* வானம் எல்லாத்துக்கும் ஒன்னுதான்
பூமி எல்லாத்துக்கும் ஒன்னுதான்
ஆனா
அவன் மட்டும் மாளிகையிலே
நாங்க மட்டும் மண்குடிசையிலே
* ஓட்டுக் கேட்க வந்த போது
குனிஞ்சு குனிஞ்சு வந்தானே
பத்து ரூபாயும் குடுத்து
பத்துமினி ஓட்டலிலே
பாவாசச்சோறு வாங்கித் தந்தானே
இன்னைக்கு இட்லி அவனுக்கு தினப்பலகாரம்
எனக்கோ அதுவே தீவாளிப் பலகாரம்
* ஆத்தா வாங்கிக் கொடுத்த சட்டையிலே
சேறு அள்ளி பூசிப்போறானே
அவன் உறுப்படவோ - அவன்
குலம் நெறிபடவோ
மாத்துக்குத்துணியில்லையே
அதுக்கு வழி இல்லையே
* விளக்கு மாத்துப்பய
வீடுகட்டி தாரேன்னு சொன்னான்
விளைச்சல்ல வித்தை காட்டுவேன்னு சொன்னான்’
சாக்கடைக்கு சந்து கட்டுவேன்னு சொன்னான்
பட்டுக்கெடப்பான் சொன்னதை நம்பி
உரிமையை கொடுத்துப்புட்டோம் எங்க
ஊரையே எரிச்சுப்புட்டோம்
இவனுக்கு இட்லி தினப்பலகாரம்
எனக்கோ அதுவே தீவாளிப் பலகாரம்
* ஆரு ஆண்டா என்னா? எங்க
மருவப்பட்டி மட்டும் மண்ணாத்தானே போகுது
* ஊழல் ஊழல்ன்னு பேசிக்கிறாங்க
எனக்கு ஒன்னும் புரியலையே
இன்னைய ராச்சோத்துக்கு வழியில்லையே
* எம் புள்ளைக்கு என்ன சொல்வேன்
எம் பொஞ்சாதி கண்ணீர் வடிப்பா
பொழுதுக்கும் பொலம்பி முடிப்பா
கண்ணீருதான் எங்க வாழ்க்கையா
கவலைதான் வெறும் மேல்சட்டையா
இந்த ஊரு மாறுவதெப்போ?
எல்லாம் ஒண்ணா சேறுறதெப்போ?
************************************************
பூமி எல்லாத்துக்கும் ஒன்னுதான்
ஆனா
அவன் மட்டும் மாளிகையிலே
நாங்க மட்டும் மண்குடிசையிலே
* ஓட்டுக் கேட்க வந்த போது
குனிஞ்சு குனிஞ்சு வந்தானே
பத்து ரூபாயும் குடுத்து
பத்துமினி ஓட்டலிலே
பாவாசச்சோறு வாங்கித் தந்தானே
இன்னைக்கு இட்லி அவனுக்கு தினப்பலகாரம்
எனக்கோ அதுவே தீவாளிப் பலகாரம்
* ஆத்தா வாங்கிக் கொடுத்த சட்டையிலே
சேறு அள்ளி பூசிப்போறானே
அவன் உறுப்படவோ - அவன்
குலம் நெறிபடவோ
மாத்துக்குத்துணியில்லையே
அதுக்கு வழி இல்லையே
* விளக்கு மாத்துப்பய
வீடுகட்டி தாரேன்னு சொன்னான்
விளைச்சல்ல வித்தை காட்டுவேன்னு சொன்னான்’
சாக்கடைக்கு சந்து கட்டுவேன்னு சொன்னான்
பட்டுக்கெடப்பான் சொன்னதை நம்பி
உரிமையை கொடுத்துப்புட்டோம் எங்க
ஊரையே எரிச்சுப்புட்டோம்
இவனுக்கு இட்லி தினப்பலகாரம்
எனக்கோ அதுவே தீவாளிப் பலகாரம்
* ஆரு ஆண்டா என்னா? எங்க
மருவப்பட்டி மட்டும் மண்ணாத்தானே போகுது
* ஊழல் ஊழல்ன்னு பேசிக்கிறாங்க
எனக்கு ஒன்னும் புரியலையே
இன்னைய ராச்சோத்துக்கு வழியில்லையே
* எம் புள்ளைக்கு என்ன சொல்வேன்
எம் பொஞ்சாதி கண்ணீர் வடிப்பா
பொழுதுக்கும் பொலம்பி முடிப்பா
கண்ணீருதான் எங்க வாழ்க்கையா
கவலைதான் வெறும் மேல்சட்டையா
இந்த ஊரு மாறுவதெப்போ?
எல்லாம் ஒண்ணா சேறுறதெப்போ?
************************************************
சிந்திக்க வைத்த கேள்விகள்...
ReplyDeleteஇலவசத்துக்கு ஆசைப்பட்டு எல்லாத்தையும் இழந்துபுட்டோம் இனியாச்சும் புத்திவந்து எல்லாத்தையும் மாத்தி வைப்போம்..
ReplyDelete“ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பாநீ“ - பாவேந்தர்
புலம்பல் நிற்கும் காலமே
ReplyDeleteவறுமை ஒழியும் காலமே
கனவில் காணும் காலமே
கடிதில் வரட்டும் தோழி
உங்கள் இளகிய மனம் என்னை நெகிழ வைக்கிறது...வாழ்த்துக்கள் சுவாதி...
ReplyDelete