
     பகுத்துமே பதிக்க வேண்டும்

திடத்தினில் மனதையும் திறமென செய்திட
    தீரமே தினமும் வருமே
மடத்தையும் போக்கிட மானுடப்புரட்சியே
     மன்றதில் செயலிட மகிழுறும் 
இடமெலாம் வழியென இதயத்தில் கொண்டுமே
    இன்முகம் என்றும் பெறவே
தடமெனப் பதித்திடும் தண்டமிழ் ஒளியதும்
    தகையென கண்ட வழியாம்
     

Friday, October 11, 2013

உலகே பூச்செண்டு

பெருமை படைத்த
              பெண்ணே நீயும்
    வாழ்க நூற்றாண்டு- உனைச்
               சிறுமைப் படுத்தும்
               சில்லறைத்தனங்களின்
                சிறகினை ஒடித்து விடு.



எண்ணம் எல்லாம்
              ஏற்றம் கொண்டு
 எழுக கோல்கொண்டு- உன்

              தண்மை கொண்டு
               தழைக்கச் செய்வாய்
               உலகே பூச்செண்டு

பெண்மை என்றும்
               பெருந்தவம் என்றே
இன்றே பதிந்து விடு- உன்
               கண்மை கொண்டே
                கயமை அழிப்பாய்
                காற்றின் துணை கொண்டு




கற்றலில் அதிகம்
              கவனம் செலுத்தி
கால்கள் வளர்த்துக் கொள்-இனி
              நெற்று களாகி
                நினைவும் பலிக்கும்
                நேர்மை சேர்த்துக்கொள்





வானம் வரைக்கும்
               வளை கரம் நீட்டி
  வளமை நிறைத்துக் கொள் - மடத்
               தேனில் குழைத்த
                 தீப்பொய் வார்த்தை
                  தெருவே புதைத்து விடு



குடத்துக்குள்ளே
               அடைந்தது போதும்
கனவை மறைத்துக் கொண்டு -அட
                மடமை செய்யும்
                தடைகள் அகற்று
                தடையே மலர்த்தண்டு

****************************************