Friday, June 13, 2014

நானும் தமிழும் ( பாகம்2)

இத்தரை மீது வாழ்வ ரெலாம் - என்
   இனி(ப்பு) தமிழ் கொண்ட மாந்தராவார்
பத்தரை மாற்றுத் தங்கம்போல் - அது
   பளபளவென்றே பாதை செயும்


கைகளில் விரைந்திடும் என்கவிகள் - அவை
   கனிவின் சிகரம் அறிந்திடுங்கள்
பைகளில் கனமில்லா மாந்தர்காள் கொஞ்சம்
   பைந்தமிழ் படித்தே  வென்றிடுங்கள்


கள்ளினுள் இருக்கும் போதையெல்லாம் - என்
   கவிகள் தந்தே அதை ஊட்டும்
முள்ளாய்க் குத்தும் கயமைகளை - அது
   முனைந்து எரித்துப் போட்டுவிடும்


கண்ணிமை போலக் காத்திடத்தான் - அந்த
   கடவுள் படைத்தான் எனையிங்கு
பெண்ணிவள் என்றே இளப்பம் செய்தால் - அந்த
   பேதையை மிதித்தே அழித்திடுவேன்,


சொல்லிடும் கவியெலாம் என்நாட்டின் - நற்
   சுகத்தை முற்றாய்க் கூறிடுவேன்
வல்லின தோழர்கள் துணைகொண்டே தமிழ்
   வாகை நானே சூடிடுவேன்


புல்லின மனதிடும் மாந்தர்காள் - உம்மை
   புதைத்திட நானும் வருகின்றேன்
மெல்லிடைப் பெண்ணாள் இவளென்றே - நீவிர்
   மெத்தனம் கொண்டே இருக்காதீர்


நெருப்பின் விருட்சம் நான் அன்றோ - அந்த
   நேசத்தின் சுடரும் நான்தானே
மறுத்திட யாரும் முடியுமோடா - அடேய்
   மாடப் பேய்களே கூறுங்கள்


வெந்திடும் மனதின் சுடர் கொண்டு - நான்
   வெல்வேன் வெல்வேன் தமிழ்க்கன்று
சந்தினில் பொய்மைகள் புகுத்திடுவோர் - உமை
   சாக்கடைக்குள் நான் திணித்திடுவேன்..................தொடரும்.................



1 comment: