Showing posts with label ஹைகூ. Show all posts
Showing posts with label ஹைகூ. Show all posts

Thursday, September 18, 2014

ஹைகூ

மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள்
நான் பேசவே வேண்டாம்
என நினைத்தவர்கள்
**********************************

Thursday, July 31, 2014

சம்பளத்தேதி(ஹைகூ)

கை நிறைய பணம்
மனம் நிறைய மகிழ்வு
சம்பளத்தேதி
*********************************************

Wednesday, July 30, 2014

மனக்காயம் (ஹைகூ)

எந்த மருத்துவன் இருக்கிறான்
என்
மனக்காயம் ஆற்ற
****************************************

Monday, July 28, 2014

ஹைகூ

சிலைகளில் எச்சமிட்டு
எச்சரித்தது காக்கைகள்
திருந்தவில்லை தலைவர்கள்
***********************************

Sunday, July 27, 2014

ஹைகூ

நினைவஞ்சலி வரும் வரை
 நேரம்மிருக்கவில்லை
 இறந்தவனை நினைக்க
*************************************

Monday, July 14, 2014

ஹைகூ

எந்த இருட்டுக்கும் தைரியமில்லை
விடியலை
நிறுத்திவிட
*********************************************

Sunday, July 6, 2014

ஹைகூ

எப்படிப் பயின்றும்
சில தவறுகளில் குழைகிறது
வாழ்க்கை
**************************

Saturday, July 5, 2014

ஹைகூ

காதலும் காதலின் நிமித்தமுமாய்
இருந்த வாழ்க்கை
பணமும் பணத்தின் நிமித்தமுமாய்
******************************************

ஹைகூ

பிச்சைகாரனின் குரல்
கேட்காத காதுக்கு கேட்கிறது
மந்திரியின் குரல்
*************************************


விலைக்கு வாங்கிய அரிசியில்
பொங்கல்
விவசாயின் வீடு
******************************



ஓசோன் ஓட்டை நினைத்து
தினம் அழுகிறது வானம்
மழை
**************************************

Sunday, June 29, 2014

ஹைக்கூ

புகைப்படங்கள்
சொல்வதில்லை
பொய்களை
****************************


எல்லா நேரமும் கரைகிறது
உபயோகத்துடனோ
உபயோகமின்றியோ
**************************************


கோயில்களால் நிறைந்திருக்கும்
ஊர்
கல்லான மனிதர்கள்
**************************************************

Sunday, June 15, 2014

ஹைக்கூ

இன்று அமாவாசையாமே
எப்படி தனித்து நிற்கும்?
என் தோட்டத்து ரோஜாச்செடி?
**********************************************

என்ன சொல்கிறாய்
மரமே?
தலையை தலையை ஆட்டி
*************************************

கல் கோயிலானது
நம்பிக்கை.
மனம் கல்லாகிறது????
*************************************

Saturday, June 14, 2014

ஹைகூ

அலுவலகப் பொதிச்சுமை இல்லாமல்
இரைதேடி கூடுதிரும்பும்
குருவிகள்
*********************************

பறவைகளே! விலங்குகளே
கவனம்! கவனம்!
எங்கும் அசைவ மனிதர்கள்
************************************

துவைக்காமல் மாற்றாமல்
அதே புடவையிலும் அழகுதான்
பட்டாம்பூச்சி
*****************************************

Wednesday, June 11, 2014

ஹைகூ

விதைத்த மறுநாளே
வேறு இடத்தில் நடுகிறார்கள்
காப்பகங்களில் குழந்தைகள்
***********************************


எனது லோனைப் பற்றி
எழுத மறுப்பவர் பெயர்
எழுத்தராம்
*************************


முடிக்க முடியாமல்
 நீள்கிறது
 எனது கவிதைகள்
********************************

Tuesday, June 10, 2014

ஹைகூ....

