Friday, December 19, 2014

மார்கழித்திங்கள் அல்லவா?


(  படக் குறிப்ப்ய்......கண்ணாடிலேயே கண்ணன் தான் தெரியுறாம்)

மார்கழி மாதம் என்றாலே ஆண்டாளை நினைக்காமல் இருக்க முடியாது.

விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வாரால் துளசி செடியின் அடியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை தான் இவள்

ஆடிமாதம் சுக்ல சனிக்கிழமை கூடிய பூர நட்சத்திரத்தில் கண்டெடுக்கப் பட்டதால் இன்றும் நாம் ஆடிப்பூரம் கொண்டாடுகிறோம்.

( பின் குறிப்பு...நம் தமிழக அம்மா அப்போது பிறக்க வில்லை. பிறந்திருந்தால் அப்போதே தொட்டில் குழந்தை திட்டம் அறிமுகமாயிருக்கும்)

(பின் குறிப்பு கேள்வி: அப்பவே பெண் குழந்தைகளை தூக்கி எறிஞ்சுருக்காங்க பாருங்களேன். மாதர் சங்கமெல்லாம் இருந்துருக்க வாய்ப்பில்லை.தானே???)

அழகோ அழகு.( படம் பாத்து கதை சொன்னேன்....நீ பாத்தியான்னு கேட்காதீங்க)

பிறந்தது கிபி.885 நவம்பர் 25 அல்லதுகி.பி 886 டிசம்பர் 24

திருப்பாவையில் வரும் புள்ளின் வாய் கீண்டானை  என்று தொடங்கும் பாடலில் வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று என்ற தொடரின் மூலம் கணக்கிட்டுக் கூறுகின்றனர்.

அந்த நூற்றாண்டில் பெண்கள் திருமணத்திற்கு முன் எந்த கணவன் வருவானோ என்று முகம் தெரியாமலேயே கணவனைத் தொழ வேண்டும். திருமணமாகி விட்டால் கணவனைத் தொழ வேண்டும். எனவே பெண்களுக்கும் கடவுளர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இருந்த கால கட்டத்தில் கடவுளையே திருமணம் செய்யப் போவதாகக் கூறுவது அடடா....தமிழின் முதல் புரட்சித் தலைவி அவள் தான்

அதுவும் தமிழின் மிகக் கடுமையான இயற்றர விணை கொச்சகக் கலிப்பா வகையைச் சேர்ந்ததாக இருப்பது அவள் தமிழின் ஆழ்ந்த புலமைக் காக இன்றைய தமிழ் பெண் எழுத்தாளர்கள் அனைவருமே வணங்கத் தக்கவள்.

ஆழ்வார்களில் ஒரே பெண்.

சாதாரணபட்டரின் மகள், ஆனால் கனவைப் பாருங்கள்.

முதல் லவ் மேரேஜ் ஆண்டாள். ஆக அதிலும் முதலிடம் தான்.

( அய்யங்கார் வீட்டுப் பொண்ணு ஏன் தான் இப்படி கோனார் வீட்டுப் பையன் மேல் காதல் கொண்டாளோ?)



  நாச்சியார் திருமொழியில் 143 பாடல்களில் வாரணமாயிரம் என்ற பாடல்கள் தான் இன்றும் என்றும் வைணவர்களின் மனதிற்குள் ரீங்கரிக்கும் பாடல்( எப்படி சாத்தியமாச்சு ஆண்டாள்?)

( நல்ல வேளை ஆண்டாள் நீங்க முன்னாடியே பொறந்துட்டீங்க. இப்பன்னா உங்கள விழா மேடையில கூட ஏத்த மாட்டாங்க இந்த ஆண்கள்)

. இப்படிக் காதலிக்க முடியுமா என்ற வியப்பையும் இப்படியும் காதலித்திருக்கிறார்களா என்ற கேள்வியையும் நமக்குள் விதைக்கும் வரி ஆளுமைகள், தோழியிடம் தன் காதலை கனவாக....காதலாக விவரிக்கிறாள். 

