Wednesday, December 31, 2014

நல்ல தொடக்கம்...வெற்றி நிச்சயம்

2014 அப்படி இப்படி எப்படியோ நம்மை விட்டு கழண்டு கொண்டது

2015 தொடக்கமே மிகவும் உற்சாகமாகவும், அன்பாகவும், நன்றியாகவும், மகிழ்வாகவும், இன்னபிற நல் உணர்வுகளால் என் மனம் நிறைந்து கிடக்கிறது

நற்செய்திகள் என் காதுகளை எட்டிய வண்ணம் இருக்கிறது,

இவை என்னை மேலும் ஊக்குவித்து , என் பணிகள் தொடர வைக்கும் என்றே நம்புகிறேன்

ஜனவரி முதல் கல்கி குழுமத்தின் தீபம் ஆன்மிக இதழில் எனது கட்டுரைகள் வெளியாகின்றன

எனது நூல்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட திருமதி சு.கீதா என்பவர் தன் ஆய்வை முடித்து இன்று இப்போது அதனை என் கைகளில் தவழ விட்டுச் செல்கிறார்.

(மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியின் தமிழ் துறை தலைவர் அவர்களுக்கும் நெறியாளர் திருமிகு சு.மாதவன் அவர்களுக்கும் என் இதய நன்றி)

இன்னும் இன்னும் சில மகிழ்வான செய்திகள் இருக்கிறது, விரைவில் பகிர்கிறேன்.

1990 முதல் என் இலக்கியப் பணியை தொடர்ந்து வருகிறேன். பல இடர்கள், பல ஊக்குவித்தல்கள், பல கேலிகள், பல ...பல...பொறாமைகள்,, பல ஆற்றாமைகள்...இடையே என்னை நிலை நிறுத்துவதில் நான் எந்தசிக்கலுக்கும் ஆளாகவில்லை.

ஏற்றுக்கொள்ளக் கூடியவைகளை மட்டும் ஏற்று தூக்கி எறிய வேண்டியவைகளை தூக்கிஎறியத் துணியும் பக்குவமும் லாவகமும் எனக்குள் எப்போதும் ஓடி இருக்கிறது.

இறைவனுக்கு நன்றி இந்த ஆண்டு எனக்கு இனிக்கும் ஆண்டு. எல்லோருக்கும் அவ்வாறே அமைய என் பிரார்த்தனைகள்.






வெற்றி நிச்சயம்

என்றும் உங்களின் ஆசி வேண்டி.....

7 comments:

  1. ஆஹா!! ரொம்ப ரொம்ப சந்தோசம்....:)))) சகோதரிக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. மகிழ்ச்சி தொடரட்டும்
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வணக்கம்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் மாலதி

    ReplyDelete
  7. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete