Tuesday, December 9, 2014

பேச்சுப்போட்டி

இன்று பள்ளியில் தூய்மை, சுத்தம் என்று பல்வேறு தலைப்பு கொண்டு பேச்சுப்போட்டிநடத்தப்பட்டது
(எல்லோருக்கும் நானே தான் எழுதித் தந்தேன்....
நானே தான் நடுவர்)
ஒரு மாணவன் அவனுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் முழுவதிலும் முதல் வரி மட்டும் தான் சொன்னான் .முதலில் அனைவருக்கும் வணக்கம் என்பதையும்... கடைசியில் நன்றி என்பதையும் மறக்காமல் சொன்னான்.
சிலர் எழுதிக் கொடுத்ததைவிட சொல்லிய விதம் அருமை
இரண்டு மாணவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்துவிட்டு அவர்கள் நேரம் முடிந்ததை அறிவித்ததும் நாக்கைக் நீட்டிக் கடித்துக் கொண்டு இடம் அமர்ந்தனர்.
ஒரு மாணவி அச்சச்சோ மறந்து போச்சு...என்று சொல்லி சட்டைப்பையில் வைத்துக் கொண்ட காகிதத்தைப் பார்த்துக் கொண்டாள்.(இரண்டு முறை)
ஒருமாணவி இடுப்பு, கை, கால் என்று அவளுக்கு எதையெல்லாம் ஆட்டவேண்டும் என்று தோன்றியதோ அதையெல்லாம் அடிக்கடி ஆட்டிக்கொண்டாள்.
ஒரு மாணவி அந்த ஊருக்கே கேட்கும் அளவிற்குக் கத்து கத்து என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள்.( நாஙகள் ஏதோ அடிப்பதாக இரு பெற்றோர்கள் வேவு பார்க்க வந்தனர். )
ஒரு மாணவன் பல வார்த்தைகளை விட்டு விட்டு சொன்னான். ஆனால் அவன் விடுபட்டதை உணர்ந்ததாக முகக் குறிப்பில் கடைசிவரைக் காட்டவில்லை
எல்லோரிடமும் ஏதோஒரு வகையில் ஒரு குறை அல்லது பல குறைகள் தென்பட்டது.
ஆனால் கடைசியில் எல்லோருக்கும் நான் சொன்னது...டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்......பிள்ளைகளாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்னடா....இப்படி அற்புதமாப் பேசினிங்க...உங்கப் பேச்சுக்கேட்கக்கேட்க மிஸ்ஸுக்கு ரொம்பப் பிடிச்சுதுடா......அப்பூடி நல்லாபேசினிங்கடா...என் தங்கப்பிள்ளைகளா.......நாளைக்கு எல்லோருக்கும் என் சார்பில் பரிசு.....சரியா? என்றேன்....
சந்தோசமாயிருக்குடா......இந்த குக்கிராமத்திலிருந்து இப்படி....நான் எழுதிக்கொடுத்ததை அற்புதமா கலக்கிட்டிங்க...ன்னு சொன்னதும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சி...அப்புறம் மகிழ்ச்சி....எல்லோருக்கும் கை கொடுத்தேன்.....கலந்து கொள்ளாத மாணவர்களும் கை குலுக்கிக் கொண்டார்கள்...
அடடா....ஒரு பொய் அவர்கள் மனதை என்னமா சந்தோஷமாக்கி ..........?அவர்கள் அடுத்த முறை இன்னும் நன்றாக பேசுவார்கள் என்று நம்புவோமாக.....( பேசுவார்கள் தானே)
என் மாணவர்கள் நலமோடும், அறிவோடும், ஆற்றலோடும் வாழ அன்னையாய் என்னை நினைத்துக் கொண்டு வாழ்த்துகிறேன்.

6 comments:

  1. உண்மைதான் இப்படியும்கூட ஊக்குவிக்கலாமே... இதை நிறைய ஆசிரியர்கள் உணர்வதில்லை எனது நகைச்சுவை பதிவு காண வருக...

    த.ம. 1

    ReplyDelete
  2. அடுத்த முறை நிச்சயம் நன்றாகப் பேசுவார்கள்
    தம 2

    ReplyDelete
  3. என் மாணவர்கள் நலமோடும், அறிவோடும், ஆற்றலோடும் வாழ அன்னையாய் என்னை நினைத்துக் கொண்டு வாழ்த்துகிறேன்./

    அனைவரும் வாழ்த்துவோம்..

    ReplyDelete
  4. கண்டிப்பா பேசுவாங்க :)
    அவர்களை உற்சாகப்படுத்தும் உங்களுக்கு வணக்கத்துடன் வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. இதற்கு மேல் பேசாமல் இருப்பார்களா என்ன...?

    ReplyDelete