Showing posts with label கஸல். Show all posts
Showing posts with label கஸல். Show all posts

Friday, September 25, 2015

என் இறைவா

என் இறைவா
சில சம்பவங்கள்
என்னை
நிறைய சலனப்படுத்துகிறது
எனை ஆட்கொள்கிறது
எனை
மேற்கொண்டு சிந்திக்கவிடாமல்
தடுக்கிறது
என் இறைவா
நெஞ்சை அறுக்கும்
நிகழ்வுகள்
இதயம் தொலைக்கும்
நிகழ்வுகளில்
நான் ஆழ்ந்து போகிறேன்
அது
என்னைச் சூழ்ந்து கொள்கிறது

என் இறைவா
சலனங்களை சலனப்படுத்தி
நான்
முன்னேற வேண்டும்
நான்
மேன்மேலும்
நிமிடத்திற்கு நிமிடம்
நொடிக்கு நொடி
உயர வேண்டும்
பண்பால், அன்பால்
கம்பீரத்தால், கௌரவத்தால்
உயர்ந்துகொண்டே
இருக்க வேண்டும்
எனக்கு
வரம் வழங்கு
எந்தச் சலனங்களும்
என்னை
ஆட்கொள்ளாதிருக்கட்டும்
****************************************

Sunday, July 27, 2014

என் இறைவா

என் இறைவா

இவர்கள்
பரிதாபத்திற்கு உரியவர்கள்

பிறர் பொருளை அபகரிப்பதால்
தான் உயர்ந்து வாழ்வோம்
என்று அபகரித்தார்கள்

இனி
உன் நெஞ்சில் அவர்களை
எப்படி
இருத்தி வைப்பாய்?

பல நன்மைகளில்
எப்படித்
பொருத்தி வைப்பாய்?

வெறும் பணத்தைப் பெற்றுப்
பெற வேண்டிய உனதருளை
இழந்து விட்டார்களே

என் இறைவா

அவர்களை எப்படி
பரிசீலிக்கப் போகிறாய்?
தெரியவில்லை

ஆனால்
பூமி பல
புண்மைகளைத் தந்து
அவர்களிடமிருக்கும் பல
நன்மைமளைக் கொய்து விடும்
************************************************

Saturday, July 19, 2014

என் இறைவா

என் இறைவா

என்ன நடக்கிறதெனப்
புரியவில்லை

சில சமயங்களில்
என்ன பேசுகிறார்கள்
என்று கூடப் புரியவில்லை

ஆனால்
என் இறைவா

எல்லாம்
ஒரு விதக் கணக்குகளோடும்
கண்காணிப்புகளோடும் நடக்கின்றன

நடக்கும் நிகழ்வுகள்
பிரியத்திற்குள்ளாவதும்
பிரியத்திற்குள்ளாக்கப்படுவதும்

உன்னாலேயே நிகழ்கின்றன
உன்னாலேயெ அழிகின்றன

எல்லாம் உணர்கிறேன்

என்னைப் போலவே
எல்லோருக்கும் உணர்த்து
****************************************************************

Friday, July 18, 2014

என் இறைவா

என் இறைவா

வாழ்க்கைச் சக்கரம்
சுழலும் என்கிறார்கள்

மேலோன் கீழோன்
எல்லா விதியும் மாறும்
என்கிறார்கள்

மாற்றம் மட்டுமே
மாறாத சொல்
என்கிறார்கள்

பானை மண்ணாகிறது
மண் பானையாகிறது

அழியாப் பொருள்கள்
ஏதும் இல்லையா?

அழியும் பொருள்கள் எனில்
அதன் பிறப்பின்
மர்மம் என்ன?

அழியாப் பொருள்கள் எனில்
அதன் வாழ்வின்
 ரகசியம் என்ன?

உயிரே அழியும் போது
மற்றவை மரிக்காதா?

உலோகங்களும் ஒருநாள்
அழியும் எனில்
எந்தக் காலத்தில்
எத்தனை ஆண்டுகளாகும்?

என் நிலையும் மாறுமோ?

எவர் நிலையெலாம் மாறும்?

நானறிந்து
 இங்கு ஏழைகள்
பரம்பரை ஏழைகள்

செல்வர்கள்
பரம்பரை செல்வர்கள்

வஞ்சகர்கள்
 பரம்பரை வஞ்சகர்கள்

ஏமாளிகள்
பரம்பரை ஏமாளிகள்

ஒருவேளை இவர்கள்
ஒன்றில் உயர்ந்து
மற்றொன்றில் தாழ்கிறார்களா?

மற்றொன்றில் ஏமாந்து
ஒன்றில் விழிப்படைகிறார்களா?

என் இறைவா

எல்லோரும் ஏதோ
சந்தர்ப்பம் வருவதாய்ச்
சொல்கிறார்கள்

எனக்கும் கொடு
நானும் வாழ வேண்டும்
நானும் மாற வேண்டும்

என்
வாழ்வில்
மாற்றம் வேண்டும்
**************************************************








Tuesday, June 17, 2014

என் இறைவா (கஸல்)

என் இறைவா
வாழ்வின் சுவர்கள்
எவற்றில் அடைபடுகிறதென்று
தெரியவில்லை

ஆனாலும்
அது சுவர்களால் சூழ்ந்து
சோகங்களில் வீழ்த்தப்பட்டு
அன்புகளில் கரைந்து
ஆளுமைகளில் நிறைந்து
இருளில் மூழ்கி
வெளிச்சத்தில் விடிகிறது

இதில்
எதை இடிப்பது?
எதை மேலெழுப்புவது?
எதனில் அமர்வது?

எதுவும் புரியாமல்
வாழ்க்கை ஓடம்
ஓடுகிறது
அமைதியாகவோ
ஆனந்தமாகவோ

என் இறைவா
எப்போதும்
விடியலில் சுகமில்லை
எப்போதும் உள்ள
வெற்றியில் பலமில்லை
எப்போதும் இருக்கிற
ஆனந்தத்தில் பரவசமில்லை

ஆனாலும்’
உழன்று சுழன்று
இது எப்போது நிற்கும்?
புரியவில்லை
இது எப்போது என்னாகும்’
தெரியவில்லை

நடத்து! நடத்து!
உன்
ராஜ்ஜியத்தை
நடத்திக் கொண்டேயிரு
**************************************************************

Saturday, June 14, 2014

என் இறைவா(கஸல்)

என் இறைவா
மனிதர்களுக்குள் எத்தனை வேலிகள்
மனதிற்குள் எத்தனை போலிகள்

உறவுகளில் உப்புகள்
உறவுகளின் கசப்புகள்
எல்லாம் நல்லதுதான்
அளவோடு இருக்கும் வரை

மாயைகள் அழிய வேண்டும்
மாண்புகள் நிறைய வேண்டும்

ஆனால்
என்னதான் நடக்கிறதிங்கே

அழிய வேண்டியவை
வாழ்கின்றன்
 வாழ வேண்டியவை
 அழிகின்றன

எது அழிவு?
எது வாழுவு?எது உண்மை?

ஒன்றுமே புரியாத நிலையில் தான்
ஒவ்வொரு மனிதரும்
ஒவ்வொரு வாழ்க்கையும்
ஒவ்வொரு நிமிடமும்

என் இறைவா
 எங்களை நெறிப்படுத்து
எங்களை முறைப்படுத்து
எங்களைச் செம்மைபடுத்து
எங்களை வாழவிடு
***************************************************************************

என் இறைவா

என் இறைவா
மாயையில் திரியும் மனது
அரண்டு போகும் இதயம்
அழுது துடிக்கும் நேர்மை

உலகத்தின்
அட்சக்கோடுகளும் தீர்க்க ரேகைகளும்
சாதியின் பெயரால்
சங்கடப்பட வைக்கிறது

இனியென்ன
சாதியை,
சாமி என்பார்கள்
மதங்களில் நாட்டைச் சிதைப்பார்கள்

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
அட்சக்கோடுகளாய்
அசிங்கங்கள்
தீர்க்கக் கோடுகளாய்’
தேவையற்றதுகள்

அண்டை அயலாரின்
தேவைகள்
அடுத்தவனின் முகங்கள்
இவற்றைப் பற்றியே
இவர்களின் கவலைகள் நீள்வதால்
இவர்கள்
மனிதர்களில்லை
ம்னிதர்களுக்கான தகுதியும்
இவர்களிடம் இல்லை

அதனால் தான் என்னவோ
நாய், எருமை, கழுதை என்று
திட்டிக் கொள்கிறார்கள்
என்னவோ அதனின்
நற்குணங்கள் இவர்களிடம்
இருப்பது போல்

என் இறைவா
வாழ்க்கைச் சக்கரங்கள் ஓடுகிறது
நினைவுகளின் கூடுகளில்
வேதனைகளின் விளிம்புகளில்
ஏதோ ..என்னவோ...எப்படியோ
ஓடத்தான் செய்கிற்து
வியாபாரம் நடக்கிறது

நானே தலைவன்
நானே பெரியவன்
நானே அனைத்தும்
என்ற வெற்றுப் பேச்சுக்களாலேயே
எங்கள் வீதிகல்
அலங்கரிக்கப்பட்டு விட்டன

யார் தலைவன்?
யார் முதலாளி?
யார் பெரியவன்?

என் இறைவா
உனது அடிமைகளுக்குக்
கருணை கொடு

அவர்களின் அறியாமையை அழித்து
அன்பை புகட்டு
அவர்களின் வேதனையைத் துரத்தி
வெற்றியைத் தேடிக்கொடு
********************************************************


என் இறைவா ( கஸல்)

என் இறைவா
மனம் என்பது
இல்லாது போனால்
இங்கு ஒன்றுமிருக்காது
காற்று இல்லாது போனால்
இங்கு எதுவும் இயங்காது
சூரியன் இல்லாது போனால்
இங்கு எதுவும் நடக்காது
நீ இல்லாது போனால்
இங்கு உலகமே இருக்காது
நீயே எங்கள் உயிர்
நீயே எங்கள் இன்பம்
நீயே எங்கள் இயக்கம்
எனவே
வேதனை துடைத்துவெற்றி கொடு
எங்கள் வாழ்வும்
வளமாகட்டும்
*********************************

என் இறைவா(கஸல்)

என் இறைவா!
உனக்கும்  எனக்கும் கூட
நெருக்கமில்லாமல் போனது போல
ஒரு தோற்றம்

இது தோற்றம் தான்
நிஜமில்லை

என் இறைவா
உன்னை விடுத்து
நானும்
என்னை விடுத்து
நீயும்
எப்படி இயங்கும்
இந்த உலகம்?

என் இறைவா
விடியல்கள் நிறைய
அமைதியைத் தருகின்றன
கோவில்களோ நிறைய
அன்பைத் தருகின்றன

ஆனாலும்
என் இறைவா
இரவுகள் இல்லாதது போல்
விடியல்கள் மலராதது போல்
எவ்வளவு அழுகைகள்?
எவ்வளவு இழப்புகள்?
எவ்வளவு துயரங்கள்?

உன்னை நினைக்க
எதுவும் இல்லாமல் போகும்
உன்னை நினைக்க
எதுவும் கிடைத்துவிடும்

துயரங்களை இல்லாமல் செய்து
நிம்மதியைக் கிடைக்கச் செய்யாமல்
துன்பங்களை நிறைத்து
அன்பை அநாதையாக்கி விட்டார்கள்

என் இறைவா
எல்லா உயிரினமும்
அமைதியாகட்டும்

எல்லா உயிரினமும்
இன்பமுறட்டும்

எல்லா உயிரினமும்
வெற்றியடையட்டும்
எங்களை வாழ்த்து
***************************
எல்லை என்பது இதயத்திற்கு இல்லை
 என்ற எனது நூலிலிருந்து.....

என் இறைவா (கஸல்)

உயிர்களின் முடிச்சு
விரிசல்களில் நெரிகிறது

இதென்ன உலகம்?
இதென்ன வாழ்க்கை?