மனப்பாட எந்திரங்கள்
தனியார் பள்ளி
மாணவர்கள்!
*****************************

விலையேற்றம் என்று
போராட்டத்திற்குத் தயாரானது
சிவப்பாய் தக்காளிகள்
***********************

அவள் முகத்தருகே இருப்பதால்
தலை குனிந்தே இருக்கிறது
காதருகில் ரோஜா
**************************

Monday, June 9, 2014

ஹைகூ

தேன் வந்து காதில் பாய்கிறது
அம்மா என்கிறாள்
என் மகள்
*************************


தமிழ் அமுதமானது
என் குழந்தை
பேச ஆரம்பித்து விட்டாள்
**************************


மகள் சாப்பிடச் சாப்பிட
வயிறு நிரம்பியது
பசித்த தாய்க்கு
**************************

Wednesday, June 4, 2014

ஹைக்கூ

வயல் அழுகிறது
வாழ்வுப் பிச்சை கேட்டு
பிளாட்..


நிஜங்கள் அழிகிறது
நிழல்கள் வாழ்கிறது
இறந்த என் தாத்தாபுகைப்படம்


வான மங்கையின்
வண்ணப் பருக்கள்
நட்சத்திரங்கள்


பிஞ்சுகளின்
கந்தகக்கூடாரம்
நர்சரி


வானப் பெண்ணின்
காதோரத்து ரோஜா
நிலா
***********************************************

Saturday, December 7, 2013

குறும்பாக்கள்

கூலிகள் நிர்ணயிக்கப்படுகின்றன
முதலாளிகளீன்
குளிர் அறையிலிருந்து...

விவசாயி தவிக்கிறான்
அறுவடை செய்கிறான்
அரசியல்வாதி

வாழ்க்கைக்குள் விழுந்த
மிகப்பெரிய திரை
சின்னத்திரை

தனக்கான கல்வியை
எப்போதும் தேர்ந்தெடுக்க இயலவில்லை
                                                                                                        பெண்ணால் மட்டும்
*********************************************

Thursday, December 5, 2013

குறும்பூக்கள்

சுதந்திரத்தில் சமாதான மடையாத
தேசியக்கொடி
படபடக்கிறது


புதிய ஆடைகளைக் காட்டுகிறாள்
விற்பனைப் பெண்
கிழிந்து தைத்த ஆடையணிந்து

வீட்டை விற்றாலும்
விற்க முடிவதேயில்லை
வாழ்ந்த நினைவுகளை


மழை அழகுதான்
வீட்டுக்குள்
பெய்யாதவரை
***************************

Wednesday, November 13, 2013

சின்ன சின்ன...

கடைசி பாட பிரிவேளை
மணியோசை கேட்குமென
மெளனமாய் மாணவர்கள்
************************

கோயில்கள் நிறைந்திருக்கும்
ஊர்
கல்லான மனிதர்கள்
********************

புகைப்படங்கள்
சொல்வதில்லை
பொய்களை
******************

எல்லாநேரமும் கரைகிறது
உபயொகத்துடனோ
உபயோகமின்றியோ
********************

பெண்ணைச் சுற்றிலும்
திராவகங்கள்
வாய்வழியாகவும், உண்மையாகவும்....
*******************************

Thursday, October 31, 2013

ஹைக்கூ க்கள்

இவ்வளவு தவறுகள் நடந்தும்
யார் கண்ணையும் குத்தவில்லை
சாமி.....


ஒப்பனையோடு திரையில் நடிகர்கள்
வாழ்க்கையில் மக்கள்
எந்த ஒப்பனையுமின்றி


சாதி பார்க்காத தண்டவாளங்கள்
குவிந்தன
காதல் பிணங்கள்



குழந்தைகளின்றி
வெறிச்சோடிப்போனது மைதானம்
இல்லங்களில் தொலைக்காட்சி


எல்லாப்பொருத்தங்களும்
ஜாதகத்தில் இருந்தன
பிரிந்தனர்....விவாகரத்து


யாதும் ஊரே...யாவரும் கேளிர்
வெளிநாட்டில் சம்பாதிக்கும்
கணவர்


விருப்ப ஓய்வு கிடைக்குமா
வீட்டிலும்
ஏங்கும் வேலைக்குப்போகும் பெண்
***************************************************