இன்று நத்தம்பண்ணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அறிவியல் ஆய்வு சோதனைகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மழை வராததிற்குக் காரணம்..நமது மண் வளம் ..பிளாஸ்டிக் பொருட்களைப் பயன் படுத்துவதால் ஏற்படும் தீமைகள்., மட்கும் பொருள், மட்காப் பொருள் பற்றிய விழிப்புணர்வு, போன்ற சுற்றுச் சூழல் சம்மந்தமான ஆய்வுகள் எடுத்துரைக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களிடம் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பயன்படுத்தும் நிர்பந்தம் ஏற்படும் போது அதனை மறு சுழற்சிக்கு அனுப்பி விட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் வழி அவர்கள் ஒவ்வொருவராக வந்து தங்கள் உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர். இதன் மூலம் நம்மால் சிறிதளவேனும் சுற்று சூழல் பாதுகாப்புக்கு உதவ முடியும் என்று அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த்ப் பட்டது. நிகழ்வில் தலைமை ஆசிரியர் சுவாதி அனைவரையும் வரவேற்று ஓசோன் படலம், மழை நீர், நிலத்தடிநீர்,,பண்டையகாலத்தில் நமது உணவு பழக்க வழக்க முறைகள் போன்றவற்றைப்பற்றிக் கூறினார். கல்வியாளர் திருமதி சரஸ்வதி நாகராஜன் தன் உரையில் நாம் எப்படி இது போன்ற ஒரு விழிப்புணர்வற்று வாழ்ந்து வருகிறோம் என்பதனைக் எடுத்துக் கூறினார். ஆசிரியர் ஜெகஜோதி மட்காத பொருட்கள் பற்றி ஆய்வுச் சோதனை நடத்திக் காட்டினார்.. மாணவர்கள் நாம் எவ்வளவு தவறாக வாழப் பழகிக் கொண்டோம் என்பதனை உணர்ந்து கண்ணீர் வடித்து இனி தானும் மாறி.தன்னைச் சார்ந்தவர்களையும் மாற்றுவதாக உறுதி கொண்டனர். மேலும் தங்களால் இயன்ற அளவு மரம் வளர்ப்போம் என்று உறுதி பூண்டனர். விழாவில் உறுப்பினர் மோகனவள்ளி மற்றும் பல்வேறு பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இறுதியில் மாணவர் தலைவர் மனோஜா நன்றியுரை கூறினாள்
Labels
- அனுபவங்கள் (26)
- என்னுரை (2)
- என்னைப்பற்றி (15)
- கட்டுரை (23)
- கவிதை (140)
- கனவுக்காட்சிகள்..கல்கியின் தீபம் (10)
- கஸல் (15)
- காணொளி (13)
- காதல் (5)
- சந்தக் கவிதை (9)
- செய்திகள் (25)
- சென்னை.புயல் (1)
- மரபுக்கவிதை (18)
- மழலை இலக்கியம் (20)
- மழை (1)
- வாழ்த்துரை (3)
- வெண்பா (5)
- ஹைகூ (39)
Friday, July 4, 2014
செய்திகள்
இன்று நத்தம்பண்ணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அறிவியல் ஆய்வு சோதனைகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மழை வராததிற்குக் காரணம்..நமது மண் வளம் ..பிளாஸ்டிக் பொருட்களைப் பயன் படுத்துவதால் ஏற்படும் தீமைகள்., மட்கும் பொருள், மட்காப் பொருள் பற்றிய விழிப்புணர்வு, போன்ற சுற்றுச் சூழல் சம்மந்தமான ஆய்வுகள் எடுத்துரைக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களிடம் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பயன்படுத்தும் நிர்பந்தம் ஏற்படும் போது அதனை மறு சுழற்சிக்கு அனுப்பி விட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் வழி அவர்கள் ஒவ்வொருவராக வந்து தங்கள் உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர். இதன் மூலம் நம்மால் சிறிதளவேனும் சுற்று சூழல் பாதுகாப்புக்கு உதவ முடியும் என்று அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த்ப் பட்டது. நிகழ்வில் தலைமை ஆசிரியர் சுவாதி அனைவரையும் வரவேற்று ஓசோன் படலம், மழை நீர், நிலத்தடிநீர்,,பண்டையகாலத்தில் நமது உணவு பழக்க வழக்க முறைகள் போன்றவற்றைப்பற்றிக் கூறினார். கல்வியாளர் திருமதி சரஸ்வதி நாகராஜன் தன் உரையில் நாம் எப்படி இது போன்ற ஒரு விழிப்புணர்வற்று வாழ்ந்து வருகிறோம் என்பதனைக் எடுத்துக் கூறினார். ஆசிரியர் ஜெகஜோதி மட்காத பொருட்கள் பற்றி ஆய்வுச் சோதனை நடத்திக் காட்டினார்.. மாணவர்கள் நாம் எவ்வளவு தவறாக வாழப் பழகிக் கொண்டோம் என்பதனை உணர்ந்து கண்ணீர் வடித்து இனி தானும் மாறி.தன்னைச் சார்ந்தவர்களையும் மாற்றுவதாக உறுதி கொண்டனர். மேலும் தங்களால் இயன்ற அளவு மரம் வளர்ப்போம் என்று உறுதி பூண்டனர். விழாவில் உறுப்பினர் மோகனவள்ளி மற்றும் பல்வேறு பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இறுதியில் மாணவர் தலைவர் மனோஜா நன்றியுரை கூறினாள்
Labels:
செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
இளைய தலைமுறைக்கு தேவையான விழிப்புணர்வு விதைக்கப்பட்டதில் மகிழ்ச்சி! நன்றி!
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDelete