Sunday, November 1, 2015

நேசிப்பே சுவாசிப்பாய்...

கனவுக்காட்சிகள்...கல்கியின்....தீபம்....07...கவிஞர் சுவாதி
*********************************************************



பிரியத்தின் தன்மையே, பிரியமானவர்களை, பிரியமான வடிவங்களில் மட்டுமின்றி, பிரியமற்ற உருவங்களிலும் கோர்த்துப் பார்ப்பது. அன்புக்கு மட்டும் எல்லையே இல்லை. அன்பு செய்யாமல் வாழ்க்கையே இல்லை. பிறப்பால் மருணீக்கியாராக இருந்து சமண சமயத்தைத் தழுவி தருமசேனராகி, திருநாவுக்கரசராய் சைவத்துக்குத் திரும்பியவர். சிவன் மேல் இருந்த பக்தியோ, தன் தந்தை சிவனடியார்களைத் தொழுததன் பயனோ தெரியவில்லை: அப்பூதியடிகள், சிவனடியார்கள் என்றால் உயிரையும் கொடுப்பார்: உயிராய் இருப்பார்:

திருநாவுக்கரசரின் வாழ்க்கை தெரிந்தபின் அவரின் பக்தர் ஆனார். தொண்டர் ஆனார்: அவராகவே ஆனார்; அந்த அன்பை இதற்கு மேல் விளக்க முடியாது. அன்பின் ஆற்றலை, அன்பு கொண்டவரின் முகத்தை, காணும் முகமெல்லாம் தேடுவது; செய்யும் தொழில், பேசும் பேச்சு எல்லாவற்றையும் அவரைப் போலவே ஆக்கிக் கொள்வது, அன்பு கொண்டோரை அன்பால் தடவுவது போலவே அவர் பெயர் கொண்ட எவரையும், எதனையும் நேசிப்பது.

அப்படித்தான் ஆக்கிக் கொண்டார் அப்பூதியடிகள். தன் மகன் பெயர் திருநாவுக்கரசு. தோட்டம் திருநாவுக்கரசு, வீட்டின் பெயர் திருநாவுக்கரசு, தான் வைத்திருந்த மாடுகளின் பெயர் திருநாவுக்கரசு, தான் நிர்வகித்த பால் விற்பனை நிலையம், மண்டபங்கள், என்று அவர் தொடர்புடைய எதுவும், எவரும் திருநாவுக்கரசு தான். மாடுகளைக் குளிப்பாட்டும் போது கூட திருநாவுக்கரசரின் நினைவு வந்து தலை சீவி, அன்பு சுரந்து அதனோடும் பேசிக் கொண்டே நீராட்டி விடுவார்.

இப்படி ஒரு அன்பு உலகில் இருக்குமா? இருந்தது. அது அப்பூதியடிகளின் அன்பாய் இருக்கும். பார்க்காமல், பேசாமல், அவரோடு எந்தவிதத் தொடர்புமின்றி இதெப்படி சாத்தியம் என்று விளங்கவில்லை. ஆனால், இதயத்தின் ஈர்ப்பால் தன் வாழ்நாளுக்குள் என்றேனும் ஒரு நாள் சந்தித்து விடுவது என்றும் முடிவெடுத்திருந்தார்.

அன்றாடம் அவருக்குள் எழுந்ததும் இதே சிந்தனைதான். “இன்றேனும் நான் திருநாவுக்கரசரைக் காண்பேனா?

ஏனெனில் , யாரிடம் அன்பு கொண்டுள்ளோமோ அவர்களிடம் தன் அன்பைத் தெரிவிக்கும் போது அவர்களிடமும் ஒரு அன்பு ஊற்றாகுமே....அந்த அன்பின் ஊற்றுக்கு இணை, அந்த இன்பத்துக்க இணை இந்தப் பிரபஞ்சத்தில் வேறு ஏதுமில்லை.

அந்த அன்பை உரியவர்களிடம் சேர்பித்து விடுவது தான், அன்பு கொண்டதற்குக் கிடைக்கும் அங்கீகாரம். எனவேதான், அப்பூதி தனக்குள் எப்போதும் இதையே நினைத்தார்; இல்லை துதித்தார். ஒரு செயல் நமது நடைமுறையாய் மாறிவிடும் போது, அதனைப் பற்றிய செயல்பாடுகள் அதிகம் இருக்கும் என்பது தானே கடவுளின் கட்டளை.

அப்படித்தான், எந்தக் கதவுகளையும் தட்டாமல் அவர் ஒரு கனவு கண்டார். திருநாவுக்கரசரை அவர் சந்திக்கிறார். அவர் வீட்டில் திருநாவுக்கரசர் உணவு உட்கொள்கிறார். ஆனால், வாழை மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது, கண்ணீரோடு அவரும் அவர் மனைவியும் சிவனைத் தொழுகின்ற்னர். சிவனைத் தொழுததும் எல்லா வருத்தமும் மறைந்தது. பழையபடி கிழக்கில் சூரியன் தோன்றுகிறான். இது தான் அவருடைய கனவு.

அந்த வாரம் முழுவதும் அவருக்கு அதே கவலை எழுந்தது.”ஏன் வாழை மரம் அடியோடு சாய வேண்டும். ஆனால், சிவபெருமானும் கிழக்கில் சூரியனும் தோன்றியது நல்ல சகுனம் தான். ஆனால்....ஆனால்...? என்று தவித்தவர் கடைசியில் துள்ளிக் குதித்தார்.

யாருக்கு எல்லாப் பெயரும் சூட்டி, யாரை இவ்வளவு காலம் நேசித்தோமோ அவரைக் காணப்போகிறோம், அவரைக் கண்டுவிட்டால், இந்த உலகத்தில் அனைத்து துன்பங்களும் தூசிக்குச் சமானம் அல்லவா? வரும் நன்மையைப் பற்றி நினைக்காமல் தீமையை நினைத்த மனம், புழுங்கிய தன் மடமையை தானே கடிந்து கொண்டார். நொந்து கொண்டார். இப்படித் தோன்றியதும் மனம் துள்ளியது.

கனவில் அவர் முகத்தைச் சரியாகக் காண முடியவில்லை. நேரில் பார்க்க ஆவலும், ஆசையும் அதிகமாகியது. மனைவியிடமும் கனவைச் சொல்ல வில்லை. சொன்னால் வருந்துவாள். தான் செய்யும் செயல்களில் ஏதும் குறை ஏற்பட்டதோ, அதனால் தான் தனக்குக் கனவிலும் கூட தரிசனம் இல்லையோ என்று மயங்குவாள், எனவே, அவளிடம் சொல்லத் தயக்கமாய் இருந்தது.

எப்போது பார்ப்போமோ என்று ஏங்கிய மனதுக்கு எப்போதேனும் பார்ப்போம் என்று ஒரு விடை கிடைக்கிறது. ஆனாலும், கேள்வி எழுகிறது. எப்போது காண்போம் என்று. அது இன்ராய் இருக்க வேண்டுமென்று ஒவ்வொரு நாளும் துடிக்கிறது.

அப்படித்தான் அன்று காலையில் இருந்தே ஏதோ ஒரு பரபரப்பு அப்பூதிக்குக் காணப்பட்டது. என்னவென்றே சொல்ல இயலாத உற்சாகம் தென்பட்டது. மனசுக்குள் சிறகு முளைப்பது போலவே இருந்தது. என்ன உணர்வென்று புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறினார். தன்னை நினைத்து தனக்கே ஆச்சரியமாய் இருக்கிரது. ஒருவரின் மேல் கொண்ட அன்பு வற்றாமல் பெருகுமா? அதுவும் பார்க்காமல், பேசாமல், ஏன் இப்படி என்று கேள்வி எழுப்பிக் கொள்கிறார்.

மறைமுகமாக வேறொன்றும் நடந்திருக்கிறது. அவருக்கு மன ஈடுபாடு இல்லாமல் செய்த சில வேலைகள் திருநாவுக்கரசு என்ற பெயரால் காப்பாற்றப் பட்டன. மேலும் ஓங்கின. அந்தந்த இடத்தில் பணி புரிந்த ஊழியர்கள் தங்கள் விசுவாசத்தைக் காட்ட தாங்களும் திருநாவுக்கரசு என்று பெயர் மாற்றிக் கொண்டு மிகக் கடுமையாக உழைக்க ஆரம்பித்தனர்- தம் எஜமானரின் கவனைத்தைக் கவர.

இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் தான் சிவனடியார் ஒருவர் வருகிறார். அன்பு கொண்ட முகத்துரன். வந்தவரை வரவேற்று, “இன்று இங்கே சாப்பிட வேண்டும் “ என்று வேண்டுகோள் வைத்து விட்டு முகம் பார்க்கிறார். வந்த சிவனரியாரின் முகத்தில் கேள்விகள். அது வார்த்தைக்யிலும் வெளிப்பட்டது.

“உமது தொழில் நிறுவனங்களில் உம் தந்தை பெயரோ, உம் பெயரோ அன்றி வேறு ஒருவர் பெயர் ஏன் வைத்தீர்?” என்று மறு நிமிடம் கோபம் வந்தது அப்பூதிக்கு. தன் உயிரினும் மேலான திருநாவுக்கரசரை யாரோ ஒருவர் என்பதா? தன் உயிரை வேறு ஒருவர் என்று சொல்ல முடியுமா? அதை நினைத்தால், கேட்டால் தாங்குமா?

“தரும சேனராயிருந்து சிவனின் அன்பால் மாறிய திருநாவுக்கரசரை அப்படிச் சொல்லாதீர்கள். சிவனடியார் என்பதால் தப்பித்தீர்” என்றார் சினத்துடன் அப்பூதி. “ சூலை நோய் வந்து திருநாவுக்கரசரான சிறியவன் அடியேன் தான்.” அன்று உரைத்தார் வந்தவர்.

நாவுக்கரசரைத் தரிசிக்கப் போகிறோம் என்கிற கனவு பலிதமானதில் ஆனந்தம் அப்பூதி அடிகளுக்கு.(வம்சத்தை தழைக்க வைக்க வந்த வாழை மரமான மைந்தன் பாம்பு தீண்டி இறந்து பட, நாவுக்கரசர் பாட சிவனருளாலே அவன் மீண்டெழுந்ததும் நான் ஏற்கெனவே அறிந்ததுதானே!) நடக்கக்கூடிய கனவுகள் முன்னாலேயே தோன்றும் என்பதற்கு, அப்பூதியடிகளின் கனவு ஆனந்தமான ஆதாரம்.

(காண்போம்)

****************************************************************************888


9 comments:

  1. ஆனந்தமான ஆதாரத்தை தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
    2. வலைதளத்தில் அவரவர்கள் கருத்துரைகலை எப்படி இணைப்பது என்று தெரியவில்லை...நான் பின்பற்றும் வலைதளத்தை என் வலைதள பக்க பதிவுகளில் எப்படி கொண்டு வருவது தெரியவில்லை...பல தெரியவில்லைகள்...உங்களிடம் எப்போது கற்றுக் கொள்வதோ????

      Delete
  2. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. நாயிற்கடையேனாய் என்று தம்மை கூறிக்கொண்ட நாவுக்கரசப்பெருமானின் வரலாற்றைப் படிக்கும்போது மனம் நெகிழ்கின்றது. அண்மையில்தான் நாவுக்கரசர் தேவாரம் (4,5,6 திருமுறைகள்) படித்து நிறைவு செய்தேன். தங்களின் பதிவைப்படித்ததும் நான் படித்த தேவாரப் பாடல்கள் நினைவிற்கு வந்தன. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா.அதனை பக்தி இலக்கியம் என்று ஒதுக்காமல், தமிழ் என்று...நாத்தீகவாதிகளும் படிக்க வேண்டும்...இனிய தமிழ் ..நன்றி

      Delete
  4. அருமை சகோ வாழ்வாதார உண்மைகள் பல அறிந்தேன் நன்றியுடன் தொடர்கிறேன்
    தமிழ் மணம் 3

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி...( உங்கள் வலைதளத்தில் உங்கள் போட்டோ எரிப்பது போல் இருந்த படம் பார்த்து அதிர்ந்தேன்..)

      Delete