வானத்திற்கும் பூமிக்கும்
ஏற்பட்ட காதல் ஊடலுக்கு
தூது போக வந்தவன்
வானம் துக்கத்தால்
கதறி அழுவதால்
கிடைக்கும் கோணல் முடிச்சுகள்
விவசாயிகளுக்கு
வானம் தரும்
வண்ணப்பரிசு
மக்கள் சிரிப்பதற்காக
மேகத்தின்
பூச்சொரிதல் விழா!
அதிகமாக
(கடல்) மது அருந்தியதால்
வானம் எடுக்கும் வாந்தி!
யாரோ ஒரு காதலி
தோற்றுவிட்டதற்கான
துக்கச் செய்தி! மரண அறிவிப்பு!
அதிகமாக வந்துவிட்டாலோ
அமைச்சர்களிடமிருந்து வரும்
ஒரு அறிக்கை_ஆறுதலுக்காக
ஓ1 வானமே!
ஏன் உன் விழியெல்லாம்
எங்கள் கண்கள்?????
யாரை நினைத்து அழுகிறாய்?
உனக்கும் எங்களைப்போல்
“இல்” வாழ்க்கையோ?
வன்முறைகள்
வான் வரையும் வளர்ந்து
படர்ந்து கிடக்கிறதோ?????
தேவர்களுக்கும் தேர்தல் சமயமா?
அங்கும் குடிமிபி சண்டையா?
இசை நாற்காலிப் போட்டியா??
யாருக்கெல்லாம் ஆசி வழங்க
இப்படி பொழிகிறாய்?
************************************
ஏற்பட்ட காதல் ஊடலுக்கு
தூது போக வந்தவன்
வானம் துக்கத்தால்
கதறி அழுவதால்
கிடைக்கும் கோணல் முடிச்சுகள்
விவசாயிகளுக்கு
வானம் தரும்
வண்ணப்பரிசு
மக்கள் சிரிப்பதற்காக
மேகத்தின்
பூச்சொரிதல் விழா!
அதிகமாக
(கடல்) மது அருந்தியதால்
வானம் எடுக்கும் வாந்தி!
யாரோ ஒரு காதலி
தோற்றுவிட்டதற்கான
துக்கச் செய்தி! மரண அறிவிப்பு!
அதிகமாக வந்துவிட்டாலோ
அமைச்சர்களிடமிருந்து வரும்
ஒரு அறிக்கை_ஆறுதலுக்காக
ஓ1 வானமே!
ஏன் உன் விழியெல்லாம்
எங்கள் கண்கள்?????
யாரை நினைத்து அழுகிறாய்?
உனக்கும் எங்களைப்போல்
“இல்” வாழ்க்கையோ?
வன்முறைகள்
வான் வரையும் வளர்ந்து
படர்ந்து கிடக்கிறதோ?????
தேவர்களுக்கும் தேர்தல் சமயமா?
அங்கும் குடிமிபி சண்டையா?
இசை நாற்காலிப் போட்டியா??
யாருக்கெல்லாம் ஆசி வழங்க
இப்படி பொழிகிறாய்?
************************************
ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅப்படியே எங்க ஊருக்கும் ஆசி வழங்கட்டும்...
கவிதை அருமை... வாழத்துக்கள் அம்மா..
ReplyDeleteஅன்புடன்-
S. முகம்மது நவ்சின் கான்.
www.99likes.blogspot.com
மழை வந்தால் அவ்ளோ நல்லாருக்கும்.....மழை வரட்டும்
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட முகவரி இதோhttp://blogintamil.blogspot.com/2014/08/raja-day-4_28.html?showComment=1409191686878#c4034498727348158911
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்புள்ள சுவாதியும் கவிதையும் அருமை.
ReplyDeleteமழை.......(கவிதை)
வானத்திற்கும் பூமிக்கும்
ஏற்பட்ட காதல் ஊடலுக்கு
தூது போக வந்தவன்
மக்கள் சிரிப்பதற்காக
மேகத்தின்
பூச்சொரிதல் விழா!
அருமையான கவிதை
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in