கட்டபொம்மன் ஒருவனுக்காகத் தன் நாட்டையும் தன் நாட்டு மக்களையும் துன்புறுத்த விரும்பாமல் இவ்வாறு செய்திருக்கலாமல்லவா? இந்தப் புதுக்கோட்டை மக்கள் தங்கள் மன்னரிடம் எவ்வளவு விசுவாசம் வைத்திருந்தால் திரைப்படத்தில் அக்காட்சியை நடித்துக் காட்டிய நடிகர் புதுகைக்கு வரும் போது அவரை துன்புறுத்தி அனுப்பி இருப்பார்கள். ஒரு மன்னனிடம் மக்கள் பற்று கொண்டு இருக்கிறார்கள் என்றால் அவர் நல்லதைத்தான் அந்த மக்களுக்குச் செய்திருப்பார் என்று கொள்ள வேண்டாமா?
இதே போல தஞ்சை மாவட்ட வரலாற்றைப் பார்க்கும் போது ஒரு செய்தி கிடைக்கிறது. கட்டபொம்மனின் சகோதரர் சிவத்தையா தஞ்சாவூர் மன்னர் சரபோஞிக்குக் கடிதம் எழுதி தனக்கு ஆதரவு கேட்க சரபோஜியின் மந்திரியான தத்தாஜியோ கடிதம் கொண்டு வந்த தூதுவனை சிறையில் அடைத்து விட்டு கடிதத்தை ஆங்கிலேயருக்கு அனுப்பிவிடுகிறார். தஞ்சை மன்னர் மட்டும் அப்படி செய்தது சரியா?
கட்டபொம்மன் பாளையக்காரராகப் பதவி ஏற்றுக் கொண்ட பின் தொடர்ந்து கப்பம் கட்டியிருக்கிறார். பின் சில சூழல்களால் அவரால் கட்ட முடியாமல் போய் விட்டது. அந்த நேரத்தில் ஜாக்ஸ்னைச் சந்திக்கச் சென்றிருக்கிறார். அப்போது கணக்குப் பார்க்கும் போது சிறிய தொகையே கட்ட வேண்டிய பாக்கி இருந்திருக்கிறது. ( ஆதாரம் pudukkottai govt gazzatte) அப்படியானால் முன்பு கட்ட வேண்டிய தொகையை விட குறைந்து
காணப்பட்டால் இடையில் அவர் அத்தொகையை கட்டியிருக்க வேண்டும். மீண்டும் குற்றாலம் வரும் போது பார்க்க முயற்சித்திருக்கிறார். தன்னைப் பார்க்க ஜாக்ஸன் அனுமதி அளித்து விட்டு வந்த பின்னர் அவமதித்து அனுப்பியிருக்கிறார். இது ஒரு மனிதன் என்ற முறையிலும் மன்னன் என்ற முறையிலும் அவனது மன உணர்வுகள் தட்டி எழுப்ப, மீதித் தொகையை கட்ட இயலாது எனக் கூறியிருக்கிறார்.

ஏனுங்க சகோதரி பதிவுகளை எழுதுவதோடு சரியா?
ReplyDeleteதமிழ்மணத்தில் இணைப்பதற்கு என்ன?
உங்கள் புதுக்கோட்டை பதிவுகளை இணைத்து
வாக்களிதுவிட்டேன்
http://www.malartharu.org/2014/06/time-management-part-one.html
அது பற்றிய அறிவு இன்னும் வரவில்லை சகோதரரே...ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறேன்.. டைப் பண்ண வருகிறது. தமிழ்மணத்தில் இணைப்பது பற்றி ஒன்றுமே அறியேன்.
Deleteபயனுள்ள ஒரு விவாதம்
ReplyDeleteதொடர்க சகோதரி
த.ம ஒன்று