Friday, February 14, 2014

காதல்..... காதல்........(கவிதை)

உன்னை நினைத்து தான்
ஐகாரக்குறுக்கம்
ஓளகாரக்குறுக்கம்
வினையெச்சம், பெயரெச்சம்
ஈறுகெட்ட எதிமறைபெயரெச்சம்
இப்படியாக.... இப்படியாக
படிக்கிறேன்... படிக்கிறேன்...
படித்துக் கொண்டே இருக்கிறேன்!
எல்லாமும்
உன்னிலிருந்து உற்பத்தி
ஆனால்.....
என்னால் உன்னைப்பற்றி’
எந்த இலக்கணத்தை வைத்து எழுதுவது
என்றுதான் நிர்ணயிக்க முடியவில்லை!

********************** 

2 comments:

  1. சிரமம் தான்...

    அன்பு தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம்

    உண்மைதான் காதல் என்பது ஒரு கடல் ....... முடிவு இல்லாதது..... கவிதை சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete