Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Wednesday, August 13, 2014

கோபம்(காதல்)

வைரத்தை வைரத்தால்
அறுப்பது போல்
என் கோபத்தை
உன் கோபங்களால்
அப்புறப்படுத்திவிடேன்
************************

Friday, August 1, 2014

நீயும் நானும் (காதல்)

என் அன்பை
உனக்கென
 வடிவமைத்திருக்கிறேன்
அதனை
நீயின்றி
வேறு யாரும்
 உணர்தல் இயலாது
******************************

அன்பெனப்படுவது யாதெனில்
நான்
உன்மேல்
 வைத்திருப்பதும்
நீ என்மேல்
வைத்திருப்பதும்
 மட்டுமேயாகும்
******************************************

Thursday, July 24, 2014

மறக்க இயலாத கொடுமை

மறக்கும் நினைவுகள்
பல இருக்க
உன்னை
மறக்க இயலாமல்
துன்பப்படுவது தான்
உலகின்
மிகக் கொடுமையானதாகத் தெரிகிறது
********************************************

Wednesday, July 23, 2014

சருக்கிய கடவுள்












யானைக்கும்
அடி சருக்கும் என்பார்கள்
சரி!
கடவுளுக்குமா?????

உன்னையும் என்னையும்
பிரித்ததில்
சருக்கியது
கடவுளும் தானே????
*****************************

Thursday, June 19, 2014

காதல்...காதல்....

(இந்தப் பகுதியில் நான் எழுதிய காதல் கவிதைகள் அனைத்தையும் பதிவிட நினைத்துள்ளேன்)



நெஞ்சக்கூடுகளில்
நிறைந்தவனே!

என்
மூச்சுக்காற்று
ஒருமுறை உள்ளிழுத்து
மூன்றுமுறை
உன் பெயரை
உச்சரிக்கிறது!

பார்வையிலேயே
பதியன் போடும் நீ
பாதையை
சரி செய்வதன்றோ?

இவையெல்லாம் - என்
வாழ்க்கையின்
வசந்தக் கிறுக்கல்கள்
என்றுதான் சொல்ல வேண்டும்

விஞ்ஞானிகள்
மனதிற்குள் ஊடுருவும் கருவியை
இன்னமும் கண்டுபிடிக்கவில்லை

அவர்களிடம்
உன்னைகொண்டு போய்க் காட்டவேண்டும்
எக்ஸ்ரே கதிர்களை எதிர்த்து
இங்கே ஓர் ஜீவன்
எலும்பையும் இதய்த்தையும்
உருக்கிக் கொண்டிருக்கிரது
என்று சொல்ல வேண்டும்

நீயும் பூவும்
ஒன்றென்று சொல்லமாட்டேன்
அதற்கு மேலும் உதாரணம் காட்ட
இன்னமும்
ஓயாமல் தேடிக்கொண்டிருக்கிறேன்
விடையைக்காணவில்லை

நீ
மெளனமாக மனதிற்குள் பாடுவது
எனக்குப் புரியும்
வெளியே சொல்ல ஏனோ
வெட்கப்படுகிறாய்

வாழ்க்கை முடிச்சுகளை நினைத்து
வதங்கிப் போகிறாயோ என்னவோ
உன்
மெளனம் என்னை
 மரணத்தில் தள்ளுகிறது

ஊட்டி மலை ரோஜா
உன்னருகே இருந்தால்
கொஞ்சம் வருத்தப்படும் - அது
உன்னைப் போல் மலரவில்லையே என்று

என்னவோ தேவா
எதையோ தொலைத்துவிட்டேன்
கொஞ்சநாட்களாகத்தான்
தொலைந்தது கிடைககவா
 போகிறதென்றுதான்
 தேடினேன்,....தேடினேன்

ஆனால்
தொலைந்தது எப்படி உன்னில்?

நான் உன்னை’
என்னில்
நிரப்பிக்கொண்டது போல
என் எழுதுகோலும்
நிரப்பிக்கொண்டது போலும்

 அதுதான்
எப்போதும் உன்னையே
எழுதிக்கொண்டிருக்கிறது (தொடரும்)

**************************************