நாங்கள்
உளவாளிகளை
எதிர்பார்த்தோம்
முதலாளிகள் தான்
கிடைத்தார்கள்
நாங்கள்
மேய்ப்பர்களை
எதிர்பார்த்தோம்
கசாப்புக்கடைக்காரர்கள்தான்
கிடைத்தார்கள்
நாங்கள்
பயிர்களைத்தான்விதைத்தோம்
பதர்கள் தான் விளைந்தது
நாங்கள்
மருத்துவர்களைக் கேட்டோம்
நோயாளிகள் தான் கிடைத்தார்கள்
நாங்கள்
காதல்களைக் கேட்டோம்
காமங்கள் தான் கிடைத்தது
நாங்கள்
நன்னெஞ்சைக் கேட்டோம்
நயவஞ்சகம் தான் கிடைத்தது
நாங்கள்
அகிம்சையைக் கேட்டோம்
ஆக்ரோஷம் தான் கிடைத்தது
நாங்கள்
பள்ளிகளைக்கேட்டோம்
வீட்டுப் பாடவிடுதிகள் தான் கிடைத்தது
நாங்கள்
விண்வெளி ஆராய்ச்சி கேட்டோம்
கம்ப்யூட்டர் ஜோதிடம் கிடைத்தது
நாங்கள்
சிற்பங்கள் கேட்டோம்
சிலைகள் தான் கிடைத்தது
நாங்கள்
கவிதைகள் கேட்டோம்
காசு பண்ணும் ரகசியம் கிடைத்தது
நாங்கள்
இலக்கியங்கள் கேட்டோம்
புரியாத புத்தகங்கள் கிடைத்தன
நாங்கள்
இதயங்களைக்கேட்டோம்
இறுகிய பாறைதான் கிடைத்தது
நாங்கள்
இறைவனைத் தேடினோம்
மதங்கள் தான் கிடைத்தன!
உளவாளிகளை
எதிர்பார்த்தோம்
முதலாளிகள் தான்
கிடைத்தார்கள்
நாங்கள்
மேய்ப்பர்களை
எதிர்பார்த்தோம்
கசாப்புக்கடைக்காரர்கள்தான்
கிடைத்தார்கள்
நாங்கள்
பயிர்களைத்தான்விதைத்தோம்
பதர்கள் தான் விளைந்தது
நாங்கள்
மருத்துவர்களைக் கேட்டோம்
நோயாளிகள் தான் கிடைத்தார்கள்
நாங்கள்
காதல்களைக் கேட்டோம்
காமங்கள் தான் கிடைத்தது
நாங்கள்
நன்னெஞ்சைக் கேட்டோம்
நயவஞ்சகம் தான் கிடைத்தது
நாங்கள்
அகிம்சையைக் கேட்டோம்
ஆக்ரோஷம் தான் கிடைத்தது
நாங்கள்
பள்ளிகளைக்கேட்டோம்
வீட்டுப் பாடவிடுதிகள் தான் கிடைத்தது
நாங்கள்
விண்வெளி ஆராய்ச்சி கேட்டோம்
கம்ப்யூட்டர் ஜோதிடம் கிடைத்தது
நாங்கள்
சிற்பங்கள் கேட்டோம்
சிலைகள் தான் கிடைத்தது
நாங்கள்
கவிதைகள் கேட்டோம்
காசு பண்ணும் ரகசியம் கிடைத்தது
நாங்கள்
இலக்கியங்கள் கேட்டோம்
புரியாத புத்தகங்கள் கிடைத்தன
நாங்கள்
இதயங்களைக்கேட்டோம்
இறுகிய பாறைதான் கிடைத்தது
நாங்கள்
இறைவனைத் தேடினோம்
மதங்கள் தான் கிடைத்தன!
பதர்கள் தான் விளைந்தன, காமங்கள் தான் கிடைத்தன, வீட்டுப் பாடவிடுதிகள் தான் கிடைத்தன, சிலைகள் தான் கிடைத்தன - என்றிருந்திருக்கலாமோ? எதிர்மறையில் ஒரு நேர்மறைக் கவிதை. நன்றி.
ReplyDeleteவீட்டுப் பாட விடுதிகள்
ReplyDeleteசொல்லாட்சி
மாட்சி
கவிஞரே ..
தொடர்க
http://www.malartharu.org/2014/03/jameen-and-palani-murugan.html