Friday, November 13, 2015

கடவுளைக் கண்டேன்

1. இந்தியா முழுவதும் குழந்தைகள் அரசுப் பள்ளியில் தான் படிக்க வேண்டும்
( தனியார் பள்ளி முதலாளிகளுக்கு அதற்கு உரிய காசை கடவுளே கொடுத்து விட வேண்டும்...அவுங்களும் பாவம் ல.)

2. அனைத்து தொழில் நுட்பக் கல்லூரிகளும் இந்தியாவுக்குள் வர  வேண்டும். இங்கே வந்து படிக்க வேண்டும். வேலை பார்க்க வேண்டும் என்று எல்லோரும் (அயல் நாட்டில்) கனவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

3. டாஸ்மாக்கை மூட வேண்டாம். அது திறந்தே கிடக்கட்டும். ( ஆனால் ஒருத்தர் கூட அங்கே போகக் கூடாது)( எப்பூடி? என்னைக் கைது பண்ண முடியாதுல்ல)

4. இந்தியாவுக்குள் மட்டுமே சுற்றுப் பயணம் செய்யும் பிரதமர் வேண்டும். ( வருடத்திற்கு ஒரு முறை 10 நாள் விடுப்பில் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம் என்ற சலுகை என்னால் அளிக்கப்பட்டு விட்டது)

5. அமைச்சர்கள், மற்ற உயர் அதிகாரிகள் அனைவரும் சாதாரண டவுன் பஸ்ஸைத் தான் உபயோகிக்க வேண்டும். ( தனியாரிடம் யாரிடமும் கார் வசதி இருக்கக் கூடாது...நான் உள்பட)

6. பெண்களைக் கொச்சையாகத் திட்டும் திரைப்படங்கள், பெண்களை கேவ்லமாக , எழுதும் எழுது கோல்கள் உடைந்து போக வேண்டும்..திரைப்படங்கள் தீக்கிரையாக வேண்டும்.

7. உலகத்தில் எந்த மூளையில் புத்தகங்கள் வெளியிட்டாலும் அது அடுத்த நொடியே எனக்கு அனுப்பி வைக்கப் பட வேண்டும்.

8. எனது 50 வயதிற்குள் நான் எனது 100வது புத்தகத்தை வெளியிட வேண்டும்.

9. உலகத்தின் உச்ச விருதுகள், வழங்குவதற்கு என் அனுமதி பெற்றே வழங்க வேண்டும்.நோபல் உள்பட.

10. எனக்குள் எப்போதும் நேர்மறை எண்ணங்கள் மட்டுமே வளர வேண்டும்.

*********************************************************************************

நான் பரிந்துரைக்கும் 10 நபர்கள்
******************************

1.    http://www.jokkaali.in/

2. http://bharathidasanfrance.blogspot.in/2015/11/blog-post_10.html

3.http://oomaikkanavugal.blogspot.com/

4. http://manamkondapuram.blogspot.com/

5.http://timeforsomelove.blogspot.in/

6. http://kaarigan-vaarththaiviruppam.blogspot.in/

7.http://inithuinithu.blogspot.in/

8.http://saamaaniyan.blogspot.in/

9.http://unmaiyanavan.blogspot.in/

10.http://gobisaraboji.blogspot.in/2015/11/blog-post.html

இதுல இத்தனை பேருகளை  ஏற்கனவே வேறு யாராவது கோர்த்திருந்தால்கம்பெனி  (நான் )பொறுப்பல்ல.
********************************************************************************8

43 comments:

 1. சுவாதியும் அவரது சுவாரசிய பத்து ஆசைகளும் என்றே தலைப்பு கொடுத்திருக்கலாம் !
  #ஏற்கனவே வேறு யாராவது கோர்த்திருந்தால்கம்பெனி (நான் )பொறுப்பல்ல.#
  இப்படி பொறுப்பைத் தட்டிக் கழித்தால் கம்பெனி ஆக்ட் 007ன்படி கடுமையான தண்டனை உண்டு தெரியுமா :)

  ReplyDelete
  Replies
  1. கம்பெனி சில ரூல் களுக்கு மட்டுமே பொறுப்பேற்கும்....( தங்கள் வருகைக்கு நன்றி)

   Delete
 2. ஆத்தாடி....! ஆசைகள் பலவிதம்...!

  ReplyDelete
  Replies
  1. ஆமா...ஒவ்வொன்றும் ஒருவிதம்....

   Delete
 3. உங்கள் கம்பெனிக்காக வேண்டிக் கொள்கிறேன். உங்களது ஆசைகள் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் உலகின் மகா உத்தமஎ...உங்களுக்கு என்ன விருது வேண்டும்???( பார்சல் அனுப்பப்படும்)

   Delete
 4. உங்களின் ஆசைகள் நல்ல ஆசைகள்தான்

  ReplyDelete
  Replies
  1. இது சரியான பதில்...உங்களுக்கு 100 க்கு 200 மதிப்பெண்கள்

   Delete
 5. // இந்தியா முழுவதும் குழந்தைகள் அரசுப் பள்ளியில் தான் படிக்க வேண்டும்
  ( தனியார் பள்ளி முதலாளிகளுக்கு அதற்கு உரிய காசை கடவுளே கொடுத்து விட வேண்டும்...அவுங்களும் பாவம் ல.)//

  நீங்க தனியார் பள்ளியில் பணி செய்கிறீர்களா அல்லது நடத்துகிறீர்களா?

  ReplyDelete
  Replies
  1. நான் அரசுப் பள்ளி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்...( அவுக மனசு புண்படக் கூடாது பாருங்க...நாம முதலாளின்னு தான் சொன்னோம் கவனிச்சீகளா?)

   Delete
 6. ///டாஸ்மாக்கை மூட வேண்டாம். அது திறந்தே கிடக்கட்டும். ( ஆனால் ஒருத்தர் கூட அங்கே போகக் கூடாது)( எப்பூடி? என்னைக் கைது பண்ண முடியாதுல்ல)///

  என்ன டோர் டெலிவரி செய்துவிட்டா போச்சு.....

  ReplyDelete
  Replies
  1. விலலங்கம் பிடித்தவர்களும் இருப்பார்கள் என்பதை நினைத்தே பாக்கலையே....இந்த விமர்சனத்துக்கு கம்பெனி பதில் சொல்லாது...விடு ஜூட்

   Delete
 7. //இந்தியாவுக்குள் மட்டுமே சுற்றுப் பயணம் செய்யும் பிரதமர் வேண்டும். ( வருடத்திற்கு ஒரு முறை 10 நாள் விடுப்பில் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம் என்ற சலுகை என்னால் அளிக்கப்பட்டு விட்டது)//

  இந்த ஆசை ரொம்ப அதிகம் இதற்கு பதிலாக அமெரிக்காவிற்கு இந்தியாவில் இருந்தே ரோடு போட்டு விடலாம்..


  இந்தியாவிற்கு நல்லது செய்யும் பிரதமர் வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டு இருக்க கூடாதா..

  ReplyDelete
  Replies
  1. மறுபடியும் பாருங்க...இதுன்னா அதுன்னு தான் பொருள்....அதுன்னா இதுன்னு தான் பொருள்....

   Delete
 8. ///அமைச்சர்கள், மற்ற உயர் அதிகாரிகள் அனைவரும் சாதாரண டவுன் பஸ்ஸைத் தான் உபயோகிக்க வேண்டும். ( தனியாரிடம் யாரிடமும் கார் வசதி இருக்கக் கூடாது...நான் உள்பட)..மக்களே இப்படி ஆசைப்பட்டால்//

  இனிமேல் வசதியான கார்கள் அனைத்தும் டவுன் பஸ்ஸாக செயல்படும் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கு மட்டும்

  ReplyDelete
  Replies
  1. ஹையோ...ஹையோ....சாமி ஒரே சிப்பு சிப்பா பேசுது....( அடடா...என்ன மூளை...என்ன மூளை...?)

   Delete
 9. //உலகத்தில் எந்த மூளையில் புத்தகங்கள் வெளியிட்டாலும் அது அடுத்த நொடியே எனக்கு அனுப்பி வைக்கப் பட வேண்டும்.//

  ஏய் யாரங்கே முதலில் கவிதையை எழுதி புத்தமாக வெளியிட்ட அனைத்து புத்தங்களையும் இவருக்கு அனுப்பி வையுங்கள். அதை படித்து இவர்கள் தன் ஆசை தப்புதான் என்று கதறி கதறி அழவேண்டும்

  ReplyDelete
  Replies
  1. இதைப் படித்து விட்டு சூர்யா கதறிக் கதறி சிரித்தாள்...இப்படி பச்ச புள்ளகிட்ட...பம்ம வச்சுப்புடீயளே

   Delete
 10. //எனது 50 வயதிற்குள் நான் எனது 100வது புத்தகத்தை வெளியிட வேண்டும்.//

  பதிவர்கள் தாங்கள் வெளியிடும் புத்தகங்களை இவர் மூலம் வெளியிட்டு இவரின் ஆசையை பூர்த்தி செய்யுங்கள்

  ReplyDelete
  Replies
  1. வேணாம் வலிக்குது...அழுதுருவேன்...

   Delete
 11. ///உலகத்தின் உச்ச விருதுகள், வழங்குவதற்கு என் அனுமதி பெற்றே வழங்க வேண்டும்.நோபல் உள்பட.//

  ஆனால் அதை திருப்பி கொடுக்க என்னிடம் அனுமதி வாங்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. சரி ...சரி...நம்க்குள்ள ஒரு டீல் போட்டுக்கலாம்...

   Delete
 12. கனவு மெய்ப்பட வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. வருக...வருக....தங்கள் வருகைக்கும் ஆசிக்கும் நன்றி ஐயா...

   Delete

 13. வணக்கம்!

  சிரிக்க எழுதியவை! சிந்தனைப் பூக்கள்
  விரிக்க எழுதியவை! வெல்வீர்! - வரித்துரைத்த
  மின்பூவில் என்னுடைய பண்பூவும் ஈந்துள்ளீர்!
  இன்பாவில் தந்தேன் இனிப்பு!

  பாட்டரசர் கி. பாரதிதாசன்
  தலைவர்:
  கம்பன் கழகம் பிரான்சு
  உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்குள் ஒரு மகா...நதி பெருக்கெடுத்து ஓடுகிறது..வெண்பாவாய் வீசுகிறது.

   Delete
 14. கனவுகள் நிறைவேற்ட்டும் சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு இனிதான நன்றி..

   Delete
 15. வணக்கம்
  கனவுகள் மெய்ப்பட வேண்டும்... வித்தியாசமாக அசத்தி விட்டீர்கள். இப்படியான தொடர் பதிவுகள் பதிவர்களுக்கு ஒரு உச்சாகம் த.ம7
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ஆம் .நல்ல உற்சாகமாய் இருந்தது...என் மகள் களும் எழுதியிருக்கிறார்கள்..இதை வைத்து பெரிய கல கலப்பு வீட்டில்..நன்றி கில்லர்ஜிக்கும் உங்களின் கருத்துப் பதிவுக்கும்

   Delete
 16. 01. மிகவும் உயரிய ஆசை டீச்சர் என்பதாலோ ? வாழ்த்துகள்
  02. சந்தடி சாக்குல யாரையோ இடிக்குதே...
  03. ஆளுங்கட்சிக்கு ஆப்பு
  04. அப்படீனா.... நீங்கதான் குடியரசு தலைவர்
  05. கார் கம்பெனிக்கு ஆப்பு
  06. எழுதுகோல் உடைந்து போகவேண்டும் என்பதைவிட எழுதிய விரல்கள் ஒடிக்கப்பட வேண்டும் என்பதே சிறப்பாகும்
  07. நான் ஜப்பான் மொழியில் எழுதினாலுமா ?
  08. ஆசைகள் நிறைவேற எமது வாழ்த்துகள்....
  09. நியாயம்தானா ?
  10. அருமை வாழ்த்துகள்.

  அழகாக ஆசைகளை தொடுத்த டீச்சருக்கு எமது வாழ்த்துகள்
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  தமிழ் மணம் 7

  ReplyDelete
  Replies
  1. அவரும் உங்களைப் போல் சிங்கப்பூரில் பணியாற்றிவர் தான்...( பணியாற்ற துடித்துக் கொண்டிருப்பவரும் கூட...வருகைக்கு நன்றி

   Delete
 17. மறந்து விட்டேன் டீச்சரிடம் மன்னிப்பு கோரல் காரணம் நேற்று முழுவதும் வெளி வேலை ஆகவே தாமதமாக இன்றுதான் படிக்க முடிந்தது – கில்லர்ஜி

  ReplyDelete
  Replies
  1. ஆஹா...வந்ததே...நன்று,,,,கலகலப்பு ஏற்படுத்தி விட்டீர்கள்...அதற்கே கூடுதலாக ஒரு நன்றி..சக்தி..சூர்யாவின் எழுத்துக்களைப் படித்தீர்களா

   Delete
 18. டீச்சருக்கு இவ்வளோ ஆசைகளா??? உண்மையில் நல்ல ஆசைகள் தான்.. நிறைவேறினால் எவ்வளவு அருமையாக இருக்கும்...

  ReplyDelete
 19. ஆஹா அனைத்தும் அருமையான ஆசைகள் தான், வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. 3 - நச், 7 - அட வாவ், 8 - நான் இவங்களோட இருபதையே இன்னும் நெருங்கலையே :)
  அனைத்து ஆசைகளும் அருமை!

  ReplyDelete
 21. ரொம்ப பெரிய ஆளா இருக்கீங்க.நாம என்னங்க உங்க படைப்பை பற்றி சொல்ல?

  ReplyDelete
 22. கனவு மெய்ப்படட்டும் சுவாதி

  ReplyDelete
  Replies
  1. நன்றி எட்வின் ஐயா....( வருக...வருக...வருக....தங்களின் வருகை எனது உவகை)

   Delete