ஏதாவது ஒரு வகையில்
தவறு செய்து விடுகிறேன்
தினந்தினம்
கூட்டுக்கு உப்புபோட
மறந்திருப்பேன் ஒருநாள்
தாமதமாய் எழுவேன்
ஒருநாள்
மகளின் பள்ளிப்பையில்
உணவு வைக்கவே
மறந்தேன் ஒருநாள்
எத்தனையோ முறை
நானும்
சாப்பிட மறந்து போவேன்
சிறு சிறு தவறுகள்
செய்த வண்ணமாய் இருக்கிறேன்
ஒவ்வொரு முறை
தவறு செய்த பின்னும்
அடுத்தமுறை செய்ய மாட்டேன்
என்ற தன் மன்னிப்புடன்......
ஆனாலும் இன்று
காலணி மாற்றி அணிந்த
தவறுக்காக
குற்றம் என்றுசொல்லி
மகளை அடித்து விட்டேன்
எதிலும்
தவறும் நான்......!!!
*****************************************************
தவறு செய்து விடுகிறேன்
தினந்தினம்
கூட்டுக்கு உப்புபோட
மறந்திருப்பேன் ஒருநாள்
தாமதமாய் எழுவேன்
ஒருநாள்
மகளின் பள்ளிப்பையில்
உணவு வைக்கவே
மறந்தேன் ஒருநாள்
எத்தனையோ முறை
நானும்
சாப்பிட மறந்து போவேன்
சிறு சிறு தவறுகள்
செய்த வண்ணமாய் இருக்கிறேன்
ஒவ்வொரு முறை
தவறு செய்த பின்னும்
அடுத்தமுறை செய்ய மாட்டேன்
என்ற தன் மன்னிப்புடன்......
ஆனாலும் இன்று
காலணி மாற்றி அணிந்த
தவறுக்காக
குற்றம் என்றுசொல்லி
மகளை அடித்து விட்டேன்
எதிலும்
தவறும் நான்......!!!
*****************************************************
அவளை அடித்த உங்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றணும்...அவளைப்பார்க்கும் போதே எப்படி அடிக்கத்தோன்றியது? போங்க டீச்சர் உங்க கூட நாங்க எல்லாரும் டூ.....உங்கள் உதவி ஆசிரியரில் ஒருவன்
ReplyDeleteநீங்கள் அடித்தது தெரியாமல் சிரிக்கிறாள் பாருங்கள்........
ReplyDeleteஇதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை... ஹிஹி...
ReplyDeleteஉங்களின் தவறுகள் இங்கே பதியபட்டு பலருக்கு பாடமாக ஆகிவிட்டது. சிந்தனையை தூண்டிய ஒரு பதிவு பாராட்டுக்கள்
ReplyDeleteகவிதை அழகுதான்... “சின்னச்சின்ன பொய்களால் சிறக்கிறது வாழ்க்கை“ என்பார் பாலா. “கவிதைக்குப் பொய் அழகு“ என்பார் வைரமுத்து. எனவே, சில தவறுகளை மன்னிக்கலாம் டீச்சர்... உதாரணத்திற்கு... இப்ப நீங்களும் உங்க பொண்ணும் சிரிக்கிற படம் கூட போன நூற்றாண்டில் எடுத்தது தானே?
ReplyDeleteஇருந்தாலும்
குழந்தைகளின் குறும்புகள் சில சமயம் கோபம் வர வைத்தாலும் அடுத்த குறும்பு நம் மனதை லேசாக்கிவிடும்! அழகான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆகா
ReplyDeleteஅழகுக் கவிதை
நன்றிசகோதரியாரே
தம 2
தவறத்தவறுகள் --- தவறறத் தவறுகள் போல் அழ்கிய சிரிக்கும் படம் மனம் கொள்ளைகொண்டது ..பாராட்டுக்கள்..
ReplyDelete