Friday, December 26, 2014

கிறிஸ்மஸ்(கிறிஸ்தவர் அல்லாதோருக்கும்)

கிறிஸ்துவர்கள் என்பவர்கள் தமிழை முறையாகப் பேசத் தெரியாதவர்களாகவும், தமிழின் கலாச்சாரம் இல்லாமல் இருப்பது போல் திரைப்படங்களில் காட்டப்பட்டாலும் தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் நூல் பைபிள் என்பதில் நாம் அவர்களை நேசிப்போமாக.

பைபிளை மொழி பெயர்த்தவர்கள் அப்போதைய பிராமணர்கள் என்பதால் ஒரு சம்ஸ்கிருத நெடியுடன் கூடிய நடையாகக் காணப்பட்டாலும் அதுவும் ஒரு அழகு தமிழ் தான் ( தமிழை நேசிப்பவர்கள் அது மணிபிரவாளநடையாக இருந்தாலும் நேசிப்பார்கள் என்பது என் கருத்து. எதையும் ஏன் ஒதுக்க வேண்டும்????)

தன்னை ஞானி என்று எண்ணாதே கர்த்தருக்கு பயந்து தீமையை விட்டு விலகு என்கிறது பைபிள் ஒரு இடத்தில். (இந்த வசனம் எல்லோரையும் வழிநடத்தக் கடவதாக)

பைபிளில்  உள்ள மொத்த புத்தகங்கள் 66
அதிகாரங்கள் 1,189
வசனங்கள் 31,101
வாக்குதத்தங்கள் 1,260
கட்டளைகள்6468
முன் கணிப்புகள் 8000
நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் வசனங்கள் 3268
மொத்த கேள்விகள் 3294
நீளமான பெயர் - மகர் சாலால்-ஆஸ்-பாஸ்(ஏசாயா8-1)
நீளமாக வசனம் எஸ்தட் 8--9
சிறிய வசனம் யோவான்11:35
நடுவான புஸ்தகங்கம் மீகா.நாகூம்
நடுவான் வசனம் சங்கீதம் 117
சிறிய அதிகாரம் சங்காதம்117
பெரிய அதிகாரம் சங்கீதம் 119 (176வசனங்கள் உள்ளது)
பெரிய புஸ்தகம் சங்கீதம் ( 150 அதிகாரங்கள்)
சிறிய புஸ்தகம் 3 யோவான்
எழுதியவர்கள் 40 பேர்
மொழி பெயர்க்கப்பட்டுள்ள மொழிகள் 2000
என்று பைபிளைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டியவைகளும் அறிந்து கொள்ள வேண்டியவைகளும் நிறைய.
( பெண்களுக்கு சாதகமாக இல்லை தான் ஆனால் நெகடிவ்ஸ் வேண்டாமே பிளீஸ்)

 நான் கர்த்தரை நோக்கி சத்தமிட்டுக் கூப்பிட்டேன். அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்கு செவி கொடுத்தார்.என்று சங்கீதத்தில் சொல்லியுள்ள படிதான் கீதையும் சொல்கிறது.

இது மதம் என்று கொள்ளாமல் மனம் ஒன்றி ஆத்மாவை பிரார்த்தனை செய்தல் என்று அர்த்தம் கொள்ளலாம். (எனக்கு பிடித்திருந்தது)

எல்லாவற்றுக்கும் ஒரு காலம் உண்டு. பூமியில் உள்ள ஒவ்வொன்றுக்கும் ஒரு சரியான காலமுண்டு என்று பிரசங்கி 3-1 கூறுகிறது.

இது நாம் தோல்வியால் துவண்டு போகும் போது மீண்டு எழ உதவுகிறது
இறைவனின் வேதம் அப்படித்தானே இருக்க வேண்டும்

தேவன் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவார் என நம்புகிறேன். உன் எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன் என்று சங்கீதம் 20.4 சொல்கிறது. அதுவும் அப்படியே ஆகட்டும் என்று புது வருடத்தில் அடி எடுத்து வைக்கப் போகும் நாமும் நம்புவோமாக

அதே சமயம் நாம் ஒரே ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். ஒருவன் தான் விரும்புகிற படியெல்லாம் செய்வதற்குத் திட்டமிடலாம். ஆனால் எது நடக்க வேண்டுமென முடிவு செய்பவர் கர்த்தரே. கர்த்தர் என்ற கடவுள், ஆண்டவன் நல்லவனவற்றைத் தான் முடிவு செய்வார். முடிவு செய்திருக்கிறார்.

எனவே எதற்காகவும் நாம் சோர்ந்து போகத் தேவையில்லை. நமக்கு வேண்டாதவைகள் நடக்கிறது என்றால் அதற்குள் ஏதோ நன்மைகள் நிறையப் போகிறது என்பதை உணர்வோம்

பைபிள் மட்டுமல்ல. உலகின் வேதங்களாகக் கருதப்படும் பகவத்கீதை, திருப்புகழ், குர்ரான், பூர்வங்கள் (சமணமதம்) பௌத்தர்களின் எண்ணக்கருக்கள், , கன்பூசியசம், டாவோயிசம், ஹிந்தோ, யூதம், சீக்கியம், பாபி, சோறாஸ்ரியனிசம், இப்படி எல்லா மதங்களும் நல்லவைகளை நோக்கி நல்லவர்களுக்காக நல்லவைகளுக்காக உருவாக்கப்படுகிறது.

எனவே நாம் நல்லவர்கள். இங்கு நல்லவையே நடக்கட்டும். ஆங்கிலப் புத்தாண்டு பொலிவாய்த் தொடங்கட்டும்.

மதம் என்பது நாம் பின்பற்ற அல்ல..தூக்கிப் பிடித்துக் கொள்ளவும் அல்ல. அகங்காரம் கொள்ளவும் அல்ல. நாமே நம்மை நேசிக்க. நம்மைப் போல் உள்ள மனிதர்களை நேசிக்க.

மார்க்கம் கடந்து மனிதம் நேசிப்போம்




9 comments:

  1. ஆமாசாமிDecember 26, 2014 at 3:14 AM

    வாழ்த்துக்கள் டீச்சர். உங்களால் மட்டும் தான் இப்படி எழுத முடியும். “”””மார்க்கம் கடந்து மனிதம் நேசிப்போம்””””நன்று.....உங்கள் நடை அருமை டீச்சர்

    ReplyDelete
  2. மதம் கடந்து மனிதர்களை நேசிப்போம்

    ReplyDelete
  3. தினமும் பைபிள் படித்தாலும் அதைப்பற்றிய அறியா பல தகவல்களை பகிர்ந்தற்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  4. கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. Sri Lankan tamil catholics are using pure tamil bible
    Nimalan (Srilanka)

    ReplyDelete
  6. கவிஞரே
    நீங்கள் சொன்னதில் ஒரு செய்தியைக் கூட நான் அறியவில்லை.
    உண்மையில் சொல்வதற்குக் கூச்சமாகத்தான் இருக்கிறது.
    படிக்க முயல்கிறேன்.
    நன்றி

    ReplyDelete
  7. அருமை....../////மார்க்கம் கடந்து மனிதம் நேசிப்போம்///////////

    ReplyDelete
  8. மதம் என்பது நாம் பின்பற்ற அல்ல..தூக்கிப் பிடித்துக் கொள்ளவும் அல்ல. அகங்காரம் கொள்ளவும் அல்ல. நாமே நம்மை நேசிக்க. நம்மைப் போல் உள்ள மனிதர்களை நேசிக்க.

    மார்க்கம் கடந்து மனிதம் நேசிப்போம்

    அசத்தல் புரிதல். சூப்பர்!

    ReplyDelete