புவியைக் காப்போம்.. எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்
“வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது
வகை 5
ஆசிரியப்பா
புவியைக் காப்போம
*********************
மதத்தில் மாய்ந்த மானிட தீபம்
விதத்தில் எத்தனை பாரீர்!பாரீர்!
அன்பில் வாழும் தேசம் எல்லாம்
என்பில் லாமல் போயிட லாமோ?
மண்ணில் தோன்றும் மக்கள் கூட்டம்
மதத்தில் இன்று அழிந்திட லாமோ?
வாழ்வின் சுடர்கள் வாடிப் போக
தாழ்வின் சுரங்கள் தொடர்ந்தி டலாமோ?
அழுக்கு சிந்தனை அழிந்து போனால்
பழுதும் தொலைந்து பாரதம் வாழும்
நினைவில் கொஞ்சம் நிம்மதி பூக்க
மனையில் மனதில் மாண்பைச் சேர்ப்போம்
பூக்கும் கவிகள் புவியை ஆள
ஆக்கம் நிறைத்து அவனியைக் காக்க
மனிதம் என்பதை மனதுள் வைப்போம்
புனிதம் ஏந்திப் புவியைக் காப்போம்
********************************************
vaalthukal. en pilamal poitalama intha vari puriyavilai.
ReplyDelete