போராட முடியாமல்
புழுங்குகிறது மனது

இதயம் மட்டும்
காலைகளின் ஈரங்களை
மழைகால வாரங்களை
இயற்கையின் சுவாசங்களை
நேசிக்கிறது

நேசிக்கட்டும்
நேசத்திலாவது
உலகம்
அன்புமயமாகட்டும்
வானம் வசப்படட்டும்

வெற்றி வளர
அன்பு மலர
சாதிகள் அழிய
நேர்மை உணர
வானம் வசப்படட்டும்

என் இறைவா
இனிமேலேனும்
எல்லோருக்கும்
வானம் வசப்படட்டும்
***************************************

Saturday, March 15, 2014

என் இறைவா.....(கஸல்)

என் இறைவா

சிறிய பதவி உயர்வுகளுக்கே
மனிதர்களின்
சிந்தை கலைந்து போகிறது
நான்கு நபர்களுக்கு மேல்
வேலை செய்வதை
நாற்பது பேர் தனக்குப் பணியாள்
எனக் கருதிக் கொள்கின்றனர்
மமதையில்
தங்களுக்குத் தாங்களே
மகுடம் சூட்டிக் கொள்கின்றனர்
அதட்டுவதும் பேசுவதும்
வேலை வாங்குவதும்
பெருமிதம் அடைவதும்
அடேயப்பா!

என் இறைவா
அவர்க்களுக்கு மேல் பணி செய்வதை
கடமையாகவோ
கடவுளின் வடமாகவோ,
தன் திறனுக்கு கிடைத்த பரிசு
என்பதாகத்தானே நினைக்கவேண்டும்

தனக்குக்கிடைத்ததை
 அதிகாரமாகவும்
ஆடம்பரமாகவும்நினைத்து
அலட்டிக்கொள்கிறார்கள்
பதவிபோதை
அவர்களைப்
பாடாய்ப் படுத்துகிறது

என் இறைவா
நீ நினைத்தால்
இந்த பதவி எம்மாத்திரம்?
நீ அணைத்தால்
இந்தப் பதவி உயரும்
நீ அணைத்தால்
இந்தப் பதவி அனைத்தும் போகும்
ஏன் யோசிக்கவில்லை

அருளை யாசிக்கவில்லை
அன்பை பூசிக்கவில்லை

என் இறைவா
நான்
எத்தனை உயரம் போனாலும்
இரக்கமுறும் மனம் தா
எந்த்ப் பதவியில் இருந்தாலும்
பண்பான வார்த்தைகள் தா

என் இறைவா
அதே போல்
அந்த அதிகாரத்திற்கும்
ஆளுமைகளுக்கும்
என்ன பதில் தருவாய்
எப்போது பதில் தருவாய்????
******************************

Friday, March 14, 2014

என் இறைவா (கஸல்)




என் இறைவா
பேனாவிலிருந்த மை
எழுத எழுதத்
தீர்ந்து போவது போலவே
சிலருக்குப்
 பாசங்களும் தீர்ந்து போகிறது
மீண்டும் மை நிரப்ப
வேறு மைக்கூடு தேடுகிறார்கள்
அல்லது
பேனாவை வீசிவிடுகிறார்கள்
பாசப் பிணைப்புகள்
என்று சொல்லிப்
போலி நடிப்புகள்
என் இறைவா
நான்
பழகுவதற்கு முன்பே
இவர்களை
எனக்கு
அடையாளம் காட்ட மாட்டாயா????
****************************************

Monday, March 3, 2014

என் இறைவா


என் இறைவா
நேற்றி இருந்த கட்சி
இன்று இல்லை
இன்று இருக்கும் கூட்டணியும்
நாளை இல்லை
இங்கு
எதிலும் எப்போதும்
நிரந்தரம் இல்லை
ஆனால்
நிரந்தரம் என்பது போல்
ஏனிந்த ஆராவாரங்கள்?
இதெல்லாம் ஒரு புறமிருக்க
நாளை வரப்போகும் ஆட்சியாவது
நல்லதாய் இருக்குமோ என்னவோ
இங்கு
கஷ்டப்படுவதெல்லாம் மக்கள்
நஷ்டபடுவதெல்லாம்
அவர்கள் வாழ்க்கை
ஆனால்
பேச்சுக்கள் தொடர்கிறது
விளம்பரம் வளர்கிறது
அநியாயமே அரங்கேறுகிறது
இதையல்லாம் நீ
பார்ப்பாயா?
பார்க்க மாட்டாயா?
உனக்கு எதுவும் தெரியாதா?
இங்கு
அநியாயங்களே அரங்கேறுமெனில்
நீ எதற்கு?
இங்கு அழுகைகளே
வாழ்க்கையெனில்
உனக்கு வழிபாடு எதற்கு?
இங்கு
தொல்லைகளே தோழமையாகுமெனில்
உனக்குக் கோயில்கள் எதற்கு?
இங்கு
தர்மங்கள் வெற்றியாக வில்லை
உண்மைகள்
ஊமையாகிப் போனது
பொய்களே பொலிவுடன் வாழ்கிறது
இங்கு
எவர் வாழ்க்கையிலும் உறுதிப்பாடில்லை
எவரிடமும் கொள்கைகள் இல்லை
இங்கு
எங்குமே அமைதியில்லை
எங்குமே
கொந்தளிப்பு அடங்கவில்லை
என் இறைவா
எதற்காக இப்படி செய்கிறாய்?
ஏனிந்த அவலம்?
பதில் கொடு! பதில் கொடு!
*****************************************

Friday, February 28, 2014

என் இறைவா









என் இறைவா
எத்தனை மாற்றங்கள்
எத்தனை நிகழ்வுகள்
என்று தெரியாமல்
ஏன் நிகழ்ந்தன
என்று தெரியாமல்
நிறைய நடந்தேறி வந்து விட்டன
மகிழ்வாய்...
குதூகலமாய்....
வெற்றியாய்....
பற்பல....
கவலையாய்...
கண்ணீராய்...
சிற்சில.....
ஆனாலும்
மனம் ஒன்றி
வாழ்வை ரசிக்கிறேன்
மனம் முழுக்க
வாழ்வை நேசிக்கிறேன்
என் இறைவா
உனக்கு நன்றி
என்னை
நேசிப்பில்
ஆழ்த்தியதற்காகவும்
அன்பில்
வீழ்த்தியதற்காகவும்....
*********************************

Friday, January 10, 2014

என் இறைவா

என் இறைவா
எதற்காக?
யாருக்காக?
ஏன் இந்த வாழ்க்கை?
எல்லோருமே
குறை கூறுகிறார்கள்
யாரைபற்றியாவது
எல்லோருமே
தாங்கள்
நியாயவாதி என்கிறார்கள்
அப்படியானால் இவர்களில் ‘
நேர்மையற்றவர்கள் யார்?
எப்படி?
ஒருவன் ஒருசிலருக்கு நல்லவனாயிருந்தால்
பலருக்குத்
தீங்கிழைததவனாயிருக்கிறான்
பலருக்கு
நன்மை செய்பவனும்
சிலருக்கு துரோகம் செய்கிறான்
யாருக்கு செய்தால் என்ன?
அநியாயம் நியாயமாகுமா?
துரோகம் நீதியாகுமா?
ஆனால்
என் இறைவா
இவர்கள்
தவறுகளுக்கான
நியாயங்களைத் தேடி
அலைகிறார்கள்
குற்றங்களுக்கான
நீதியைத்
தயாரித்துக் கொள்கிறார்கள்
உண்மைகள் பலவும்
இங்கு
அலங்கரிக்கப்படுகின்றன
பொய்கள் பலவும்
ஆராதிக்கப்படுகின்றன
அலுவலகங்களீல் பார்க்கப்படாமல்
பல கோப்புகள் இருக்கலாம்
நிறைவேற்றப்படாத
பல செயல்கள் இருக்கலாம்
முடிக்கப்படாத
பலவேலைகள் இருக்கலாம்
ஆனால்
என் இறைவா
உனது கோப்புகளிலும்
இதே முறைதானா?
இதே முறையெனில்
உனக்கேன் உயர்வுகள்?
உனக்கேன் பக்தர்கள்?
உனக்கேன் கோவில்கள்?
****************************************