Thursday, October 9, 2014

அஞ்சல் தலை தினம் கொண்டாட்டம்

அஞ்சல் தலை தினம் கொண்டாட்டம்
***********************************************************
அஞ்சல் தலைகள் சொல்லும் பண்பாடு
*************************************************************

இன்று பெரியார் நகரில் இயங்கி வரும் புதுக்கோட்டை சிறுவர் மன்றத்தின் மூலம் அஞ்சல் தலை தின விழா கொண்டாடும் வகையில் சிறப்பு  கூட்டம் நடைபெற்றது.சிறுவர் மன்றத்தின் தலைவி சிறுமி செ.சக்தி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக புதுக்கோட்டை நாணயவியல் சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான எஸ்.டி.பஷீர் அலி பல்வேறு நாட்டு அஞ்சல் தலைகளின் கண்காட்சி வைத்திருந்தார். கண்காட்சியைத் தொடங்கி வைத்த பாலா டிரேடிங் ஹவுஸ் உரிமையாளர் செல்வக்குமார் இன்று நாம் செய்திகளை எளிதாக எஸ்.எம்.எஸ். மூலமாகவும் இ.மெயில் மூலமாகவும் அனுப்பி விடுகிறோம் ஆனால் அக்காலத்தில் தபால் கொண்டு வருபவரைப் பார்த்துக் கொண்டே இருந்த காலங்கள் அலாதியானவை. ஒரு நாடு தான் என்ன மனநிலையில் இருக்கிறதோ அதன் பொருட்டு தான் அந்த நாட்டின் அஞ்சல் தலையும் அமைந்திருக்கும் . இதில் நமது பண்பாடு,கலாச்சாரம், நேர்மை, தெளிவு, ஒருமைப்பாடு அனைத்தும் அடங்கியிருக்கும். எனவே ஒரு அஞ்சல் தலையை நாம் சாதாரணமாக எண்ணிவிட முடியாது. மென்மையான மனம் கொண்டவர்கள் மென்மையான செய்திகளோடு மேன்மையும் இருப்பதாகப் பார்த்துக் கொண்டார்கள்மலேசியாவில் கடாரம் என்ரொரு நாடு இருக்கிறது. அப்படியானால் நாம் இங்கே சோழ மன்னனை கடாரம் கொண்டான் என்று படிக்கிறோம். எனவே அந்தகாலத்திலேயே தமிழன் கடல் தாண்டி வாணிபம் நிர்வாகம் போன்றவற்றை மேற்கொண்டான் என்று தெரிகிறது..அதோடு ஒரு நாட்டின் தகவல் தொடர்பு நிலையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றார்.கண்காட்சி நடத்திய பஷீர் அலி ஒவ்வொரு கண்டம், நாடு போன்ற அனைத்து அஞ்சல் தலையையும் பிரித்துக் காண்பித்தார். ரூபாய் என்று எந்தெந்த நாட்டின் பணமாக இருக்கிறது என்று கேட்டு விளக்கியதோடு நாம் எப்படி அரசியலாலும் ஆன்மிகத்தாலும் பிரிக்கப்பட்டோம் என்பதைக் கூறி உலகில் அனைத்து மக்களும் ஒன்று கூடி சாதி சமயம் என்ற எல்லை தாண்டி வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.சிறுமி செ.ராகசூர்யா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குனார்.விழாவில் சிறுவர்கள் யஷ்வந்த் யயாதியும்,அருண்,ஆச்சல், அட்சயா போன்ற சிறுமியரும் கலந்து கொண்டனர். சுவாதி விழா ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டார். சிறுவர்கள் அஞ்சல் தலை சம்பந்தமான அனைத்துத் தகவல்களையும் பறிமாறிக்கொண்டனர்


2 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எளிமையாய் அருமையாய் ஓர் விழா
    வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete