Monday, December 22, 2014

பள்ளி செய்தி

இன்று நத்தம்பண்ணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாக் கொண்டாட்டம் நடத்தப்பட்டது. விழாவினை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அருள் அவர்கள் துவக்கி வைத்தார்கள். 
விழா கொண்டாடுவதின் நோக்கமே நாம் அனைவரும் இன்ன சாதி இன்ன மதம் என்று நமக்கு நாமே பிரிந்து கொள்ளாமல் உற்சாகத்தோடு பலரோடும் இணைந்து பழகும் வாய்ப்பாக ஏற்று அனைவரோடும் பழக வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர் மதம் கடந்து விழா ஏற்பாடு செய்தமைக்கும் போட்டிகள் வைத்து ஊக்குவிப்பதற்கும் அவர்களைப் பாராட்டுகிறேன். மேலும் ப்ஞ்சாயத்து தலைவரின் இணைச் செயல்பாடுகள் அனைத்தும் பாராட்டும் படியாக இருக்கிரது. இது போன்று அனைத்து ஊரிலும் இருந்தால் தொடக்கக் கல்வி மிக அருமையாக அனைவரிடமும் எட்டும். அதன் மூலம் நமது இந்தியா மேலும் வல்லமை பெறட்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.
தலைமை ஆசிரியர் சுவாதி தன் உரையில் உலகில் 2000 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள பைபிள் தான் தமிழில் முதன் முதலாக அச்சாக்கம் செய்யப்பட்டது. பைபிளில் உள்ள சங்கீதம் மற்றும் நீதிமொழிகள் அனைவரையும் ஈர்ப்பதாகும். என்றார்
கல்வியாளர் சரஸ்வதி நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.
உதவி ஆசிரியர் ஜெகஜோதி நன்றியுரை ஆற்றினார். மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.


1 comment:

  1. இந்தியா மேலும் வல்லமை பெறட்டும்....

    ReplyDelete