Monday, June 16, 2014

புகழ் மிகுந்த புதுக்கோட்டை (பாகம்4) படிக்க அவசியமானது

இதனால் இன்னொன்றும் பேசப்பட்டு வருகிறது, மனிதாபிமான முறையில் தனது பாதுகாப்பிற்கு என்று வந்து விட்ட பிறகு காட்டிக் கொடுத்திருக்க வேண்டியதில்லை. தெரியும் என்றோ, தெரியாது என்றோ சொல்லியிருக்க வேண்டாம் - என்று கூறுகிறார்கள்.

ஆனால் அந்த மன்னர் தனக்குத் தெரியாது என்று கூறியிருப்பாரேயானால் அதன்பின் கொடூரமான விளைவுகளையும் சந்திக்க நேர்ந்திருக்கும். அங்கு இருக்கிறான், என்ற வதந்திகள் உருவாகி கோட்டை, கொத்தளங்கள் இடிக்கப்படலாம். வீடுகள், காடுகள் எரிக்கப் படலாம். மக்களில் பலர் துன்பநிலையை எய்த வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்கும். அதைத் தவிர்ப்பதற்காகவும் அம்மன்னர் அம்முடிவை எடுத்திருக்கலாம்.

திரைப்படத்திற்காக கதாநாயகனின் பாத்திரத்தை வலுப்படுத்த எடுக்கும் காட்சிகளை மக்கள் அப்படியே உண்மை என நம்பிப் புதுகையிலிருந்து வேறு எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் நீங்கள் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த புதுக்கோட்டையிலிருந்தா வருகிறீர்கள் என்று அருவருப்போடு கெட்பது மனதை மடியச் செய்து விடுகிறது. ஆதாரமற்றவைகளை ஆணித்தரமாக்கியதால் என்ன விளைவு ஏற்படும் என்பதை நாம் சிந்தித்துச் செயல் படவேண்டும்.

நல்லவைகளையே போதிக்கும் அமைதிப் பூங்காவான தமிழ்நாடு அல்லவைகளைப் போதிக்கலாமா? இதனால் பின்னர் திருநெல்வேலிக்காரர்களுக்கும் தகராறு சண்டை, சச்சரவு ஏற்பட்டால்... யார் பொறுப்பது? மீண்டும் உயிர்ச்சேதம் பொருளாதாரச் சேதம் ஏற்படவேண்டுமா?

இனிமேலாவது, எல்லாவற்றிலிருந்தும் எல்லோரிடமிருந்தும் நல்லவைகளையே எடுத்துக் கொள்வோம். நாடு சிறக்க நாம் பாடுபடுவோம்
**************************************************************************************

3 comments:

  1. சுவாதி கூறுவதில் உண்மை உள்ளது. சிலநேரங்களில் காட்டி கொடுத்த புதுகோட்டையா என கேட்கும்போது மனசு வலிக்கும்.

    ReplyDelete
  2. புதுக்கோட்டை மன்னர் ஆங்கிலேய விசுவாசியாகவே இருந்தார் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. இல்லாவிடில், வேறெந்த மன்னருக்கும் இல்லாத தனிக்கொடி, தனி நாணயம்(அம்மன் காசு) எனும் தனித்த அடையாளங்களோடு, புதுக்கோட்டை மாநில்ம் (புதுக்கோட்டை ஸ்டேட்) என்று வாழ்ந்திருக்க முடியாது. அந்தப்பக்கம் கட்டபொம்மனும் ஒன்றும் பாயுமபுலி போல விடுதலைக்காக வீறுகொண்டெழுந்த வீரனும் அ்ல்லன். தொடர்ந்து ஆங்கிலக் கும்பினிக்கு, கப்பம் கட்டிவந்தவன், கட்டிய தொகை போதாத போது தவணை சொன்னவன், அலையவிட்டபோது ஆத்திரப்பட்டவன் அவ்வளவே! அவனை நம் சிவாஜிகணேசனின் நடிப்பும் வசனமும்தான் மாற்றிப் போ்ட்டுவிட்டன. என்னையும் புதுக்கோட்டை என்றறிந்து “காட்டிக்கொடுத்த புதுக்கோட்டைக்காரர்“ ஏளனம் செய்தவர் உண்டு. நான் திருப்பிச் சொன்னேன் -“ஆமாம், மற்ற மாவட்டத்து மக்களையெல்லாம் ஏமாற்றிவந்த பிரேமானந்த சாமிக்கு இரட்டை ஆயுள்தண்டனை பெறக் கா்ட்டிக்கொடுத்த புதுக்கோட்டைதான்“ என்று! எப்புடீ

    ReplyDelete
  3. என்ன இருந்தாலும் நண்பனோடு சேர்ந்து போராடி இருக்கலாம் , அது தான் சரியும் கூட, வரலாறு கூறுவதும் அதைத் தான் . ஒரு புதுகைக்காரனாக எங்கு சென்றாலும் முதலில் அதைத்தான் கூறுகிறார்கள். விளையாட்டுக்கு என்றாலும் மனம் வேதனைப்படுவது உண்மைதான். பதிவு அருமை, தொடர்ந்து எதிர்பார்க்கிறேன் நமது மண்ணின் வரலாற்றை...........

    ReplyDelete