Monday, June 16, 2014

புகழ் மிகுந்த புதுக்கோட்டை( பாகம்2) அவசியம் படிக்க வேண்டியது

   இது போன்றவைகளில் மிக்கியமானதுதான் இந்த வீரபாண்டிய கட்டபொம்மன், தொண்டைமான் நிகழ்ச்சியும்.

   அக்பரின் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு இருந்து கொண்டிருந்த பீகானீர் இளவரசன் பிருதிவிராஜன், ராணா பிரதாப் சிங்கிற்குக் கடிதம் எழுதி அக்பரின் மீது படயெடுக்க வைத்ததை ஏற்றுக்கொள்கிறோம். மேலும் அக்பர் தன் மகன் சலீம் என்ற ஜஹாங்கீரை ஆட்சியில் ஏற்ற்ப்பிடிக்காமல் பேரன் குஸ்ரூவை அரசனாக நியமிக்க முற்பட அது விரும்பாத ஜஹாங்கீர் தன் மகளையே கைது செய்து கொன்று விட்டு ஆட்சியைக் கைப்பற்றியதை ஏற்றுக்கொள்கிறோம். அவுரங்கசீப் தனது தந்தை ஷாஜஹானையும் தங்கை ஜகானாராவையும் சிறையிலடைத்து சகோதரர்களை தாரா, ஷீஜா, மூராத் போன்றவர்களைக் கொன்று தான் மன்னனான் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

முகலாயர்கள் மட்டுமின்றி நம் தமிழ் வேந்தர்கள் சேர, சோழ, பாண்டியர்களுக்குள் பகையே மூளவிலையா? சோழ மன்னன் காலையே கரியாக்கினார்களே! சிற்றரசர்கள் பாரி, ஓரி, காரி போன்ற மன்னர்களுக்குள் கூட எவ்வளவு பிணக்கம், எத்தை சண்டைகள்? அந்தக்காலத்தில் மண்ணாசை, பொன்னாசை கொள்ளாத மன்னர்கள் யார் தான் இருந்தார்கள்?

 வரலாற்றாசிரியர்களால் மாமன்னர் என்றும் அமைதியின் தீபம் என்றும் போற்றப்பட்ட அசோகர் கூடத் தன் உடன் பிரந்த சகோதரர்கள்  நூறு பேரைக் கொன்றுவிட்டே ஆட்சிபீடத்தில் ஏறினார். இதையும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனாலும் எல்லோரும் ஒரு வகையில் நல்லவர்களாக  ஒரு வகையில் தீயவர்களாகத் தான் இருந்திருக்கிறார்கள். மகாத்மா என்று அழைக்கப்படும் காந்தியையே தனக்குப் பிடிக்காமல் தானே சுட்டுக் கொன்றான் கோட்ஸே.

 ஏசுவுக்கே சிலுவை செய்யவிலையா? சாக்ரடீஸுக்கு விஷம் கொடுக்கவில்லையா? ஒருவருக்கு நல்லவராக இருந்தால் நம்மனம் மற்றவருக்கு தீயவராக தெரியும் போலும். ஒரு நகரம் என்று இருந்தால் அங்கு மேடு, பள்ளம், குளம், கோயில், சமவெளி, வீடுகள், தோட்டங்கள், சோலைகள் இப்படி எல்லாம் இருந்தால் தானே நன்றாக இருக்கும்? விஷயத்திற்கு வருவோம்.

தொண்டைமான் காட்டிக்கொடுத்தார் என்று சொல்கிறார்கள். சரி அப்படியே வைத்துக் கொள்வோம் கட்டப்பொம்மன் தொண்டைமானிடம் அடைக்கலம் கேட்டிருந்தாரா? இல்லையா என்பதே தெரியவில்லை. அப்படியே கேட்டிருந்தாலும் தமிழ்நாட்டில் எத்தனையோ அரசுகள் இருக்க ஏன் தொண்டைமானிடம் கேட்க வேண்டும்? புதுக்கோட்டை மாவட்ட வரலாறு எழுதிய திருமிகு ராஜாமுகம்மது அவர்கள் சொல்வது போல் கல்வெட்டுகளிலோ ஓலைச்சுவடிகளிலோ எதிலுமே  ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

அக்கால அரசியல் கூற்றுப்படி பார்த்தால் ஒரு அரசன் எந்த அரசனின் கீழ் ஆளுகைக்குட்பட்டு இருக்கிறானோ, அல்லது எந்த நாட்டு மன்னனுடன் நட்புறவாய் இருக்கிறானோ அவர்களுக்குத் தானே உதவ வேண்டும்.

அதுதானே நட்புக்கு அழகு? அப்படித்தான் செய்திருக்கிறார் தொண்டைமானும். அது மட்டுமல்லாமல் ஒரு மன்னனானவன் தான் அழிந்தாலும் தன் மக்களைக் காப்பாற்றும் கடமை பெற்றிருக்கிறான். அப்படியே கட்ட பொம்மனைக் காட்டிக் கொடுக்காமல், இருந்திருந்தால் புதுகை என்னவாகியிருக்கும்?

 ஆயிரம் பீரங்கிகள் கொண்டிருந்த ஆங்கிலேயர்களை வெறும் வில்லும் வாளும் வேலும் கொண்டவர்கள் எதிர்த்து நின்று போரிட முடியுமா? போரிட்டால் விளைவு என்னாகும்? பொருளாதாரச் சேதம், உயிர்ச்சேதம், இது இரண்டும் ஏற்பட்டால் ஒரு நாடு அதன் பின் எப்போது தலை தூக்க முடியும்? இந்த விஷயத்தைத் தொண்டைமான் யோசித்திருக்கலாம். அப்படியே தொண்டைமான் காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? ஒரு வீரமிக்க மன்னனையும் இழந்து தன் அன்பு மக்களையும் இழக்கச் சம்மதியாமல் காட்டிக் கொடுத்திருக்கலாம்.

3 comments:

  1. மிரட்டும் பீரங்கிகளோ
    படையோ காரணமில்லை
    அக்கால அரசியல் சூழல்
    யாருக்கும் புரியாது இன்று ..
    முதலில் புதுக்கோட்டை ஒரு ஆங்கிலேய ஆதரவு நிலைப்பாடுள்ள சமஸ்தானம்.
    தன்னுடைய நிலைப்பாட்டால் தனது குடிமக்களுக்கு நிறய நலன்களைப் பெற்றுத் தந்த மன்னர்.

    எந்த திட்டம் என்றாலும் புதுக்கோட்டைக்கும் அது கிடைத்தது
    இந்தியாவில் இரண்டாவது மியுசியம் புதுகை மியுசியம்
    மின் உற்பத்தி, தாமிர குடிநீர்க் குழாய்கள் (மன்னர் ஆட்சியில் பாதிக்கப்பட்டதை மக்கள் ஆட்சி திருடர்கள் கவர்ந்துகொண்டு பிளாஸ்டிக் குழாய்களை பதித்தனர் இது இன்று)
    இன்னும் என்னன்னோவோ சொல்லிக்கொண்டே போகலாம்.
    இப்படி தனது மக்கள் நலனைக் காக்கவேண்டிய பொறுப்பு அரசருக்கு இருந்தது ...
    http://www.malartharu.org/2014/06/time-management-part-one.html

    ReplyDelete
  2. பேசாம அந்த ஆட்சியே நீண்டிருக்கலாமோ

    ReplyDelete