ஆண்டாளின் ஏக்கம், ஆசை, காதல், நேசம்,பிரியம், விருப்பம் இப்படி எந்தப் பதத்தில் அழைத்தாலும் அழகிய, அற்புத, பிரம்மாண்டமான கனவுக் கோப்பு இது. கோர்ப்பும் இதுவே. அதுவே நமது ஈர்ப்பும். 


 ஆய்ச்சியர் குலத்தவனை நாரணன்  “நம்பி” என்றே விளிக்கிறாள்.( இப்ப மத மாற்றம் தான் சாத்தியம் ஆண்டாள். நீங்க எப்படி சாதி மாற்றம் பண்ணீங்க?)
  
கனவு
********
சூரியன் தன் பெண்ணான சூர்யாவை சோமனுக்கு (சந்திரனுக்கு) திருமணம் செய்து கொடுத்த போது கூறிய மந்திரங்கள், நடந்த சடங்குகள், ரிக் வேதம் 10 வது மண்டலம் பகுதி 23/32/65/85ல் உள்ளன. 

சில மந்திரங்கள் யஜீர் வேதத்தில் உள்ளது போலவே நடந்தது என்கிறாள். வேத முறைகளில் (சம்பிரதாயம்) திருமணச் சடங்குகள் பல விதம் உண்டு. அதில் முதல் சடங்கு வாக்தானம் 

ஆயிரம் யானைகள் சூழ, ( இங்கேயும் எனக்கொரு டவுட் ஆண்டாள்...ஆங்கே ஆடு ...மாடு தானே இருந்திருக்கணும்? நீங்க யானைன்னு சொல்றீங்களே????) தன் தோழர்களையும் யானை மீதேற்றி திருவில்லிப்புத்தூர் தெருக்களை வலம் செய்து வருகிறான்.

 ஊரெங்கும் தோரணம் கட்டி, தந்தை, உற்றார் உறவினர்கள், தோழிகள் அனைவரும் பூரணக்கும்பம்( அதுவும் தங்கமாம்) மரியாதையுடன் நாராயணனை வரவேற்கின்றனர். ( பிளக்ஸ், மைக் செட் தொந்தரவு இருந்திருக்குமோ?)

பாக்கு மரங்களின் அலங்கரிக்கப்பட்ட பந்தலின் உள்ளே  நாளை திருமணம் என்று பெரியோர்கள் நிச்சயிக்கிறார்கள். அந்த மிடுக்கு அவளுக்கு நரசிம்மரை நினைவுபடுத்தியிருக்கிறது.    (உன் போட்டோ பார்த்தே  சாரி சிலை பார்த்தே மனசு டைவிங் மனசு டைவிங் ன்னு பாடியிருப்பாளோ?) 

பிறகு தந்தை அவனை கிழக்கு முகமாக அமரவைத்து விஷ்ணுவாகவே நினைந்து திருவடி அலம்பி வேத மந்திரம் சொல்லி மது பர்க்கா என்று அழைக்கக் கூடிய தயிர், தேன், நெய், ஆகியவற்றின் கலவையைக் கொடுக்கிறார்கள். ( இத சாப்ட கூடாது விஷமாகும் ங்குறாருப்பா எங்க டாக்டர்)

 பந்தலுக்கு அழைத்து வரும் போது முதன் முதலாக கண்ணனை நேரில் காண்கிறாள். அவனைப் பார்க்க இயலாத வெட்கம் வர தலை சாய்த்துக் கொள்கிறாள்

. இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் முனிவர்களிம் வந்திருக்கின்ரனர். (அவங்க போன் நம்பரை எங்கேருந்து பிடித்திருப்பாள்?)

இந்திரன், வருணன், சூரியன் , மற்றும் தேவர்கள், வேதம் ஓதும் பார்ப்பனர்கள் அனைவரும் மாதவனோடு திருமணம் என்று அவர்கள் தான் முடிவு செய்தார்களாம். ( ஐய்யோ...ஆண்டாளுக்கு அதெல்லாம் தெரியவேதெரியாது பாவம்.) ( இதை சொல்லத் திறமைக்காகவே நீங்க எங்கேயோ போய்டீங்க ஆண்டாள். கீப் இட் அப்....இதற்கே உங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை சிபாரிசு செய்கிறேன் )

அவளிடம் உள்ள தோஷங்களைப் போக்க பிரஹஸ்பதி, இந்திரன், வருணன் , சூரியன், ஆகியோரை ரிக் வேதத்தில் உள்ள 10, 85, 44-47 உள்ள மந்திரங்கள் சொல்லி வணங்கினார்கள், ( அப்பா பெரியாழ்வார் நல்லா டீச் பண்ணிருக்கார். இல்லாட்டி இந்த வேதமெல்லாம் எப்படி தெரியுமாம்?)

இந்திரனிடம் பத்து நல்ல புத்திரர்களையும் 11வது குழந்தையாக நாரயணன் வந்த்து பிறக்க வேண்டும் என்று வேண்டுகிறாள். ( ஸ்கூல் அட்மிஷனுக்கு எப்படி அலையப் போறீங்களோ???)

 அவரும் ஆசீர்வதித்தபின் தோஷங்கள் நீங்க் மந்திரங்கள் சொல்லி தர்ப்பைப் புல்லால் புருவங்கள் தடவினான் .( இது போன்ற சடங்குகள் இன்னும் சில வைதீகக் குடும்பங்களில் பின்பற்றப் படுவதோடு மணமகள் பக்தியுடன் திரும்பச் சொன்னால் குடும்ப வாழ்க்கை நன்கு அமையும் என்று நம்பப்படுகிறது) ( இப்ப என்ன சொன்னாலும் டைவர்ஸ் அளவுக்கு சண்டை வருது ஆண்டாள். பிளீஸ் நோட் திஸ் பாயிண்ட்.)

கோடி உடுத்தி தன் தங்கை துர்க்கை ( அந்தரி) மூலம் அணியச் செய்து மணமாலை அணிவித்ததால் நிச்சயதார்த்தம் முடிந்தது. ( நல்ல நாத்தனார் தனக்கும் அதே புடவை வேணும்னு சொல்லல போல)

ஆண்டாளை வலது கை பிடித்து அக்னி குண்டத்தின் மேற்குப்புறம் மணையில் அமரச் செய்து நாராயணனும் வடக்குப்பக்கம் அமர மந்திரம் சொல்லி ( ரிக் வேதம் 10. 85, 26) 12 ஆதித்தியர்களில் ஒருவரான பூஷனை வணங்கி ஆண்டாளை துணைவியாக ஏற்கும் படி வேண்டினராம். 

வேதம் ஓதும் பார்ப்பனர்கள் தேசத்தின் நான்கு திசைகளிலுமிருந்து புனித நீரைக் கொண்டு வந்து மங்களாசாசனம் செய்வித்து சவிதா, சூரியன், வருணன், தேவர்கள், புனித நதிகள் ஆகியோர் மீது 5 மந்திரங்கள் சொல்லி அவர்கள் இருவர் மீதும் தெரித்தனராம். பலவித மாலைகள் அணிந்து தர்ப்பையுடன்  ஆசாரமாக வந்து ஆண்டாளின் இடுப்பில் புல்லைக் கட்டினானாம். இளம் மங்கையர்கள் சூரியனைப் போல பிரகாசமுடைய மங்கள விளக்குகள் ஏந்தி கலசம், ஏந்தி வரவேற்றனர். மதுரை மன்னன் பூமி அதிரும் படி வந்தானாம். 

இறைவனையே மணம் செய்யப் போவதால் மன்னனே வந்து விருந்து வகைகளை மேற்பார்வை பார்க்க வந்ததாகக் கூறுகிராள். ( அவளுக்கென்ன? விருந்து செலவு பெரியாழ்வாரோடது...அப்புறம் தேவர்கள் எல்லாம் வரவேண்டியது தானே???)

நல்ல சாப்பாடா இருந்திருக்கும். அப்பவே நம்மளும் பிறந்திருந்தா நல்லா சாப்பிட்டுருக்கலாம். சே..மிஸ்ஸிட்


( சிலர் மதுரை மன்னன் என்று கண்ணனைத் தான் விளித்ததாக்க் கூறுவதும் உண்டு.)

ஆண்டாளின் புலமைத் திறமும் இறைவன் மீது வைத்த அன்பும், நிகழ்வுகளை அடுக்கிக் கூறும் பாங்கும் தமிழ் கூறும் நல்லுலகால் மறக்க இயலாதவை. 

திருமணம் நடப்பது போன்ற கனவை எவ்வளவு தெளிவாக, அழகாக, வரிசையாக கூற முடியும் என்பதும் வியப்புதான். வடநாட்டில் ஒரு மீரா போலவே தென்னாட்டிற்கு ஆண்டாள். 

திருமணம் என்பதே ஆண்களாக ஆண்களுக்கென்று, ஆண்களே தேர்ந்தெடுத்த காலத்தில் நான் கடவுளைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறியதும் அதனை ஏற்க வைத்ததும், பின்னர் இந்தக் கனவுப் பாடல்களை அனைவரையும் பாடவைத்ததும் மாபெரும் புரட்சி.

படிப்புகளின் சிகரம் என்று சொல்லிக் கொள்ளும் ஐ.ஐ.டி. வளாகத்துள் நடந்த முத்தப் போராட்டம் காலத்தின் கோலம். ஆனால் ஆண்டாள் திருமணக் கனவைச் சொன்ன பின் தான் கற்பூரம் நாறுமோ? கமலப் பூ நாறுமோ? திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ? என்று கேட்கிறாள். (அப்பவே லிப் லாக் ஸ்டார்ட் ஆயிருக்கு வரலாற்று அறிஞர்களே...இதெல்லாம் ஆங்கிலப் படையெடுப்புக்குப் பிறகு தான் என்று இன்னும் அங்கலாய்க்காதீர்கள்)

(சோழர் ஆட்சியில் கடல்கடந்து 2000 மைல்களுக்கு அப்பால் உள்ள சயாம் நாட்டில் த்ரிபாவ என்று விழாவாகக் கொண்டாடினர்.) என்ற வரலாறெல்லாம் இருக்கிறதப் பாத்தா தமிழ் புலவர் ஆண்டாளைப் பாத்தா பொறாமையா வருது.

என்னெல்லாம் எங்க அம்மா சும்மா கூட நிக்க விட்டதுல்ல... இதுல கனவெல்லாம் வெறும் கனவுதான். 

இந்தப் பதிவைப் படிக்கப் போகும் சாமிகளா...இப்படி ஒரு ஆண்டாள் படத்தை உங்க கனவுல கூட பாத்திருக்க மாட்டீக... ஆமாங்....



(இது ஆண்டாள் இல்ல ராதைனு சண்டைக்கி வந்துராதிங்க மனுசங்களா)

மார்கழியில் திருப்பாவை சொல்ல வேண்டும் என்று  கட்டாயப் படுத்தி பெண் பிள்ளைகளை எழுப்பி சொல்ல வைத்து (நல்ல) அல்லது ( மோசமான) கணவர் கிடைக்க வேண்டச் சொன்ன பல தாய்மார்களுக்கும் சமர்ப்பணம்
நல்ல தமிழ் ....உங்கள் கட்டாயங்கள் தொடரட்டும் . பட் கணவன் வேண்டுதலாக அல்லாமல் தமிழ் படிக்க என்று இருக்கட்டும். (இப்ப இதெல்லாம் வழக்கொழிஞ்சு போச்சும்மா....பக்தியே சும்மாச்சுக்கும் ஒரு ஜாலிக்குத் தான் என்றாலும் ஓ.கே)

3 comments:

  1. ()--->மனச்சாட்சி பேசுவதையும் ரசித்தேன்...

    ReplyDelete
  2. சுவாரஸ்யமான திருப்பாவை பகிர்வுகள் ரசிக்கவைத்தன.

    ReplyDelete
  3. நன்றி தனபாலன் சார். நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.......

    ReplyDelete