* உலகினில் சிறந்ததென் தமிழே- தங்கக்
குமிழே-உன்றன்
கனவினில் தொடர்ந்ததென் வழியே-உனைத்
தொடர தொடர மனம் சுடர சுடர தினம்
துடிக்கும் ம்- சிந்து
படிக்கும்
* மதியினில் படருதுன் பாடல் - ஒரு
நாடல்- எந்த
வயதிலும் தொடர்ந்துனைத் தேடும் - மது
பருகி பருகி தினம் பலமுறை படித்தனள்
மயலால்- இந்தத்
தையலால்
* உயிரினில் விளையுமென் மொழியே- அருள்
விழியே- இசைப்
பயிரதும் துளிர்ந்திடும் வழியே - சிறு
தழலிலெரியுமெனை தனதில் சுமந்தயிளம்
கொடியே-புகழ்க்
கொடியே
* மடமையில் உழலுது உலகம் - பல
கலகம்- எனின்
கடமையில் கவிகளே கமழும் - அவை
சிறக்க சிறக்க நலம் பிறக்க பிறக்க வந்து
அருளாய்-உயர்ப்
பொருளாய்
*****************************************************************
குமிழே-உன்றன்
கனவினில் தொடர்ந்ததென் வழியே-உனைத்
தொடர தொடர மனம் சுடர சுடர தினம்
துடிக்கும் ம்- சிந்து
படிக்கும்
* மதியினில் படருதுன் பாடல் - ஒரு
நாடல்- எந்த
வயதிலும் தொடர்ந்துனைத் தேடும் - மது
பருகி பருகி தினம் பலமுறை படித்தனள்
மயலால்- இந்தத்
தையலால்
* உயிரினில் விளையுமென் மொழியே- அருள்
விழியே- இசைப்
பயிரதும் துளிர்ந்திடும் வழியே - சிறு
தழலிலெரியுமெனை தனதில் சுமந்தயிளம்
கொடியே-புகழ்க்
கொடியே
* மடமையில் உழலுது உலகம் - பல
கலகம்- எனின்
கடமையில் கவிகளே கமழும் - அவை
சிறக்க சிறக்க நலம் பிறக்க பிறக்க வந்து
அருளாய்-உயர்ப்
பொருளாய்
*****************************************************************
இனிக்கும் சந்தம் உங்கள் சொந்தமாய் ஆகி இருக்கிறது..வாழ்த்துக்கள்...உங்கள் கவிதைகள் கல்லூரியில் பாடமாக ஆக்கப்பட வேண்டும்...24 புத்தகங்கள் எனும் போது அது எளிய காரியமில்லை.... என் அன்பின் வாழ்த்துக்கள் எப்போதும் உங்களுக்கு உண்டு
ReplyDeleteஅடடா! இந்த தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஒரு பாரதியார்...ஒரு பாரதிதாசன் கிடைத்து விட்டாரடா...சுவாதி வாழ்த்துக்கள்...உன் தமிழுக்கு நான் அடிமை
ReplyDelete