இன்று ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி நத்தம்பண்ணையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது... விழாவிற்கு பஞ்சாயத்து த்தலைவர் சேதுராமன் தலைமை வகித்தார்..சிறப்பு விருந்தினராக அசத்தப் போவது யாருஎன்ற புத்தகம் எழுதிய எழுத்தாளரும் புதுகை மாவட்ட தமுஎகச நகர செயலாளருமான திரு பீர் முகம்மது அவர்கள் அழைக்கப்பட்டுந்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சுவாதி விழவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். மாணவர்கள் பாரதியாராக. ஒளவையாக, திருவள்ளுவராக, காந்தியாக வேடமிட்டிருந்தனர். பாரதியார் பாடல்கள் பாடினார்கள். அழகு பாடல்களுக்கு ஆடினார்கள்...பெண் உரிமை பற்றி பேசினார்கள்.. சிறப்பு விருந்தினர் தன் உரையில் குடியரசு தினம் ஏன் கொண்டாடுகிறோம்...நம் இந்தியாவின் பெருமைகள்... நமது உடைகள், உணவு வகைகள்... நாம் வேளாண்மையில் பொருளாதாரத்தில் தொழில் தொடங்குவதில் எப்படியெல்லாம் முன்னேறினோம் என்று எடுத்துரைத்தார்.. தலைமை ஆசிரியர் சுவாதி தன் உரையில் நாம் நம் நாட்டுக்கு செய்ய வேண்டிய பங்கு ஆற்றவேண்டிய கடமைகள்,, சீர்திருத்தங்கள்.. குறிப்பாக பெண்கள் தங்களுக்குத் தாங்களே எப்படி கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி மேன்மை அடைய வேண்டும் என்று பேசினார்.பெற்றோர் சங்கத் தலைவரான மு சந்திரசேகர்...எல்லோருக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மாணவர்களின் மாற்றுடைப் போட்டியும் நடந்து பரிசுகள் வழங்கப்பட்டன.தலைவர் தன் உரையில் கிராமச்சுகாதாரம் பற்றி பேசினார்.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது...
4 AttachmentsView allDownload all
4 AttachmentsView allDownload all
No comments:
Post a Comment