Sunday, January 12, 2014

விளையாடு( மழலை இலக்கியம்)

நன்றாய் நீயும் விளியாடு
நல்லுடல் வளரும் தெம்போடு
ஒன்றாய்  சேர்ந்து விளையாடு
உள்ளம் சிரிக்கும் மகிழ்வோடு

கட்டுடல் என்றும் பேணிவரின்
கவலை இல்லை நம்மவர்க்கே
நோயில் படுத்த உயிரெல்லாம்
நொடியில் ந்ழுமே தன்னாலே

பாயில் நோயில் படுக்காமல்
பண்பு மக்களெ வாழுங்கள்
படுத்தும் உடுத்தும் வாழ்வதுவெ
வாழ்க்கை என்றே எண்ணாதீர்

உலாவும் பழக்கம் இருந்தாலே
ஊக்கம் பிறக்கும் தன்னாலே
பயிற்சி செய்தேஉடலினைப்
பக்குவமாகக் காத்திடுவோம்
***********************************************

3 comments:

  1. தங்களுக்கும் தங்களின் அன்பான குடும்பத்தினர், நண்பர்களுக்கும் என் இனிய உழவர் திருநாள் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் - நா.முத்துநிலவன்

    ReplyDelete
  2. கருத்துள்ள வரிகள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  3. சிறார்களை எழுப்பி விடும் அழகிய கவிதை. நன்று, தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் மற்றும் தமிழர், உழவர் திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete