Monday, June 16, 2014

புகழ் மிகுந்த புதுக்கோட்டை(பாகம்1) (அவசியம் படிக்க வேண்டியது)

   நாம் வாழ்ந்தோம் வரலாறானது! வரலாறாய் வாழ்ந்தோம்! நாமேதான் வரலாற்றைப்படிகிறோம்! நாமே தான் வரலாற்றைப் படைக்கிறோம்! படித்ததினால் படைக்கிறோமா? படைத்தினால் படிக்கிறோமா? என்ற கேள்விக்குள் நாம் நுழைய முடியாது.

அதே சமயத்தில் படைத்ததைச் சரியாகப் படைக்க வேண்டும் . படித்தைச் சரியாகப் படைக்க வேண்டும். சென்ற வாரம் நண்பர்களிடையே பேசிக்கொண்டிருந்தபோது பெரும் சர்ச்சையே எழுந்துவிட்டது. எல்லாம் படிப்பு, படைப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் தான். கட்டப்பொம்மனைப் புதுகை சமஸ்தானத்து மன்னன் தொண்டைமான் காட்டிக்கொடுத்து விட்டான் என்று சில ஏடுகளும் ( திரைப்படங்களும் தான்) கற்றுக்கொடுத்துவிட்டு போயிருக்கிறது.

வரலாறு என்று ஒன்று எழுதினால் அதை யாரும் தூற்றும் வண்ணமாகவோ, யாரையும் தூற்றும் வண்ணமாகவோ அமைதல் கூடாது. நம் நாட்டை களபிரர்கள், பல்லவர்கள், முத்தரையர்கள், விஜயநகரத்தார்கள், பாமினியர்கள், முகலாயர்கள், மெளரியர்கள், குப்தர்க்ள், மறவகள், ஷத்திரியர்கள் , ஆங்கிலேயர்கள், போர்ச்சுகீசியர் , டச்சுக்காரர்கள் என்று பலர் ஆண்டு வந்திருக்கிறார்கள்.

இவர்கள் நம் தமிழ்நாட்டையும் ஆண்டிருக்கிறார்கள். அவர்களோடு சேர , சோழ, பாண்டிய மன்னர்களும் ஆட்சி புரிந்திருக்கின்றனர். அவர்களுள் எவரையும் நாம் தூற்றிப் பேசுவதில்லை. அதுதான் நம் பண்பாடு. கொடுமைக்கார அரசர்களைக் கூட தூற்றுவதில்லை. அவரது ந்ற்பண்புகலை மட்டுமே பாராட்டுகிறோம். அது மட்டுமே சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.

அன்னம் எப்படி பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தாலும் பாலை மட்டும் குடித்து விட்டு நீரை அப்படியே வைத்து விடுகிறதோ, அதே பொல் நாமும் நல்லவற்றையே நினைக்க வேண்டும். படிக்கவேண்டும், சிந்திக்க வேண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற வரலாற்று ஆசிரியர்களின் உயர்ந்த எண்ணத்தினால் தான் நாம் அதன்படியே செயல்படுகிறோம்.

நம் நாட்டைக் கொடுமைப்படுத்தி நம்மை அடக்கி ஆண்ட ஆங்கிலேயர்களையே ரிப்பன் எங்கள் அப்பன் என்றும் ஆர்காட்டு வீரன் இராபர்ட்கிளைவ் என்றும், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் மட்டுமல்ல அகில இந்திய பாடநூல் நிறுவனமே பாராட்டிக் குறிப்பிட்டு இருக்கிறது.  இதைவிடச் சிறப்பு என்னவென்றால் காரன்வாலிஸ் பிரபுவுக்கு மேற்கு வங்காளத்தில் ஒரு கோயிலையே எழுப்பியிருக்கிறோம். நமது தேசவீரன், நேசவீரம் பகத் சிங்கிற்கு இல்லாத பெருமையை அவர்களுக்கு அளித்துள்ளது நம் நாடு.

அது மட்டுமல்ல அவர்களைக் குறிப்பிடும் போதே கர்சன் பிரபு, கானிங் பிரபு, ஜாக்ஸன் துரை என்று மதிப்புச் சொற்களைச் சேர்த்து சொல்கிறோம். ஆங்கிலத்திலேயோ  Lord caurson, Lord Canning,  என்றே சொல்கிறோம் நாம் lord  என்று விளிப்பது அநேகமாகக் கடவுள்களைத்தான். இவ்வளவு ஏன்?  நாயைக்கூட பைரவர் என்றும் காவல் தெய்வம்  நாம் வண்ங்கவில்லையா? இது அதனுடைய நன்றி உணர்வுக்கு நாம் கொடுக்கும் மதிப்பைத் தானே காட்டுகிறது. யாருடைய மொழியையோ உலக மொழி என்று ஏற்றுக் கொண்டு பாடத்திட்டத்தில் இணைத்துக் கொண்ட நாம் நமது சொந்த மொழியான நமது நாட்டின் தேசிய மொழியான இந்தியைக் கற்க எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இதெல்லாம் அரசியல் சாகசங்கள் என்று நமது மக்கள் புரிந்து கொள்வதேயில்லை

அது நமது திறமையும் பண்பையும் வெளிப்படுத்துகிற செயலாக இல்லை. இது போலவே தான் நம்மிடையே குறுகிய மனோபாவங்களும் கெட்ட எண்ணங்களும் மட்டுமே நிறைந்து விட்டன. இல்லாவிட்டால் சுதந்திரம் வாங்கிய இந்த நாற்பது ஆண்டு காலகட்டத்திற்குள் நாம் என்னவெல்லாம் சாதித்திருக்க வேண்டும்? ஆனால் எதைச் தான் சாதித்தோம்?

2 comments:

  1. புதுகையை குறை சொல்பவர்கள் ஒரு விவாத போதைக்கு அடிமையானவர்கள்.
    அல்லது குரூரமாய்க் குறை சொல்லும் மாமியார் மனநிலையைக் கொண்டவரகள்.

    நமது ஆறாம் வகுப்பு பாடநூலைக் கூட முழுதாக படித்து சிந்திக்க வக்கற்றவர்கள்.
    ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தை படித்தால் புதுக்கோட்டை மேட்டர் எல்லாம் ஜுஜுபி என்று தெரியும்

    அப்புறம் ஏன் இப்படி பேசுகிறார்கள் ?

    இவர்களுக்கு தெரிந்த சினிமா இவ்வளவு தான்.

    இந்த மாதிரி விமர்சிப்பவர்களின் ஆசான் வெள்ளித் திரை நட்சத்திரங்கள்தான்..

    எனவே இம்மாதிரி பேசுபவர்களை நான் பொருட்படுத்துவதில்லை ..
    த.ம ஒன்று
    நீங்கள் பேசி விட்டீர்கள் .. நன்றி சகோதரி
    http://www.malartharu.org/2014/06/time-management-part-one.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி. 6ம் வகுப்பு நூலை இனிதான் பார்க்கணும். பாப்பா படிக்கும் பள்ளியில் புதுகை மன்னனை கேவலமாகச் சொல்லி பாடம் நடத்தினார்களாம். நான் அந்த ஆசிரியருக்கு தமிழ்வாணன் எழுதிய கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்ற நூலைக் கொடுத்து அனுப்பியுள்ளேன்.....நன்றி

      Delete