தப்பட்டை முழங்கட்டும் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை..(மரபு)(எண்சீர் விருத்தம்)எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்
“வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது
வகை 5 மரபுக்கவிதை
தப்பட்டை முழங்கட்டும்
******************************
பொலிவுற்ற மரபுதனில் திகழ்ந்த நாடு
பொதுவுடமை கொள்கையாலும் நிறைந்த நாடு
வலியுற்று போவதற்கோ சொல்க தோழா
வலிமைபெற்று வாழ்வதற்கே மாற்று நீயே
மலிவுற்று போனது தான் ஊழல் எங்கும்
மறமையெல்லாம் சேர்த்து வைத்து வெல்க இன்றே
கலியென்று சொல்வோர்கள் சோர்ந்து போக
கலசமென உயர்த்தயென வருக நன்றாய்
இனிக்கட்டும் செழிக்கட்டும் நமது நாடு
இதழ்முட்ட புகழட்டும் நமது மேன்மை
கனியட்டும் கதைக்கட்டும் புதிய பாதை
காவென்றே விரியட்டும் எட்டுதிக்கும்
குனியட்டும் குறுகட்டும் ஊழல் மாந்தர்
குறைத்திடுவோம் விரட்டிடுவோம் நாடுவிட்டே
பனியெல்லாம் அகலட்டும் பகலவன் உதிக்க
பாதைதன்னை சமைத்திடுவோம் வருக தோழா
சிமிழுக்குள் அடங்கிடுமா தமிழும் தானும்
சிகரத்தை எட்டவைப்போம் பாடுபட்டு
உமிழ்ந்திடுவோம் உழைப்பற்றோர் ஒதுங்கத்தானும்
உரைத்திடுவோம் உழைத்திடுவோம் நாடுமுட்ட
குமிழென்றே சொன்னோர்தான் குன்றிடவே
குவலயத்தை தொட்டுவிட்டு ஏடுகட்டி
தமிழ் என்றும் உயர்ந்ததுதான் பாரே சொல்ல
தப்பட்டை அடித்திங்கே கும்மிசெய்வோம்
*************************************************
பின்குறிப்பு... இந்த இந்தியநாடு பல பொழிவுகளைப் பெற்றது. அது வலிமை பெற்று வாழ வேண்டும். ஆனால் வலிகள் மிகுந்து காணப்படுகிறது..நம்மால் என்ன செயலும் என்று இல்லாமல் நம்மால் முடியும் என்று சொல்லி செயல்பட்டால் முடியும். தமிழ் மொழியை பலர் சாதாரண குமிழ் என்று சொன்னார்கள். அவர்கள் தலை குனியுமாறு நம் உழைப்பு இருக்க வேண்டும். இதழ் முட்ட..அனைத்து வாய்களும் ஓயாமல் புகழ வேண்டும்..கா...காடு போன்று விரியவேண்டும் நமது பாதைகள்...கட்டற்று...தப்பட்டை அடித்து அதை முழங்க வேண்டும் என்று சொன்னது..தப்பட்டை என்பது அடித்தட்டு மக்களின் எளிய கருவி ,,மாற்றம் அங்கிருந்து உருவானால் தான் அது வெற்றி பெரும் அதோடு கும்மி அடிப்பது பெண்களின் மரபு எனவே அவர்கள் கும்மி அடிக்க ஆண்கள் தப்பட்டை அடிக்க இருவரும் சேர்ந்து உழைத்தால் நாடு முன்னேறும் என்று சொல்லப்பட்டுள்ளது..அதனால் தான் தலைப்பும் முழங்கட்டும் என்றே கொடுத்துள்ளேன்...முழங்குதல் என்னும் சொல் வெற்றியின் நிமித்தம் சொல்வது நமது மரபு``````நன்றி

சிங்கமொன்று புறப்பட்டதே.....
ReplyDeleteஅப்படியே தான்
Deleteநன்றி அய்யா
ReplyDeleteசிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சுரேஷ் அய்யா
Deleteமரியாதைக்குரியவரே,
ReplyDeleteவணக்கம். தங்களது படைப்பு சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
என அன்புடன்,
C.பரமேஸ்வரன்,
http://konguthendral.blogspot.com
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்-638402
வணக்கம் மிகவும் மகிழ்வாக இருக்கிறது . உங்கள் தளம் வருகிறேன். உங்கள் அன்புக்கு நன்றி...(பயமா இருக்கு...மரியாதைக்குரியவரேஏஏஏஏஏஏஎ.....நியாயமாரேஏஏஏஏஏ)
Deleteசிமிழுக்குள் அடங்கிடுமா தமிழும் தானும்
ReplyDeleteசிகரத்தை எட்டவைப்போம் பாடுபட்டு - அருமையான வரிகள். பாராட்டுக்கள் சுவாதி. போட்டியில் வெல்ல வாழ்த்துகிறேன்!
போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள் கவிஞரே,,
ReplyDeleteஅழகிய பா வரிகள்.