கருணைவிழி கவிதைமுகம் தெளிவான புதுவடிவம்
கவினாகத் தெரிகின்றது
கலைகின்ற போதினிலும் அழுகின்ற போதினிலும்
அன்புமுகம் மலர்கின்றது
பொறுமையென எனது மனம்பொழுதுபட நினைவுகளில்
பொதுவாக நிறைகின்றது
பழிகேட்டுப் புண்ணாக பண்ணதுவும் எழுத்தாக
மனம் தானெ கரைகின்றது
அருளதுவும் அகமதினில் பரவிவர தொழுதுவரும்
எனையேற்றுக்கொள்வாயம்மா
அன்பதினில்பூத்தமுகம்அன்னையென தோன்றிவிட
அணைத்தேற்றுக் காப்பாயம்மா
பொருளதுவும் இல்லாமல் எந்து மனம் தினந்தினமும்
பொழுதுக்கும் அழுகின்றது
புன்னகையின் முகமலர பொன்னாக நீயுலவ
இன்பந்தான் எழுகின்றது
பெண்ணாகப் பிறந்துவிட பெருந்தவமே செயனுமென
கவிமணியும் புனைகின்றாரே
பெண்ணாகப்பிறந்துவிடின் புண்ணாகும் வாழ்வதுமே
எவர்வந்து சரியாகுமோ?
மண்ணாகிப் போகுமடப் பழக்கங்கள் நம்மிடையே
மலையாக அலைகின்றது
மண்ணாகும் வாழ்வதியும் மனதாலே எந்திடவே
மனமதுவும் உலைகின்றது
தண்ணாகிப் போகிவிட நினைகையிலே என்மனமும்
தணலாகி எரிகின்றது
தண்ணாக்கி தாயாக்கி தாயென்ற சொல்லாக்கி
வாழ்ந்தநிலை புரிகின்றது
புண்ணாகப் போனமனம் பொன்னேயுன் திருவடியில்
பதிவாக நினைக்கின்றது
பொய்யாக வாழுமிவர் புழுவாகத் துடிக்கவிட
பொதியாகச் சுமக்கின்றதே!
தெருவோரம் நான்செல்ல எதிராக வந்தவரும்
எனைநாடிப் பேசுகின்றார்
தேனாகப் பேசிவிட்டு திகட்டாத வாழ்த்தளித்துப்
பின்னாலே ஏசுகின்றார்
ஒருவோரம் சென்றாலும் மறுவோரம் வந்தங்கு
மனதாரப் பேசுகின்றார்
கேளாமல் நான்மட்டும் போனாலே பின்னர்தான்
பொல்லாத கர்வி என்றார்
மருவாக என்மீதே மனதார வீணபழிகள்
மக்களே பூசுகின்றார்
மங்கைநான் மன்றாட மலரென்றும் பாராமல்
மனதயும் தூற்றுகின்றார்
திருவான தேவியே தெவிட்டாத நாயகி
தென்றலை வீசுதேவி
திசையெல்லாம் பாடியே உன்னையும் நாடியே
குறைகளையே போக்கிடுவேன்
(தொடரும்.......) பாகம் 1
கவினாகத் தெரிகின்றது
கலைகின்ற போதினிலும் அழுகின்ற போதினிலும்
அன்புமுகம் மலர்கின்றது
பொறுமையென எனது மனம்பொழுதுபட நினைவுகளில்
பொதுவாக நிறைகின்றது
பழிகேட்டுப் புண்ணாக பண்ணதுவும் எழுத்தாக
மனம் தானெ கரைகின்றது
அருளதுவும் அகமதினில் பரவிவர தொழுதுவரும்
எனையேற்றுக்கொள்வாயம்மா
அன்பதினில்பூத்தமுகம்அன்னையென தோன்றிவிட
அணைத்தேற்றுக் காப்பாயம்மா
பொருளதுவும் இல்லாமல் எந்து மனம் தினந்தினமும்
பொழுதுக்கும் அழுகின்றது
புன்னகையின் முகமலர பொன்னாக நீயுலவ
இன்பந்தான் எழுகின்றது
பெண்ணாகப் பிறந்துவிட பெருந்தவமே செயனுமென
கவிமணியும் புனைகின்றாரே
பெண்ணாகப்பிறந்துவிடின் புண்ணாகும் வாழ்வதுமே
எவர்வந்து சரியாகுமோ?
மண்ணாகிப் போகுமடப் பழக்கங்கள் நம்மிடையே
மலையாக அலைகின்றது
மண்ணாகும் வாழ்வதியும் மனதாலே எந்திடவே
மனமதுவும் உலைகின்றது
தண்ணாகிப் போகிவிட நினைகையிலே என்மனமும்
தணலாகி எரிகின்றது
தண்ணாக்கி தாயாக்கி தாயென்ற சொல்லாக்கி
வாழ்ந்தநிலை புரிகின்றது
புண்ணாகப் போனமனம் பொன்னேயுன் திருவடியில்
பதிவாக நினைக்கின்றது
பொய்யாக வாழுமிவர் புழுவாகத் துடிக்கவிட
பொதியாகச் சுமக்கின்றதே!
தெருவோரம் நான்செல்ல எதிராக வந்தவரும்
எனைநாடிப் பேசுகின்றார்
தேனாகப் பேசிவிட்டு திகட்டாத வாழ்த்தளித்துப்
பின்னாலே ஏசுகின்றார்
ஒருவோரம் சென்றாலும் மறுவோரம் வந்தங்கு
மனதாரப் பேசுகின்றார்
கேளாமல் நான்மட்டும் போனாலே பின்னர்தான்
பொல்லாத கர்வி என்றார்
மருவாக என்மீதே மனதார வீணபழிகள்
மக்களே பூசுகின்றார்
மங்கைநான் மன்றாட மலரென்றும் பாராமல்
மனதயும் தூற்றுகின்றார்
திருவான தேவியே தெவிட்டாத நாயகி
தென்றலை வீசுதேவி
திசையெல்லாம் பாடியே உன்னையும் நாடியே
குறைகளையே போக்கிடுவேன்
(தொடரும்.......) பாகம் 1
நல்ல சொல்வளம், கருத்துக்கள்.. இரண்டாம் பாகத்தைக் காணாமையின் என் மனம் போனபடி நிரப்புகிறேன் சகோதரி! இன்னும் எழுதுங்கள்!
ReplyDeleteகருவாகும் போதிலே கலையென்ற குரலோடு
கள்ளியின் பாலூட்டிடும்
காமத்திற் குணவெனும் காவலில் வைத்திடும்
கணணற்ற சமுதாயத்தில்
உருவான தென்பிழை என்றோய்ந்து போகவோ?
உருக்குலைத் தளைகள் எல்லாம்
உடைக்கின்ற துணிவாக உறைவாய் என்னுள்ளத்தே
உலகத்தின் உயிர்நாயகீ!