Saturday, June 7, 2014

எண்ணங்கள்....எண்ணங்கள்........

இம்முறையேனும்
விளைச்சல் அதிகமாயிருக்க வேண்டுமே
சிந்தனையோடு உழவன்

இன்றேனும் அந்தக் கோப்பை
சரிசெய்து விடலாமா
கவலையோடு குமாஸ்தா

ஒரு பத்து கோப்புகளுக்கேனும்
கையெழுத்திட வேண்டும்
கண்டிப்புடன் அதிகாரி

இன்றேனும் கையெழுத்தாயிருக்குமா?
யோசனையுடன்
லோன் போட்ட அரசு ஊழியன்

இன்று அந்த மாணவியை
எப்படியும் பாடம் படிக்க
வைத்து விட வேண்டும்
நம்பிக்கையுடன் ஆசிரியர்

இன்று புதிதாய்
என்ன ‘கேஸ்’ வரும்
எரிச்சலோடுகாவலர்

கூலி கேட்டு அரிசி
மொத்தமாக வாங்க வேண்டும்
ஆதங்கத்துடன் கூலித் தொழிலாளி

சீக்கிரம் முடித்து
வீடு திரும்பி ஓய்வெடுக்க வேண்டும்
அலுப்புடம் மருத்துவர்

மனைவியைப்
 பார்க்கத் துடிக்கும்
வெளியூர் சென்ற கணவன்

இன்று மட்டும் பள்ளி
விடுமுறையாய் இருக்கக்கூடாதா?
பரிதாபத்துடன் குழந்தை

எங்கும் எங்கும்
எதையாவது
சுமந்த எண்ணங்கள்......
எண்ணங்கள்........
************************************************

2 comments:

  1. வணக்கம்

    உண்மைதான் சரியாக சொன்னிங்கள் வரிக்கு வரி..எண்ணங்கள் பற்றி....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete