Showing posts with label என்னைப்பற்றி. Show all posts
Showing posts with label என்னைப்பற்றி. Show all posts

Monday, January 5, 2015

தினமலர் நாளிதழில்


                                 3rd  Saturday 2015 dinamalar

நிலவோடு பேசும் நேரம் விமர்சனம்

in   புத்தக உலகம் தினமலர்


Wednesday, December 31, 2014

நல்ல தொடக்கம்...வெற்றி நிச்சயம்

2014 அப்படி இப்படி எப்படியோ நம்மை விட்டு கழண்டு கொண்டது

2015 தொடக்கமே மிகவும் உற்சாகமாகவும், அன்பாகவும், நன்றியாகவும், மகிழ்வாகவும், இன்னபிற நல் உணர்வுகளால் என் மனம் நிறைந்து கிடக்கிறது

நற்செய்திகள் என் காதுகளை எட்டிய வண்ணம் இருக்கிறது,

இவை என்னை மேலும் ஊக்குவித்து , என் பணிகள் தொடர வைக்கும் என்றே நம்புகிறேன்

ஜனவரி முதல் கல்கி குழுமத்தின் தீபம் ஆன்மிக இதழில் எனது கட்டுரைகள் வெளியாகின்றன

எனது நூல்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட திருமதி சு.கீதா என்பவர் தன் ஆய்வை முடித்து இன்று இப்போது அதனை என் கைகளில் தவழ விட்டுச் செல்கிறார்.

(மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியின் தமிழ் துறை தலைவர் அவர்களுக்கும் நெறியாளர் திருமிகு சு.மாதவன் அவர்களுக்கும் என் இதய நன்றி)

இன்னும் இன்னும் சில மகிழ்வான செய்திகள் இருக்கிறது, விரைவில் பகிர்கிறேன்.

1990 முதல் என் இலக்கியப் பணியை தொடர்ந்து வருகிறேன். பல இடர்கள், பல ஊக்குவித்தல்கள், பல கேலிகள், பல ...பல...பொறாமைகள்,, பல ஆற்றாமைகள்...இடையே என்னை நிலை நிறுத்துவதில் நான் எந்தசிக்கலுக்கும் ஆளாகவில்லை.

ஏற்றுக்கொள்ளக் கூடியவைகளை மட்டும் ஏற்று தூக்கி எறிய வேண்டியவைகளை தூக்கிஎறியத் துணியும் பக்குவமும் லாவகமும் எனக்குள் எப்போதும் ஓடி இருக்கிறது.

இறைவனுக்கு நன்றி இந்த ஆண்டு எனக்கு இனிக்கும் ஆண்டு. எல்லோருக்கும் அவ்வாறே அமைய என் பிரார்த்தனைகள்.






வெற்றி நிச்சயம்

என்றும் உங்களின் ஆசி வேண்டி.....

Sunday, December 21, 2014

எனது கட்டுரைத் தொடர் ஆரம்பம்

                           

 கல்கி குழுமத்தின் இதழான தீபம்  இதழில் (மாதமிருமுறை) எனது தொடர் வெளிவருகிறது.

தோழமைகள் அவசியம் வாங்கிப் படித்து இதழுக்கு விமர்சனங்கள் அனுப்ப வேண்டுமாய்....வலை பதிவர்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
                        

Friday, June 20, 2014

நான்




திருமிகு விஜய டி.ராஜேந்தர் அவர்களுடன் அவர் இல்லத்தில்.........

நான்




மதுரை வானொலி நிலைய இயக்குநர் திருமிகு லீலாவதி அம்மையார் காரைக்குடி கம்பன் கழகத்தில் பரிசளித்த போது

நான்




மேன்மைமிகு ஷீலா ராணி சுங்கத் அம்மையார் அவர்களுடன் வரதட்சிணை எதிர்ப்பு மாநாட்டில்......(எங்கள் ஊரில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். தற்போது செயலகத்தில்)

நான்




உவமைக் கவிஞர் சுரதா மற்றும் திருமிகு  மன்னை நாராயணசாமி ஐயா அவர்களுடன்

Thursday, June 19, 2014

நான்





எழுத்தாளர் திருமதி அனுராதாரமணன் அவர்களுக்கு எனது நூல் வழங்கும் போது

நான்





எனக்கு வணிகர் சங்க பெருமக்கள் மறைந்தகவிஞர் கண்ணதாசன் புகைப்படம் தரும் போது

நான்




ஒரு பெண்கள் கவியரங்கில் தலைமை ஏற்றபோது

நான்





கல்லூரியில் படிக்கும் போது ஒரு கார்ட்டூன் படம் வரைந்ததற்கு பரிசளிக்க வந்த நடிகர் திரு சிவக்குமார் அவர்களுடன்
என் பேராசிரியர் திரு.என்.ஸ்ரீதரன் அவர்கள் இல்லத்தில்

Wednesday, June 18, 2014

நான்

https://www.facebook.com/photo.php?v=1445131665718169&l=362302650199740360


இது நான் முகநூல் தொடங்கியதை ஒரு தொடர்பு கொடுத்திருக்கிறேன். இதைக் கிளிக்க என்னைப் பற்றி இன்னும் சில விவரங்கள் வரும். பாருங்களேன்....நன்றி

Saturday, June 14, 2014

நான்

நிறைய படிக்க விரும்புகிறேன்...

கதை, கவிதை, கட்டுரை, எந்த வடிவமும் எனக்குப் பிடிக்கிறது

பெளர்ணமி காலங்கள் எனக்குப் பிடிக்கும்

சிறு பிராயத்தில் கட்டாயமாக கடவுளை வழிபட வலியுறுத்தப்பட்டதால் வழிபாடுகளை வெறுத்தேன்...

பின்னாட்களில் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக உணர்ந்தேன்

23 வயதில்  திருமணமாகிவிட்டது

முனைவர் பட்டம் வாங்கி விட வேண்டும் என்று ஆசை

இன்னும் கூட படிக்க வேண்டும்

இது வரை படித்தது M.Com.,M.A.,M.Phil.,B.Lit.,D.T.Ed.,P.G.J.M.C.,P.G.D.V.E., தற்போது எம்.ஏ.தமிழ் படிக்கிறேன்.

I.A.S. ஆக ஆசைப் பட்டேன். அப்பா அம்மா ஒத்துக் கொள்ளவே இல்லை

அப்பாவாலும் அம்மாவாலும் நீண்ட துன்புறுத்தலுக்கு ஆளானேன். (தற்போது வரை)

வாசுகி, தினமலர் வாரமல்ர், சாவி(முன்நாளில் வந்தது) டி.ராஜேந்தரின் உஷா , குங்குமம், ராணி போன்ற இதழ்கள் என் எழுத்துக்கள் வெளிவந்துள்ளன கதையாக துணுக்குகளாக கவிதைகளாக

டி.ராஜேந்தரின் உஷாவில் அட்டைப் படத்தில் என் புகைப்படத்துடன் சாதனைப் பெண்மணி என்று செய்தி வெளியாகியது..

எனது திருமணத்தை நடத்தி வைத்தவர் இயக்குநர் திலகம் எஸ்.பி.முத்துராமன் அவர்கள்

இன்னும் தொடர்வேன்.....




நான்

என்னைப்பற்றி சொல்ல
 எனக்குத் தோன்றியதால்......
சில துளிகள்.....


* அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர்

* எனக்கு 2 பெண் குழந்தைகள்

* குழந்தைகள் பெயர் சக்தி,  ராகசூர்யா

*கணவர் பெயர் செல்வக்குமார்

*இது வரை 24 புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளேன்

* என் ஆசை , லட்சியம் எல்லாம் நான் இலக்கிய உலகில் சாதிக்க வேண்டும்         என்பதே

*இது வரை எழுதி வெளியிட்ட நூல்கள்

1. சந்தனப்பூக்கள்...கவிதைகள்...1990....92 பக்கங்கள்

2. சாரல்கீதங்கள்...கவிதைகள்...1991...116 பக்

3.மரகதவெளிச்சம்...கவிதைகள்...1992...84பக்

4.வைகறைத் தென்றல்...கதைக்கவிதை...1993...98பக்

5.கவியின் நெஞ்சம்....காவியம்...1994...180பக்

6.முத்துப்பந்தல்....அனுபவக்கட்டுரைகள்...1995....156பக்

7.நேசச்சுடர்...கஸல்...1995...136பக்

8.சந்தக்குயில்...சந்தப்பாடல்கள்...1996...96பக்

9.இனிக்கும் அமுதம்....மழலை இலக்கியம்...1996..96பக்

10.சூர்யநிலா ...கஸல்...1997...96பக்

11.காற்று சொன்ன ஹைக்கூ...1997...100பக்

12.நட்சத்திரவிழுதுகள்....சிறுகதைகள்....1998...104பக்

13.காயாத பனித்துளி...கவிதைகள்....1999...96பக்

14.நந்தவன நாட்கள்....கஸல்....2000....124பக்

15.முழங்கு சங்கு....கவிதைகள்....2001...96பக்

16.போதிமரம்....கவிதைகள்....2002...102பக்

17.கொடியேற்றம்...சிறுகதைகள்...2003..102பக்

18.மெளனவெற்றி...கவிதைகள்...2010...120பக்

19.உலகே பூச்செண்டு...கவிதைகள்...2011..104பக்

20.எல்லை என்பது இதயத்திற்கு இல்லை...கஸல்...2011...128 பக்

21. வசந்த ஊஞ்சல்...கவிதைகள்....2012...96பக்...

22.நிலைதகவல்....நாவல்....2012...102பக்

23.இதுவும் நேரம்...நாவல்...2012...110பக்

24. நிலவோடு பேசும் நேரம்...ஹைக்கூ 116பக் ( அச்சில்)

தொடரும்.....

இன்னும் நிறைய சொல்றேன்...