Thursday, February 13, 2014

எதிர்கால இந்தியா கவிதை

யானைகட்டி போரடிக்கும்
ரேஷன் கடைகளில் தங்கம் வழங்கப்படும்
வெற்றிலை பாக்கு போல்
பெட்டிகடைகளில் பெட்ரோல் விற்பனை
சாதனைகளொடு சாகசம் புரிவோர்களுக்கு
சாராயத்தைப் பற்றி நினைக்க நேரமேது
வீட்டுக்கு இரு குழந்தைகள்
ஒன்று ஒளவையார்
மற்றவர் கம்பர்
அடுத்தவீட்டிலோ
மேரிகியூரியும் ஸ்டெபிகிராபியும்
காவிரியோடு கங்கை யமுனை
கிருஷ்ணா கோதாவரி நர்மதாவோடு
புதிதாய் பல ஆறுகள்
தொல்காப்பிய “பா”க்கள்
தொழிற்சாலைகள்
வீங்கிளவேனிலோடு வீடுகள்
காவலர்களே இல்லை
ஆச்சரியம்
முதலில்
பூட்டுத்தொழிற்சாலையே எங்கும் இல்லை
அன்பு அவதரிக்கும் போது
அவதூறுகளுக்கு இடமேது
இலக்கியங்களும் காப்பியங்களும்
இடைவிடாமல் வருகிறது.
இந்தியா என்றாலே
இன்ப நாடு
இயல், இசை.நாடகத்தோடு
அறிவு, அழகு, அமைதிக்குப்
“பெயர்” போன நாடு
என்ற பெயர் எடுக்க வருகிறது
வீடுகளில்
வளங்கள் வாய்கொப்பளிக்கும்
வம்புகளின் சாயம் வசமிழந்து போகும்
குடிசைகள் எல்லாம் நினைவு சின்னகள்
தாஜ்மஹாலை பார்க்க ஆசைப்படுகிற மாதிரி
குடிசைகளைப் பார்க்க
குழந்தைகள் தவிக்கும்
”அட”!!!!!???
அதற்குள்
என்னை யார் எழுப்பியது?

1 comment:

  1. அடடா... கற்பனை செய்து பார்த்தாலே சொர்க்கம் தெரிகிறதே...! வாழ்த்துக்கள்...

    (இயங்குனர் சங்கர் அவர்களின் சில படங்கள் மனதில் வந்து போயின...!)

    ReplyDelete