Thursday, October 31, 2013

ஒளி காட்டும் வழி

சிந்திக்கும் நிலையினை சிந்தையில் கொள்ளவே
      சிறப்பதை அள்ள வேண்டும்
சந்திக்கும் நபரெலாம் சாதனை செய்வரோ
     சரித்திரம் மாண்பு பேசும்
எண்ணத்தில் ஏற்றமும் எழிலினில் மாற்றமும்’
    ஏந்தியோர் என்றும் வெல்வர்
திண்ணைமாய் வாழவே திகழட்டும் தமிழ்குணம் 
     தீரமாய் வழியும் செய்வோம்

உயர்ந்தொரு இலட்சியம் உளத்திலே கொண்டிட
    உள்ளத்தில் அதனை ஏற்று
அயர்ந்துமே போகாத அறிவினைப் பெற்றிட
    அவலமே போக்க வேண்டும்
தயக்கமே இன்றியே தண்டமிழ் துணையினில்
     தலைமையே ஏற்க வேண்டும்
பயனுள்ள பாதையில் பண்உறு நிலையினில்
     பகுத்துமே பதிக்க வேண்டும்

திடத்தினில் மனதையும் திறமென செய்திட
    தீரமே தினமும் வருமே
மடத்தையும் போக்கிட மானுடப்புரட்சியே
     மன்றதில் செயலிட மகிழுறும் 
இடமெலாம் வழியென இதயத்தில் கொண்டுமே
    இன்முகம் என்றும் பெறவே
தடமெனப் பதித்திடும் தண்டமிழ் ஒளியதும்
    தகையென கண்ட வழியாம்
     
4 comments:

  1. அருமை... இணைப்பை நடுவர்களுக்கு அனுப்புகிறேன்... நன்றி...

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம்

    தங்களின் மின் அஞ்சல் சுமந்த கவிதை வந்து கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தங்களின் போட்டிக்கான கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.

    போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.....

    என்பக்கம் புதிய பதிவாக கவிதைப்போட்டியில்பங்குபற்றியவர் தகவல் விபரம்-http://2008rupan.wordpress.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம்

  4. அருமையான கவிதை முத்து முத்தாக எழுதியிருகிறீர்கள்.

    தொடரவாழ்த்துக்கள்.....!

    ReplyDelete