Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Sunday, September 22, 2019

விடுமுறைப் பயணம்

திங்கள் வரை பள்ளி உண்டு என்று சொல்லவும் ஒரே நாளுக்காக ஊருக்குப் போக வேண்டாமே என்று நினைத்து சுக்ரீவன் அம்மாவிடம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் போகப் போகிறேன் என்றேன்..நானும் வரேன்.போற வரவு செலவு அவரவர் உடையது தண்ணீர் வாங்கினால் கூட அவரேர் காசுல வாங்கிக்கலாம் டீல் ஓகேயா என்றாள்..

சரி..தனியா போறதுக்கு துணையா இருக்குமேனு ஓகே சொன்னேன்

சிறிது நேரத்தில் விமலா போன் செய்து நானும் வரேன் டி என்றாள்

சனிக்கிழமை இரவே பரமேஸ்வரி எங்கள் வீட்டில் வந்து தங்கிக் கொள்ள ..காலையில் 5.30 க்கு கிளம்பினோம்

வாசலில்.பார்த்தால் 20 பேர்..

பின்னாலிருந்து பரமேஸ்வரி நான் தான் எல்லோரிடமும் சொன்னேன் என்றாள் பெருமையாக...

( என் கூடத் தானே படுத்திருந்தாள்..🤔🤔இது எப்ப நடந்தது?)

அவரேர் காசுல வரோம்.ஆனா ஒன்னாப் போறோம் என்றனர்

முதலில் பிரம்மபுரீஸ்வரர் கோயில்

அங்கிருந்து அரேங்கேற்ற அய்யனார் கோயில்...அங்கிருந்து சத்திரம் பஸ் ஸ்டாண்ட் வந்து சாப்பிட்டு வெக்காளியம்மன் கோயில் ..அங்கும் தரிசனம்.செய்து விட்டு பஞ்சவர்ணேஸ்வரர் ்..உடனுறை காந்திமதியம்மை கோயில்...அங்கிருந்து வராஹி தனி ஸ்தலம் குழுமணி ரோடில் மங்கள் நகரில் இருப்பதாகச் சொல்லவும் அங்கு கிளம்பினோம்

அங்கும் போய் வராஹி அம்மனை வழிபட்ட பின் மீண்டும் சத்திரம் பேருந்து நிலையம் வந்து...அங்கு ஒரு ஹோட்டலில் மேனேஜர் வரை அனைவரையும் அலற வைத்து...உரிமையாளரையே சாப்பாடு பரிமாறவைத்து..அங்கிருந்து மத்திய பேருந்து நிலையம் வந்து...அங்கிருந்து புதுகை வந்துவிட்டோம்..

பேருந்தில் பத்மாவதி க்கு தான் எங்கும் முகம் கழுவி மாலையில் பூ வைத்துக் கொள்ளவில்லை என்ற குறை..( நெற்றி நிறைய குங்குமமும் மஞ்சளும் இருந்ததால், அதனை அழிக்க மனமில்லாமல் மாலை கோயிலில் நேரம்.இருந்தும் தண்ணீர் வசதி இருந்தும் தன்னை அழகாக்கிக் கொள்ளவில்லை என்று மூன்று முறை சொன்னார்

எப்போதும் முடி முதல் கால் வரை வலிக்குது என்று தினம் என்னிடம் புலம்பும் தன்வந்திரி அம்மா அவ்வளவு நடந்தும் ஒன்றுமே சொல்லவில்லை

இடையில் யாருக்குமே வீட்டு நினைவு வரவே இல்லை..நான் மட்டுமே என் அம்மா.அப்பாவும் என் மகள்களுக்கும் ஒவ்வொரு கோயில் சன்னதியிலும்.தொடர்பு கொண்டு பேசினேன்

பொதுவாக எந்த கடையில் சாப்பிட்டாலும் யார் வீட்டில்.கல்யாணத்தில் எங்கு சாப்பிட்டாலும் சாப்பாட்டைக் குறை சொல்லும்.நகுலன் அம்மா சாப்பாட்டை பற்றி மூச்சு விடவில்லை..

பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் அமர்ந்துருக்கும் வேளையில் சப்தமாக பாடினார்கள்..அங்கு வந்திருந்த அனைவரும் நாங்கள் ஒரே இடத்தில் வேலை பார்ப்பதாக நினைத்துக் கொண்டனர்

பேருந்தில் என்னை டீச்சர் டீச்சர் என்று எல்லோரும் அழைக்க பஸ் கண்டக்டரும் டிரைவரும் கூட அப்படியே அழைத்தனர்..

பரமேஸ்வரி நேற்றே என் வீட்டிற்கு வரக் காரணம் ஏற்கனவே அஷ்டமு அன்று பைரவர் கோயிலுக்குக் கூட்டிப் போவதாகச் சொல்லி பத்து நிமிடம்.கால தாமதமாக வந்ததால் அவளை விட்டு விட்டு  கிளம்பிட்டேன்..அதனால் தானாம்.

கடைசி வரை எனக்கு நிறைய தமிழ் தெரிவதாகவும் எனக்கு பலத்த ஞானம் இருப்பதாகவும் நம்பினர்..

( உண்மையில் பட்டிமன்றம்.பேசவும்..பதவி உயர்விற்காகவும் பிறரை இம்பிரஸ் பண்ணவும்..தேவாரத்தில் பத்து பாடல்கள். திருப்புகழில்.ஐந்து பாடல்கள்.அண்ணாமலை ரெட்டியார் காவடி சிந்துவில் இரண்டு பாடல்கள்.பாரதியார் பாடல்கள்.பத்து...பாரதிதாசன் பாடல்கள்.பத்து கண்ணதாசன் பத்து இவை மட்டுமே தெரியும் என்பதை ஒரு முறை நான் சொல்லியும் நம்பவில்லை


கடைசி வரை கேசவய்யர் மனைவி என்னோடு கோபத்துடன் இருந்தாள்..வெக்காளியம்மன் கோயிலில்.இருந்து துலுக்க நாச்சியார் கோயில் பக்கம்.அங்கு நான் கூட்டிப் போகவில்லையாம்.

ஆனால் இது புரட்டாசி மாதம் என்பதால் மதியம் ஸ்ரீ ரங்கம் செல்வதாய் தான் முதலில் சொன்னேன்..ஆனால் ப்ளான் மாறியதும்  ஒரு காரணம்.( அழுத்தக் காரி என்னை மாமி என்று அழைக்கக் கூடாது என்றும் சுவா என்று அழைக்கக் கூடாது என்றாலும்.கேட்காமல் வேண்டுமென்றே அப்படியே அழைப்பாள்.எனக்கு.கனகாம்பர்ம்.தலையில் வைக்கப் பிடிக்காது என்று தெரிந்தும் என் தலையில் வலுக்கட்டாயமாய் வைப்பாள்)
அதனால் என்ன லீவில் ப்ளான் பண்ணி போய்ட்டு வாங்க என்றேன்.என்னோடு தான் வரணுமாம்..சரி சரஸ்வதி பூஜைக்கு கூட்டிப் போறேன் என்றேன..அப்ப தான் உங்க அம்மா வீட்டுக்குப் போறீங்களே. என்று எப்படியும் ஒரு நாள் கூட்டிப் போறேன் என்று சொல்லி இருக்கிறேன்..


வழக்கம் போல் வசந்தா ..பிரேமா..பானுப்பிரியா..கலைச்செல்வி எதுவும் பேசவில்லை..

என்னை சமத்து என்றும்..நல்லபடியாக் கூட்டிப் போய் வந்தீர்கள் என்று சொன்ன போது "ஙே" என்று விழித்து..ஹி என்று சிரித்து வைத்தேன்..( அவரேர் காசுல போனது எப்படி நான் கூட்டிப் போனதாகும்??)

நீண்ட நாளுக்குப் பின் நான் மகிழ்வாய் இருப்பது போல் உணர்ந்தேன்.


சிப்காட் நகர்..பழனியப்பா நகர்.சண்முகா நகர்..பாலன் நகர்..கம்பன் நகர்.பெரியார் நகர்..என்று ஒன்பது நகரிலிருந்து ஒரே இடத்தில் குவிந்து பயணித்திருக்கிறோம்

கீரனூர் வந்தவுடன் மழை பார்த்ததும் தான் எல்லோருக்கும் வீட்டு நினைவே வந்தது..

ஏதோ தேவலோகத்துக்கு அழைத்துப் போனதுமாதிரி இரண்டு மூன்று முத்தங்கள் வேறு தந்தார்கள் பிரியும் வேளையில்..

இன்னமும் எனக்கு ஒரு சந்தேகம்

நான் முதலில் சொன்னது சாவித்திரியிடம்.அவள் வரவில்லை..நான் பரமேஸ்வரி.கலைச்செல்வி மூன்று பேர் மட்டுமே போக திட்டமிட்டிருந்தோம்.

அதுவும் சனிக்கிழமை மதியம் தான் சொன்னேன்
.எப்படி அதற்குள் எல்லோரும் இணைந்தார்கள் என்பது ஆச்சர்யம் தான்

பிஸ்கெட்..பேரீட்சை..கடலை மிட்டாய்..கல்கண்டு..கொய்யா...திராட்சை என்று ஆளுக்கு ஒன்றே ஒன்று என்று பகிர்ந்து உண்டது மறக்க இயலாது..

இறங்கும் போது சுவா மாமி  ஸ்ரீரங்கம் எப்போனு சொல்லுங்க என்று கத்தி ச் சொல்லி என் கோபத்தை ரசித்து விட்டிச் சென்றாள் கேசவய்யர் மனைவி..

Saturday, October 10, 2015

சான்றோன் எனக் கேட்டதாய்

இன்று சின்னவள் பள்ளியில் பெற்றோர் சங்கக் கூட்டம். ( வேறென்ன? நம் குழந்தைகளின் படிப்பைப் பற்றி நமக்கே சொல்வார்கள்) புதுகையில் அவள் பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் எல்லோருமே என் தோழிகளாக தோழர்களாக இருந்ததால் எப்போதும் சின்னவளுக்கு கவனிப்பு அதிகம். யாரையும் தன் அன்பால், நேசத்தால், மனிதநேயத்தால் ஈர்த்து விடும் பாங்கை தனக்குள் இருக்கும் காந்த சக்தியாய்க்கொண்டவள் என்பதால் இது வரை எனக்கு முறையீடு (கம்ப்பிளைண்ட்) வந்ததில்லை. பகைவர்களையும் நேசிக்க வைக்கும் பாங்கு ஒரு சிலருக்கே அமையப் பெறும். அது அவளுக்குள் இயல்பாய்.....

சில சமயம் நம்மையும் மிரள வைப்பாள். கோபத்தைக் கோபமாக க்காட்டி பழக்கப் பட்ட எனக்கு கோபத்தையும் அன்பாகவே பிரதிபலிக்க முடியும் என்று எனக்குக் கற்றுத்தந்தவள் அவள் தான்.

சரிதான். உள்ளூரில் என் நிழலும் அவளுடன் கூடவே வரும்.ஆனால் இந்தச் சென்னையில் என்ன செய்வாள்? அதிகம் யாருடனும் பேசுவதுமில்லை. என்று அவள் மீது எப்போதும் ஒரு குறை இருக்கும். பேசினால் தான் நம் திறமை வெளிப்படும் என்றில்லை. எங்கே பேச வேண்டுமோ அங்கே பேசுவேன் என்பாள் அப்போதும் அமைதியாக.

இன்று காலை 8 முதல் 12 மணி வரை மட்டுமே பெற்றோர்கள் அனுமதிக்கப் பட்டிருந்தோம். எனவே நான் ஒரு 9 மணிக்குப் போய் முதலிலும் அல்லாமல் கடைசியிலும் அல்லாமல் எலோரையும் பார்த்து வருவது என்று திட்டமிட்டிருந்தேன். ( அவளும் புதுகையின் பதிவர் திருவிழாவிற்குப் போய் விட்டதால் எனக்கு எல்லா ஆசிரியர்களையும் பார்த்து விட வேண்டுமே என்ற அச்சமும் தவிப்பும் கவலையும் கூடிக் கொண்டே போனது . இது முதல் கூட்டம் வேறு

முதலில் அவளுடைய வகுப்பு ஆசிரியரைப் பார்த்து விட்டு பின் அடுத்த ஆசிரியர்களைப் பார்க்கலாம் என்று நினைத்துச் சென்றேன்.
முதலில் தயக்கத்தோடு பெருத்த கூட்டத்தில் ஒரு நீண்ட வரிசையில் நின்றேன்.

  உங்கள் பிள்ளை இதில் கவனமில்லை அதில் நன்றாகச் செய்யவில்லை என்று ஆசிரியர்களும் என்பிள்ளை எப்போதும் டி.வி தான் பார்க்கிறான் என்று பெற்றோர்களும் சொல்லிக் கொண்டே இருந்தனர்.மறைமுகமாக ஆசிரியர்கள் பெற்றோர்கள்தான் பிள்ளைகள் படிக்காமைக்குக் காரணம் என்றும் ,பெற்றோர்களோ ஆசிரியர்கள் தான் அவர்களைப் படிக்க வைக்க வேண்டுமென்றும் மறைமுகத் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டே இருந்தது.

நானும் தலைமை ஆசிரியர் என்பதால் பெற்றோர்களின் உளப்பாங்கை எண்ணி வியந்தவாறே நின்றேன். நான் எப்போதும் என் மகள்களைப் பற்றிக் குறைகளை கூறுவதில்லை. ஏனெனில் என் வளர்ப்பு முறையில் தான் குறை இருக்குமே தவிர அவர்களின் அணுகுமுறையில் அல்ல என்பதை நான் உணர்ந்தேன் என்பதை விட அவளைப் பற்றிச் சொல்ல ஒன்றுமே இல்லை. வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இல்லை அதனால் நான் அதைச் சொல்லவும்வாய்ப்பு இல்லை. அநாவசியமாக போன்செய்ய மாட்டாள். பின் நான் எதைத்தான் சொல்ல முடியும்?

ஆனால் எந்நேரமும் புத்தக வாசிப்பு அவளிடம் அதிகம் உண்டு.. தேர்வுக்குத் தயார் ஆகும் போதும் கூட பொதுப் புத்தகங்களை அவள் வாசிப்பதை விட வில்லை. நல்ல மதிப்பெண்கள்பெறுவதால் நானும் எதிலும் கட்டாயப்படுத்துவதில்லை.

எரியும் பனிக்காடு, அகம் புறம் அந்தப்புரம், காவல் கோட்டம்,சிறிதுவெளிச்சம், தேசாந்திரி, இந்திய வரலாறு, ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன், சுஜாதா, முகில், பா.ராகவன், பூமணி, ராஜுமுருகன், மதன்,மாரிசெல்வராஜ் , என்று பனிரெண்டு வயதில் அவள் வாசிப்பின் ஆழ அகலங்கள் என்னை பெரிதும் கவர்ந்ததும், நேசித்ததும் கூட ஒரு காரணமாய் இருக்கலாம்.

எதையும் தீர்க்கமாய் சிந்திப்பதும், அழுத்தமாய் வெளியிடுவதும் அவள் பாங்கு என்பதை அவளிடம் நீங்கள் ஒரு ஐந்து நிமிடம் பேசினால் புரியும். ( இந்தக் கோபக்காரிக்குஇப்படி ஒரு குணசுந்தரியா? என்று நானே பல சமயங்களில் வியந்திருக்கிறேன்)

சரி விஷயத்திற்கு வருகிறேன். இன்று பள்ளியில் இயற்பியல் ஆசிரியர்  மூன்றாவது மாடியின் நான்காவது அறையிலும், வேதியியல் ஆசிரியர் வேறு ஒரு கட்டிடத்தின்  மூன்றாவது மாடியிலும், உயிரியல் ஆசிரியர் வேறு கட்டத்தின் ஐந்தாவது மாடியில் நான்காவது அறையிலும், கணித ஆசிரியர் மூன்றாவது தளத்திலும் ஆங்கில ஆசிரியர் தரை தளத்திலும், தமிழ் ஆசிரியர் ஆசிரியரின் அறையிலுமாக அமர்ந்து அவர்கள் கடமைகளை செவ்வனே செய்து கொண்டிருந்தார்கள். மன்னிக்க.பெற்றோர்களுடன் வாத விவாதங்களில் ஈடுபட்டிருந்தனர்.( நல்ல வேளை அவள் பள்ளியில் ஐந்தாவது மாடியோடு நிப்பாட்டிக் கொண்டார்கள்...இல்லையேல் என் பாடு...?)

அவள் வகுப்பாசிரியரும் உயிரியல் ஆசிரியருமான தனலட்சுமியை போன மாதம் வந்த போது என் தோழியாக்கிக் கொண்டிருந்தேன். எனவே என்னைப் பார்த்ததும் ஒரு மென் புன்னகையும், அழகிய சிறு தலையாட்டுதலையும் தந்து என்னை சைகையால் அமரச் சொன்னார். பயந்து போய் அமர்ந்தேன். இரண்டொருவருடன் பேசிக்கொண்டிருந்து விட்டு, என்னை அழைத்தார்.

எவ்வளவு நல்ல பிள்ளை தெரியுமாங்க ராகசூர்யா, அவளாக சமைத்து, அவளாக கிளம்பி, அவளாக பாடங்களைத் தயாரிக்கிறாள். அவளிடம் தான் ஒரு பேச்சாளர் என்ற கர்வம் இல்லை. ( அய்யோ அவள் பேச்சாளரா????!!!!)
இப்படி ஒரு அமைதியான பிள்ளையை நான் பார்க்கவில்லை. நிறைய புத்தகங்கள் வாசிக்கிறாள். அநேகமாக இந்தப் பள்ளியில் உள்ள நூலகத்தை அவள்தான் திறந்து கண்ணுற்று தூசி தட்டிப் படிக்கிறாள். எல்லோருடனும் நட்பாகவும் அன்பாகவும் இருக்கிறாள். நான் அவளுடன் தான் சேர்ந்து சாப்பிடுவேன். அவள் வைத்த குழம்பு, கூட்டு என்று எனக்கும் கொடுப்பாள்.( மறுபடியும் ஒரு அய்யோ! உங்களுக்கு ஒன்றும் நேர்ந்து விடவில்லை.நீங்கள் இன்சூரன்ஸ் போட்டுருக்கீங்களா??) என்று ஏதேதோ சொன்னார். கடைசியாய் ரொம்ப நல்லா வளர்த்திருக்கீங்க. இப்படி லட்சத்தில் ஒருத்தி தான் இருப்பாள். அந்த ஒருத்தியும் உங்கள் மகளாய் இருக்கிறாள். எனக்கும் அவள் மகள் தான் என்றார். கேட்டுக் கொண்டிருந்த 2 அம்மாக்கள் கேட்டாயா? அவங்க பிள்ளைய பெத்தாங்க. நான் பெரண்டையப் பெத்தேன் என்றது சிறியதாய் என் காதுகளில் கேட்டது.
அங்கிருந்து மகிழ்ந்த வண்ணம் கணித ஆசிரியரைப் பார்க்கப் போனேன். ராகசூர்யா அம்மா அவள் புதுகை சென்றுள்ளாள் என்று சொல்ல ஆரம்பித்ததும் அவரே சொன்னார். பதிவர் திருவிழாக்குப் போயிருக்கிறாள். நாளை விமானத்தில் வந்துவிடுவாள். அப்படித்தானே அன்றாள். இவரும் சற்று புகழ்ந்தார்.
இயற்பியல் ஆசிரியர் என்கைகளைப் பிடித்துக் கொண்டார். அம்மா வாங்க. நல்லா இருக்கீங்களா? அவள் நேற்று பதிவர் திருவிழாக்கு புதுகை போய் விட்டாளா? என்று கேட்டுக் கொண்டே சில வருடங்களில் இது போன்ற மாணவிகளை நாங்கள் சந்திப்போம். அப்படி இந்த வருடம் நான் ராகசூர்யாவை சந்தித்திருக்கிறேன். என்றார்.
இதற்குள் பள்ளியின் முதல்வர் அம்மா ராகசூர்யா அம்மா போகும் போது என்னை சந்தித்து விட்டுச் செல்லுங்கள் என்றார். இப்போது எனக்கு உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது.
ஒரு வழியாக அந்த மாடி, இந்த மாடி என்று ஓடி, ஓடோடி, முதல்வர் அறைக்குவந்தேன். உட்காருங்கள் என்றவர்.என்னை நட்போடுதான் பார்த்தது போல் இருந்தது. அதனால் கொஞ்சம் ஆசுவாசப் பட்டேன். நீங்கள்பெரிய பேச்சாளராமே, கல்கியில் தொடர் எழுதுகிறீர்களாமே? கலைஞர் டீவியில் கவிதைத் தொடர் வாசிக்கிறீங்களாமே. எங்கள் பள்ளிக்கு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வகுப்பு எடுக்க வேண்டும். உங்கள் மகள் என் நல்ல மாணவி என்று கை பிடித்துக்குலுக்கினார். ஒரு வழியாக ஒரு மாபெரும் இறுக்கத்திலிருந்து தப்பித்தது போல் இருந்தது. அவள் மதிப்பெண்கள் வெறும் 1000 தான் எடுத்திருக்கிறாள். அதனால் விடிய விடிய எல்லோரும் என்னைத் திட்டப்போகிறார்கள். என்றுநினைத்து நினைத்து பயந்தேன். ஆனால் ஏனோ ஒருவர் கூட அவளுடைய மதிப்பெண் பற்றிச் சொல்லவும் இல்லை கேட்கவும் இல்லை. எல்லாவற்றிலும் என் கையெழுத்து மட்டும் பெற்றுக் கொண்டார்கள்.

எங்கள் ஊர்க் கவிஞர் ஒருவர் முதல் மதிப்பெண் வாங்க வேண்டாம் மகளே என்று சொல்வார். அதனை புத்தகமாகவும் போட்டுள்ளார். ஆனால் என்னால் அப்படி சொல்ல இயலாது.ஏனெனில் இந்த சமூகமும், அரசும் வெறுத்து ஒதுக்கும் , புறக்கணிக்கும்,ஓ.சி வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது அவளுடைய சான்றிதழில் இருப்பதால் உள்ள பயம் தான் அதற்குக் காரணம். சமூகத்தில் அங்கீகாரம் என்பது மதிப்பெண்கள் தான் என்ற என் எண்ணத்தை தவிடு பொடி ஆக்கிவிட்டாள்.

நானாக மெதுவாக அவள் ஆயிரம் தான் மதிப்பெண்கள் பெற்றுள்ளாள் என்பதைத் தயங்கித் தயங்கிச் சொன்னேன்.ஒருவேளை அவர்கள் மறந்து போய் விட்டார்களோ என்று நான் நினைத்தேன்.

அவள் பெரும் முயற்சிக்காரி. நல்ல பெண். அடுத்த முறை பாருங்கள் அவள் 1100 எடுப்பாள் என்றார் அவளின் வகுப்பு ஆசிரியர். எனக்கு முந்திக்கொண்டு. எனக்கே வெட்கமாய் போய் விட்டது. அவர்களெல்லாம் வைத்த நம்பிக்கையை நான் வைக்க வில்லையோ என்று.

மேல் வகுப்பிற்கெல்லாம் பெண் ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப் பட்டுள்ளார்கள். எல்லோருமே நன்றாகப் பேசினார்கள். இந்த மதிப்பையும், மரியாதையையும் பெற்றுத் தந்ததற்காக நான் தான் அவளுக்குக் கடன் பட்டது போல் தோன்றுகிறது.
இருந்தாலும் இனி அதிகாலையில் எழுந்து படிக்க வைக்க வேண்டும். இரவும் சற்று நேரத்தைக் கூட்டி படிக்க வைக்க வேண்டும்.
அவளுக்காக நீங்களும் பிரார்த்தியுங்களேன்.

( அவளைப் பற்றி எழுதித் தான் அவள் அப்பா முதல் பரிசு பெற்றிருக்கிறார்)

( இரண்டு விஷயம் நான் ராகசூர்யாவிடம் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லோரும் உன்னை நல்ல பிள்ளைனு சொல்றாங்களே, எல்லோருக்கும் என்ன கொடுத்தாய்???இரண்டு அடுத்த முறை உன் ஆசிரியர் விருப்பப்பட்ட படி 1100 வாங்கி விடுவாயா??)

Friday, October 2, 2015

மூட நம்பிக்கைகளும், பெண்களும்


போராடுங்கள் வெற்றி பெறுங்கள் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை .எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 3

கிராமப்புறங்களில் இன்றும் பெண்கள் தங்கள் கணவர்களின் பெயர்களைச் சொல்வதில்லை. ஏனெனில் அவர்கள் கணவன் பெயர் சொல்லும் போது அவர்களின் ஆயுள் குறையும் என்று நம்புகிறார்கள். ( திரைப்படங்களில் தான் அடா, புடா, என்று கூப்பிடுவதும், வா, போ வென விளிப்பதும் சாத்தியம்) சில இல்லங்களில் வேண்டுமானால் அது சாதாரண்மான விஷயமாக இருக்கலாமே தவிர பெரும் பான்மை என்று கணக்குப் பார்க்கும் பொது கணவன் பெயர் சொல்வது மட்டுமில்லை, வாங்க, போங்க, என்று பன்னையில் தான் அழைக்க வேண்டும். இதெல்லாம் எழுதப்படாத விதி. ஆனால அந்தக் கணவர்கள் தங்கள் மனைவிகளை ஆயிரம் முறை பெயர் சொல்லலாம்.அடி வாடி என்று கூப்பிடலாம் . இவள் ஆயுள் தான் குறைந்தால் தான் என்ன?

ஒரு பெண் இன்னும் எங்கள் ஊரில் உப்பு என்று சொல்வதற்குப் பதில் வெள்ளை மணல் என்பாள். அவள் கணவன் பெயர் இத்தனைக்கும் சுப்பு, உப்புக்கும் சுப்புக்கும் என்ன சம்மந்தம்? ஆனால் அவள் அப்படித்தான்

மக்கள் தொகை கணக்கெடுப்பின் பொது அவர்கள் பெயர்கள் சொல்ல பல விஷயங்களைச் சொல்வார்கள். இதனால் ஒரே வீட்டில் எங்கள் நேரங்கள் வீணான கதையும் நடந்தது.

இவர்களில் தான் திருமணம் ஆனவுடன் குழந்தை பிறக்காவிட்டாலும், அல்லது ஆண் குழந்தைகள் பிறக்காவிட்டாலும் மறுமணம் செய்து வைக்கும் தாழ்ந்த நிலையும் ஏற்பட்டது. ஆண் குழந்தைகள் பிறந்தால் தான் வாரிசு என்று போற்றுவது எந்த வகையில் நியாயம் என்றே தெரியவில்லை. இத்தனைக்கும் அந்த ஆண்மகன், அம்மா, அப்பாவை கவனிக்க மாட்டான், அல்லது அவர்களிடம் பணம் பெறுபவனாக, தானே உழைக்காதவன்னாக இப்படி பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டாலும் ஏன் ஆண்கள் தான் வாரிசு என்று கொண்டாட வேண்டும் என்று தான் தெரியவில்லை.

அதே போல் ஒரு தந்தை அல்லது தாய் இறந்து போனால் அந்த வீட்டில் ஆண் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் கொள்ளி வைப்பார்கள். அல்லது அந்த தாய் அல்லது தந்தையின் ஆண் வழியாக வந்த உரவினர்களில் வந்த ஆண்மகன் தான் கொள்ளி வைக்க வேண்டும் என்பதும் சொல்லப்படாத எழுதப்படாத விதி. பெண் பிள்ளைகள் மட்டுமே இருக்கும் வீட்டில் கொள்ளிக்கு ஒரு பிள்ளை இல்லையா என்றே இன்றும் கேட்பார்கள்.
ஆண்கள் கொள்ளி வைத்தால் தான் தாங்கள் ஜென்ம பலன் கிடைக்கும் என்றும் பெண்கள் கொள்ளி வைக்க வந்தால் வைகுந்தம் போகும் வழி தெரியாது என்றும் சொல்கிறார்கள்.

மூல நட்சத்திரத்தில் பெண்பிரந்தால் அந்த பெண்ணை மணம் முடிக்க மாப்பிள்ளையின் பெற்றோர்கள் . ஏனெனில் மூலத்தின் மாமியார் பாடையில் என்பதால் மாமியார் அதாவது மாப்பிள்ளையின் அம்மா இல்லாத வீட்டிலிருந்து தான் பெண் கேட்டு வருவார்கள் இதுவும் ஏன் எனத் தெரியாமலெயே பின்பற்றப்பட்டு வருகிறது.

கல்யாணப் பேச்சு முடிந்து ஒரு பெண்ணை நிச்சயம் செய்த பிரகு அந்த மாப்பிள்ளைக்கு ஏதாவது விபத்து அல்லது தொழிலில் நஷ்டம் ஏதும் ஏற்பட்டாலும் உடனே திருமணத்தை தடை செய்து விட்டு மூதேவி வரப்போறானு நிச்சயம் பண்ணியவுடன் இது போல ஆகுது என்று பேசுவார்கள்.இதே பெண்ணுக்கு ஆனாலும் அப்போதும் பெண் தான் அந்த வலியான பேச்சுக்களையும் தாங்க வேண்டும் அப்போதும் இவளுக்கு திருமண தோஷம் இருக்கு போல அதனால தான் திருமணத்திற்கு இவ்வளோ தடை வருது திருமணத்தை நிப்பாட்டு என்று சொல்லி தடைபட்ட திருமணங்களும் நிறைய .நிறைய.

கணவனை இழந்த பெண்கள் விதவை என்று அழைக்கப்பட்டதோடு அவர்களுக்கான உணவு மறுக்கப்பட்டது. ஒரு நேரம் தான் சாப்பிட வேண்டும். மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும். வெள்ளை ஆடை உடுத்த வேண்டும். அல்லாது உடன்கட்டை ஏற வேண்டும். இதெல்லாம் நம் முன்னோர் பெண்கள் அனுபவித்து வந்தார்கள். இப்போது அப்படி இல்லை என்று வாதிடலாம். ஆனால் விவாகரத்து ஆன பெண்கள் எந்த சுப காரியங்களுக்கும் அழைக்கப் படுவதில்லை. ஒரு சில இடங்களில் இன்னும் இது போன்ர சம்பிரதாயங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன

ஜாதகன் ஜோதிடம் என்று அன்றைய நாளில் தான் அப்படி சங்கடப்பட்டாள். இப்போது அப்படியில்லை. ஆனால் அதற்கும் அதிகமான வேறு வேறு சமூகக் காரணங்கள் அவளை பின்னுக்கு இழுத்த வண்ணமாய் இருக்கிறது. எது எப்படி நடந்தாலும் பெண் தனக்கான பாதையை தானெ தேர்ந்து எடுத்துக் கொள்கிராள். இயற்கையாகவே வலி தாங்கும் ஆற்றல் அவள் உடம்பில் மட்டும் அல்ல. அவள் மனதிலும் இருப்பதால் தான் இன்றும் அவள் வழி உயர்வாள். வழி நடத்துவாள்.

Thursday, October 1, 2015

போராடுங்கள் வெற்றி பெறுங்கள்


போராடுங்கள் வெற்றி பெறுங்கள் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை .எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 3




பெண்கல்வி பெரும் கேள்விக்குறியதாகவும் கேலிக்குறியதாகவும் உள்ளது என்று சொன்னால், இந்த நூற்றாண்டிலா? அல்லது சென்ற நூற்றாண்டிலா? என்று கேள்வி கேட்பார்கள். ஆனால் மிகவும் மறைமுகமாக அவை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

நான் வேலைக்குவந்த புதிதில் பல பெண் குழந்தைகள் திடீரென்று பள்ளியை விட்டு நின்று விடுவார்கள். ஏன் என்று கேட்டால் பல காரணங்கள் பெண் பிள்ளையை படிக்க வைக்க விரும்பவில்லை. அல்லது அடுத்து பிறந்த பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என்று  காரணங்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆதவனை அடைக்க முடியாது என்பார்களே அது போல் தான் பெண் கல்வியும் இன்றைய கால கட்டங்களில் மாறியிருக்கிறது என்றாலும் அது முறைப் படுத்தப்பட்டுள்ளதா? அதில் ஒரு தெளிவு இருக்கிரதா? அது உண்மையானதாக இருக்கிரதா என்ற கேள்விகள் எழுந்தால் ஒரு குழப்பமான பதில்களைத்தான் சொல்ல முடியும்.

பெண் படிக்கச் சென்றால், முதலில் தொடரும் பாலியல் தொல்லைகள். பேருந்தில், அலுவலகத்தில், சமூகக் கூடங்களில் என்று தொடர்ந்தவை பள்ளியில் படிக்கும் போது சொல்லிக் கொடுக்குமாசிரியர்களாலேயே நிகழ்ந்திருக்கிறது என்பது நாம் வெட்கித் தலை கவிழ்ந்து ஒத்துக் கொள்ளக்கூடிய நிகழ்வாகவே இருக்கிறது.

பேருந்தில் தன் நண்பனுடன் சென்ற பெண் மானபங்கப்படுத்தும் போதும் அவள் அதன் பாதிப்பில் இறந்த போதும் அவள் ஆடை சரியில்லை, அவள் ஏன் அந்த நேரத்தில் தன் ஆண் நண்பருடன் சென்றாள் என்று பல கேள்விகள் கேட்டார்களேயன்றி அத்தகைய சிக்கலில் உள்ளாக்கியவனின் மன வக்கிரங்களை இந்த அளவுக்கு யாரும் அலசவில்லை.

காதலிக்க வேண்டும் இல்லாவிட்டால் ஆசிட் வீசுவோம். எங்களுக்குக் கிடைக்காத இந்த உடம்பு இனி வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று இன்ன்னமும் உடல் ரீதியாக பெண்னைப்பார்க்கும் இழி நிலை தான் தொடர்ந்து கொண்டே இருக்கிறது

இந்த மனப்பாங்கு திரைப்படங்களால் பல நிலைகளில் இவர்களுக்கு ஊட்டப்படுகிரது. ஒரு சாதாரண மான ஏழ்மை நிலையில் உள்ளவன் ஒரு பணக்காரப் பெண்ணைக் காதலிப்பான்( காதலிக்க வேண்டும்) அல்லது ஒரு படிக்காத முட்டாள் , படித்தவளைக் காதலிப்பான். அவளும் காதலித்தாக வேண்டும். அதற்கு முன் அவளை இடித்துக் கொண்டு பாடுவது, ஆடுவது, என்று பற்பல உடல் ரீதியான தொந்தரவுகள் தருவான். ( இதைத் தான் ஈவ் டீஸ்  என்று சொல்கிறோம்) அதைக் கதாநாயகர்கள் செய்தால் சரி. அப்படியானால் நாட்டில் எல்லோரும் கதாநாயகர்கள் தானே அதனால் எல்லோருக்கும் பெண்களுக்கு எதிரான் வீர தீர செயலகள் எல்லாம் செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றி விடுகிறது

ஒரு வேளை அவள் மறுத்தால், அவள் அப்படிப்பட்டவள், இப்படிப்பட்டவள்..இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் தெரிஞ்சு போச்சுடானு எத்தனை பாடல்கள்? ஆனால் ஆண்கள் இவ்வளவு கொடுமைகள் செய்தும் அதை தன் பாட்டில் வடிக்க எந்தத் திராணியும் இல்லை. ஏனெனில் அவளுக்கு அப்படி ஒரு வாய்பு கொடுக்கப் படுவதே இல்லை. அப்பாடி அவள் எழுதினால் பேசினால் கட்டாயம் ஆண்கள் சூழ் உலகால் புறக்கணிக்கப் படுவாள். அவள் நடத்தை பற்றி தாறு மாறாகப் பேசுவார்கள்

இதையெல்லாம் பார்த்து பெண் தன்க்குள்ளேயே சரி தான் இது படித்தால் போதும். நமக்க்கு இன்ன இன்ன நடந்தால் போதும் என்று விட்டுக் கொடுக்கிறாள், அல்லது விட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.
இன்று இவ்வளவு வலிந்த சமூகம் தகவல் தொடர்பு எல்லைகள் விரிந்து பரந்து மேம்பட்ட போதும் அவள் தன்னை மேம்படுத்திக் கொள்ளும் போதெல்லாம் ஏதாவது சிக்கல்கள் வந்து ஆக்கிரமிக்கத் தான் செய்கிரது. சிக்கல்கள் வருவதற்கு 5 வயது, 15 வயது 54 வயது என்று வயது வரம்பெல்லாம் கிடையவே மிடையாது. ஒன்று உடலால் துன்புறுத்தப் படுகிராள் அல்லது வார்த்தைகளால் துன்புறுத்தப்படுகிராள்.

நாம் வேண்டுவதெல்லாம் எல்லாவற்றையும் மீறி, எழுந்து எழுந்து வர வேண்டும் என்பதே அன்றைய கால கட்டத்தில் நக்கண்ணை, ஆண்டாள், என்று எல்லோருக்கும் பிரச்சனைகள் இருக்கத் தான் இருந்தது. அதனை மிறி வடிவம் கொண்டாஅர்கள். வளர்ந்து நின்றார்கள்
எனவே பெண்கள் தன் திறன் என்ன என்று அறிந்து கொண்டு அதனை வளர்த்துக் கொள்ள போராடியே ஆகவேண்டும் நிச்சயம் அந்தப் போராட்டத்தில் நீங்கள் இன்று தோற்றாலும் நாளை யாரேனும் ஒரு பெண்ணுக்கு வழிகாட்டியாக இருந்து வெற்றி பெற வைப்பீர்கள் எனவே போராடுங்கள், வெற்றி பெறுங்கள் 

பெண்களைப் புரிந்து கொள்வோம் வாரீர்

பெண்களைப் புரிந்து கொள்வோம் வாரீர் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை .எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 3


குழந்தை, பிறப்பு, கிராமம், அன்பு, ஆசிர்வாதம், பண்பு, மரியாதை, திருமணம், பாராம்பரியம், கலாச்சாரம்,  இப்படி பல சொற்களால் நிரம்பியதுதான் நம் வாழ்க்கை. ஆனால் இவை அனைத்தும் வெறும் சொற்கள் தானா?

வாழ்வில் நல்லவைகளும் அல்லவைகளும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன். நல்லவைகளில் கொண்டாடுவதும் அல்லவைகளில் திண்டாடுவதும் நம் வாழ்க்கையின் நிகழ்வுகளாகப் போனது

சற்று கூர்ந்து நோக்கினோம் என்றால் நாம் எவற்றை இழந்தோம்? எவற்றை எல்லாம் பெற்றோம் என்பதெல்லாம் தெரியும்

இப்போது எல்லாப் பெண்களும் கட்டாயம் வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். குழந்தை, வீடு, வாகனம்,வசதி, சமுதாய அந்தஸ்து, என்று இன்ன பிற காரண்ங்களுக்காக மட்டுமே தான் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள் என்றால் இல்லை என்று சொல்லிவிட முடியுமா?

பெண்கள் கல்வி கற்று முன்னேறி தங்களை உயர்த்தி தங்கள் நாட்டை உயர்த்தி மேன்மைப் படுத்த வேண்டும் என்ற காரணங்களுக்காக ஆண்கள் பெண்களை வேலைக்கு அனுப்புவதில்லை.( ஆண்களில் சிலர்)

அதே சமயம் பெண்கள் வேலைக்குப் போனாலும் அவள் கோயிலுக்குப் போனாஅலும் வேறு வகைக் கூட்டங்களுக்குப் போனாலும் எங்கே சென்றாலும் அவள் தன்னோடு தன் குடும்பத்தையும் எடுத்துச் செல்கிறாள். அவள் தான் தன் குழந்தைகள் சாப்பிட்டார்களா? வீடு சுத்தம் செய்ய வேண்டுமா என்பதோடு தற்போது நவநாகரிக காலங்களிலும் பல வீடுகளில் பாத்ரூம் கழுவமும் அவளே தான் மெனக்கெட வேண்டி இருக்கிறது.
எந்த வேலையையும் நான் சத்தியமாய் குரை சொல்ல வில்லை ஆனால் அந்த வேலையை எந்த ஆண் செய்கிறான். 100 க்கு 10 ஆண்கள் என்பது கூட மிகை தான் என்கிறது ஒரு பெண்ணின் ஆய்வு.

திருமணம் ஆன புதிதில் பலவாறாக கவனிக்கப் படும் அந்தப் பெண் இரண்டு குழந்தைகள் பிறந்த உடன் கணவனால் முதலில் புறக்கணிக்கப் படுகிறாள். தன் குடும்பத்தாரால் மாமியார், நாத்தனார், கொழுந்தனார் உள்ளிட்ட அனைவராலும் தள்ளி வைக்கப் பட்டு விடுகிறாள். இந்த கால கட்டங்களில் தான் பெண்ணுக்கு பல்வேறு சுமைகள் ஏற்படுகின்றன, மன ரீதியாக உடல் ரீதியாக பல மாற்றங்களுக்குள் உள்ளாகும் பெண் தன்னால் என்ன ஆகும்? தான் எதற்குத் தான் பிறந்தோம் என்று நினைத்து நினைத்து ஏங்கி பல நாட்கள் அவள் காலம் கடத்த வேண்டியதாய் இருக்கிறது.

வாழ்க்கையை அதன் பின் ஆண்கள் மட்டும் ரசிக்கிரார்கள் பெண்கள் வீட்டில் இருக்கும் மேசை, நாற்காலி, குளிர்பதனப்பெட்டி, துவைக்கும் இயந்திரம் என்ற அளவில் அவளும் ஒரு பொருளாய் தான் மதிக்கப் படுகிறால். ஒரு வேளை அவள் வேலைக்குப் போனால் அவள் ஒரு சம்பாதித்துத் தரும் இயந்திரம் என்ற அளவில் மாறி , மாறி கடைசியில் தன் மனம் வெறுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.

வேலை பார்க்கும் பெண்மணிகள் படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல. எல்லா நாட்களிலும் பெண்கள் வேலைக்குப் போய் ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவர்களுக்கு கட்டாய ஓய்வு தேவைப்படும் அந்த நாட்களிலு கூட மன்ம் இருகி, போகிறாள். அந்த நேரத்தில் எரிச்சல், கோபம், வேதனை எல்லாம் சேர்ந்து கொள்ள கணவனிடம் காண்பிக்க முடியாமல் தன் பிள்ளைகளிடம் காண்பிக்கிராள். அந்தக் கணவர்களும் இதை ச் சாக்காக  பிள்ளைகளை சமாதானப் படுத்துவது போல் அவர்கள் பால் கோபத்தைத் திருப்பி விடுவதும் ப்ல வீடுகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

பெண்ணின் மிக மிக முக்கியமான பிரச்சனை மெனோபாஸ் தான். அந்த காலங்களில் அவளுக்கு உடல் ரீதியான பாதிப்புகளோடு  , விரக்தி, கோபம், போன்ற பல்வேறு உணர்வுகளுக்கும் ஆட்பட்டு விடுகிறால். இதனை பல ஆண்கள் புரிந்து கொள்ளவே மறுக்கிறார்கள்.

இதன் காரணமாக தங்களைத் தாங்களே தனிமைப் ப்டுத்திக் கொண்டும் கோயில், ஆசிரமம் என்றும் போய் அங்கும் வேறு மாதிருயான பிரச்சனைகளை வளர்த்துக்கொள்கிறார்கள்.

பல வீடுகளில் அவளூக்குப் பிடித்த மெல்லிசை கேட்பது, சினிமா செல்வது, புத்தகம் படிப்பது, சுற்றுலா தலங்கள் செல்வது என்று எதுவும் அவளுக்கு வழங்கப்படுவதே இல்லை

பெண்கள் விடுதலை பெற்றிருக்கிறார்கள்
ஆட்டுக்கல்லிருந்து கிரைண்டருக்கும்
அம்மியிலிருந்து மிக்ஸிக்கும்
எல்லாம் நவீனமயமாக்கப்பட்டுள்ளது
அடுப்படி ...கிச்சனாகி
சிமிண்ட் தரை மார்பிள்ஸாகி
முத்தக்கட்டு சிங்காகி
எல்லாம் நவீனமாகிவிட்டதுதான்
ஆனாலும்
அடுக்களை என்ற கிச்சனுக்குள்ளும்
பெண்தான்
சமைக்கிறாள்!
*************************.

இப்படி ஒரு கவிதை எழுதினே. சில ஆண்டுகளுக்கு முன்..ஆனால் இன்னமும் இதன் நிலை மாறவில்லை.

 பலகாரம் செய்தல்
 மாவு அரைத்தல்
 விருந்தினருக்கும்
 வீட்டினருக்கும் உபசரித்தல் என்று
 பண்டிகை விடுப்பு எடுத்துக் கொண்ட
 வேலைக்காரி வேலையுடன் சேர்த்து
 தொடர்ந்து, நீண்டு............................
 பல வேலைகளுடனும், களைப்புடனும்
 முடிகிறது தீபாவளி
 பெண்களுக்கு...........
 தொலைக்காட்சி பார்த்தல்
 புது ஆடை உடுத்துதல்
 இன்னும்
 இரண்டு மூன்று தேநீர் பருகுதல் என்று
 வெற்று அரட்டைகளுடனும்
 ஆடம்பரமாக
 நகர்கிறது தீபாவளி
 ஆண்களுக்கு........

இந்தக் கவிதையும் நான் பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது தான். இன்னும் சில ஆண்டுகள் கழித்தேனும் பெண்ணின் நிலை மாற வேண்டும். புரிந்து கொண்டோர் அதிகமானால் , அவள் வழக்கம் போல் தன் மகத்துவம் பெறலாம். இல்லையேல் மனநோய் கண்டு அதுதான என்றே தெரியாமல் மட்கிப்பொகும் அந்தப் பெண் மட்டும் அல்ல. அந்த சமுதாயமும்
*************************************************************************

Wednesday, September 30, 2015

தாவர உணவும்...ஒரு கனவும்...


தாவர உணவும் ஒரு கனவும்... எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 2 


 நாங்கள் புதுகையில் இருந்த போது நடந்தது இது. எங்கள் வீட்டில் இருந்து நான்கு வீடு தள்ளி இருந்த வீட்டில் எப்போதும் சண்டை நடந்து கொண்டே இருக்கும். அதனைக் கவனமாக கண்ணுற்ற ஒரு மிகப் பெரும் நல்லவர் ஒருவர் உங்கள் வீட்டு வாசலில் வேப்பமரம் இருக்கு. அதனால் தான் அடிக்கடி சண்டை வருது. பெண்கள் ஒதுங்கும் நாளிலும் நீங்கள் அங்கே இருக்கீங்க.அது அது மாரியம்மனின் அடையாளம். நீங்கள் பாவம் பண்ணிக் கொண்டு இருக்கீறீர்கள் என்று சொல்ல மறுநாள் அந்த மாரியம்மன் எனப்பட்ட வேப்ப மரம் வெட்டப் பட்டது. யாரும் மாரியம்மனை எப்படி வெட்டலாம் இது அதை விட பாவம் என்று சொல்லித் தரவில்லை பாவம்.


((அவர்கள் வீட்டில் அதன் பின்னும் சண்டை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது))

அவர்கள் வெட்டிய உடன் அதற்கும் பக்கத்துக்கும் பக்கத்தில் இருந்த அம்மா, மரம் வெட்டும் காரணம் கேட்க, மீண்டும் ”பாவம்” செய்த கதைகள் சொல்லப்பட அவர்கள் வீட்டு வாசலில் இருந்த மரமும் வெட்டப்பட்டது.

இப்படியாக பாவக் கதைகள் பெரியார் நகர் எங்கிலும் சுற்ற ஆங்காங்கே மரம் வெட்டு படலம் அழகாகவும் நிதானமாகவும் நடந்து முடிந்தது.

பெரும் பாலும் எல்லோர் வீடுகளிலும் சுற்று சுவர் வைத்து சிறிய பகுதிக்கு வீடு கட்டி விட்டு மீதிப் பகுதிக்கு செடிகள் வைத்திருப்பர். இவர்கள் தாவர விரும்பிகள் போல் தங்களைக் காண்பித்துக் கொண்டாலும் உண்மையில் அவ்வளவுக்குத் தான் லோன் கிடைத்திருக்கும் என்பதே மறைக்கப்பட்ட வரலாறு. (((( இவர்கள் செடி வளர்க வேண்டும் என்பதற்காகவே கடன்கள் கட்டுக்குள் இருக்கும் படியான சாபத்தை கடவுள் அருள்வாராக..(இருந்தால்))))

எங்கள் சொந்த வீடு இருக்கும் மருது பாண்டியர் நகரில் முழுக்க முழுக்க வீட்டின் முன் அழகிய பூஞ்செடிகளும் வீட்டின்  பின்னே காய்கறித் தோட்டங்களும் அமைக்கப்பட்டிருக்கும். நகரை விட்டு மிகவும் ( நகர் நீங்கு படலம்) தொலைவில் இருக்கும் எங்களின் அந்தப் பகுதிக்கு காய்கறிகாரர் வரவே மாட்டார் என்பதால் பொதுவாக அனைத்து வீடுகளும் இதனைக் கடைபிடித்திருந்தோம்.

அங்கேயும் ஒரு தாவர வில்லன் வந்து இந்தக் காய்கறிகள் 10 ரூபாய்க்கும் 20 ரூபாய்க்கும் சீச்சீனு கிடைக்குது. அதுக்கு பதிலா கடனோ உடனோ வாங்கி ஒரு வீடு கட்டி வாடகைக்கு விட்டு விட்டால் அந்தப் பணத்தில் கொள்ளைக் காய்கறி வாங்கலாம் என்று ஒருவர் திருவாய் மலர்ந்தருளா அங்கும் அரங்கெற்றப்பட்டது. இல்லை அழிக்கப் பட்டது காய்கறித் தோட்டங்கள்.

மாடி மேலே மாடி கட்டிக்கொண்டே போய் மாடிகள் இருக்கிறது . ஆனால் தோட்டங்களும் இல்லை. ஆரோக்கியமான சூழலும் இல்லை. முன்பெல்லாம் ஜன்னலை த்திறந்தால் பக்கத்து வீட்டின் முல்லைப் பூவும் எங்கள் வீட்டின் மல்லிகையும் போட்டிப் போட்டுக் கொண்டு வாசத்தைக் கொண்டு வரும். கோடைகாலங்களில் கூட மின்விசிறி பயன்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதில்லை

ஆனால் இப்போது கதவைத் திறந்தால் காற்று வரவில்லை. கொசு தான் வருகிறது. பூக்களின் வாசம் போய் செப்டிக் டேங்க் வாடை தான் வருகிறது

வடக்குப் பக்கம் உள்ள வீட்டில் மோட்டார் போட்டால், தெற்கே உள்ளவர்கள் அவர்கள் அணைக்கும் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.

இப்போது ஏதோ ஒரு ஜோதிகா படத்தைப் பார்த்து விட்டு மாடியில் தோட்டம் போட்டிருக்கிறார்களாம். ( நல்ல வேளை அவ்வப்போது இப்படியான நற்பணிகளையும் திரைப்படங்கள் செய்கின்றன போலும்)

சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். மரங்களை நட்டவர்கள் அதன் கீழ் ஒரு தெய்வங்களையும் சொன்னதின் காரணம் அவர்கள் மரங்களை வெட்டாமல் இருக்க வேண்டும் என்று தான் என்று..

மற்றொரு வீட்டில் தென்மேற்கில் மல்லிகை இருக்கக் கூடாது அங்கே பணம் வைக்கும் அரை இருக்க வேண்டும். என்று சொல்ல அது வெட்டப்பட்டு அறையானது. அப்புறமும் பணம் வரவில்லை. ( உழைக்காமல் பணம் வராது என்று அவர்கள் நினைக்கவே இல்லை.)


அங்கேயே நொந்து போன நான் இங்கே மாடியின் கீழ்ப்பகுதியில் கூட ஒரு கடை கட்டி வாடகைக்கு விட்டு இருப்பதைப் பார்த்தால் கண்ணீர் வருகிறது.

மிக மிக ஆசையாய் ஒரே ஒரு ரோஜாச் செடி வாங்கி இப்பொது இருக்கும் அப்பார்ட்மெண்டில் வைக்க ,போக வர இடைஞ்சலாக இருக்கு என்றும் செடிகள் வைப்பது பட்டிக்காட்டுத்தனம் என்றும் மிக மிகக் கொடூரமாக எள்ளி நகையாடிவிட்டுப் போனாள் கீழ் வீட்டில் இருக்கும் பெண்.

ஏதாவது கோயிலில் பூசாரிகள் சாமியாடி எனக்கு நிறைய செடி நடுங்க என்று சொன்னால் தேவலாம் போல் இருக்கிறது. ( அந்தக் காலத்தில் முளைப்பாரி என்று ஒரு நடைமுரை உண்டு..அது செழித்து வளர அவ்வளவு பாடுபடுவோம்) இங்கே சாமி எல்லாம் நல்லாத் தான் கும்புடுறாங்க. ஆனால் ஏனோ எல்லோரும் செடி வெறுப்பாளர்களாய் இருக்கிறார்கள்.

கோழியிலும் ஆட்டு இறைச்சியிலும் தான் அதிகமான சத்து இருக்கிறது என்பது அவர்களின் வாதம். ( அக்காலத்தில் நாட்டுக் கோழிகள் சரி. இக்காலத்தில் ஊசி போட்டு வளர்க்கும் கோழிகளிலுமா என்று என்னால் ஏனோ கேட்கவே முடியவில்லை)

பக்கத்தில் உள்ள கடையில் ஞாயிறு அன்று காய்கறிகளே கிடைப்பதில்லை. எல்லோரும் அசைவம் தான் சாப்பிடுவார்களாம். எனக்கு மட்டும் ஏதோ காய்ந்த கத்திரி, மங்கிய கேரட்டுகள் தருவார். உங்களுக்காகத் தான் வைத்திருந்தேன் என்ற அங்கலாய்ப்பு வேறு.

மருத்துவர் மருந்து கொடுத்துவிட்டு நிறைய அசைவம் சாப்பிட்டு விட்டு இதனைச் சாப்பிடுங்கள் என்றா சொல்வார்? இட்லி அல்லது கஞ்சி சாப்பிட்டு விட்டு மருந்துகள் உட்கொள்ளுங்கள் என்று தானே சொல்வார்.என்று சொல்லிவிட்டு வந்தேன்.

எங்கோ ஒரு இடத்தில் ஆடுகள் கோழிகள் வெட்டப்படும் போது அவை பய உணர்வால் தவிக்கின்றன. அப்போது டாக்ஸின் என்ற நோய் பரவவும் வாய்ப்பு இருக்கிறதாம் என்றேன். போங்கம்மா...நீங்கள் பிறப்பிலேயே சைவம் அதனால் தான் இப்படி சொல்கிறீர்கள் என்று சொல்லி சிரிக்கிறார்கள்..( தாவர உணவைப் பற்றி யாரும் பெரிய நடிகர்கள் சொன்னால் ஏற்பார்களோ)

நினைத்த நேரத்தில் மருதாணி பறித்து அரைத்து வைத்ததும்,அடுப்பில் கடுகைப் போட்டு விட்டு கொல்லையில் கறிவேப்பிலை பறித்துத் தாளித்ததும்,எலுமிச்சைகளையும், முருங்கைக்காய்களையும் ,மாங்காய்களையும்,நண்பர்களுக்கெல்லாம் கொடுத்து மகிழ்ந்ததும், ஏதோ முன் ஜென்மத்தில் நடந்தது போலவே இருக்கிறது.

விளைநிலமும்...கருவேலமரமும்..

இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ இன் ஐந்து வகைகளில் வகை-2 சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டிக்காகவே எழுதப்பட்டது”. இது என் சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வெளியிடப்படவில்லை என்றும் இப்போட்டிக்கான முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடப்படமாட்டாது என்றும் உறுதி கூறுகின்றேன். 

நான் பணிபுரியும் பள்ளி கிராமத்தில் இருந்தாலும் அதிகமான சீமைக்கருவேலமரங்கள் சூழ்ந்த ஒரு இடத்தில் தான் இருக்கிறது. சுற்றிலும் விவசாயமே இல்லை.

 அதே பள்ளியில் தான் என் அப்பாவும் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது அந்த ஊருக்குக் கூட்டிப்போனால் மிகவும் மகிழ்வாகச் செல்வேன். அங்கே உள்ள மனிதர்கள், அவர்கள் தரும் அன்பு, அதோடு இயற்கை சூழ்ந்த அந்த இடம், பள்ளிக்கு தென்மேற்கே ஒரு குளம். அதில் தாமரைகள்..வடகிழக்கில் ஒரு குளம் அதில் அல்லி மலர்கள். கரையில் ஒரு பிள்ளையார் கோவில். மார்கழி மாதம் மட்டும் தான் மிகத் தீவிரமாக பிள்ளையார் கவனிக்கப் படுவார். மற்ற நாளில் அரசமரக்காற்றை வாங்கிக் கொண்டு சும்மா இருக்க வேண்டியதுதான்

 அப்பா நான் சிறு பிள்ளையாக பள்ளிக்கு சென்று வந்த காலங்களில் அங்கே அழைத்துச் செல்வார். பிள்ளைகளிடம் நான் ஒரு தேவதையாக வலம் வரலாம் என்ற நப்பாசையும் என்னிடம் இருந்தது. அந்த ஊரில் ஆசிரியரின் பிள்ளைகள் தேவதைகள்.அதோடு தலைமை ஆசிர்யரின் பிள்ளைகள் தேவதைகளின் தேவதைகள்.

 ஏனோ அந்த ஊரில் இருந்த அனைவருமே நல்ல நாவல் பழ நிறமென்பதாலும், நான் மிகவும் சிவப்பாக இருந்த காரணத்தாலும் கொஞ்சம் அதிகமாக பழகுகிறார்கள் என்று நானாக கிறுக்குத் தனமாக நினைத்துக் கொண்டதும் உண்டு.தங்கள் வயல்வெளிகளுக்கு அழைத்துச் சென்று தேவையான காய்கள், பழங்கள், நுங்கு, கடலை, என்று தங்களால் தரமுடிந்ததை எல்லாம் தருவார்கள். ஆனால் அப்பாவிற்கு நான் வாங்குவது எதுவும்பிடிக்காது என்பது ஊராருக்குத் தெரியுமாதலால், எனக்குப் பிடித்த கடலையை மட்டும் வயலிருந்து அப்படியே பிடிங்கி அங்கே வயலுக்குப் பாயும் நீரில் அதனை அலசி தின்று விட்டு வருவேன்

நானும் ஆசிரியரான போது எனக்கு பணிமாறுதலின் போது நான் இந்த ஊரை வேண்டும் என்று விரும்பிக் கேட்டு வாங்கிக் கொண்டேன். வழக்கமாக அவர்களை அத்தை, பெரியம்மா, என்று உறவு முறை வைத்துத் தான் அழைத்து வந்தேன். நான் டீச்சர் என்றாலும் மாணவர்கள் மட்டுமே என்னை டீச்சர் என்றார்கள். மற்ற எல்லோருக்கும் நான் பாப்பாவாகிப் போனேன்.
ஆனால் இப்போது ஊரில் சிறு மாற்றம் நிகழ்ந்தது. அடுத்த தலைமுறையினர் படிக்க வந்திருந்தனர். அதோடு விவசாயத்தை வெறுக்கும் சமூகமாக மாறிப் போனார்கள். அவர்களிடையே படிப்பு மட்டுமே உயர்ந்த பதவியும் நிறைய பணமும் தரும். வெளிநாட்டில் வேலை என்றெல்லாம் மாறியிருந்தனர்.

நான்  பணியில் சேர்ந்ததும் இந்த மாற்றங்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது, என்றாலும் என்னால் முடிந்த அளவில் அவர்கள் மனம் மாற பாடுபட்டேன். அவர்களின் ஆழ்மனதில் ஏனோ விவசாயம் ஒரு வேண்டத்தகாத செயலாகப் போனது.

இப்போது சில வருடங்கள் கழித்து மீண்டும் இதே ஊருக்கு தலைமை ஆசிரியர் மாறுதல் கிடைத்தவுடன் என் மனம் மகிழ்வால் துள்ளியது. என் உறவினர்களுடன் வேலை செய்யப் போகிறேன் என்று எனக்கு ஆனந்தம். அரசாங்கம் இவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொன்னாலும் என் மனதிற்குள் இவர்களை உயர்த்தப்பட்டவர்களாகவே மதித்தேன்.மதிக்கிறேன்.

 தற்போது அங்கிங்கெனாதபடி எங்கும் சீமைக் கருவேல மரங்கள். அப்போதெல்லாம் மழைகாலங்களில் காட்டாற்றின் வெள்ளம், வந்து சூழ்ந்து கொள்ளும்.புதுகையும் இந்த ஊரும் தனித் தீவு போல ஆகிவிடும். ஆனால் இப்போது மேம்பாலம் கட்டப்பட்டு விட்டது ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லை. வெள்ளம் ஓடிய இடத்திலும் கருவேல மரங்கள். ஒரு காலத்தில் இந்த ஊர் தீவு போல் இருக்கும் இந்த ஊருக்கு மாற்றல் ஆகி வரும் ஆசிரியர்கள் சிரமப்பட்டு வருவார்கள். இரண்டு ஆடைகள் கொண்டு வந்து பள்ளி வந்ததும் மாற்றிக் கொள்வார்கள் என்பதை அந்த ஊர் இளைய தலைமுறைகளே நம்ப மாட்டார்கள்.

 எல்லோர் வீட்டிலும் டி.வி. இருக்கிரது. கைகளில் போன் இருக்கிறது. ஊரில் தான் விவசாயம் இல்லை..இந்த ஊரில் கடலையும் துவரையும் விளையும் நல்ல மண் என்பது கூட மறக்கடிக்கப்பட்டு விட்டது.

விவசாயிகளின் மகன்கள், மகள்கள் படிப்பும் ஏறாமல் , விவசாயமும் செய்யாமல் மூட்டை தூக்கும் தொழிலாளியாக மாறிப்போனார்கள். எப்போதும் வறுமையும், இல்லாமையும் தான் இவர்களை நிறைத்திருக்கிறது. அன்றைய நாளில் நான் சிறு பிள்ளையாக இருந்த போது அந்த ஊரில் நிறைய நிலங்கள் வைத்து விவசாயம் செய்து வந்தவரின் மகனை என் அண்ணன் என்று என் அப்பா அறிமுகப்படுத்தி வைத்த போது  எனக்கு ஒரு மாதிரியாகவே  இருந்தது. என் வீட்டில் எல்லோரும் சிவப்பாகவும் இங்கு எல்லோரும் கருப்பாகவும் இருந்தது தான் காரணமாக இருக்கலாம்.அல்லது என் அம்மா பின்பற்றிய சாதி ய முறை காரணமாகவும்  இருக்கலாம்.ஆனால் யாரையும் நான் வெறுக்கவில்லை என்றே தோன்றுகிறது. ( அந்த அண்ணன் தான் இன்று என் பள்ளியின் பெற்றோர் சங்கத் தலைவர். )

அன்று எல்லோருக்கும் படியளந்தவர்கள் இன்று பலரிடம் கையேந்துகிறார்கள். சமீபத்தில் புதுகையின் அன்வோ அமைப்பை சேர்ந்தவர்கள் மூலமாக தாரகை என்ற ஒரு ஜவுளி நிறுவனத்திலிருந்து அனைவருக்கும் தீபாவளிக்கு இலவசமாக ஆடைகள் வாங்கிக் கொடுத்தேன். மறுநாள் ஒரு மூதாட்டி தன் பேத்தியை பட்டுப் பாவடையில் பார்த்த அவர்,என்னைக் கட்டிக் கொண்டு அழுத காட்சி இன்றும் என்னை உலுக்குகிறது. ஒரு காலத்தில், இவர்கள் எல்லோருக்கும் கொடுத்தவர்கள், இன்று எல்லோரிடமும் கையேந்துபவர்களாகவும் இருக்கிறார்கள்

விவசாயம் தழைக்கவும் இந்த விளைநிலங்கள் விலை நிலங்களாக மாறுவதைத் தடுக்கவும் ஏதேனும் ஒரு ஜீபூம்பா செய்தால் நன்றாய் இருக்கும்

.
நிறைய விளைநிலங்கள் வீடுகளாக்கப்பட்டு விட்டது.விளைநிலங்களின் ஒரு பகுதியை ஒரு பாக்கு மற்றும் புகையிலைக்கம்பெனி ஆக்கிரமித்துக் கொண்டது. மற்றொரு பகுதியை நான்கு வழிச் சாலை ஆக்கிரமித்துக் கொண்டது. மீதி நிலங்களில் சீமைக் கருவேல மரங்கள் தான் நிரம்பி வழிகின்றன

அன்று என்னை தேவதையாகக் கொண்டாடிய ஊரில் தான் இன்று இருக்கிறேன்.. ஒரு சில முதியவர்கள் தான் பாப்பா என்று அழைக்கிறார்கள். பெரும்பாலும் எல்லோருக்கும் பெரிய ”அம்மா”( தலைமை ஆசிரியரை அப்படி அழைக்கும் வழக்கம் இருக்கிறது)  இவர்களிடம் விவசாயம் கீழானது என்று போதித்தவர்கள் யார்? இப்போது எதுவுமே இல்லாமல் கையேந்துவது எதனால்??

நிலம் இருந்தவர்கள் ரியல் எஸ்டேட் காரர்களுக்கு விற்று விட்டு பணத்தை வங்கியில் போட்டு விட்டு சாப்பிடுகின்றனர். அங்கே கூலி வேலை பார்த்தவர்கள் ஏதும் இன்றித் தவிக்கின்றனர்.

பழைய பாசத்தோடு உழவுத் தொழில் மேன்மையை நான் புரிய வைப்பதற்குள் இவர்கள் எல்லாவற்றையும் விற்று, ஏழ்மையில் கிடக்கிறார்கள்.

 இப்போது பிள்ளையாருக்கு அடிக்கடி விழாக்கள் நடக்கிறது. வயல்கள் தான் கருவேல மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது, 

செங்கலில் செவிசாய்த்து...

செங்கல்லில் செவி சாய்த்து... எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை..எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 1 



ஊரே அலைபேசி வாங்கிவிட்டது. கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களில் அதனை வைத்திருப்போர் இடையில் ஹாங்...ஹலோ...என்றவாறு வெளியே எழுந்து செல்வார்கள். சில நேரம் காமெடியாகவும், சில நேரங்களில் அவர்களை நோக்கிப் பொறாமைப் பார்வைகளும் படியும். அப்போதெல்லாம் ஓரிருவர் கையில் தான் அலைபேசி இருக்கும்.

அப்போது தலைமை ஆசிரியர் கூட்டத்தில் ஒரு பெண்மணி செங்கல் போல இருந்த ஒரு வஸ்துவைக் கொண்டு வந்து (சிக்னலே இல்லாமல் அதன் லைட்டைத் தட்டி விட்டு) பேசிக் கொண்டிருப்பார். அப்போது ஆண் ஆசிரியர்கள்(ளே) வாங்காத நிலையில் , பல ஆசிரியர்களுக்கு அவள் பெரிதாய் அலட்டுகிறாள் என்றே பேசிக் கொண்டனர். ( அவரவர்கள் வாங்கும் வரையிலும் நாம என்ன பிஸினஸ்ஸா பண்றோம் நமக்கு எதுக்கு போனு? என்று ஒரு ஆசிரியர் பெரியதாய் அவரை தாக்கும் நோக்கத்தோடு பேசிக்கொண்டிருந்தார்...அந்தப் பெண் இவரை பார்த்தாலே நடுநடுங்கி ஓடிப்போய்விடுவார் என்பது வேறு விஷயம்)


நாங்கள் அப்போது தான் வீடு கட்டியிருந்தோம் ஆதலால் ஒழுங்காக சாப்பாடு வாங்கிச் சாப்பிடுகிறோமா என்பதே பெரிய வினாவாய் இருக்க நாங்கள் போன் பயன் படுத்துவது என்பது கனவு என்று தான் நினைக்கத் தோன்றியது. ஒருவாறாக பல்வேறு ஆதாரங்கள் மற்றும் தேவைகளுக்காகவும் எங்கள் வீட்டில் லேண்ட் லைன் போன் வாங்கப்பட்டது. அப்போது என் மகள் அடிக்கடி அதனை எடுத்து தன் காதில் வைத்து அதில்” டுர் ”வரும் ஒலியை ரசித்துச் சிரிப்பாள்.(அதன் பின்னர் அந்த போனே சின்னவள் பிறந்ததும் ஒரு விளையாட்டுப் பொருள் ஆனதெல்லாம் வேறு விஷயம்)

அப்படி உள்ள சூழலில் என்னிடம் செங்கல் போன்ற கருப்பான ஒரு திடப் பொருளைக் கொடுத்து இது தான் கைபேசி என்று என் கணவர் தனக்கு த் தெரிந்ததெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். ( அவர் அடித்த கப்ஸாவை எல்லாம் நான் அப்படியே நம்பினேன் என்பது ஆஃப் த ரெக்கார்டு) (அதை ஒரு நாள் என் பள்ளிக்குக் கொண்டு போய் என் அஸிட்டெண்டை அழைத்து அவரிடம் எனக்குத் தெரிந்ததெல்லாம் பற்பல பொய்கள் கலந்து சொன்னேன் என்பதும் ஆஃப் த ரெக்கார்டு).

புதுக்கோட்டை டவுனிலேயே எடுக்காத போன், நான் ஆறு கடல் தாண்டி,  ஏழு மலை தான் தாண்டி , அம்புலி மாமா ராணியாய் வேலைக்குச் சென்ற இடத்திலா எடுக்கும்?  யாராவது போன் பண்ண மாட்டார்களா என்று ஏங்கித் தவித்து, அது வந்தால் , அந்த ஊரே கேட்ட்கும் படி ஹலோஓஓஓஓ என்று கத்திக் கொண்டே வயலுக்குள் ஓடி விழுந்து, ஐயோ!பெரிய டீச்சர் ஏதோ கருப்புப்பெட்டியப் பாத்து பேசிக்கிட்டே போவுது..துன்னூறு மந்திரிக்கணும் என்று கூட வதந்தி பரவிவிட்டது. அப்போது வரும் அழைப்புக்கும் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனாலும் யாராவது பண்ண மாட்டார்களா என்று மனசு ஏங்கும். சினிமாவே பார்க்காத நான் ஒரு திரைப்படத்தில் கதாநாயகன் போனில் பேசுகிறான் என்பதற்காக ஒரு ----திரைப்படத்தை 3 முறை பார்த்து வந்தேன்..( இப்போது இந்த போனே வேண்டாம் என்று நினைத்தாலும் முடியவில்லையே)

பிறகொரு நாளில் ஏதோ ஒரு கம்பெனி இன்கமிங் ஃபிரி என்று அறிவிக்க என் கணவர் அதனை வாங்கிப் பயனடைய வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று மறு நாள் பள்ளிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு வங்கிக்கு சென்று நகையை அடகு வைத்து ஆளுக்கு ஒரு போன் வாங்கிக் கொண்டு புளங்காங்கிதம் அடைந்தோம்.

எப்போதாவதேனும் இருவரும் சேர்ந்து பேசி குழந்தைகளைக் கொஞ்சிக் கொண்டு வாழ மாட்டோமா என்ற ஆசை இருவருக்குள்ளும் இருந்தாலும் பொருளாதாரத்தின் அசுரக் கைகளுக்குள் கட்டுண்ட படியால் ஓடிக் கொண்டே இருந்த நாங்கள் எங்காவது தனித்தனியாகப் பிரிந்து போய் போனில் பேசமாட்டோமா என்ற ஆவல் வந்து விட்டது. ( அப்போதும் போன் பற்றி அவர் கூறும் அளவிட முடியாத கப்ஸாக்களை நம்பி வந்தேன்). ஆக ஒன்றாய் இருக்க வேண்டும் என்ற ஆசையை பிரிய வேண்டும் என்று கொண்டு வந்தது இந்த போன் தான் என்பது தான் உண்மை.

வீட்டின் வறுமை அசுரன் தலைவிரித்து ஆட, அவர் கட்டாயம் வேறு நாடு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட, சிங்கபூர் போய் அவர் முதலில் எனக்கு ஒரு போன் தான் அனுப்பினார். ( அவர் அங்கே போவதற்காக வாங்கப்பட்டக் கடனைக்கூட அடைக்காத நிலையில் தான்) சி.ஆர்.சி.கூட்டங்களில் அந்த போனை வாங்கும் ஆசிரியர்கள் மீண்டும் தரவே மாட்டார்கள். ஏனெனில் சிங்கப்பூர் என்ற மாயையும் அப்போதே அவர் அதனை 14000 கொடுத்து வாங்கியிருந்ததும் தான்.நாங்கள் மிகப்பெரிய பணக்காரராகவே கருதப்பட்டொம். பிறகு படிப்படியாக குடும்பச் சூழலும் மாறியது.அதன் பின் இவர் புதிதாய் நகை,பிளாட்,வேறு சேமிப்பு என்று நடுத்தரக்குடும்பங்கள் செய்யும் ஏதும் செய்யாமல் போன் மட்டும் மாற்றுக் கொண்டே இருந்தார். அவர் வாங்கிய போன் காசுக்கு 200 பவுன் நகை வாங்கியிருக்கலாம்.

போனில் பேச மட்டுமே தெரிந்த எனக்கும் என் மகள் அதில் இருக்கும் விளையாட்டுகள் குறுஞ்செய்தி அனுப்புதல் எடுத்துப் படிப்பது போன்றவற்றைக்கற்றுத் தர அவளுக்கும் ஒரு நவீன போன் அவசியம் என்பதனை வலியுறுத்தி அவளுக்கும் கூட ஒரு போன் அங்கிருந்து அனுப்ப அது தான் புதுகையின் பேச்சு செய்தியானது. ஏனெனில் அப்போது தான் அவள் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.

என் மாமியார் நான் அப்படி பேசும் போது என் எதிரில் நிற்கவே மாட்டார். அது ஒரு மதிப்பான செயலாகவே கருதப்பட்டது. அதனைச் சாக்கிட்டு அவர் திட்டத் தொடங்கும் வேளையில் நான் பேசாத போனில் ரிங் டோனை அமுக்கி சும்மா பேசிக் கொண்டிருந்ததும் உண்டு. ( ரிங் டோன் இல்லாமல் பேசினால் கண்டு பிடித்து விடுவார்களாம்) ஆசிரியர்  கூட்டங்களில் போனே வராமல் பல ஆசிரியர்கள் இந்த டிர்க்கைக் கடைபிடித்து நழுவிச் சென்றதும் நடந்தது. செங்கல் உருவில் இருந்த போன்கள் படிப்படியாக மெலிந்து காணப்பட்டது. பின்நாளில் செங்கல் போல் போன் வைத்திருந்தால் அவர்கள் நகைப்புக்கு உரியவர்கள் ஆனார்கள்.

அதன்பின் அனைத்து ஆசிரியர்களும் அதன் அத்தியாவசியம் உணர்ந்து தன் சேமநலநிதியைப் பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளூக்கு கட்டணம் (ஃபீஸ்) செலுத்துகிறார்களோ இல்லையோ, இந்த போன்களை வாங்கிக் கொண்டனர். இந்தக் கம்பெனி சலுகை அளித்தால் இந்த சிம். இல்லாவிட்டால் அந்த சிம். பி.எஸ்.என்.எல். ல் 1000 ரூபாய் செலுத்தி ஒரு மாதம் கழித்து ஒரு சிம் தந்தார்கள். அந்த சிம் வைத்திருந்தால் பெருமை என்றே கருதப்பட்டது. 944 என்று வந்தால் ஒரு கம்பெனி, 98 என்று வந்தால் ஒரு கம்பெனி, 93 என்று வந்தால் ஒரு கம்பெனி என்று மனப்பாடம் ஆகிவிட்டது.

போன் கருத்தாளர்களுக்கு, ஆங்காங்கே ஆலோசனைகள் எந்த சிம் போட்டால் எதில் லாபம், எது கட்டணம் குறைவு என்றெல்லாம் எல்லாக் கூட்டங்களிலும் அலசப்பட்டது பல ஆசிரியர்களால். அதில் பெண்கள் கலந்து கொள்வதில்லை. ஆனால் என்னை மட்டும் சேர்த்துக் கொள்வார்கள் காரணம் சிங்கப்பூரிலிருந்து வரும் போன் மற்றும் என்னை அவர்கள் போன் பற்றி அறிந்த மிகப் பெரிய அறிவாளியாகக் கருதியது தான்.

 பலர் அந்த போனைக் கழட்டி சிம் மாட்டித்தரச் சொல்லி க்கேட்க, அதனையும் பலர் முன் செய்து கொடுக்க நான் ஒரு பேரறிவாளியாக அங்கீகரிக்கப்பட்டேன்
.
நடுவில் தன் உருவில் மிகவும் குறைந்த அளவில் போன போன்-கள் மீண்டும் தன் (கோபம் கொண்டிருக்குமோ) உருவில் டாப் வடிவத்தில் பெருத்தது. மீண்டும் பொதுக்கூட்டங்களில் அதனை வைத்து போட்டோ எடுப்பவர்கள் வணக்கத்திற்குரியவர்களாக ஆக்கப்பட்டனர். எங்கே போனாலும் தங்களுக்கென ஒரு நட்பு  வட்டத்தை உருவாக்கிக் கொண்டு அவர்கள் மூலமாக போட்டோஎடுத்துக்கொண்டனர். அவர்கள் போனில் போட்டோ எடுக்க வேண்டுமென்பதற்காகவும் இல்லாதவர்கள் அவர்களோடு நட்பு கொண்டார்கள் என்பதும் வேறு விஷயம்.

இன்று ஆண்ட்ராய்டு வரை வளர்ந்த போன்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்கள் அதனை வாங்குமுன் பெரிய கதை இருக்கத் தான் செய்கிறது என்றாலும் குடும்பத்தை பிரித்த பெருமையும் அதனுள் தான் இருக்கிறது. ஒரு தலைமை ஆசிரியர் தன் மகன் தன் அறையில் இருந்து ஹாலில் அமர்ந்திருந்த அம்மாவிடம் தண்ணீர் கேட்க குறுஞ்செய்தி அனுப்பினான் என்று மிகப் பெரிய ( இடையில் மானே தேனே பொன் மானே என்றெல்லாம் போட்டுக் கொண்டு தான் ) கூட்டத் தில் பிரசங்கிப்பதாய் நினைத்து உணவு இடைவேளையின் போது பரிமாறிக் கொண்டார்.

அவரவர்கள் எப்படி குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என்பதையும் எப்படி அழகாக செல்போனில் அதனை விரைவாக பயன்படுத்த தெரிந்தவர்கள் எல்லம் அதிகம் டெக்காலஜி தெரிந்த டீச்சர் என்று பெயர் பெற்றனர். நானும் அதற்குள் அடங்கினேன். (பேட்டடி கழட்டி மாட்டத் தெரிந்ததற்காகவே அப்படிக் கருதப்பட்டேன்)

ஆனால் இன்றைய நாளில் என் மகளிடம் கூட அப்படி பீற்றிக் கொள்ள முடியவில்லை. நான் ஒரு சிறு விஷயத்தைக் கற்றுத் தேறும்முன் அவள் அதன் படிநிலைகளில் பல படிகளைத் தாண்டி விடுகிறாள். போன் சமுதாயமாக மாறிப் போன இவர்களுக்கு  நமது தபால் முறை, தந்தி முறை எல்லாம் மிக மிக கற்காலம் என்ற அளவில் மாறிப் போனது.
********************************************************************************

Monday, September 28, 2015

பெண்களின் நிலை

பெண்களின் நிலை எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது


வகை 3 பெண்கள் முன்னேற்றம்

பெண்களின் நிலையும் சுதந்திரமும், பொருளாதாரமும் பல்வேறு வகைகளில் உயர்ந்துவிட்டன என்றே தான் பேசப்படுகின்றன், எழுதப்படுகின்றன, ஆனால் இண்மையில் இன்றைய சூழலைவிட அன்று, அன்ரைய சூழலைவிட இன்று என்று கொடுமையான அரசியல், வன்முறை நிறைந்த ஒரு சூழல் தான் காணப்படுகிறது.

பெண்கள் தனக்கென ஒரு முடிவு எடுக்க இயலாத நிலைதான் இன்றும் கூடத் தொடர்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் பாக்யா வார இதழில் பெண்கல்வியை வலியுறுத்துவதாக நான் எழுதிய சிறுகதையில் மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்பதற்காக தன் பெண் பிள்ளையை படிக்க விடாமல் செய்வார் அவள் அப்பா. அது போன்ற ஈனச் செயல்கள் சிறுகதைகளில் மட்டுமல்ல நேரிலும் தொடர்கின்றன.

ஒருவனுக்கு ஒருத்தி என்கிறார்கள். ஆனால் இங்கே ஒருத்திக்குத் தான் ஒருவன். ஒருவனுக்கோ பல ஒருத்திகள். பலதார முறை ஒரு பெண் செய்தால் அவதூறாகவும், கேவலமாகவும் பேசும் மக்கள் ஆண் செய்து கொண்டால் அவன் ஆம்பிளை அப்படி, இப்படித்தான் இருப்பான் என்றோ ஆம்பிளைச் சிங்கம் என்றோ கருத்துக்கூறி தன் பணியை முடித்துக் கொண்டு சிரம் தாழ்த்தி வணங்கிவிட்டு அகன்று விடுகிறது.

புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே தங்கச்சிக் கண்ணே சில புத்தி மதிகள் சொல்லுறேன் கேளு என்று பாட்டு பாடி புத்திமதிகள் கூறி மடக்குகிறது. எங்கேனும் கல்யாணம் ஆகப்போகும் ஆண்களுக்கு இது போன்று அவளை அன்பாகப் பார்த்துக்கொள் என்று அறிவுரை கூறக்காணும்.

இழிசெயலாக மாப்பிள்ளை கடைசியாக ஒரு முறை சிரி என்று நாலாம் தர நகைச்சுவைகளைதான் இவர்கள் தருவார்கள். ஆண் சமையல் செய்தால் வீட்டு வேலைகள் செய்தால் அவன் கேலிப் பொருள் என்று மையப்படுத்தி அவனை வீட்டில் ஏதும் செய்ய இயலாமலேயே செய்து விடுகிறது.

கவியால், தன் திறத்தால், ஆற்றலால், மேன்மை கொண்ட அவ்வையாருக்குத் திருமணம் ஆகவில்லை. ( ஆகவிடவில்லை) அது போன்ற சமூக அக்கறை கொண்ட பெண்களைத் திருமணம் செஉது கொள்ள ஆண்கள் முன் வருவதில்லை. அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் அவர்கள் காலில்  விழுந்து வணங்கி இவள் அன்னை, தெய்வம், போன்றவள் என்று விலகி, விலக்கி, அவளை பேயுரு கொள்ள வைத்தது காரைக்கால் அம்மையாரை..(புனிதவதி)( சிவபெருமானே அம்மா என்று அழைத்தார் என்பதெல்லாம் ஒரு பாவலா..அவர்கள் பாவம் தெரியாமல் இருக்க செய்த சதி என்றே தோன்றுகிறது) அதே பக்தி ஆண்களுக்கு இருந்தால் அவன் போற்றப்பட வேண்டியவன், வணங்கத்தகுந்தவன். ஆனால் பெண்கள்...????

ஆண்டாள் மீதும் எப்போதும் சந்தேகம் மிகுந்ததுண்டு. அவள் பாசுரங்களை கண்ணன் என்று ஒரு படிமமாக வைத்துப் பாடியதால் தான் வெளி உலகுக்கு அறியப்பட்டாள் என்று கூடத் தோன்றும்

பெண்கள் தனித்து வாழ  உரிமை இல்லை. காலாகாலத்தில் திருமணம் நடக்க வேண்டும் இல்லாவிட்டால் நெருப்பை மடியில் கட்டி அலைகிறேன். பொண்ணு சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சாப் போச்சு, ( ஆக சிரிப்பதற்குக் கூட தடை)அடுக்கு மொழிகளின் ஊடாக இப்போது புது மொழிகளும் நிறைந்து காணப்படுகின்றன. சீறிவரும் பாம்பை நம்பினாலும் சிரித்து வரும் பெண்னை நம்பாதே என்று...உண்மையில் அப்படிப்பட்ட ஆட்டோக்களில் உலவும் வாசகங்களை உதிர்த்தோரிடத்திலும் செதுக்கியோரிடத்திலும் பாம்பைக்தொடுத்து தான் நம்பச் செய்யவேண்டும்( அப்போது தெரியும் அவர்கள் பாம்பை நம்புவார்களா என்று)

எந்தத் திரைப்படங்களை எடுத்தாலும் காதலித்தால் பெண்கள் ஏமாற்றி விடுவார்கள்..என்ற ரீதியில் இவர்கள் வயிற்ரில் குழந்தையைக் கொடுத்து விட்டு மறுதலிக்கும் காட்சிகளை எந்தப் பெண்ணும் படமாக்கத் துணியவில்லையே.பல படங்களில் வெளியில் படித்து பொதுக்கூட்டங்களுக்குப் போகும் பெண் பெரும்பாலும் குடும்பத்தைக் கவனியாதவளாகத் தான் காட்டப்படுகிறால். பல திரைப்படங்கள் படித்தாலே கர்வமாய் பேசுவதும், வேலைக்குப் போகும் பெண்கள் எல்லோரும் கர்வமாய் பேசுவதும் அகங்காரமாய் நடப்பதுமாகத்தான் காண்பிப்பார்கள். ஆனால் இயல்பில் வேலைக்குப் போகும் பெண்ணின் சம்பளம் ஏறும் ஏடிஎம் அட்டை கூட கணவர் தான் வைத்திருப்பார்.

இது போதாதென்று சின்னத்திரைகளிலும் பெண்கள் தான் அடுத்தவர் குடியைக் கெடுப்பார்கள் ,அடுத்த பெண்ணைக் கெடுப்பார்கள், நிறுவனத்தை ஒன்றுமில்லாமல் செய்து விடுவார்கள். இதை எந்தப்பெண்ணும் கேட்பதாய் இல்லை. இல்லை கேட்கத்திராணியின்றி விதியே என்று பார்த்துவிட்டு அகன்று விடுகிறாள்.

பெரும்பான்மையான பெண்கள் நகைக்கும், புடவைக்கும் அதிகமாக ஆசைப்படுபவர்களாகவும் பூ வைப்பதில் பெரும் பித்து பிடித்தவர்களாகவும் காட்டப்படுகிறார்கள்.ஆனால் நிஜத்தில் அந்தப் பெண்ணிற்கு எதற்குமே நேரம் இல்லை

எந்தக்குடும்பத்திலும் ஒரு பெண் நான் அந்த  ஆணைப் பார்த்தேன், ரசித்தேன், அவனுடைய திறமைகளை ரசித்தேன் என்று சொல்ல முடியாது. தனக்குப் பிடித்த நடிகனை, பாடகனை, ஆசிரியரை, தோழனை என்று எந்த ஆணையும் அவளால் சொல்ல முடியாது. ஆனால் ஒரு ஆணால் தைரியமாக தான் காதலித்தவளை தற்போது சைட் அடிப்பவளை என்று ஒரு பட்டியலே சொல்ல முடியும். ( சொல்கிறார்கள்)


இவையெல்லாம் ஆணாதிக்கச் சிந்தனை என்று சொன்னால் சில இடங்களில் நடக்கிறதே என்று சொல்கிறார்கள். எந்த இடம் அந்த சில இடம் என்று கேட்டால்? ஓடிவிடுவார்கள். ஆனால் பல இடங்களில் நடக்கும் பாலியல் வன்முறைகள் 60,6, என்று வயது வித்தியாசம் இன்றி நடக்கும் வன்புணர்வுகள், ஆசிட் வீச்சுகள் என்று பெண்கள் அடையும் துயரத்தை எந்த பால்வெளியில் பாகுபடுத்திப் பார்ப்பது என்று தெரியவில்லை.இவர்கள் தன் கன்னிமையை பறி கொடுத்தாலும் அமைதியாக அழுதுவிட்டு, தூக்கு, அல்லது அரளிவிதை, அல்லது வேறு யாருடனாவது திருமணம் செய்து கொண்டு வாழ்வது போன்ற வையை கடை பிடிக்க வேண்டும் என்று எண்ணுவோர்கள், பெண்கள் ஒரு ஆண் தன்னை ஏமாற்றி விட்டான் என்று சொல்லி வாதாட காவல் நிலையம் , நீதிமன்றம் சென்றால் அவதூறு ஏற்படுவது ஆண்களுக்கு அல்ல, பெண்களுக்குத்தான்

ஒரு பெண் சிறு குழந்தையிலேயே பாலியல் ரீதியாக துன்புறுத்துவதைக்கூட வெளியே சொன்னால் அவமானம் ஏற்படும் என்ற ரீதியில் தான் சமூகம் அவளை வளர்த்து வைத்துள்ளது. சில காலத்திற்கு முன் தன் பெண்ணை தானே ஆற்றில் போட்டு கொன்று விட்டு தன் மகள் ஆற்றில் குளிக்கப்போனபோது இறந்துவிட்டாள் எனச் சொல்ல , எப்படியோ பிணம் கிடைக்க , பல ஆண்டுகள் கழித்து ஆம் மானம் மரியாதை கருதி நான் தான் கொன்றேன் என்று ஒத்துக் கொண்டதாகச் செய்தி படித்தோம். தெரிந்து இந்த அப்பாவும், தெரியாமல் பல அப்பாக்களும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் இந்த சமூகத்தில்

சாதாரணமாக ஒரு பெண் விவாகரத்து கோரி விட்டாலே அவளைப்பற்றியான அபிப்பிராயங்களை அவளது அனுமதியின்றி சுற்றி சுழன்று விடுகின்றன. இன்னமும் கூட ஒரு மேலதிகாரியாக ஒரு பெண்ணும் கீழ் பணிபுரிபவர்கள் ஆணாக இருக்கும் பட்சத்தில் அவளுடைய எந்த ஒரு சாதாரண் உத்தரவும் நியாயமாகவே இருந்தாலும் அது நிராகரிக்கப்படும். மறுதலிக்கப்படும். அதற்கு என்ன என்ன தீமைகள் இருக்கும் என்று அலசி ஆராயப்பட்டு அது முதலில் பரப்பப்படும். அதுவும் அவர்களின் வசதிகளைக் குறைப்பது போல் அமைந்தால் அவளுடைய நடத்தையின் மீது சந்தேகம் போல் பேசுவது தான் ஆகக் கொடுமையானது.

இங்கே ஒரு ஆணைத் திட்ட வேண்டும் என்றால் அவன் அம்மாவின் மீது உள்ள நடத்தையையும் அவன் தங்கை நடந்து கொள்ளும் நடத்தையும் தான் கணக்க்கில் கொள்ளப்படுகிறது. அவன் எப்படிப் போனாலும் இந்த சமூகத்திற்கு அக்கறையில்லை.

விவாகரத்து பெற்ற பெண்கள் ராட்சசிகளாகவும். குடும்பம் நடத்த லாயக்கற்றவர்களாகவும், மதிக்காதவர்களாகவுமே சித்தரிக்கப்படுகிறது. அதே சமயத்தில் விவாகரத்து பெற்ற ஆண்மகன் ஏதும் தெரியாதவனாக அப்பாவியாக தெரிவதும் இவர்கள் கண்களின் மாறுபாடுகள் தான்.

விதவை என்று சொல்லாதே கைம்பெண் என்று சொல் ஒன்றுக்கு இரண்டு பொட்டு வரும் என்று அங்கலாய்க்கும் அவர்களுக்கு மூன்று பெண்டாட்டிகள். ஆனால் அந்த விதவைக்கு மறுமணம் என்று சிந்திக்காமல் அந்த சொல்லை மாற்றி வெற்று சொல்லுக்கு பொட்டு வைப்பதில் தான் பெருமிதம் அடைகிறார்கள்.


பெண்களைச் சார்ந்து, பெண்களின் மூலம், பெண்களுடன் ஆண்கள் இருந்தாலும் அவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களுக்கு ஒரு நியாயமும் அடுத்த வீட்டுப் பெண்ணுக்கு ஒரு நியாயமாகவும் தான் நடந்து கொள்வார்கள்.

ஆனால் பெண்கள் எதனையும் தங்கள் கவனத்தில் கொள்வதில்லை. சுயபச்சாதாபம், கழிவிரக்கம், கொண்டு அழாமல், அறிவால், ஆற்றலால், தன் திறமையை மேம்படுத்தி முன்னேற வேண்டும் என்பதே அனைத்துப் பெண்களுக்கும் முன் உதாரணமாக அமையும் என்பதோடு தம்தமது வாழ்வும் மேம்படும்



Image result for pencil drawing women working




புராணகாலமும் நவீனகாலமும்....


..புராணக்காலமும் நவீனகாலமும்எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 3.பெண்கள் முன்னேற்றம்



புராண காலமும் நவீனயுகமும்
********************************

     நளன் என்றொரு மன்னன் மகாராஜா என்றும் சமையல் கலையில் வல்லுநன் என்றும் வர்ணிக்கப்படுபவன். நட்டநிசியில் , அடர்காட்டில், தன் மனைவியான தமயந்தியை விட்டு நீங்கி வேறு நாட்டிற்குச் சென்று விடுவான். (அவள் பத்திரமாக தன் தந்தையை சேர வேண்டும் என்று சாமியிடம் வேண்டி விட்டானாம்) இத்தனைக்கும் அவர்கள் குழந்தைகளை தன் அம்மா, அப்பாவின் அரண்மனைக்கு அனுப்பி வைத்திருப்பாள். இவனுடனேயே போகவேண்டும் என்ற கட்டாயத்தால் அல்ல. மனம் நிறைந்த காதலால்...இவனுடன் பயணிக்க எண்ணியதால் தன் குழந்தைகள் துன்புறும் என்று இவன் அச்சம் கொள்ளக்கூடாதென்றும் மனம் வருந்தக்கூடாதென்றும் அவள் தன் விருப்பமின்றி அது போல் செய்தும் அவன் நடுக்காட்டில் விட்டுச் சென்று விடுவான்

     ராமனைப்போல எந்த மன்னனாலும் ஆட்சி செய்ய முடியாது என்று சொல்லி அவனைக் கடவுளாகவே கொண்டாடுகிறார்கள். ( அவன் மனிதனாய்ப் பிறந்து மன்னனாகி மக்களால் கடவுளாக ஆக்கப்பட்டானா? அல்லது கடவுளின் அவதாரமா? என்ற பட்டிமன்றம் இங்கே தேவை இல்லை.)ஆனால் அவனும் தன் மனைவியை கர்ப்ப காலத்தில் காட்டில் விடுகிறான். பிறகு தன் குழந்தைகளால் இணைந்த பின்னும் ஒரு துணி துவைக்கும் தொழிலாளி பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதால் மீண்டும் வனவாசம் அனுப்புகிறான். ஆனால் அவளோ இராவணனிடம் சிறைபட்ட போது இவளாக தப்பிக்கும் தைரியம் அனைத்தும் இருந்தும் அவன் வில்லின் மகிமைக்கு  ”மாசு “ என்று நினைத்து வீசுகிறாள்.

     அடுத்து அகலிகை...இரவு நேரமா/ விடியும் நேரமா என்று தெரியாத ஆனால் முக்காலமும் உணர்ந்த கௌசிக முனிவன் இரவு வேளையில் சேவல் கூவ அது இறைவனைத் துதிக்கும் நேரம் என்று நினைத்து போகும் முனிவன் , வந்திருப்பது கணவனா? அல்லது கணவன் வடிவில் இருக்கும் இந்திரனா எனத் தெரியாமல் (அதுவும் தூக்கக் கலக்கத்தில்) கூடியதால் கல்லாக்கப்பட்டாள் அகலிகை. அகன்று சென்றவருக்கு இல்லாத தண்டனை வீட்டிலிருந்தவளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ( நல்ல வேளை கல்லானாள். மனுசியாய் நீடித்திருந்தால் இவர்களின் வார்த்தை சவுக்கடிகளில் அழுகி நாறிப் போயிருப்பாள்.)
   
     தானே அழுகிக் கொழுகொழுத்த நிலையில் , அதுவும் நடக்கக்கூட இயலாமல் கூடையில் சுமந்து செல்லக்கூடிய நிலையில் இருந்து கொண்டு தான் வேறு ஒரு பெண்ணுடன் கூடிக்களிக்க வேண்டும் என்று அந்த முனிவன் சொன்னதும் சுமந்து சென்று விட்டாளாம் நளாயினி ..அதே நிலையில் நளாயினி இருக்க தான் வேறு ஒருவனுடன் கூட தன் கணவனைக்கேட்டிருந்தால்,,அவனைக் கற்பரசன் என்று ஏற்றுக் கொள்வார்களா? ஆனால் இங்கே அவனைப் போற்றுவது விடுத்து பெண்ணைத் தூற்றுவதில் தொடங்குவார்கள்.
     இன்னமும் கூட வைணவக் கோயில்களில் மற்ற ஆழ்வார்களின் பாடல்கள் ஒலிக்கும் அளவுக்கு ஆண்டாள் பாடல்கள் ஒலிப்பதில்லை. ஆடிமாதம் பூர நட்சத்திரமான அவள் பிறந்தநாள் என்பதால் போனால் போகிறதென்று ஒலிபரப்புவார்கள். அதுவும் திவ்யப்பிரபந்தம் நாலாயிரம் பாடல்களும் ஒருநாளைக்கு 400 பாடல்கள் வீதம் ஒலிபரப்ப வேண்டும் கட்டாயத்திற்காக மட்டுமே. அதுவும் “வாரணம் ஆயிரம்” என்று தொடங்கும் கனவுப் பாடல்கள் நீங்கலாக... ஒரு பெண் பக்தி மார்க்கத்தில் இருந்தாலும் அவளின் பக்தியைக் கூட அங்கீகரிக்க வில்லை இந்த் சமுதாயம். திருப்பாவைக்கு தரும் முக்கியத்துவத்தை நாச்சியார் திருமொழிக்குத் தரப்படவில்லை என்பதே மிகப்பெரிய கொடுமை.

     அரிச்சந்திரன்...சத்தியம், நேர்மை என்று அவனைத் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். ஆனால் தன் நேர்மைக்கு தன்னை பலியிட்டுக் கொள்வது தானே ? ஆனால் மனைவியை அடிமையாய் விற்ற அவன் உண்மை ஏன் பாராட்டப்பட்ட அளவில் அவள் அதன் பின் எவ்வளவு கொடுமைகளைச் சந்திருப்பாள் என்று என்றேனும் சிந்தித்துப் பார்த்ததுண்டா?

அச்சியத்தை மகள் நாகையார், ஔவையார்,அள்ளுரர் நன்முல்லை,ஆதிமந்தி - ,இளவெயினி - புறம் 157,உப்பை ஃ உறுவை,ஒக்கூர் மாசாத்தியார்,கரீனா கண்கணையார்,கவியரசி,கழார் கீரன் எயிற்றியார்,கள்ளில் ஆத்திரையனார்,காக்கை,பாடினியார் நச்செள்ளையார்,காமக்கணிப் பசலையார்,காரைக்காலம்மையார்,காவற்பெண்டு,காவற்பெண்டு,கிழார் கீரனெயிற்றியார்,குட புலவியனார்,குமிழிநாழல் நாப்பசலையார்,குமுழி ஞாழல் ,ப்பசையார்,குறமகள் ஃ இளவெயினி,குறமகள் ஃ குறிஎயினி,குற மகள் இளவெயினியார்,கூகைக்கோழியார்,தமிழறியும் பெருமாள்,தாயங்கண்ணி - புறம் 250,நக்கண்ணையார்,நல்லிசைப் புலமை மெல்லியார்,நல்வெள்ளியார்,நெட்டிமையார்,நெடும்பல்லியத்தை,பசலையார்,பாரிமகளிர்,பூ,கண்ணுத்திரையார்,பூங்கண் உத்திரையார்,பூதபாண்டியன் தேவியார்,பெண்மணிப் பூதியார்,பெருங்கோப்பெண்டு,பேய்மகள் இளவெயினி,பேயனார்,பேரெயென் முறுவலார்,பொத்தியார்,பொன்மணியார்,பொன்முடியார்,போந்தலைப் பசலையார்,மதுவோலைக் கடையத்தார்,மாற்பித்தியார்,மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி,மாறோக்கத்து நாப்பசலையார்,முள்ளியூர் பூதியார்,முன்னியூப் பூதியார்,வரதுங்க ,மன் ,வியார்,வருமுலையாருத்தி,வில்லிபுத்தூர்க் கோதையார்,வெண்ணிக் குயத்தியாரவெள்ளி ,தியார்,வெறிபாடிய காமக்கினியார்.என்று இத்தனை புலவர்கள் இருந்தாலும் ஆண் புலவர்கள் அளவுக்கு பெண் புலவர்கள் பெயர்கள் பிரசித்தி பெறவில்லை. என்பதே உண்மை.

    சுதந்திரப்போராட்டக் காலத்திலும் அவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தாலும் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு கூட்டங்கள், பொம்மலாட்டம், விவாதங்கள், கருத்தரங்கம், போன்றவைகலை நிகழ்த்தி மக்களிடையே புரட்சியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியதோடு, 47 நாளிதழ், வார, மாத, இதழ்கள் நடத்தி வந்தனர் என்பது தான் வியக்கத்தக்க செய்தியாக இருக்கிறது.ஆனால் அவையெல்லாம் ஆண்களின் தியாக மனப்பானமைக்கு எதிரில் மறைக்கப்பட்டு விட்டன. 

     சரிதான். அவைதான் அப்படியென்றால் கட்டிடக்கலை, மருத்துவவசதி, சாலை போக்குவரத்து, என்று இன்றைய நாள் சிந்தனை போல் அன்றைய நாளிலேயே சிந்தித்து ராஜராஜனுக்கு அமைத்துக் கொடுத்ததோடு பெண்கள் படிக்க வேண்டும் என்று கல்விசாலை அமைத்து தானே ஆசிரியை ஆகி 500 ஆண்கள் படித்த போது 400 பெண்களையும் படிக்க வைத்து, தன் தம்பிக்கு ஆலோசனை வழங்கி, மேம்பாடு அடைய வைத்து, அவள் தம்பி அருண்மொழிவர்மனை ராஜராஜன் எனப்பெயரிட்டுசோழர்களின் காலம் பொற்காலமாய் மலர வைத்த குந்தவை நாச்சியாரை மறந்து ராஜராஜனைத்தானே கொண்டாடுகிறோம்?? இது வரலாற்றுப் பிழையில்லையா?

    முதற்கற்பு, இடைக்கற்பு, கடைக்கற்பு, கணவன் இறந்தவுடன் இறந்தாள் பாண்டிய அரசி. எனவே அவள் முதல் நிலை கற்பரசி. அவன் இறப்பிற்கு நியாயம் கேட்டு இறந்தாள் கண்ணகி.அவள் இடைக்கற்பரசி..கணவன் இறந்தும் வாழ்ந்தால் அவள் கடைக் கற்பரசியாம்..ஆண்களில் உண்டா? கேட்டவுடன் இறப்பதும், நியாயம் கேட்டு இறப்பதும், மறுமணம் வேண்டுமானால் உண்டு. அதுவும் பலமுறை.

     சங்ககாலம், இடைக்காலம், கடைக்காலம், என்று எல்லாக் காலங்களிலும் பெண்களின் எழுத்தும் பேச்சும் அறிவும், திறனும், ஆற்றலும் முடக்கப்பட்டும், அடக்கப்பட்டும், தான் வந்துள்ளது.

     பெண்களுக்கு முழு சுதந்திரமும் அளிக்கப்பட்டு விட்டதாக நம்பப்படும் இந்த காலத்தில் தான் தன்னை காதலிக்க வில்லை என்ற காரணத்தினால் திராவகவீச்சு நடக்கிறது. வன்புணர்வுகளும், பாலியல் ரீதியான கொடுமைகளும் வன்முறைகளும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. எது வந்தால் என்ன என்று பெண்களும் தங்களுக்கு கொடுத்த வாய்ப்பைப்பயன்படுத்திக் கொள்ள , பள்ளி, கல்லூரிகளில் முதன்மை பெறுவது, ஐ.ஏ.எஸ்.ஐ.பி.எஸ்.,வங்கித்தேர்வு, என்று பொதுத்தேர்வுகளிலும் முதன்மை பெறுவதும் நடந்துகொண்டே தான் இருக்கிறது.

     அதோடு இன்னும் வாய் ஓயாமல் விவாகரத்து பெற்ற பெண்களை அவர்கள் நடத்தை குறித்து பேசி, ஏசி, சீண்டுவதும், அவர்களுக்கு எதிராக, பெண்களையே பேச வைக்க என்றே கொம்பு சீவி விடுவதும் நடக்கத்தான் செய்கிறது.

     கணவனை இழந்தாலும் சரி பிரிந்தாலும் சரி, இங்கு தாக்கப்படுபவள் பெண்ணாக மட்டுமே இருக்கிறாள். 

     இவைகள் எல்லாவற்றையும் விட படைப்பாற்றல் திறனில் பெண்ணின் எழுத்துக்கள் எல்லாம் அவளின் அனுபவம் சார்ந்ததாகவும் ஆணின் எழுத்துக்கள் அவனின் கற்பனைத்திறன்  ஆற்றல் என்றுமே கணிக்கப்படுகின்றன். சமூகத்தில் நடக்கும் அவலங்களை ஒரு பெண் தான் பங்கேற்கும் மேடையில் குறிப்பிட்டுப் பேசினாலும் கூட அவள் குடும்பம் பற்றியும் அங்கு நடப்பவை பற்றியும் மூக்கை நுழைத்து நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு கொச்சையாகவும், பச்சையாகவும் பேசுவது தொடர்கிறது. இதையே ஆண் எழுதினால் அடடா!!அடடா!! என்று பாராட்டு மழைதான்.

     மருத்துவமனையில் கூட பெண் குழந்தை பிறந்தால் சுமாரான கொண்டாட்டங்களும் ஆண்குழந்தை பிறந்தால் வாரிசு என்றும் கூத்திடும் அவலத்தை மறுப்பதற்கில்லை.

     இன்னமும் கூட பட்டிமன்றங்கள், கருத்தரங்கம், விழிப்புணர்வுக் கூட்டங்கள், கவியரங்கங்கள், போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் ஆண்களின் சதவீதம் அதிகமாகவும் பெண்களின் சதவீதம் குறைவாகவும் தான் இருக்கிறது. என்பதையும் எவரும் மறுக்க இயலாது. 

    மேடையில் வாதிடும் பெண்களுக்குச் சாதகமாக கூச்சல் போடுபவர்களும் கூட அத்தகைய கூட்டங்களுக்கு தங்கள் பெண்கலை அழைத்து வருவதில்லை. கோவிலுக்கு அதிகமாகப் போகும் பெண்களும் ஏனோ பொதுக்கூட்டங்கள் வருவதை விரும்புவதில்லை, போலவே நடந்துகொள்கின்றனர்.

     தங்களைத்தாங்களே சிங்கம் என்றும், புலி என்றும், சிறுத்தை என்றும், வர்ணித்துக் கொள்கிறார்கள். உண்மையில் அவர்களுக்குள் இன்னமும் அந்த மிருகத்தன்மை மீதமிருப்பதைத்தான் அது காட்டுகிறது, 

     எஞ்சியிருப்பவர்கள் இப்படி பொதுக்கூட்டங்களுக்கு வரும் பெண்களை அறிவு சார்ந்து பார்க்காமல் அவள் உடல்சார்ந்து பார்ப்பதாலும் பெண்ணை எப்போதும் குடும்பத்துடன் ஒப்பிட்டே எண்ணுவதாலும், வெளியே வந்தாலும் மேடையில் பேசவோ, எதிர்த்து செயல்படவோ, எதிர்பது மாதிரி நடிக்கக் கூடத்தயங்குகிறார்கள் பெண்கள். 

    இப்போது நவீனப் பட்டிமன்றங்களில் ஆண்களே பெண்களை இழிவுபடுத்துவது போதாது என்று பெண்கள் தங்களைத்தாங்களே நகைச்சுவைஎன்ற பெயரில் அசிங்கத்தின் அலறல்கள் தான் அரங்கேறுகின்றன.
     ஒரு பெண்ணுக்கான பேச்சை, எழுத்தை, நடைமுறையை ஒரு ஆண் தீர்மானிக்கவும் ஆண் நிர்ணயம் செய்யவுமே பெரும்பான்மை வாழ்வைக் கடத்துகிறார்கள் பெண்கள்.

     ஒரு சிலர் தான் அவர்களுக்கான இலக்கை, அவர்களுக்கான பயணத்தை, அவர்களே திட்டமிடுகிறார்கள். அந்தப் பயணமும் இலக்கும் வெற்றி பெறுமோ என்ற பயத்தில் அவளின் நடத்தையின் மீது பழி சுமத்தி, அமுக்கி, அழவைத்து, முடக்கப்பார்க்கிறது சமூகம். ஆனாலும் பெண் இதெல்லாம் கடந்து, நடந்து, வருவாள். ஆம்
     கடந்தகாலங்களீல் அழிந்தது போதும்
      நடந்த காலங்களில் ஒழிந்தது போதும்
      இனி நடக்கும் காலங்கள் 
      நமது காலங்கள் என்று 


தனக்கான கோலத்தை தானே நிர்ணயம் செய்து இமயத்தை எட்டுவாள்` 

அந்த நாள் வெகுதூரம் இல்லை.

Image result for pencil drawings love ladies

Tuesday, January 20, 2015

கனவுக் காட்சிகள் (தீபம் இதழில் எனது தொடர்)


கனவுகள்

கனவுகள்....இதைப்பற்றி பலரும் பலவிதமான  கருத்துக்களை தங்களுக்குத் தோன்றிய விதத்தில் கூறியிருக்கின்றனர். ஆனால் அதற்கென்று ஒரு விதி, வரைமுறை, வரையறை போன்றவை  அறவே இல்லை.
வரலாற்றில் பார்த்தோமானால், பாபிலோனியர்கள் தெய்வத்திடமிருந்து வரும் செய்திகளே கனவுகள் என்றனர். எகிப்தியர்கள் கடவுளின் செய்தியாகக் கருதினர். ஆசியர்கள் எதிர்காலத்தை எடுத்துரைக்கும் வழி என்றார்கள். கிரேக்கர்கள் நோய் போன்றவற்றுக்குத் தீர்வு தரும் ஆய்வு எனப் பார்த்தார்கள். ஜப்பானியர்களோ தெய்வத்தின் ஆசிகள் என்றே கூறினர்.
கனவுகளைப் பற்றிய கருத்துகள் இவை என்றால்கனவுகள் எப்போது ஏற்படுகின்றன  என்பது பற்றியும் பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. கனவுகள் தூங்கியபின் 30 முதல் 90 நிமிடங்களுக்குப் பிறகே வரும் என்றும், அப்போது அட்ரீனலின் ஹார்மோன் அளவு அதிகமாகும் என்றும் ஆய்வுகள் சொல்கிறது.
சிக்மெண்ட் ஃப்ராய்டு எழுதிய இண்டெர்ப்ரெடேஷன் ஆஃப் டிரீம்ஸ் ( interpretation of dreams)ம் , ஆல்பிரட் ஆட்லர் மற்றும் கார்ல் ஜங்க் எழுதிய நூல்களும், கனவுகள் எவ்வளவு ஒன்றியிருக்கிறது என்பதற்கான அடையாளங்கள்.
1321 ல் காலமான பிரபல எழுத்தாளர் தாந்தோ டிவைன் என்ற காமெடி நூலை எழுதிவிட்டு இறந்து போனார். மகன் ஜாகப்போ வறுமையால் வாடிய போது கனவில் தொன்றி அந்த நூல் உள்ள இடத்தைக்கூறி இன்னாரிடம் கொடுத்து பணம் பெற்று வாழ் என்று கூறியதாகவும் அதன் பின் “ஜாகபோ” நினைத்துப் பார்க்க இயலாத அளவு உயர்ந்ததாகவும் உண்மைக்கதை இருக்கிறது.
கம்பர் நடந்து வந்து கொண்டிருந்த போது ஒரு கூர்மையான ஆயுதத்தால் நிலத்தைப் பண்படுத்திக் கொண்டிருக்கும் உழவனைப் பார்த்து விட்டு வரும் வழியெல்லாம் இதென்ன கருவி என்று குழம்பிப் போய் வீடு வந்தாராம் . அப்போதுதூங்கிக் கொண்டிருந்த மகன் அம்பிகாபதி , அந்தக் கருவியின் பெயர் கோடரி என்று சொல்லிவிட்டு மீண்டும் தூங்கினார் என்றும் ஒரு செய்தி உண்டு.
நமது இந்தியாவில் அமானுஷ்யம் கலந்து பல கனவுக்கதைகள் உலவினாலும், கனவுகளின் பலன்கள் பற்றி அறிவிப்பதும் தெரிவிப்பதும் பெரும்பாலும் ஒன்றாகவே காணப்படுகிறது. ஆலயம், அரண்மனை, கிளி, வாழை இலை, பிறரை அலங்கரித்தல் . நிலவு, விவசாயி உழுதல், வானவில், சிறுகுழந்தை, பாம்புகடித்து ரத்தம் வருவது போன்றவை நல்ல கனவுகள் அதாவது உடனடியாக நமக்கு நன்மைகள் வருகிரது என்று அறிவிக்கக் கூடிய கனவுகள் என்றும் பூனை, தேனி, எறும்பு, எலி, குடி, பசு விரட்டுதல், புயல், குதிரை விழுதல் போன்ற தீக்கனவுகள் என்றும் கூறப்படுகிரது.
பொதுவாக இரவு 6 முதல் 8 வரை கனவு வந்தால் 1 வருடத்திலும்,  8 முதல் 10 மணிவரை வந்தால் 3 மாதத்திலும், 10 முதல் 1 மணிக்குள் காணும் கனவுகள் ஒரு மாதத்திலும்,  1 முதல் 3 என்றால் 10 தினங்களிலும், 3 முதல் 6 மணிக்குள் கண்ட கனவுகள் உடனேயும் பலிதமாகும்  என்கிறார்கள் . அதேசமயம், பகலிலே கனவு வந்தால் பலிக்கவே பலிக்காது என்று சத்தியம் செய்கிறார்கள்
காசி நகர் புலவர் பேசும் உரையை காஞ்சியில் கேட்க வேண்டும் என்று பாரதி கூறியதும் ஒரு அழகிய எதிர்காலக்கனவு. பட்டனைத் தட்டி விட்டா தட்டுல ரெண்டு இட்டலியும் பக்கத்துல காப்பியும் வந்துடணும் என்ற கலைவாணரின் கனவு, வெகு சீக்கிரம் பலிக்கக்கூடிய  ஒன்றாகவே தெரிகிறது. பட்டனைத் தட்டினால், இப்போது காபி வருவதைப் பார்க்கிறோம். அடுத்து இட்டலியும் வரக்கூடும்.
 அணுவைத் துளைத்து எழுகடலைப் புகட்டி...’ என்ற ஔவையின் கனவு பிரமிப்பூட்டக் கூடியது. அணுவைக் கண்டேபிடித்திராத நாளில், அதை துளைக்க நினத்தது மட்டுமல்ல; அதற்குள் எழுகடலை நிரப்பப் பார்த்தாளே... அது ராட்சஸக் கனவு.
அந்த அணுவை நூறு துண்டுகளாக்கி , அநதப் பரமாணுக்கு கோண்என்று நாமகரணம் செய்வித்த கம்பனையும் இங்கே நினைவுகூர வேண்டியிருக்கிறது.வாழும் முறையைப் பற்றி பல்வேறு அதிகாரங்களை அடுக்கிய வள்ளுவனையும் கனவு விட்டுவிடவில்லை. தன் பங்குக்கு அவனும் கனவு நிலையுரைத்தல் என்றொரு அதிகாரத்தை வழங்கியிருக்கிறான்.
 திரைப்படங்களில் பல வெள்ளை உடை தேவதைகளின் நடுவே தலைவனும் தலைவியும் நடனமாடுவதே மக்களுக்கு பிடித்த கனவுகள். பென்சீனின் வடிவம் கனவில் உணரப்பட்டதுதான் என்பதையும் அறிவியல் வழியாகவே அறிகிறோம்.
கனவு சார்ந்தே ஜோதிடவியல், உளவியல், அறிவியல், புவியியல், வானவியல், குவாண்டம் இயற்பியல்...என்று பல இயல்கள் உருவானதும் கனவுகளுக்குக் கிடைத்த மேன்மை. ‘ தூங்கும் போது வருவதல்ல கனவு நம்மைத் தூங்க விடாமல் செய்வதே கனவுஎன்றார் மேதகு ஏ.பி.ஜே.அப்துல்கலாம்
சரி; கனவுகள்  எப்படி வரும்? வண்ணமயமாக வருமா? என்பதெல்லாம் ஆய்வுக்குட்பட்டது. ஆனால், கனவுகள் வாழ்வை வண்ணமயமாக்கும் என்பது மட்டும் உண்மை.
ஆக்கல், காத்தல், அழித்தல் என கனவுகளுக்கு  பல பரிமாணங்கள் உண்டென்றாலும், எதிர்மறைக் கனவுகளுலும் நேர்மறைப் பலன்கள் சொல்லி நம்மை ஆற்றுப்படுத்தியதென்னவோ உண்மை

அப்படி ஒருவரின் எதிர்மறைக்கனவு , இன்னொருவருக்கு நேர்மறைகனவு ஆகிவிடுகிறது. அது எப்படி  சாத்தியம்? அதை அடுத்த இதழில்.