Friday, October 17, 2014

தீபாவளிக் கொண்டாட்டம் (என் பள்ளியில் )

இன்று நத்தம்பண்ணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் அன்வோ அமைப்பின் மூலமாக தாரகை ஜவுளி நிறுவனத்தினர் மாணவர்களுக்குப் புதிய ஆடைகள் வழங்கினார்.
மாணவர்களுக்கு மகிழ்வோ மகிழ்வு
(இதற்கென அழைப்பு விடுக்க தலைவர் வீட்டுக்குச் சென்று வந்ததை தனி பயணக் கட்டுரையாக எழுத வேண்டும்)
பேராசிரியரும் தற்போது நாணயவியல் சங்கத்தின் தலைவரும் அன்வோ அமைப்பின் மாவட்டப் பொறுப்பாளருமான திரு பஷீர் அலி அவர்கள் தங்கள் அமைப்பின் மூலம் அனைத்து மக்களுக்கும் சாதி, மத பேதமின்றி உதவுகிறோம் என்றும் உதவிகளைக் கேட்கலாம் என்றும் தங்கள் அமைப்பு பற்றி விளக்கியதோடு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்...
அன்வோ அமைப்பின் பொறுப்பாளர் அல் ஹாஜ் எஸ்.சதக்கத்துல்லா அவர்கள் தன் உரையில் மனிதனாகப் பிறந்தவர்கள் அன்போடும் பண்போடும் வாழ வேண்டும். எப்போதும் பிறருக்கு உதவும் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் . நாம் சம்பாதிக்கும் அளவுக்கு கடவுள் நம்மை வைப்பதே பிறருக்கு உதவத்தான். எனவே சிறிய வேலையில் இருப்பவர்களும் பெரிய வேலையில் இருப்பவர்களும் அவரவர் தகுதிக்குத்தகுந்த படி உழைக்க வேண்டும்..அதனை பிறருக்குக் கொடுத்து மகிழ வேண்டும் என்றார்
அல்ஹாஜ் ராஜா தாஜ் முகம்மது அவர்கள் மாணவர்கள் சாதி, மதம் பாராது வாழ வேண்டும். பள்ளியில் கல்வி கற்பதோடு ஒழுக்கம், மேன்மை, நல்ல எண்ணம் , சிந்தனை போன்ற வற்றை வளர்த்துக் கொண்டு நாமும் பண்பட்டு பிறரையும் பண்படுத்த வேண்டும். என்று கேட்டுக் கொண்டதோடு மிகவும் நன்கு படித்த மாணவர்கள், மிகவும் அழகாக படம் வரையும் மாணவர்கள் என்று அனைவருக்குமே பல பரிசுகளை அள்ளி வழங்கினார்
பேராசிரியர் அல்ஹஜ் முகம்மது கனி அவர்கள் தன் உரையில் படிப்போடு வாழ்வியலையும் கற்றுக் கொள்ளுங்கள். அன்பும் பழகும் முறையும் நம்மை மாற்றும் என்றார்.
என் பள்ளியின் ஆயம்மா இந்த வேலையோடு 4 வீட்டில் பத்து பாத்திரம் தேய்த்து தன் வாழ்வை ஓட்டுபவர். அவருக்குப் புதிய ஆடைகளை யாருமே வழங்கியதில்லையாம்...எல்லோரும் கட்டிய பழைய புடவைகளைத் தான் தருவார்களாம் .என்னிடம் கண்ணீரோடு நன்றி சொன்னார்.
கூட்டுநர் அம்மா ஒரு படி மேலே போய் அவர்கள்கள் நன்றாக இருக்க வேண்டும் ( இரு கைகளையும் மேலே உயர்த்தி வானம் பார்த்து ) என்று வேண்டிக் கொண்டே சென்றார்.
ஊராட்சித் தலைவருக்கு மகிழ்வோ மகிழ்வு...(அவர் கடுமையான உழைப்பாளி. பால் ஊத்துவார். டீக்கடை வைத்து நடத்துவார். கட்டிடங்கள் மேற்பார்வை பார்ப்பார். மிகப் பெரிய வயல் வெளிகளில் அழகாக உழுவார். தன் சொந்த பந்தங்களின் வயல்களுக்கு டிராக்டர் ஓட்டுவார். )அவர் பெருமிதத்துடன் பேசினார்.
இனிப்புகளோடு குழந்தைகள் முகமெல்லாம் மகிழ்ச்சி கூத்தாடியது...அவர்களின் அன்னையாய் நானும் மகிழ்ந்தேன்
இனிப்பு கொடுத்து பணம் கொடுத்து பரிசுகள் கொடுத்து எல்லாம் கொடுத்து விட்டு அவர்கள் என்னை நோக்கி இந்த மகிழ்வைத் தந்த உங்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளோம் என்று கூறியதும் ....அடடா...அழகு மனிதர்கள்...




















செ சுவாதி's photo.

3 comments:

  1. வணக்கம்
    நல்ல சிந்தனை உணர்வு பாராட்டுகிறேன் வீட்டில் தீபாவளி கொண்டாட முடியாத செல்வங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்லமுடியும் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மகிழ்ச்சியான நிகழ்வு சகோதரியாரே
    அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete