Monday, December 1, 2014

இராசயனக் கலவை

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு நாம் பயன்படுத்தும் அனைத்து நீரும் மீண்டும் நிலத்திற்கே சென்று அது நிலத்தடி நீராக
சேமிக்கப்பட்டது. ஆனால் இன்றோ துவைத்தல், குளித்தல், பாத்திரம் கழுவுதல் என்று எந்த நீரையும் நாம் நிலத்திற்கு அனுப்புவதில்லை. சாக்கடைக்குத்தான் அனுப்புகிறோம். அதுவும் ஓரளவுக்கு நல்லதுதான். 

அன்று நாம் எதற்காகவும் ரசாயனக்கலை கலந்தவைகளைப் பயன்படுத்தும் பழக்கம் அற்றவர்களாக இருந்தோம். குளிக்க கடலைமாவு அல்லது பயத்தம் மாவு, துவைக்க உவர் மண் தலைக்கு சீயக்காய் அல்லது அரப்பு அல்லது உசிலை இலை என்று நாம் பயன் படுத்தும் அனைத்தும் இயற்கையாக இருந்ததால் நிலத்திலிருந்து நாம் எடுக்கும் நீரை அப்படியே அருந்தவும் பழகியிருந்தோம். 

இன்று அப்படியே குடிக்க இயலுமா?

ஆனால் இன்றைய நிலை என்ன? குளங்களில், அருவிகளில் குளித்துத் துவைப்பவர்கள் கூட ஷாம்பு, சோப்பு, என்று இரசாயனம் கலந்த பொருட்களையே பயன்படுத்தப் பழகிக் கொண்டோம். அந்த நாள்களில் சோப்பு போடுவது ( மனிதர்களுக்கு அல்ல) ஒரு நாகரிகமாகவும் தங்களின் வாழ்க்கைக்கே தரம் உயர்ந்து விட்டதாகவும் கருதியமேற்கத்திய கலாச்சாரத்திற்கு அடிமை கொண்ட சிலர் ஏற்படுத்திய பழக்கம் இன்று நாம் எல்லாவர்றுக்கும் இரசாயனக்கலவைப் பொருட்கலை மட்டுமே பயன்படுத்துகிறோம்.

எனவே நீர் சுத்தப்படுத்தி அருந்தும் பழக்கம் நம்மிடையே இப்போது பெருகி வருகிறது. காரணம் அனைத்து கலப்படங்களும் உள்ள நீரை அப்படியே அருந்த இயலவில்லை. நமது முன்னோர்கள் அப்படியே குடித்தார்களே ஆனால் நம்மால் வெறுமனே சூடு வைத்து வெந்நீராகக் கூட அருந்த இயலவில்லை. ஏனென்றால் நீரிலும் குளோரின் போட்டோ அல்லது இயற்கையாக எடுத்தால் அதில் வேதிகள் கலந்த நீர் தான் (அது பூமியிலிருந்து எடுக்கப்பட்ட நீராக இருந்தாலும் கூட)

அதனையும் பிளாஸ்டிக் குடம், அல்லது பிளாஸ்டிக் கேன் என்று பாலிவினைல் கலந்த கொள்கலன்களையே பயன்படுதுகிறோம். கழுவ வேண்டிய சுமை கருதி பித்தளைக் குடம். செப்புக்குடம் போன்றவை வழக்கொழிந்து போனது.

 ஆலங்குச்சியும் வேலங்குச்சியும் கருவேலப்பட்டையும் அருகி அனைவருமே பல்துலக்க பேஸ்ட், பிரஷ் வகையறாக்களை மட்டுமே பயன்படுத்துகிறோம். நாம் நமது பாரம்பரிய முறைகளைப் பற்றிச் சொன்னால் ஓஓ இதெல்லாம் எப்படித் தான் பயன்படுத்துவதோ என்ற ஏளனம் கலந்த பார்வை பார்க்கும் அளவுக்கு விளம்பரங்கள் அள்ளிக் கொட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன அயலக பொருளகளுக்கு. அதனால் நாம் எவ்வளவு ஆரோக்கியத்தை இழந்திருக்கிறோம்.( இதில் ஒரு பிரபல டூத் பேஸ்ட் கொண்டு பல்துலக்கினால் 8 சிகரெட் குடித்த அளவு நிகோடின் கரை படியுமாம். அதை வெளிநாடுகளில் தடை செய்த பின்னும் நம் நாட்டில் மட்டும் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதோடு அதனை குழந்தைகளும் பயன் படுத்துவதும் பயன் படுத்தக் கட்டாயப்படுத்துவதும் தான் மிகப் பெரிய வேதனை. 

. அதே போல் கடைவீதிக்குச் செல்லும் போது வெறும் கையோடு சென்று விட்டு அவர்கள் கட்டித்த்ரும் பாலிதீன் பைகளில் தான் நமது பொருட்களைப் பெற்று வர வேண்டும் என்பது நமக்கு நாமே எழுதிக் கொண்ட அல்லது எழுதப் படாத விதி. 

நகர்ப் புறங்கள்ல் குடியிருக்கும் மக்கள் வீட்டு வாசலில் கூட மரங்களை வைத்துப் பராமரிக்க விரும்புவதேஇல்லை. அந்த இலைகளை கூட்ட , பெருக்க அவ்வளவு சோம்பேறித்தனம். 

காலையில் நீராகாரம் அருந்தும் பழக்கமுடைய நாம் தேநீர் அல்லது குழம்பி ( காப்பிதான்) அருந்தி அதனையும் உடம்புக்கு நல்லது என்றே கூறிக்கொள்கிறோம், விளம்பரப்படுதுகிறோம். 

சோறு என்பதே குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தவேயில்லை. பழைய சோற்றை நாம் ஏழையின் சின்னமாகப் பார்க்கப் பழகினோமேயன்றி அதனுள் உருவாகும் ஈஸ்ட் என்ற இயற்கை சத்தை எடுக்க மறந்தோம். இப்படியாக நமக்கு நாமே பல முட்டுக்கட்டைகளையும் முடக்குவாதத்தையும் போட்டுக்கொண்டு சுற்றுப் புறம், சுகாதாரம் என்று மேடைகளில் மட்டுமே பேசி வருகிறோம். 

.சாதாரண மக்கள் கூட மட்கும் குப்பைகள், மட்கா குப்பைகள்  என்று பிரித்து வைப்பதில்லை. எல்லாவற்றையும் ஒன்றாய் போட்டுவிடுவதால் மண்ணை வளமாக்கும் நல்ல புழுக்கள் தோன்றாமல் சுற்றுப் புறத்திற்கும் நமது உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும் கிருமிகளும், புழுக்களுமே உருவாகின்றன என்று படித்த நாமே உண்ராத பட்சத்தில், படிக்காமல் குப்பை எடுத்துப் போகும் துப்புரவு தொழிலாளர்கள் எப்படிஉணர்வார்கள்? மேலும் அவர்களும் எடுத்துப் போகும் குப்பைகளை ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் போட்டு எரிக்கிறார்களே தவிர மறு சுழற்சிக்கும் அனுப்புவதில்லை.

 எல்லோர் வீட்டிலும் கொடுக்கும் குப்பை சுமை தாங்க இயலாததால் அவர்கள் அவ்வாறு செய்கின்றனர் என்றாலும் எரிக்கும் இடத்தில் அந்த பாலிதீன்கள் எரிந்து அந்த நிலத்தை மாசுபடுத்துவதை நம்மால் பார்த்து வெறுமனே வருத்தப்பட மட்டுமே முடிகிறதே தவிர அதற்குஎன்ன செய்ய இயலும் என்ற ஆலோசனைகளோ, பொறுப்போ யாரிடமும் இருப்பதில்லை. 

அவரவர் வேலைக்குப் போய் தங்கள் குழந்தைகளை காப்பதும் மாலையில் தொலைக்காட்சிப் பெட்டி முன்னால் தொலைந்து போவதற்குமே நமக்கு நேரம் போதவில்லை. இதனால் என்ன செய்ய முடியும் இதற்கு தீர்வு என்ன? 

எதையெல்லாம் நாம் இயற்கையாகப் நல்ல ஆரோக்கியமாகப் பயன்படுத்தி வந்தோமோ அவைஎல்லாம்  நாகரிகம் என்ற பெயரில் மறக்கப் பட்டு, துறக்கப் பட்டு, சீரழிக்கப் பட்டுவிட்டது என்ற விழிப்புணர்வாவது நமக்கு வருமா?

ஆரோக்கியம் கருதி நாம் இயற்கைக்கே திரும்பலாமா? நமது பாராம்பரிய உணவுகளான சிறு தானியங்களை உட்க்கொள்ளலாமா? என்று மக்களோடு அரசாங்கமும் அரசாங்கத்தோடு மக்களும் இணைந்து பணி புரிந்தால் தான் இந்த இடரைக் களைய முடியும்>  


                                  



2 comments:

  1. உலகம் ரொம்பவும் மாறிவிட்டது சகோதரியாரே
    தவறான பாதையில், வேகமாய் சென்றுகொண்டிருக்கின்றது
    தம 1

    ReplyDelete
  2. மிகவும் சரியாகச் சொன்னீர்கள்...

    ReplyDelete