Showing posts with label வெண்பா. Show all posts
Showing posts with label வெண்பா. Show all posts

Thursday, January 9, 2014

வெண்பா ( ஒழுகிசைச் செப்பல்)

விடுகின்ற மூச்செல்லாம் முத்தமிழில் ஆழ
சுடுகின்ற பேச்செல்லாம் நன்றாய்க் குளிர
விரிக்கின்ற கன்னல் கலைநீயே என்றும்
சிரிக்கின்ற செந்தமிழே பேசு
*******************************

வெண்பா (ஒழுகிசைச் செப்பல்)

விண்ணில் அலைந்திடும் கோள்கள் அனைத்துமே
பெண்ணென்றன் பாடல்கள் கேட்டுயர வேண்டுமே
மண்ணில் விளைந்திடும் எவ்வுயிரும் என்றனது
பண்ணில் சிறக்க விடு
**********************************

வெண்பா (ஒழுகிசைச் செப்பல்)

அருளின் வடிவமாக அன்பிற் பொதிந்த
கருணை நிறைந்த பராசக்தித் தாயே
வளமாய்க் கவிதை புனைந்து நிறைவாய்
உளத்தில் தருவாய் உயர்வு
********************************

Tuesday, January 7, 2014

வெண்பா (இயற்சீர் வெண்டளை)

சீர்மிகும் செல்வமே! சிந்தனைத் தெய்வமே!
தேர்வரு போலவே தெய்வதம் நீயலோ
பாரெலாம் வென்றே பரந்து விரிந்தனை
சீர்செய்து தமிழே வியந்து!

வெண்பா (வெண்சீர் வெண்டளை)

சொல்லுகின்ற சொல் எல்லாம் வெல்லமென நிற்பவளே
வெல்லுகின்ற வாழ்வினிலே பாகாகத் தோன்றுகிறாய்!
கல்லதுவும் உன் பெருமை பாடியேதேன் சொட்டிடுதே
வல்லியளே நீயன்றோ வான்!