Thursday, February 13, 2014

பாப்பாவுக்கு..... கவிதை

ஆசனத்தில் அமர்ந்துகொண்டு
அட்டூழியம் செய்வதனால்
கூழும்கிடைக்க வில்லை
குந்தவும் இடமில்லை

            தேடிக் கொன்றுவிடு பாப்பா-அவர்செய்
              தீமையை வென்றுவிடு பாப்பா

வீதிக்கி இரண்டொருவர்
விதியே என்றிருப்பதனால்
சாதிக்கு பஞ்சமில்லை நாம்
சாதிக்கவும் முடியவில்லை

              நெஞ்சு  கொதித்துவிடும் பாப்பா- அவர்கு
               நேயம் உணர்த்தி விடு பாப்பா

கட்டணம் வசூல் செய்து
கல்யாணம் செய்வோரால்
பெண்மை சிறக்க வில்லை-அவள்
பேசவும் உரிமையில்லை

                கொடுமை அழிந்துவிடும் பாப்பா-அவர்
                 கோபத்தை மறந்துவிடு பாப்பா

குடித்து எழுந்து வந்து
கோட்டையில் அமர்ந்ததினால்
கட்சியில் கண்ணியமமில்லை-அவர்
கருத்தில் உயர்வுமில்லை

               கொதித்து எழுந்துவிடு பாப்பா-அவர்
                குற்றத்தை உணர்த்திவிடு பாப்பா

செத்த சிந்தையாலே
புலமை அழிவதால்
தமிழும் தழைக்கவில்லை-நம்
தரமும் உயரவில்லை

             தருமம்காத்துவிடு பாப்பா-அவர்
              தலையைக் கொய்துவிடு பாப்பா

விளையாட்டு புத்தியினால்-பலர்
வீண்பொழுது போக்குவதால்
நாடு சிறக்கவில்லை-நல்ல
தொழிலும் வளரவில்லை

                குணத்தை மாற்றிவிடு பாப்பா-இனி
                  பாதையைப் பகுத்து நட பாப்பா

4 comments:

  1. ஒவ்வொரு வரியும் இன்றைய நிலையை சொல்கிறது... கனல் தெறிக்கிறது பாப்பாவுக்கு வரிகள்...

    சிறப்பான கவிதை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வீரியமிக்க கவிதை சுவாதி அருமை .

    ReplyDelete
  3. சாமிக்கண்ணுFebruary 24, 2014 at 6:29 AM

    அற்புதம் .ஒவ்வொரு வரியும் சாட்டையடி....உங்களுக்கு கவிதை அற்புதமாக வருகிறது தோழி

    ReplyDelete
  4. சாமிக்கண்ணுFebruary 24, 2014 at 6:31 AM

    அருமை தோழி

    ReplyDelete