மாணவர்களின் பெற்றோர்கள் சில சமயம் என்னை வந்து சந்திப்பதோடு சிறிது அளவளாவி விட்டுச் செல்வார்கள். அது போன்ற ஒரு பொழுதில் ஒரு பெண்மணிவந்தார். அவர் அரசு அலுவலகம் ஒன்றில் கூட்டி சுத்தம் செய்து குடிநீர் எடுத்து வைக்கும் பணியினை செய்து வருகிறார்
.
பேசிக் கொண்டு இருக்கும் போதே தனக்கு வாசிப்பு கலைஞரைத் தெரியும் என்றார். நானும் ஓகோ அப்படியா என்றேன்...(நிறைய புத்தகங்களை வாசித்த கலைஞரைத் தெரியும் என்கிறார் என்றே நினைத்தேன். ) ( வாசித்த என்று தான் எழுதி யிருக்கிறேன் வாசிக்கும் என்று போடவில்லை please note)
அது இருந்தா எவ்வளவு சுத்தமா இருக்கும் , தனக்கு அதைப் பிடிக்கும் என்றார். அப்போதும் சரி,, கலைஞர் இருந்தால் வீதி எல்லாம் சுத்தமாக இருப்பதாய் இவர் உணர்கிறார் போல என்றே நினைத்தேன்.( again please note அரசின் கஜானா அல்ல) அதனால் அவரைப் பிடிக்கும் போல் என்று நினைத்தேன். சரிதான் போனால் போகிறது என்று ஒரு ஆமாம் போட்டு வைத்தேன். ஏனெனில் இந்த ஊரில் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர்,போன்ற பெரிய் பதவிகளில் இருப்பவர்களை ”அது” என்று விளிப்பது சகஜமாக இருந்தது. ( சிலர் “அது” போன்ற சின்னச் செயல்களில் ஈடுபடுவதால் அப்படி அழைப்பதை வழக்கமாகக் கொண்டார்களா என்பது பற்றி நான் அறியேன். )
அவரும் மீண்டும் சுத்தம் பற்றியும் சுகாதாரம் பற்றியும் பேசிக்கொண்டேஏஏஏஏஏஏஏஏ இருந்தார். கலைஞரு அவசியம் வேண்டும் என்றார். ஒரு லட்சத்து எழுபத்தாறு கோடிக்குப் பிறகுமா என்று நீங்கள் நினைக்கவே கூடாது... நாம் என்ன அவ்வளவு சுரணை மிகுந்தவர்களா என்ன? ) எனக்கும் அவரின் தமிழின் மீதும் (அந்தக்கால) பேச்சின் மீதும்(presence of mind) பிரியம் இருந்ததால் மீண்டும் ஒரு ஆமாம் போட்டு வைத்தேன். இம்முறை இரண்டு ஆமாக்கள்..கடைசியாக கையில் தூக்கிச் செல்வது போலவும் வந்திருக்கு என்றார்.
எனக்கு இப்போது தான் உரைத்தது அவர் இவ்வளவு நேரம் வர்ணித்தது வாக்கூம் கிளினர் பற்றி என்று...
பல நேரங்களில் இது போன்ற திணறல்களில் நான் மாட்டிக் கொள்வதுண்டு. இது போலவே அம்மா சோப்பு என்று ஒரு பெண்மணி சொல்ல அம்மா தண்ணிர் (குடிநீரு தான் வேறொன்றும் இல்லை) தானே இருக்கு, உணவகம் போல சோப்பும் விட்டுருக்காங்க போல என்று நினைதால் அது ஹமாம் சோப்...
புரிதலில் தான் எவ்வளவு சிக்கல்கள் வருகிறது.

ஹா... ஹா... ரசிக்கவும் வைத்தது...!
ReplyDelete