Monday, September 28, 2015

விளைநிலம் காப்போம்

விளைநிலம். காப்போம் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 5 மரபுக்கவிதை


வேதியல் உரத்தை விளைநிலம் கொட்டி
விதைகள் முளைக்கச் செயலாமோ?
நீதியி  ல்லாமல் நெறிமுறை தவறி
நிம்மதி கெடவே விடலாமோ?

பூமியின் அடுக்கு புண்ணாய்க் கிடக்கு
புரிதலைக் கொண்டு வருவோமா?
நாமிதை இன்றே தொடங்கலை என்றால்
நலம்கெடும்; பூமியும்; விடலாமோ?

இயற்கை வளத்தை பெருக்க நாமும்
இன்றே விரைவோம்; வாருங்கள்;
செயற்கை ஒழித்தே செயலது தொடங்க
சிந்தனை செய்வோம் கூடுங்கள்

களர் என நிலத்தை கருத்தினில் மறைத்தோம்
காங்கிரீட் ஆகி வதைத்திடுதே
உளமுள யாரும் உருகவே வருக
ஊற்றாய் பெருக விதைத்திடுவோம்

மரமதை வெட்டி வீடுகள் கட்டி
மண்வதை செய்தோம்; கொய்தோமே
தரமதை இழந்தோம்;தாழ்மையும் பெற்றோம்;
தலையதும் நிமிர உய்வோமே

இனியெனும் நிலத்தை இயற்கை வளத்தை
இனிதாய் காக்க வாருங்கள்
கனியெனும் வாழ்வும் கரமதைநீட்ட
கவினாய் ஒன்று கூடுங்கள்
***********************************************
Image result for விளைநிலம்

No comments:

Post a Comment