Thursday, October 31, 2013

தமிழ் வாழ்த்து- காவடி சிந்து வகை

*  உலகினில் சிறந்ததென் தமிழே- தங்கக்
                                                  குமிழே-உன்றன்

கனவினில் தொடர்ந்ததென் வழியே-உனைத்
தொடர தொடர மனம் சுடர சுடர தினம்
                                                       துடிக்கும் ம்- சிந்து
                                                        படிக்கும்


*  மதியினில் படருதுன் பாடல் - ஒரு
                                               நாடல்- எந்த

வயதிலும் தொடர்ந்துனைத் தேடும் - மது
பருகி பருகி தினம் பலமுறை படித்தனள்
                                                  மயலால்- இந்தத்
                                                   தையலால்    

*  உயிரினில் விளையுமென் மொழியே- அருள்
                                                             விழியே- இசைப்

பயிரதும் துளிர்ந்திடும் வழியே - சிறு
தழலிலெரியுமெனை தனதில் சுமந்தயிளம்
                                                        கொடியே-புகழ்க்
                                                          கொடியே

* மடமையில் உழலுது உலகம் - பல
                                                   கலகம்- எனின்

கடமையில் கவிகளே கமழும் - அவை
சிறக்க சிறக்க நலம் பிறக்க பிறக்க வந்து
                                                     அருளாய்-உயர்ப்
                                                       பொருளாய்

*****************************************************************                     

2 comments:

  1. ரவிச்சந்திரன்February 25, 2014 at 5:44 AM

    இனிக்கும் சந்தம் உங்கள் சொந்தமாய் ஆகி இருக்கிறது..வாழ்த்துக்கள்...உங்கள் கவிதைகள் கல்லூரியில் பாடமாக ஆக்கப்பட வேண்டும்...24 புத்தகங்கள் எனும் போது அது எளிய காரியமில்லை.... என் அன்பின் வாழ்த்துக்கள் எப்போதும் உங்களுக்கு உண்டு

    ReplyDelete
  2. முருகானந்தம்May 27, 2014 at 6:35 AM

    அடடா! இந்த தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஒரு பாரதியார்...ஒரு பாரதிதாசன் கிடைத்து விட்டாரடா...சுவாதி வாழ்த்துக்கள்...உன் தமிழுக்கு நான் அடிமை

    ReplyDelete