Sunday, July 20, 2014

பெண்ணுக்கு ஆடை

கிழிந்த ஆடையுடன்
வந்த பிச்சைக்காரியின் உடம்பில்
காமத்தைத் தேடினான் காமுகன்

ஐயோ! தெய்வமே!
பாராயோ! பாராயோ!
என்றான் ஆன்மீகவாதி

என் தேசம் இப்படிப்போச்சே
ஐயோ! உலகமே
என்ன இது
கொடுமையிலும் கொடுமை
என்று கதறினான் கவிஞன்

பெண்ணின் கிழிந்த ஆடைக்கு
மாற்று தராத அரசாங்கம்
ஒரு அரசாங்கமா?
என்று பிரசங்கித்தான்
ஒரு அரசியல் வாதி

கிழிந்த ஆடையுடன் பெண்
என்ற தலைப்பில்
 சுவையான கட்டுரை எழுதினான்
 பத்திரிக்கைக்காரன்

ஆடையற்றவர்களுக்கு ஆடையளிப்பதும்
சமூக ஊனங்களை சரி செய்வதும்
என் தொழில் என்று
ஆடை கொடுப்பது போல
புகைப்படம் மட்டும்எடுத்துக்கொண்டான்
சமூக சேவகன்

இந்தக் காட்சியை
எப்படி படம் எடுத்தால்
நல்ல வசூலாகும் என்று
யோசித்தான் சினிமாக்காரன்

ஆனால்
கடைசிவரை
எவருமே ஆடைதர முன்வரவில்லை
*************************************************

8 comments:

  1. உங்களது படைப்பும் சிந்தனையும் அருமை. பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. அவளுக்கு நல்வாழ்வை தர கடவுளுக்கே மனதில்லை என்ற போது இந்த சராசரி மனிதர்களுக்கு என்ன அக்கறை வந்துவிடப் போகிறது.

    ReplyDelete
  3. சமூக சீர்கேட்டை படம்பிடித்த கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. சமூக அவலத்தை நன்றாக சாடியிக்கிறது கவிதை வாழ்த்துக்கள் சகோதரி.

    மன்னிக்க: அரசியல் வாதி இந்த இடத்தில் எதிர்கட்சி அரசியல்வாதி என்றிருந்தால் ? இன்னும் ஸூப்பர்

    ReplyDelete
  5. //ஆனால்
    கடைசிவரை
    எவருமே ஆடைதர முன்வரவில்லை//
    இன்றைய அப்பட்டமான நிலை இதுதான் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
  6. நல்ல கவிதை சகோதரி..
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. கவிதை அருமை சகோதரி
    வாக்கு இரண்டு...
    http://www.malartharu.org/2012/12/blog-post_5724.html

    ReplyDelete