Friday, June 13, 2014

இன்று இனிமையான் நாள்.....
இன் மாணவர்கள் இன்று அளவுக்கு அதிகமான் உற்சாகத்துடன் இருந்தனர்.வாசலில் வரும் போதே இரு பக்கங்களையும் அடைத்தவாறு நின்று கூச்சல் போட்டனர். எனக்கு செய்வது புரியாமல் விழித்தேன்... ஆனால் அவர்களோ இரு பக்கமும் ஏதோ தனியார் பள்ளியில் வரவேற்பார்களே அது போல பூக்கள் தூவி வரவேற்றனர்... என்ன ஆயிற்று என்று யோசிப்பதற்குள் ஒருவன் ஓடி வந்து ஒரு அட்டையை நீட்டினான். அதில் தப்புத் தப்பாக happy birth day to u my dear teacher என்று எழுதப்பட்டு இருந்தது. மற்றொருவன் ஒரு பெரிய பேப்பர் கத்தைகளை நீட்டினான். அதில் ப ல மாணவர்கள் தங்கள் வாழ்த்தை தெரிவித்து இருந்தனர். மற்ற்வன் வேகமாக வந்து பொக்கே போன்ற ஒன்றைக் கொடுத்தான். அதில் அவர்களுக்கு எளிமையாய் என் ன பூக்கள் கிடைக்குமோ அது வெல்லாம் இருந்தது. வகுப்பறையில் நுழைந்ததும் ஒருவன் மின் விசிறியை சுழல விட்டான். அதிலிருதும் பூக்கள் தூவியது. என்னடா பண்றீங்க என்று கத்தியே விட்டேன். அப்போது தான் ஒரு மாணவன் சொன்னான். உங்களுக்கு சரஸ்வதி பூஜை அன்று பிறஎத நாள் தானே அதான் அன்று பள்ளி இல்லாததால் இன்று கொண்டாடுகிறோம் என்றான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏனென்றால் இவர்கள் எல்லோருமே தங்கள் பிறந்தநாளை எந்த வகையிலும் கொண்டாட இயலாத ஏழைகள்... ஆனால் என் பிறந்த நாளை....அதுவும் என்றோ நான் சொன்னதை நினைவு வைத்துக் கொண்டு அவர்கள் இப்படி செய்தது மிகப்பெரிய ஆச்சரியம்.இதை விட வேறு என்ன வேண்டும் என்றே தோன்றியது. நெஞ்சம் நெகிழ கண்கள் குளமாக...... அவர்கள் எல்லோரும் மிக நல்ல நிலைமைக்கு வர வேண்டும் வரவைக்க வேண்டும் என்பதே என் இப்போதையக் கவலை

3 comments:

  1. கள்ளமில்லா மாணவர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே
    சில நாட்கள் தாமதமாய் வாழ்த்துக்களைக் கூறுகிறேன்
    மாணவர்கள் நாம் கூறும் எதையும் மறப்பதில்லை

    ReplyDelete
  3. தட்சிணாமூர்த்திJune 17, 2014 at 8:59 PM

    நல்ல டீச்சர் அதான் இவ்ளோ மருவாதை

    ReplyDelete