ஆசனத்தில் அமர்ந்துகொண்டு
அட்டூழியம் செய்வதனால்
கூழும்கிடைக்க வில்லை
குந்தவும் இடமில்லை
தேடிக் கொன்றுவிடு பாப்பா-அவர்செய்
தீமையை வென்றுவிடு பாப்பா
வீதிக்கி இரண்டொருவர்
விதியே என்றிருப்பதனால்
சாதிக்கு பஞ்சமில்லை நாம்
சாதிக்கவும் முடியவில்லை
நெஞ்சு கொதித்துவிடும் பாப்பா- அவர்கு
நேயம் உணர்த்தி விடு பாப்பா
கட்டணம் வசூல் செய்து
கல்யாணம் செய்வோரால்
பெண்மை சிறக்க வில்லை-அவள்
பேசவும் உரிமையில்லை
கொடுமை அழிந்துவிடும் பாப்பா-அவர்
கோபத்தை மறந்துவிடு பாப்பா
குடித்து எழுந்து வந்து
கோட்டையில் அமர்ந்ததினால்
கட்சியில் கண்ணியமமில்லை-அவர்
கருத்தில் உயர்வுமில்லை
கொதித்து எழுந்துவிடு பாப்பா-அவர்
குற்றத்தை உணர்த்திவிடு பாப்பா
செத்த சிந்தையாலே
புலமை அழிவதால்
தமிழும் தழைக்கவில்லை-நம்
தரமும் உயரவில்லை
தருமம்காத்துவிடு பாப்பா-அவர்
தலையைக் கொய்துவிடு பாப்பா
விளையாட்டு புத்தியினால்-பலர்
வீண்பொழுது போக்குவதால்
நாடு சிறக்கவில்லை-நல்ல
தொழிலும் வளரவில்லை
குணத்தை மாற்றிவிடு பாப்பா-இனி
பாதையைப் பகுத்து நட பாப்பா
அட்டூழியம் செய்வதனால்
கூழும்கிடைக்க வில்லை
குந்தவும் இடமில்லை
தேடிக் கொன்றுவிடு பாப்பா-அவர்செய்
தீமையை வென்றுவிடு பாப்பா
வீதிக்கி இரண்டொருவர்
விதியே என்றிருப்பதனால்
சாதிக்கு பஞ்சமில்லை நாம்
சாதிக்கவும் முடியவில்லை
நெஞ்சு கொதித்துவிடும் பாப்பா- அவர்கு
நேயம் உணர்த்தி விடு பாப்பா
கட்டணம் வசூல் செய்து
கல்யாணம் செய்வோரால்
பெண்மை சிறக்க வில்லை-அவள்
பேசவும் உரிமையில்லை
கொடுமை அழிந்துவிடும் பாப்பா-அவர்
கோபத்தை மறந்துவிடு பாப்பா
குடித்து எழுந்து வந்து
கோட்டையில் அமர்ந்ததினால்
கட்சியில் கண்ணியமமில்லை-அவர்
கருத்தில் உயர்வுமில்லை
கொதித்து எழுந்துவிடு பாப்பா-அவர்
குற்றத்தை உணர்த்திவிடு பாப்பா
செத்த சிந்தையாலே
புலமை அழிவதால்
தமிழும் தழைக்கவில்லை-நம்
தரமும் உயரவில்லை
தருமம்காத்துவிடு பாப்பா-அவர்
தலையைக் கொய்துவிடு பாப்பா
விளையாட்டு புத்தியினால்-பலர்
வீண்பொழுது போக்குவதால்
நாடு சிறக்கவில்லை-நல்ல
தொழிலும் வளரவில்லை
குணத்தை மாற்றிவிடு பாப்பா-இனி
பாதையைப் பகுத்து நட பாப்பா
ஒவ்வொரு வரியும் இன்றைய நிலையை சொல்கிறது... கனல் தெறிக்கிறது பாப்பாவுக்கு வரிகள்...
ReplyDeleteசிறப்பான கவிதை... வாழ்த்துக்கள்...
வீரியமிக்க கவிதை சுவாதி அருமை .
ReplyDeleteஅற்புதம் .ஒவ்வொரு வரியும் சாட்டையடி....உங்களுக்கு கவிதை அற்புதமாக வருகிறது தோழி
ReplyDeleteஅருமை தோழி
ReplyDelete