வேரென நின்றிடுவாய் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை..(மரபு)(காவடி சிந்து)எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்
“வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது
வகை 5 மரபுக்கவிதை
கால முருக்கலில் தோன்றிக் கருத்தெழில்
கற்றுக் கொடுத்தவளே-அருங்
கன்னித் த்மிழ்க் கொடியே-அடர்
ஞாலம் தனில் பெரும் ஞானம் உரைத்திடுக்
நாதம் இசைப்பவளே-பசும்
நாற்று வளர்ப்பவளே-வரும்
காலக் கதிரதில் ஊனில் உயிரினில்
காட்சி தருபவளே-மூச்சுக்
காற்றில் சிரிப்பவளே-வெற்றிச்
சீலமனைத்திலும் செம்மை விளங்கிட
சிந்தனை தந்தவளே-என்னுள்
சீறிப்பிறப்பவளே-என்
மோகக் கருவிழி முங்கி எழுந்திட
முத்தும் அளித்தவளே-அதை
முன்னமாய்த் தந்தவளே-பெரும்
தாகமெடுத்துனை தேடிய டைந்திட
தத்தும் நறும்புனலே-நலம்
தங்கும் அருட்கடலே-வானின்
மேகக் குடமதன் மேனமை அலர்ந்திட
மாரியும் ஆனவளே-சுடர்
மங்கலப் பெண்மயிலே-உன்றன்
போக மேவாழ்வெனக் கூடும் புரட்சியின்
பாவலர் கைப்பொருளே-என்னுள்
பூக்கும் சுகநிலையே-வளர்
நேசமுடன் உனை நெஞ்சில் துதித்திட
நன்னிலை தந்தவளே-எந்த
நாட்டையும் வென்றவளே-திரு
வாச கமாய்தினம் தோன்றி மலர்ந்துமே
வாகையைக் கொண்டவளே-அதில்
வன்மையும் தந்தவளே-மிகு
பாச முடன்உனைத் தாங்கியே நின்றிட
பாதையைத் தந்திடுவாய்-என்றன்
பண்பையும் கூட்டிடுவாய்- இந்த
தேச மனைத்திலும் வெற்றி ஒளிர்ந்திட
வேகமாய் வந்திடுவாய்-நின்றன்
வேரென நின்றிடுவாய்
**********************************************************************************
No comments:
Post a Comment