Monday, July 21, 2014

மல்லிகை(குழந்தை பாடல்கள்)

மல்லிகை முல்லை செவ்வந்தி
மணக்கும் நல்ல பிச்சிப்பூ
தலைக்கு வைக்க மணக்குமாம்
தஞ்சாவூரு மரிக்கொழுந்து

விலைக்கு வாங்கி வைப்போமா?
வெள்ளைச் சம்பங்கி பூப்பந்தை
ரோஜாப் பூவில் மாலைகட்டி
ராஜாப் போல போவோமா?

தாழம் பூவை தலைக்கு வைத்து
தரணியைச் சுற்றி வருவோமா?
தேசிங்கு ராஜன் குதிரையிலே
தேசம் சுற்றிப் பார்ப்போமா?

நேசம் கொண்ட செண்பகப்பூ
நெஞ்சம் நிறைய வைப்போமா?
வாசம் மிக்க தோட்டத்திலே
வந்து பாட்டுப் படிப்போமா?
**************************************

3 comments:

  1. பாடல்
    அருமை
    இனிமை
    நன்றி சகோதரியாரே
    தம 1

    ReplyDelete
  2. ஆமாசாமிJuly 22, 2014 at 8:39 AM

    உங்களுக்கு வரிகள், கோர்வைகள், நேர்தியாக வருகிறது டீச்சர். இன்னும் நான் யார்னு கண்டுபிடிக்கலை போல..இன்று மாலை அலுவலகத்தில் உங்கள் அருகில் நின்றேன்......கண்டுபிடிச்சீங்களா?

    ReplyDelete
  3. குழந்தைகளுக்கேற்ற பாடல்வரிகள்.

    ReplyDelete