Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Monday, December 22, 2014

பள்ளி செய்தி

இன்று நத்தம்பண்ணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாக் கொண்டாட்டம் நடத்தப்பட்டது. விழாவினை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அருள் அவர்கள் துவக்கி வைத்தார்கள். 
விழா கொண்டாடுவதின் நோக்கமே நாம் அனைவரும் இன்ன சாதி இன்ன மதம் என்று நமக்கு நாமே பிரிந்து கொள்ளாமல் உற்சாகத்தோடு பலரோடும் இணைந்து பழகும் வாய்ப்பாக ஏற்று அனைவரோடும் பழக வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர் மதம் கடந்து விழா ஏற்பாடு செய்தமைக்கும் போட்டிகள் வைத்து ஊக்குவிப்பதற்கும் அவர்களைப் பாராட்டுகிறேன். மேலும் ப்ஞ்சாயத்து தலைவரின் இணைச் செயல்பாடுகள் அனைத்தும் பாராட்டும் படியாக இருக்கிரது. இது போன்று அனைத்து ஊரிலும் இருந்தால் தொடக்கக் கல்வி மிக அருமையாக அனைவரிடமும் எட்டும். அதன் மூலம் நமது இந்தியா மேலும் வல்லமை பெறட்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.
தலைமை ஆசிரியர் சுவாதி தன் உரையில் உலகில் 2000 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள பைபிள் தான் தமிழில் முதன் முதலாக அச்சாக்கம் செய்யப்பட்டது. பைபிளில் உள்ள சங்கீதம் மற்றும் நீதிமொழிகள் அனைவரையும் ஈர்ப்பதாகும். என்றார்
கல்வியாளர் சரஸ்வதி நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.
உதவி ஆசிரியர் ஜெகஜோதி நன்றியுரை ஆற்றினார். மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.


Sunday, November 30, 2014

என் மகள் சக்தியின் வலை தளம்

http://sakthiinnisai.blogspot.in/   இது என் மகள் சக்தியின் வலைதளம். பாருங்கள். வாழ்த்துங்கள். நன்றி

Friday, October 31, 2014

பள்ளிச்செய்தி

இன்று பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டு தினம் கொண்டாடினோம். வழக்கம் போல 3 சிறுமிகள் பாரத மாதா வேடமிட்டு வந்தனர்.
உடனே கார்த்திக் ராஜா எனும் மாணவன் எப்போ பார்த்தாலும் பெண்கள் தான் என்று சொல்லி விட்டு மீஸ் நாங்கள் பாரத மாதன் வேஷம் போடுறோம் என்றான்.
பாரத மாதாவுக்கு ஆண்பால் பாரத மாதன் என்று சொன்னது ரசிக்கும் படியாக இருந்தது.
எனவே அவர்களையும் வேட்டி அணிந்து வரச் சொன்னேன் எங்கள் மாணவர்களின் அழகிய முகங்களைப்பாருங்களேன்






இன்று நத்தம்பண்ணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டுத்  தினம் கொண்டாடப்பட்டது  மாணவர்கள் இன்று பாரத மாத வேடமிட்டு வந்தனர் .அனைவரையும் வரவேற்ற தலைமைஆசிரியர் சுவாதி இன்று சர்தார் வல்லபாய் பட்டேல் நமது நாட்டின் அனைத்து மன்னர்களையும் அழைத்து நாம் ஒருமைப்பாட்டுடன் வாழ வேண்டும் என்று கூறி நம்மை ஒருங்கிணைத்து இன்று இந்த நாளை நாம் கொண்டாடுகிறோம். 
உலகின் அனைத்து மக்களுக்கும் முன்னோடியாக விளங்கியவன் இந்தியனே. உலகிலேயே எல்லா சூழல்களாலும் ஒழுங்குபடுத்தப்பட்ட நாடு இந்தியாதான். இது போன்ற ஒரே சீரான் தட்ப வெட்ப நிலையை வேறு எங்கும் காண முடியாது. நமது நாட்டைப் போல் பண்பாட்டில் கலாசாரத்தில் பெருந்தன்மை கொண்ட நாடும் வேறு எங்கும் கிடையாது என்பதில் நாம் என்றும் பெருமிதம் கொள்ளவேண்டும் .612 சமஸ்தானங்களை இணைக்கும் வல்லமை படைத்தவராக சர்தார் வல்லபாய் பட்டெல் இருந்திருக்கிறார். என்பதில் நாமும் பெருமிதம் கொள்வதோடு இது போன்ற விழாக்கள் கொண்டாடுவதின் நோக்கமே நமது முன்னோர்களைப்பார்த்து நாம் பல்வேறு வகையில் நம்து நடைமுறைகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான்.என்றார். அதனை தொடர்ந்து மாணவர்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மனிதசங்கிலி அமைத்தனர். 
தேசிய ஒருங்கிணைப்புப் பாடல்களை மாணவர்கள் பாடியதோடு சில தேசிய ஒருமைப்பாட்டுப் பாடல்களுக்கு மாணவர்கள் ஆடினர். பாரத மாதாவாக வேடமிட்டும் பாரத பாரம்பரிய உடை அணிந்தும் தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்திக் கொண்டனர்.
சரஸ்வதி நாகராஜன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். உதவிஆசிரியர் ஜெகஜோதி  நன்றி தெரிவித்தார்.

Tuesday, October 21, 2014

பட்டாசுகளற்ற தீபாவளி

இன்று நத்தம்பண்ணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டது. மாணவர்களை உற்சாகமாய் வரவேற்ற தலைமை ஆசிரியர் சுவாதி தன் உரையில் பட்டாசுகளால் குருவி ,வண்டு, பூச்சியினங்கள் போன்ற பல உயிரினங்களின் வாழ்வாதாரம் மிகவும் கவலைக்கிடமாகப் போனது.விவசாய நிலங்களில் கந்தகம் என்ற அந்த வேதிப் பொருட்கள் பட பட உடல் நல்ம் குன்றுவதோடு மனநலமும் பாதிக்கப்படும் எனவெ நாம் விழிப்புணர்வு கொள்வோம் ,மேலும் இதனால் குழந்தைக் தொழிலாளர்கள் உருவாகி வருகின்றனர். இதெல்லாம் தவிர்க்க முதலில் நாம் பட்டாசுகளைத் தவிர்ப்பதோடு நம்மோடு பேசும், தொடர்பில் இருக்கும் குழந்தைகளுக்கும் இதனைத் தெரிவித்தால் அவர்களும் மாற வாய்ப்பு இருக்கிறது. அரும்பாடு பட்டு வரும் பணத்தை தயவுசெய்து பட்டாசுகளில் செலவிடாமல் உபயோகமான பொருட்களில், செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கல்வியாளர் சரஸ்வதி நாகராஜன் கூறுகையில் பட்டாசுகளால் நமக்குக் செலவு மிச்சம் என்பதோடு பதைபதைப்போடு இருக்கும் பெற்றோர்களுக்கு ஆறுதலாகவும் இருக்கும் என்று கூறினார்.பட்டாசுகள் தவிர்த்த தீபாவளியைக் கொண்டாடப்போவதாகவும் ,பட்டாசுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்றும் மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டதோடு இனி தன் வாழ்நாளில் பட்டாசுகளே வாங்கப்போவதில்லை என இரு கைகளில் அடித்து சத்தியம் செய்தனர். மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தீபாவளி சார்ந்த திரையிசைப் பாடல்களை மாணவர்கள் பாடியும் ஆடியும் அனைவரையும் மகிழ்வித்தனர். தலைமை ஆசிரியர் சுவாதிக்கு தன் கைப்பட எழுதிய வாழ்த்து மடல்களைக் கொடுத்து கை குலுக்கி வாழ்த்துத் தெரிவித்து தங்கள் மகிழ்வினைத் தெரிவித்துக் கொண்டனர்.மாணவியர் தலைவி மனோஜா அனைவருக்கும் நன்றி தெரிவித்தாள்>

Friday, October 17, 2014

தமிழனின் வெற்றி

இன்று நத்தம்பண்ணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் கண்ணதாசன் நினைவு நாள் மற்றும் சண்முகம் செட்டியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.விழாவிற்கு வந்தவர்களை தலைமை ஆசிரியர் சுவாதி வரவேற்றார். மாணவிகள் கண்ணதாசனின் சில பாடல்களுக்கு நடனம் ஆடினர். கண்ணதாசனின் சில புத்தகங்களின் பெயர்கள் மட்டும் தலைப்புகள் கேட்கப்பட்டது. கண்ணதாசனைப்பற்றி மனோஜா சிறிய உரை ஆற்றினாள். தலைமை ஆசிரியர் தன் உரையில் சண்முகம் செட்டியார் பற்றி கூறுகையில் சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் திரு சண்முகம் செட்டியார் என்றும் நேருவால் நியமிக்கப்பட்ட ஒரே தமிழர் ., நீதிக் கட்சியிலிருந்து மாகாண சட்ட மேலவை உறுப்பினராகி சுயராஜ்ஜியக் கட்சி மூலம் மத்திய சபை உறுப்பினர் ஆனார். இவர் தயாரித்த நிதி அறிக்கையை அனைவரும் பாராட்டினார்கள். இவர் காங்கிரஸ் அல்லாதவர் என்றாலும் அவர்கள் இவரை

மதிக்கும் படி நடந்து கொண்டார். டெல்லி தமிழ் சங்கம், லண்டன் தமிழ் சங்கம் போன்றவற்றை தோற்றுவித்தார். மகாத்மா காந்தி, தாகூர், அன்னிபெசண்ட், அறிஞர் அண்ணா, போன்ற பலருடனும் நட்பு பாராட்டி வந்தார். இவர் போல தமிழராய் பிறந்து அனைத்து மாகாணமும் போற்றும் வகையில் தன் திறமையையும் மேம்படுத்திக் கொண்டதோடு தமிழர்கள் இலக்கிய அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அடிக்கடி கூறி வந்தார். இது போன்ற மேதைகளின் வாழ்வை நாம் ஒரு படிப்பினையாக ஏற்றுக் கொண்டு முன்னேற வேண்டும் என்று தன் உரையில் கூறினார். சரஸ்வதிநாகராஜன் நன்றியுரை ஆற்றினார். 

Thursday, October 9, 2014

அஞ்சல் தலை தினம் கொண்டாட்டம்

அஞ்சல் தலை தினம் கொண்டாட்டம்
***********************************************************
அஞ்சல் தலைகள் சொல்லும் பண்பாடு
*************************************************************

இன்று பெரியார் நகரில் இயங்கி வரும் புதுக்கோட்டை சிறுவர் மன்றத்தின் மூலம் அஞ்சல் தலை தின விழா கொண்டாடும் வகையில் சிறப்பு  கூட்டம் நடைபெற்றது.சிறுவர் மன்றத்தின் தலைவி சிறுமி செ.சக்தி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக புதுக்கோட்டை நாணயவியல் சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான எஸ்.டி.பஷீர் அலி பல்வேறு நாட்டு அஞ்சல் தலைகளின் கண்காட்சி வைத்திருந்தார். கண்காட்சியைத் தொடங்கி வைத்த பாலா டிரேடிங் ஹவுஸ் உரிமையாளர் செல்வக்குமார் இன்று நாம் செய்திகளை எளிதாக எஸ்.எம்.எஸ். மூலமாகவும் இ.மெயில் மூலமாகவும் அனுப்பி விடுகிறோம் ஆனால் அக்காலத்தில் தபால் கொண்டு வருபவரைப் பார்த்துக் கொண்டே இருந்த காலங்கள் அலாதியானவை. ஒரு நாடு தான் என்ன மனநிலையில் இருக்கிறதோ அதன் பொருட்டு தான் அந்த நாட்டின் அஞ்சல் தலையும் அமைந்திருக்கும் . இதில் நமது பண்பாடு,கலாச்சாரம், நேர்மை, தெளிவு, ஒருமைப்பாடு அனைத்தும் அடங்கியிருக்கும். எனவே ஒரு அஞ்சல் தலையை நாம் சாதாரணமாக எண்ணிவிட முடியாது. மென்மையான மனம் கொண்டவர்கள் மென்மையான செய்திகளோடு மேன்மையும் இருப்பதாகப் பார்த்துக் கொண்டார்கள்மலேசியாவில் கடாரம் என்ரொரு நாடு இருக்கிறது. அப்படியானால் நாம் இங்கே சோழ மன்னனை கடாரம் கொண்டான் என்று படிக்கிறோம். எனவே அந்தகாலத்திலேயே தமிழன் கடல் தாண்டி வாணிபம் நிர்வாகம் போன்றவற்றை மேற்கொண்டான் என்று தெரிகிறது..அதோடு ஒரு நாட்டின் தகவல் தொடர்பு நிலையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றார்.கண்காட்சி நடத்திய பஷீர் அலி ஒவ்வொரு கண்டம், நாடு போன்ற அனைத்து அஞ்சல் தலையையும் பிரித்துக் காண்பித்தார். ரூபாய் என்று எந்தெந்த நாட்டின் பணமாக இருக்கிறது என்று கேட்டு விளக்கியதோடு நாம் எப்படி அரசியலாலும் ஆன்மிகத்தாலும் பிரிக்கப்பட்டோம் என்பதைக் கூறி உலகில் அனைத்து மக்களும் ஒன்று கூடி சாதி சமயம் என்ற எல்லை தாண்டி வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.சிறுமி செ.ராகசூர்யா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குனார்.விழாவில் சிறுவர்கள் யஷ்வந்த் யயாதியும்,அருண்,ஆச்சல், அட்சயா போன்ற சிறுமியரும் கலந்து கொண்டனர். சுவாதி விழா ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டார். சிறுவர்கள் அஞ்சல் தலை சம்பந்தமான அனைத்துத் தகவல்களையும் பறிமாறிக்கொண்டனர்


Friday, July 18, 2014

செய்திகள்






இன்று பெருஞ்சுணை மற்றும் கட்டியாவயல் தாய்த் தமிழ் பள்ளிகள் இணைந்து காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடத்திட்ட மிட்டு பெருஞ்சுணைப் பள்ளியில் நடத்தியது. நிகழ்ச்சிக்கு மு.இராசா வடகாடு தாய்த்தமிழ்ப் பள்ளி தாளாளர் தலைமை வகித்தார். காமராஜர் அறக்கட்டளையிலிருந்து காமராஜர் புகைப்படம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. புகைப்படத்தை திறந்து வைத்து கவிஞர் சுவாதி சிறப்புரை ஆற்றினார். அவர் தன் உரையில் கிராமப்புற பள்ளிகளில் ஆசிரியர் ,மாணவர்,பெற்றோர் என்று முத்தரப்பிலும் எதிர் கொள்ளும் சவால்களும் அதனை எதிர்கொள்ளும் முறைகள் பற்றி எடுத்துரைத்ததோடு காமராஜரின் வாழ்வில் அர்ப்பணம் , தற்கால் அரசியல் , அவர் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளில் நாம் பின்பற்ற வேண்டியவை பற்று எடுத்துரைத்தார். பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். கட்டியாவயல் பள்ளி தாளாளர் பாபுராஜேந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார். தலைமை ஆசிரியர் முத்துலெட்சுமி, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சிங்கப்பாண்டியன் தாய்த்தமிழ்ப் பள்ளி கிளிக்குடி வாழ்த்துரை வழங்கினார்.  கட்டியாவயல் பள்ளி தலைமைஆசிரியர் சசிகலா நன்றி கூறினார். 


Wednesday, July 16, 2014

செய்திகள்

திருமிகு நா.முத்துநிலவன் அவர்கள்....கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில மாணவர்களைப் பாராட்டிய போது....

செய்திகள்

முன்மாதிரிப் பள்ளி முன்னாள் துணை முதல்வர் , எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர் திரு நா.முத்துநிலவன் அவர்கள் தமிழ் இலக்கிய மன்றம் துவக்கி வைத்த போது

செய்திகள்

ஊர்வலம்......தலைவர் பாராட்டு....

செய்திகள்



இன்று நத்தம்பண்ணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகவும் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழாவாகவும் இரு பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு காமராஜர் உடையணிந்து காமராஜர் போல வேடமிட்ட மாணவர்கள் கல்வி முழக்கக் கோஷங்களை எழுப்பிய வண்ணம் ஊர்வலம் வந்தார்கள்...ஊர்வலத்தினை 9பி நத்தம்பண்ணை பஞ்சாயத்துத் தலைவர்  சேதுராமன் கொடி அசைத்துத் துவக்கி வைத்துப் பேசினார். கல்விப் புரட்சியே நாட்டின் புதுமை, பொருளாதார வளர்ச்சி என்று புதிய முழக்கங்களை முழங்கக்கேட்டுக் கொண்டார்.
இரண்டாவது நிகழ்ச்சியாக தமிழ் இலக்கிய மன்றம் துவங்கப்பட்டது. எழுத்தாளர், பேச்சாளர் திரு நா.முத்துநிலவன் அவர்கள் பாரதியார் பாடல்களைப் பாடியும் மாணவர்கள் தங்கள் வாழ்வை சீராக அமைத்துக் கொள்ள நடந்து கொள்ள வேண்டிய முறைகள் , பயணங்கள், வாழ்வின் போக்குகள் பற்றி சிறப்புரை ஆற்றி மாணவர்களை உற்சாகப் படுத்தி பேசி மன்றத்தை துவங்கி வைத்தார். 
கலை நிகழ்சிகளைக் கண்டு களித்த கவிஞர் நா.முத்துநிலவன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
மாணவர்கள் உற்சாகத்தோடும் அவர் பேச்சில் கலந்து கொண்டனர். பொங்கல் வழங்கப்பட்டு நிகழ்வு இனிதே முடிந்தது. நிகழ்வை தலைமை ஆசிரியர் சுவாதி வரவேற்புரை கூறி அனைவரையும் வரவேற்றார். கல்வியாளர் சரஸ்வதிநாகராஜன் விழா ஏற்பாடுகளைப் பார்த்துக் கொண்டார். ஜெகஜோதிநன்றியுரை தெரிவித்தார்.

Monday, July 14, 2014

செய்திகள்

இந்த நிகழ்வு வெள்ளி 11.06.2014 அன்று நடந்தது... 

செய்தி வெளியிட்டு எங்களைப் பெருமைப் படுத்திய தினமலர், தினகரன், தினத்தந்தி, THE HINDU தினமணி, மாலைமுரசு, மாலைமலர் போன்ற இதழ்களுக்கு நன்றி......



இன்று நத்தம்பண்ணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அறிவியல் ஆய்வு சோதனைகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மழை வராததிற்குக் காரணம்..நமது மண் வளம் ..பிளாஸ்டிக் பொருட்களைப் பயன் படுத்துவதால் ஏற்படும் தீமைகள்., மட்கும் பொருள், மட்காப் பொருள் பற்றிய விழிப்புணர்வு,  போன்ற சுற்றுச் சூழல் சம்மந்தமான ஆய்வுகள் எடுத்துரைக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களிடம் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பயன்படுத்தும் நிர்பந்தம் ஏற்படும் போது அதனை மறு சுழற்சிக்கு அனுப்பி விட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் வழி அவர்கள் ஒவ்வொருவராக வந்து தங்கள் உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர். இதன் மூலம் நம்மால் சிறிதளவேனும் சுற்று சூழல் பாதுகாப்புக்கு உதவ முடியும் என்று அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த்ப் பட்டது. நிகழ்வில் தலைமை ஆசிரியர் சுவாதி அனைவரையும் வரவேற்று ஓசோன் படலம், மழை நீர், நிலத்தடிநீர்,,பண்டையகாலத்தில் நமது உணவு பழக்க வழக்க முறைகள்  போன்றவற்றைப்பற்றிக் கூறினார். கல்வியாளர் திருமதி சரஸ்வதி நாகராஜன் தன் உரையில் நாம் எப்படி இது போன்ற ஒரு விழிப்புணர்வற்று வாழ்ந்து வருகிறோம் என்பதனைக் எடுத்துக் கூறினார். ஆசிரியர் ஜெகஜோதி மட்காத பொருட்கள் பற்றி ஆய்வுச் சோதனை நடத்திக் காட்டினார்.. மாணவர்கள் நாம் எவ்வளவு தவறாக வாழப் பழகிக் கொண்டோம் என்பதனை உணர்ந்து கண்ணீர் வடித்து இனி தானும் மாறி.தன்னைச் சார்ந்தவர்களையும் மாற்றுவதாக உறுதி கொண்டனர். மேலும் தங்களால் இயன்ற அளவு மரம் வளர்ப்போம் என்று உறுதி பூண்டனர். விழாவில் உறுப்பினர் மோகனவள்ளி மற்றும் பல்வேறு பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இறுதியில் மாணவர் தலைவர் மனோஜா நன்றியுரை கூறினாள்.
***********************************************************************************

Monday, July 7, 2014

செய்திகள்

இன்று தலைமை ஆசிரியர் கூட்டத்தில் எங்கள் பள்ளியைப் பற்றியும் என்னைப் பற்றியும் எங்கள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமிகு ஜேம்ஸ் அவர்கள் மிகவும் பெருமையாக கூறி ஒரு பெரிய பாராட்டுதலைத் தந்து அனைவரையும் கைதட்டச் சொல்லி மகிழ்ந்தார். உரிய பாராட்டுக்குரியவரை பாராட்டுவதிலும் ஊக்குவிப்பதிலும் அவர் சிறந்தவர். அவர் பாராட்டை கேட்டு ஒரு சிறு குழந்தை போல்மகிழ்ந்தேன். அவரின் ஊக்க வார்த்தைகள் என்னை மகிழ வைத்ததோடு மேலும் என் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்று உறுதிகொண்டேன்.அவருக்கு என் நன்றிகள்.இன்று உண்மையிலேயே என் பணிக்கு அங்கீகாரமும் ஊக்குவிப்பும் கிடைத்த நாள்..
என் பணி சிறக்க உதவிய ,எங்கள் கூடுதல் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் திருமிகு அருள் அவர்களுக்கும் என் பணிவான அன்பான நன்றி.
வெளியில் வந்ததும் என் கை பிடித்து வாழ்த்துத் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், மேலும் வாழ்த்து கூறிய அனைத்து ஆண் தலைமை ஆசிரியர்களுக்கும் என் நன்றி...
இந்தப் பாராட்டை வாங்க உதவிய எங்கள் பள்ளி உதவிஆசிரியர் திருமதி ஜெகஜோதி அவர்களுக்கும் திருமதி சரஸ்வதி அவர்களுக்கும் என் நன்றி உரித்தாகுக...
என்பணிகளை தொடர்ந்து பாராட்டி வரும் எங்கள் பஞ்சாயத்துத்தலைவர் திருசேதுராமன் அவர்களுக்கும் ,பெற்றோர்சங்கத்தலைவர்,மற்றும் கிராமக்கல்விக்குழுத்தலைவர் என் இனிய மாணவர்கள் அனைவருக்கும் நன்றி.

Friday, July 4, 2014

செய்திகள்




இன்று நத்தம்பண்ணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அறிவியல் ஆய்வு சோதனைகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மழை வராததிற்குக் காரணம்..நமது மண் வளம் ..பிளாஸ்டிக் பொருட்களைப் பயன் படுத்துவதால் ஏற்படும் தீமைகள்., மட்கும் பொருள், மட்காப் பொருள் பற்றிய விழிப்புணர்வு,  போன்ற சுற்றுச் சூழல் சம்மந்தமான ஆய்வுகள் எடுத்துரைக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களிடம் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பயன்படுத்தும் நிர்பந்தம் ஏற்படும் போது அதனை மறு சுழற்சிக்கு அனுப்பி விட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் வழி அவர்கள் ஒவ்வொருவராக வந்து தங்கள் உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர். இதன் மூலம் நம்மால் சிறிதளவேனும் சுற்று சூழல் பாதுகாப்புக்கு உதவ முடியும் என்று அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த்ப் பட்டது. நிகழ்வில் தலைமை ஆசிரியர் சுவாதி அனைவரையும் வரவேற்று ஓசோன் படலம், மழை நீர், நிலத்தடிநீர்,,பண்டையகாலத்தில் நமது உணவு பழக்க வழக்க முறைகள்  போன்றவற்றைப்பற்றிக் கூறினார். கல்வியாளர் திருமதி சரஸ்வதி நாகராஜன் தன் உரையில் நாம் எப்படி இது போன்ற ஒரு விழிப்புணர்வற்று வாழ்ந்து வருகிறோம் என்பதனைக் எடுத்துக் கூறினார். ஆசிரியர் ஜெகஜோதி மட்காத பொருட்கள் பற்றி ஆய்வுச் சோதனை நடத்திக் காட்டினார்.. மாணவர்கள் நாம் எவ்வளவு தவறாக வாழப் பழகிக் கொண்டோம் என்பதனை உணர்ந்து கண்ணீர் வடித்து இனி தானும் மாறி.தன்னைச் சார்ந்தவர்களையும் மாற்றுவதாக உறுதி கொண்டனர். மேலும் தங்களால் இயன்ற அளவு மரம் வளர்ப்போம் என்று உறுதி பூண்டனர். விழாவில் உறுப்பினர் மோகனவள்ளி மற்றும் பல்வேறு பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இறுதியில் மாணவர் தலைவர் மனோஜா நன்றியுரை கூறினாள்

Friday, June 27, 2014

செய்திகள்




அறந்தாங்கி நைனா முகம்மது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது... வகுப்புகளைத் துவக்க்கி வைத்து மாணவிகளுக்கு உற்சாக உரை ஆற்றும் போது....

அருகே கல்லூரி முதல்வரும் தாளாளருமான திரு.முகம்மது பாருக் அவர்கள்..... மற்றும் கல்லூரியின் துணை முதல்வர் திருமதி ஈஸ்வரி அவர்கள்.....

Thursday, June 26, 2014

செய்திகள்




நைனா முகம்மது கல்லூரியில் சிறப்பு விருந்தினராக....

Sunday, June 1, 2014

புதுக்கோட்டை

   புதுக்கோட்டையில் பல்லவன் குளம் என்று ஒரு குளம் இருக்கிறது. அற்புதமான குளம்.ஒரு காலத்தில் சாந்தாரம்மன் கோயிலில் என்ன விஷேஷம் நடந்தாலும் குளக்கரையில் மிகப்பெரிய கூட்டமாகவும் கொண்டாட்டமாகவும் இருக்கும். கார்த்திகை திருநாள் நாட்களில் அனைத்து மாடங்களிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு தெப்பம் நடுவில் இருக்கும் மண்டபத்தைச் சுற்றி வரும். அந்தக்குளம் தான் புதுகையின் மையம். அந்தக் குளம் தான் மக்களின் மகிழ்வு. அந்தக் குளம் தற்போது காய்ந்து போனது. மனமெல்லாம் காயம். என் போன்று புதுகையை நேசிக்கும் எல்லோருக்கும் அது ஆற்ர்க் காயமாய்ப் போனது. இன்று அந்தக் குளத்தை தூர் வாரினார்கள். என் போன்றே அனைத்து மக்களும் அதனை வேடிக்கை பார்த்தார்கள் மனதிற்குள்ளும் அவர்களின் மகிழ்வு முகமெல்லாம் தெரிந்தது. ஒருவர் பிள்ளையாரப்பா இப்பவாவது இவர்களுக்கு புத்தி வந்ததே என்று வேலை பார்த்தவர்களைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டார். அந்தக்குளம் தூர்வாரப்பட வேண்டும் . தூர்வாரும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.






மீண்டும் புதுகையின் அழகு மேம்பட வேண்டும்   

Tuesday, May 27, 2014

நமது உடல்

நமது உடல் பற்றி  என் தோழி எனக்கு வழங்கியதை இங்கே பகிர்ந்துள்ளேன்.....தோழிக்கு நன்றி....(வசுமித்ரா....)

1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளனஆனால் அவன்குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளரவளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது.
2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம்சாதார ணமாக வாழ்நாளில் சுமார்25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்.
3. நமக்கு இரண்டு கால்கள்இரண்டு கண்கள்இரண்டு காதுகள்இரண்டு கைகள் இவைகள்ஒரே அளவாக இருப்பதில்லை காரணம்கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரேசீராக வளர்வதில்லைஇந்த மிகச் சிறிய வத்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக்காட்டுகிறதுநம் இடது கால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூடஇந்த சிறு வித்தியாசத்தால் தான்.
4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் வரைசெயல்படுகிறதுஅவனது எலும்பு தொடர்ந்து 4 நாட்களை வரை செயல் படுகிறதுதோல்தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறதுகண் மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம் பணிசெய்கிறது தசைகள் ஒரு மணி நேரம் செயல்படுகிறதுஅவனது சிறுநீரகம் தொடர்ந்து 6 மணிநேரம் செயல்படுகிறதுஆக அவனது உயிர் பிரிந் தாலும் அவனது உடல் உறுப்புகளின்செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை.
5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில் குழந்தைபிறக்கிறது. 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 280 நாட்களில்குழந்தை பிறக்கிறதுஇது தவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு குழந்தைபிறப்பும் சற்று முன்னாடியே (குறை பிரச வம்அமைந்து விடுகிறதுபெண்கள் இதுவிஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும்.
6. பகலில் 8 மில்லிமீட்டர் சுருங்கி இரவில் 8 மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம்காரணம்பகலில் நமது வேலைகள் செய்யும்போது தண்டு வடத்திலுள்ள குறுத்தெலும்பு வட்டுகள்ஈர்ப்பு விசைகாரணமாக அழுத்துகின்றனஇதனால் உயரம் குறைகிறதுஇரவில் எவ்விதவிறைப்புத் தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால் நமது உடம்பின் உயரம்கூடுகிறது.
7. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 127 நாட்கள் தான் அதன் பிறகு அதுமடிந்து விடும்புது சிவப்பணுக்கள் உருவாகும்இரத்தத்தில் வெள்ளை அணுக்களின்ஆயுட்காலம் 120 நாட்கள்.
8. நம் உடலில் சுமார் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றனஅவை ஒரு நாளில்சராசரியாக 5 லிட்டர் முதல் 6 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன.
9. நமது கைகளில் நடுவிரலில் நகம் வேகமாகவும்கட்டை விர லில் நக ம் மெதுவாகவும்வளர்கின்றனநம்முடைய உடல் பாரத்தால் கை விரல் நகத்தைவிட கால்விரல் நகம்மெதுவாக வளர்கிறது.
10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல் தூங்குவதில்லைசுமார் 40 முறை அந்தப்பக்கம்இந்த ப்பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்.
11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக் குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர்கண்ணிமைகளிலும்அதிகபட்சமாகப் பருமன் 4 முதல் 6 மில்லி மீட்டராகஉள்ளங்கைகளிலும்அடிப் பாதங்களிலும் அமைந்திருக்கிறது.
12.மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித உறுப்பு கட் டை விரல்கள்.
13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம் தாடை எலும்பு.
14. மனித மூளை 80 முதல் 85 சதவீதம் தண்ணீரைக் கொண்டதாகும்.
15. கல்லீரல் 500 விதமான இயக்கங்களை நிகழ்த்துகிறது.
16. நம் ஒடல் தசைகளின் எண்ணிக்கை 630.
17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம் பங்கு ரத்தம் உள்ளது.
18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை உள் ளனஅவை 1 மாதத்திற்குள்1-1/4 செ.மீவளர்கின்றன.
19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம் வயது வரை வளர்கிறது.
20. மனித முகங்களை மொத்தம் 520 வகைகளுக்குள் அடக்கி விடலாம்.
21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ.
22. நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9 லிட்டர் மூச்சுக் காற்றும் உட்கார்ந்திருக்கும்போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும்நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும்தேவைப்படுகிறது.
23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன.இவைகள் ஊறுகாய்உப்புக்கருவாடுஆல்கஹால் போன்றவற்றால் பாதிப்படைகிறது.
24.பெண்களைவிட ஆண்களுக்கு மூளை மிகப்பெரியதுபெண்களை விட சுமார் 4000உயிரணுக்கள் ஆண்கள் மூளையில் இருக்கிறது.
25. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்.
26. நமது தலையின் எடை 3.175 கிலோ கிராம்.
27. மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடைத்து விடும்.
28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க நம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும்பங்கு அளிக்கிறதுமனிதனை ஒத்த உருவம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3தசைகள் கிடை யாது.
29. மூளையின் மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது.
30. மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்.
31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை / கறுப்பு நிறங்களை தவிர வேறு நிற வேறுபாடே தெரியாது.
32. மனித உடலின் தோலின் எடை 27 கிலோ கிராம்.
33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள் உள்ளன.
34. இதயத்தைசிறுநீரகத்தைகல்லீரலைமுழங்காலை மாற்றலாம்ஆனால் மூளையைமட்டும் மாற்றவே முடியாதுகாரணம் ஞாபங்கள்நினைவுகள்எதிர்காலத்தில் மாற்றமுடிந்தாலும்மாற்றப்பட்டவன் வேற்று மனிதன் தான் அவன் அந்நியன் தான்.
35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறதுகண்இமைகள் தான் நம் வைப்பர்கள்அவற்றின் விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளனகண்சிமிட்டும்போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றனஅழுது கண்ணீர் விடும் போதுகண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் வினியோகம் ஆகிறது.
36. நமது உடலிலுள்ள செல்கள் பிரிந்து இரண்டாகும் தன்மையு டையதுஒரு நாளைக்கு நம்உடலில் 60 கோடி செல்கள் இறந்து புது செல்கள் பிறக்கின்றன.
37. தலைமுடி 2 வருஷத்திலி ருந்து 4 வருஷம் வரை வளர்கி றதுஅதன்பின் 3 மாதம்வளராமல் இருந்து உதிர்கிறதுபிறகு புது கேசம் வளர்கிறது.
38. ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54 தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது.
39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின் இதயம் 250 கோடி தடவை துடிக்கிறதுஒருபம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தைபம்ப் செய்கிறதுஇதயம் சீராக துடிக்க பொறாமைகெட்ட சிந்தனை இவைகளைவிட்டொழித்தால் போது ம்உயிர் வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்.
40. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறதுஅது ஒரு நிமிடத்திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது.
41. நமது உடலின் நீளமான எலும்பு தொடை எலும்பு தான்.
42. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500 சொற்கள் என்றும் பேசும் வேகம்நிமிடத்திற்கு 100 சொற்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால் உணரமுடியாதுஆனால் மற்ற உறுப்புகளின்வலியை உணர்த்துவது மூளையே.
44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீ தம் கூடுதலாக வியர்க்கிறது.
45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13 வைட்டமின்கள்.
46. உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி மட்டுமே.
47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப் பொருளையும் 11 ஆயிரம் காலன் திரவத்தையும்உட்கொள்கிறோம்.
48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் 3000 வியர்வை சுரப் பிகள்இருக்கின்றன.
49. நம்முடைய தலை ஒரே எலும்பால் உருவானது அல்ல, 22 எலும்புகளில் உருவானதாகும்.
50. மனித உடலில் 50 லட்சம் முடிக்கால்கள் உள்ளதாகவும்பெண்களின் முடியை விடஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என் றும் அறியப்படுகிறது.
51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில் தூங்கி விடுகின்றான்.
52. மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டி மீட்டர்.
53. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான்சாதாரணமனிதன் முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக இவ்வளவு வார்த்தைகளைத்தான்பயன்படுத்துகிறார்கள்.
54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன.
55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம் வளர்கிறது.
56. நாள் ஒன்றுக்கு நாம் 23,040 தடவை சுவாசிக்கின்றோம்.
57. மனிதனின் உடலிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி)
58. நாம் பேசக்கூடிய வார்த்தை க்கு 72 தசைகள் வேலை செய்ய வேண்டும்பேச்சைகுறைத்தால் சாதனைகளை நிகழ்த்தலாம்.
59. நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும் இரத்த குழாய்களையும் கொண்டதாகஇருக்கிறதுஇவைகளின் நீளம் 2400 கி.மீஉள்ளது.
60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும் வளரும்.
61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.
62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம்.
63. உடலில் பொட்டாசியம் அளவு 70 சதவீதமாக குறைந்துவிட் டால் அசதிசோர்வுவாந்தி,வயிற்றுப் போக்கு ஏற்படும்.
64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர் எச்சிலை ஊறச் செய்கிறான். 1.14லிட்டர் வியர்வைவெளியிடுகிறான்.
65. சிந்தனையின் வேகம் அல்லது ஒரு யோசனையின் தூரம் என்று சொல்லுகிறோம் இந்ததூரம் 150 மைல்களாகும்.
66. ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம் அதிகமாக துடிக்கிறது.
67. மணிக்கட்டிலிருந்து நடுவிரல் நுனிவரை உள்ள நீளமும்மேவாய் கட்டையிலிருந்துநெற்றி உச்சி வரை உள்ள நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்.
68. ஒரு முறை வெளியாகும்ஆணின் விந்தில் 30 கோடி உயி ரணுக்கள் வரை இருக்கும்.
69. உடலில் உண்டாகும் உஷ்ணம் வெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம் உள்ளது.
70. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும்இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும்.
71. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர் ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறியஅறைகளைப் பாதிக்கிறதுஇதனால் தான் மனிதனுக்கு கோபம் வருகிறது.
72. மனித மூளையில் தாமிரத்தின் அளவு 6 கிராம் ஆகும்.
73. ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதிகமாக நீரை சுரக்கத் தொடங்கிவிட் டால் ஆணுக்குபெண்குணமும்பெண்ணுக்கு ஆண்குணமும் ஏற்படும்.
74. தானாக மூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம் ஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது.
75. நம் மூக்கில் வாசனையை நுகரும் செல்கள் 50 லட்சம் உள்ளனஆனால் நாயின் மூக்கில்22கோடி நுகரும் செல்கள் உள்ளனஅதனால் மோப்ப சக்தி அதிகம்காவல் துறையில்வேலை.
76. நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ் தான்அவரவர் கைவிரல் 5 யையும் பொத்திப்பார்த்தால் என்ன அளவு இருக்குமோ அதே அளவு தான் அவரவர் இதயம் இருக்கும்.
77. நம் நுரையீரலில் உட்புறம் அமைந்துள்ள ‘ஆலவியோலி’ என் னும் சிறிய காற்றுஅறைகளின் எண்ணிக்கை மட்டும் 30 கோடியாகும்.
78. மூளை 65 சதவீதம் கொழுப்பு பொருளால் ஆனது.
79. இரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள் உள்ளன.
80. மனிதனுக்கு 3 வகையான பற்கள் உண்டு.
81. நமது நாக்கில் சுவை உணரும் மொட்டுக்கள் 9000 உள்ளன.
82. நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள் உள்ளன.
83. எலும்புகளின் துணை இன்றி தானே அசையும் தசை நாக்கு.
84. மனித உடலில் அதிக செல்களால் உருவான பகுதி மூளை,மூளையின் வெளிப்பகுதிமட்டுமே 8 பில்லியன் செல்களால் உருவானது.
85. ஒரு மனிதன் தன் தாழ்நாளில் 23 வருஷம் தூங்குகிறான்.
86. ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார் 3-½ லட்சம் கரு முட் டைகளோடு தான்பிறக்கிறாள்இந்த முட்டைகளை ஒரு டீஸ் பூனில் 10 லட்சம் நிரப்பலாம்.
87. 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600 மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும்.
88. பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய் சுமார் 375 முறை ஏற் படுகிறது.
89. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1லட்சம் தடவை லப்டப் செய்கி றதுவருஷத்திற்கு 4 கோடிதடவை.
90. நமது தோலின் பரப்பளவு சுமார் 20 சதுரஅடிகள்.
91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக் கொண்டு 20 ஆயிரம் தீக்குச்சிகள் செய்யலாம்.
92. மனித உலின் கார்பனைக் கொண்டு 900 பென்சில்களை உரு வாக்கலாம்.
93. மனித உடலிலுள்ள கொழுப்பைக் கொண்டு 7 பார் சோப்புகளை செய்ய லாம்.
94. மனித உடலின் இரும்பைக் கொண்டு 2 அங்குல ஆணி ஒன்று செய்யலாம்.
95. மனித உடலில் அதிகமாக காணப்படும் தாதுப்பொருள் கால்சியம்.
96. இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட்டர் நீளமுள்ள இரத்த நாளங்களிலி ருந்து இதயம் வழியேநிமிடத்திற்கு 70 தடவை செல்கிறது.
97. உள் வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன் குறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால்உபரியாக காற்றை உள்வாங்க கொட்டாவி விடுகிறோம்.
98. மனிதன் 21 வயது முடிவதோடு உடலின் எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும் நின்றுவிடுகிறதுஇறுதிவரை தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான் சின்னதாக.. நம்மால்கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வளர்ச்சி.
99. 60 வயது வரை மனிதன் வாழுகின்றான் என்றால் அந்த மனிதன் ஒரு நாளைக்கு 10 நிமிடம்வீணாக்கினால் அவன் ஆயுளில் 5மாதங்கள் வீணாக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அவயத்தின் படைப்பின் நுட்பத்தை நவீன விஞ்ஞானத்தின் மூலம் காணும் போதுபெரும் வியப்பில் ஆழ்த்தும் அத்தனை ஆச்சரியங்களையும் எழுதி முடித்துவிட முடியாது.
உதாரணத்திற்குநமது மூளையைப் பற்றி நவீன விஞ்ஞானம் அறிந்து கொண்டது மிகமிகசொற்பமானது தான் இன்னும் தெரியாத புரியாத விளங்கிக் கொள்ள முடியாத விநோதங்கள்ஏராளம்ஏராளம்..