வென்றிடும் முற்றிடும் என் கவிகள் அவை
வெற்றியின் ரகசிய முத்திரைகள்
மன்றிடும் சுவைதான் என்றென்றும் - அட
மகத்தான விடியலின் சித்திரங்கள்
சித்தம் தெளிந்திடும் என்பாட்டு அவை
சிந்திக்க வைக்கும் தமிழ்பாட்டு
முத்தமிழ் வித்தகம் என்பாட்டின் அவை’
மோகத்தைத் தந்திடும் தாலாட்டு
பாரெங்கும் வீசட்டும் தமிழ்பாட்டு - அவை
பாசம் விதைத்திடும் எனைக்கேட்டு
ஊரங்கும் பேசட்டும் அதைக் கேட்டு - அய்யோ
உள்ளதைச் சொல்கிறேன் (நீ) பாராட்டு
நண்பனாய் வாய்த்திடும் என்பாட்டு - அவை
நறுந்தமிழ் தேனாம் நீ கேளேன்
பண்புகள் சொல்லும் பாரதத்தின் - துளிர்
பாதைகள் காட்டும் இனி வாளேன்? ( வாள் எதற்கு?)
ஏழையின் கண்களைத் துடைத்துவிடும் - ஆமது
ஏற்றத்தை அவர்க்கே தந்துஎழும்
பேழியில் அடங்கிடும் நகைகளுமாய் - அவர்
பேதைமை விரட்டிடும் நம்புஎனை
கோள்களும் எனக்கே வாழ்த்துச் சொல்லும் - அந்த
கோபுரம் தானும் வண்ங்கிச் செல்லும்
வாள்களும் வாலைச் சுருட்டிக்கொண்டே
வாயே திறவாமல் மூடிக்கொள்ளும்
மனதின் திட்பம் மிகக்கொண்டே - நான்
மாண்புகள் பெற்றேன் அறிவீரே
வனமாய் என்னுள் புதைந்துள்ள - அந்த
வண்டமிழ் தானும் காரணமாம்
நிறைவாய் ஒன்றைச் சொல்கின்றேன் - அந்த
நிலத்தின் வாழ்த்தும் எனக்கேதான்
குறைவாய் என்னை மதிப்பிட்டோர் - நீர்
குறைவாய் போனது அறிவீரோ
வாழ்த்தின் சுடரில் வாழ்கின்றேன் - அந்த
வான்புகழ் என்னை எட்டுமன்றோ
தாழ்த்தின மாக்கள் பாருங்கள் - வந்து
தங்ககிரீடம் (எனக்கே) சூடுங்கள்
*********************************************************************************
வெற்றியின் ரகசிய முத்திரைகள்
மன்றிடும் சுவைதான் என்றென்றும் - அட
மகத்தான விடியலின் சித்திரங்கள்
சித்தம் தெளிந்திடும் என்பாட்டு அவை
சிந்திக்க வைக்கும் தமிழ்பாட்டு
முத்தமிழ் வித்தகம் என்பாட்டின் அவை’
மோகத்தைத் தந்திடும் தாலாட்டு
பாரெங்கும் வீசட்டும் தமிழ்பாட்டு - அவை
பாசம் விதைத்திடும் எனைக்கேட்டு
ஊரங்கும் பேசட்டும் அதைக் கேட்டு - அய்யோ
உள்ளதைச் சொல்கிறேன் (நீ) பாராட்டு
நண்பனாய் வாய்த்திடும் என்பாட்டு - அவை
நறுந்தமிழ் தேனாம் நீ கேளேன்
பண்புகள் சொல்லும் பாரதத்தின் - துளிர்
பாதைகள் காட்டும் இனி வாளேன்? ( வாள் எதற்கு?)
ஏழையின் கண்களைத் துடைத்துவிடும் - ஆமது
ஏற்றத்தை அவர்க்கே தந்துஎழும்
பேழியில் அடங்கிடும் நகைகளுமாய் - அவர்
பேதைமை விரட்டிடும் நம்புஎனை
கோள்களும் எனக்கே வாழ்த்துச் சொல்லும் - அந்த
கோபுரம் தானும் வண்ங்கிச் செல்லும்
வாள்களும் வாலைச் சுருட்டிக்கொண்டே
வாயே திறவாமல் மூடிக்கொள்ளும்
மனதின் திட்பம் மிகக்கொண்டே - நான்
மாண்புகள் பெற்றேன் அறிவீரே
வனமாய் என்னுள் புதைந்துள்ள - அந்த
வண்டமிழ் தானும் காரணமாம்
நிறைவாய் ஒன்றைச் சொல்கின்றேன் - அந்த
நிலத்தின் வாழ்த்தும் எனக்கேதான்
குறைவாய் என்னை மதிப்பிட்டோர் - நீர்
குறைவாய் போனது அறிவீரோ
வாழ்த்தின் சுடரில் வாழ்கின்றேன் - அந்த
வான்புகழ் என்னை எட்டுமன்றோ
தாழ்த்தின மாக்கள் பாருங்கள் - வந்து
தங்ககிரீடம் (எனக்கே) சூடுங்கள்
*********************************************************************************
தயவு செய்து நீங்கள் மரபுக்கவிதைகள் நிறைய எழுதுங்கள்... உங்களுக்கு நல்ல சொல்லாடல் இருக்கிறது...ஒரு சரளமாக வார்த்தைகளைக் கோர்க்கவும் தெரிகிறது. இந்த சில வெட்டி பயல்களை பற்றி கவலைகொள்ளாதீர்கள் ......( அவுகளுக்கு புரிஞ்சாதானெ கை தட்டுவாக) இன்று பெரிய தமிழாசிரியர்கள் என்றும் பேச்சாளர்கள் என்றும் சொல்லிக்கொள்பவர்களிடமே தமிழ் மிகச் சரியாக தெஇரியும் என்று சொல்ல இயலவில்லை. இதற்குவ் வருந்துகிரேன் என்வே, நிறைய மரபு எழுதுங்கள்
ReplyDelete