பார்க்குமிடங்களில்
அங்கிங்கெனாதபடி
எங்கும் பொய்கள் தான்!
ஒரு அயோக்கியனை
மேடையில் அருமையாக
புகழ்கிறார் ஒருவர்
மொழியே புரியாதவனை
கவிஞர் என்கிறார் ஒருவர்
எனக்கு இதை விற்பதில்
ஒரு ரூபாய் தான் இலாபம்
என்கிறார் வியாபாரி
உறவினர்களுள்
பிரியம் வைத்திருப்பது போலவும்
பாசம் வைத்திருப்பது போலவும்
பொய்கள்
இப்பத்தான் உங்களை நினைச்சேன்
நீங்களே வந்துட்டீங்க என்று
பச்சைப்பொய் சொல்கிறார்
தன் செருப்பை எங்கே தொலைத்தோம்
என்று தெரியாத ஒருவர்
அரசியல்வாதிகளுக்கோ
பொய்களே உணவு
புள்ளிவிபரக் கணக்கே
பொய்கள் தான் என்கிறார்
அந்தத்துறையை ச் சார்ந்தவர்
இது முகத்தை அழகாக்கும்
என்கிறது ஒரு விளம்பரம்
இது முடியைக் கருப்பாக்கும்
என்கிறது ஒரு விளம்பரம்
இது உங்களது வங்கி என்கிறது
பெரிய பொய்யாய்
காதலிக்கவே இல்லை என்று
மறுத்து விட்டு அதே நபரை
திருமணம் செய்து கொள்கிறார்கள்
திரைத்துறையினர்
உண்மை கலந்த பொய்கள்
பொய்யில் மிதக்கும் பொய்கள்
பொய்யையே முழுதும் நிறைத்த பொய்கள்
உண்மையாய் தோன்றும் பொய்கள்
அநீதியான பொய்கள்
அவசர உதவிப் பொய்கள்
நிதானமாய் யோசித்த பொய்கள்
இப்படி பொய்கள்
உலகில் காற்று மண்டலத்தில்
கலந்துள்ள
நைட்ரஜன், ஆக்ஸிஜன்
சதவீதம் மாதிரி
அங்கிங்கெனாதபடி
எங்கும்
நிறைந்திருக்கிறது போலும்
*************************************
அங்கிங்கெனாதபடி
எங்கும் பொய்கள் தான்!
ஒரு அயோக்கியனை
மேடையில் அருமையாக
புகழ்கிறார் ஒருவர்
மொழியே புரியாதவனை
கவிஞர் என்கிறார் ஒருவர்
எனக்கு இதை விற்பதில்
ஒரு ரூபாய் தான் இலாபம்
என்கிறார் வியாபாரி
உறவினர்களுள்
பிரியம் வைத்திருப்பது போலவும்
பாசம் வைத்திருப்பது போலவும்
பொய்கள்
இப்பத்தான் உங்களை நினைச்சேன்
நீங்களே வந்துட்டீங்க என்று
பச்சைப்பொய் சொல்கிறார்
தன் செருப்பை எங்கே தொலைத்தோம்
என்று தெரியாத ஒருவர்
அரசியல்வாதிகளுக்கோ
பொய்களே உணவு
புள்ளிவிபரக் கணக்கே
பொய்கள் தான் என்கிறார்
அந்தத்துறையை ச் சார்ந்தவர்
இது முகத்தை அழகாக்கும்
என்கிறது ஒரு விளம்பரம்
இது முடியைக் கருப்பாக்கும்
என்கிறது ஒரு விளம்பரம்
இது உங்களது வங்கி என்கிறது
பெரிய பொய்யாய்
காதலிக்கவே இல்லை என்று
மறுத்து விட்டு அதே நபரை
திருமணம் செய்து கொள்கிறார்கள்
திரைத்துறையினர்
உண்மை கலந்த பொய்கள்
பொய்யில் மிதக்கும் பொய்கள்
பொய்யையே முழுதும் நிறைத்த பொய்கள்
உண்மையாய் தோன்றும் பொய்கள்
அநீதியான பொய்கள்
அவசர உதவிப் பொய்கள்
நிதானமாய் யோசித்த பொய்கள்
இப்படி பொய்கள்
உலகில் காற்று மண்டலத்தில்
கலந்துள்ள
நைட்ரஜன், ஆக்ஸிஜன்
சதவீதம் மாதிரி
அங்கிங்கெனாதபடி
எங்கும்
நிறைந்திருக்கிறது போலும்
*************************************
நேற்று மேடைக்கு அருகே உட்கார்ந்து இருந்த உங்களை நான் பார்த்துக் கொண்டேதான் இருந்தேன். உங்கள் முக குறிப்பை வைத்து அது தான் கவிதையாகப் போகிரது என்று அப்பவே கணித்தேன்......அப்புறம் அது சரவனன் மீனாட்சி கல்யாணமா டீச்சர்?.......எனக்கும் கூட இந்த உங்களது வங்கியில் உடன்பாடு இல்லை... ஏனெனில் எனக்கு அது மாதம் ஒரு தடவைதான் பணம் தருகிரது...ஹா....ஹா...ஒரே ஒரு கவிதை எழுதுன அவரை கவிஞர் என்று இவர் அழைத்தது எனக்கும் வருத்தம் தான் டீச்சர்.......உங்கள் உதவி ஆசிரியரில் ஒருவன்...( என்னை யார்னு கண்டு பிடிச்சீங்கள்ள்ளா? இல்லையா?????)
ReplyDeleteவாழ்த்துக்கள் சுவாதி...நேற்று அந்த நிகழ்வுக்கு நானும் வந்திருந்தேன்...ஏன் உன் அய்யா...மற்றும் இளங்கோ சார்....மற்றும் நீ வந்தால் உடன் வருபவர்கள் பலரைக் காணும் ஏன்பா....? பொய்களுக்காக தப்பித்துக் கொண்டாரா? உன் குருநாதரான முத்துநிலவன் அய்யா?
ReplyDeleteஎனக்கே சிப்பு சிப்பா வந்தது.....ஆனா அந்த ஆள் அவரைச் சொல்றாமாதிரியே எப்படி உட்கார்ந்திருந்தார் பாருங்கள் சுவாதி மேடம்.....உங்க முக நூலை அவசர அவசரமாக பாத்தேன். எப்போதும் நீங்க நிகழ்வு போய்ட்டு வந்தா ஸ்டேட்டஸ் போடுவிங்களா ...போடலை.....விடுங்க.....சர்தான்....ஏதோ காரியம் ஆகத்தான்.....
ReplyDeleteபொய்களை பட்டியலிடும் கவிதை அருமை! கவிதைக்கு பொய்யழகு என்றாலும் இந்த உண்மையும் சிறப்பாகத்தான் இருக்கிறது! நன்றி!
ReplyDeleteஆகா
ReplyDeleteபொய்யை வைத்தே
மெய்யாய் ஒரு கவிதை
அருமை
நன்றி சகோதரியாரே