Thursday, October 31, 2013

குப்பைத்தொட்டியும் கோபுர பொம்மையும்

* வானம் எல்லாத்துக்கும் ஒன்னுதான்
    பூமி எல்லாத்துக்கும் ஒன்னுதான்
    ஆனா
     அவன் மட்டும் மாளிகையிலே
     நாங்க மட்டும் மண்குடிசையிலே

*  ஓட்டுக் கேட்க வந்த போது
     குனிஞ்சு குனிஞ்சு வந்தானே
      பத்து ரூபாயும் குடுத்து
      பத்துமினி ஓட்டலிலே
      பாவாசச்சோறு வாங்கித் தந்தானே
      இன்னைக்கு இட்லி அவனுக்கு தினப்பலகாரம்
        எனக்கோ அதுவே  தீவாளிப் பலகாரம்

*  ஆத்தா வாங்கிக் கொடுத்த சட்டையிலே
     சேறு அள்ளி பூசிப்போறானே
      அவன் உறுப்படவோ - அவன்
       குலம் நெறிபடவோ
       மாத்துக்குத்துணியில்லையே
       அதுக்கு வழி இல்லையே
       
*  விளக்கு மாத்துப்பய
    வீடுகட்டி தாரேன்னு சொன்னான்
     விளைச்சல்ல வித்தை காட்டுவேன்னு சொன்னான்’
     சாக்கடைக்கு சந்து கட்டுவேன்னு சொன்னான்
    பட்டுக்கெடப்பான் சொன்னதை நம்பி
    உரிமையை  கொடுத்துப்புட்டோம் எங்க
    ஊரையே எரிச்சுப்புட்டோம்
    இவனுக்கு இட்லி தினப்பலகாரம்
    எனக்கோ அதுவே  தீவாளிப் பலகாரம்

* ஆரு ஆண்டா என்னா? எங்க
    மருவப்பட்டி மட்டும் மண்ணாத்தானே போகுது

*  ஊழல் ஊழல்ன்னு பேசிக்கிறாங்க
    எனக்கு ஒன்னும் புரியலையே
     இன்னைய ராச்சோத்துக்கு வழியில்லையே

*  எம் புள்ளைக்கு என்ன சொல்வேன்
     எம் பொஞ்சாதி கண்ணீர் வடிப்பா
      பொழுதுக்கும் பொலம்பி முடிப்பா
      கண்ணீருதான் எங்க வாழ்க்கையா
      கவலைதான் வெறும் மேல்சட்டையா
      இந்த ஊரு மாறுவதெப்போ?
       எல்லாம் ஒண்ணா சேறுறதெப்போ?

************************************************

4 comments:

  1. சிந்திக்க வைத்த கேள்விகள்...

    ReplyDelete
  2. இலவசத்துக்கு ஆசைப்பட்டு எல்லாத்தையும் இழந்துபுட்டோம் இனியாச்சும் புத்திவந்து எல்லாத்தையும் மாத்தி வைப்போம்..
    “ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பாநீ“ - பாவேந்தர்

    ReplyDelete
  3. புலம்பல் நிற்கும் காலமே
    வறுமை ஒழியும் காலமே
    கனவில் காணும் காலமே
    கடிதில் வரட்டும் தோழி

    ReplyDelete
  4. ரவிச்சந்திரன்February 25, 2014 at 5:46 AM

    உங்கள் இளகிய மனம் என்னை நெகிழ வைக்கிறது...வாழ்த்துக்கள் சுவாதி...

    ReplyDelete